இந்து குஃசு

ஆக்கானித்தான் பாக்கித்தான் எல்லையிலுள்ள மலைப்பகுதி

இந்து குஃசு (Hindu Kush) என்பது வடமேற்கு பாகித்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானித்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும். இத்தொடரின் அதிஉயர் புள்ளி பாகித்தானில் உள்ள திரிச் மிர் (7,708 மீ அல்லது 25,289 அடி).

இந்து குஃசு
மலைத்தொடர்
ஆப்கானித்தானின் மலைகள்
நாடுகள்ஆப்கானித்தான், பாகித்தான்
பகுதிபாகித்தானின் வடக்குப் பகுதி
பகுதிஇமயமலை
மிகவுயர் புள்ளிடிரிச் மிர்
 - உயர்வு7,690 மீ (25,230 அடி)
 - ஆள்கூறுகள்36°14′45″N 71°50′38″E / 36.24583°N 71.84389°E / 36.24583; 71.84389

இந்து குஃசு மலைத்தொடர் பாமிர், காரகோரம் ஆகிய மலைத்தொடர்களின் மேற்குத் தொடர்ச்சியாகும். அத்துடன் இது இமயமலையின் ஒரு உப மலைத்தொடருமாகும்[1].

மலைகள்

இந்து குஃசு மலைத்தொடரின் மலைகளின் உயரம் மேற்குத் திசை வழியே குறைந்து கொண்டு செல்லுகின்றது. காபூலுக்குக் கிட்டவாக நடுப்பகுதியில் இவற்றின் உயரம் 4,500 முதல் 6,000 மீட்டர் வரை உள்ளது; மேற்கில், இவற்றின் உயரம் 3,500 முதல் 4,000 மீட்டர்கள் (11,500 அடி முதல் 13,000 அடி) வரை உள்ளது. இந்து குஃசு மலைத்தொடரின் சராசரி உயரம் 4,500 மீட்டர்கள் (14,700 அடி). இவற்றின் நீளம் கிட்டத்தட்ட 966 கிலோமீட்டர்கள் (600 மைல்கள்). இவற்றில் 600 கிலோமீட்டர்கள் (370 மைல்கள்) தூர மலைகள் மட்டுமே இந்து குஃசு மலைகள் என அழைக்கப்படுகின்றன. இத்தொடரின் ஏனைய பகுதிகள் பல சிறிய மலைத்தொடர்களைக் கொண்டுள்ளன. இவை கோகி பாபா, சலாங்க், கோகி பாக்மன், சுபின் கார், சுலைமான் மலைத்தொடர், சியா கோகு போன்றவையாகும்.

இந்து குஃசு மலைத்தொடரில் இருந்து பாயும் ஆறுகளில், எல்மண்ட் ஆறு, அரி ஆறு, காபூல் ஆறு, மற்றும் சிசுடன் ஆற்றுப்படுகை போன்றனை முக்கியமானவை.


இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்து_குஃசு&oldid=3640108" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை