இந்தோனேசியப் பொருளாதாரம்

இந்தோனேசியா தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும். உலகின் வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. ஜி-20 நாடுகளில் ஒன்றாகவும் புதியதாக தொழில்மயமான நாடுகளில் ஒன்றாகவும் இந்தோனேசியா விளங்குகின்றது.[11] இந்தோனேசியா உள்ளூர் சந்தையையும் அரசு செலவு செய்வதையும் அரசுடமையாக்கப்பட்ட நிறுவனங்களையும் சார்ந்துள்ளது. 141 நிறுவனங்கள் நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. எரிமம், நெல், மின்சாரம் போன்ற அடிப்படை பொருட்களின் விலையை அரசு நிர்ணயிப்பதால் இவை நாட்டின் சந்தைப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் 1990களிலிருந்து 80 விழுக்காடு பொருளாதாரத்தை உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன.[12] 1997இல் ஏற்பட்ட நிதிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அரசு கணிசமான தனியார் நிறுவனங்களின் சொத்துக்களை கைப்பற்றி உள்ளது; வாராக் கடன்களை ஏற்றுக்கொண்டும் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கியும் இவ்வாறு கையகப்படுத்தி உள்ளது. 1999க்குப் பிறகு பொருளாதாரம் மீண்டுள்ளது; அண்மைய ஆண்டுகளில் வளர்ச்சி வீதம் 4–6% ஆக உள்ளது.[13]

இந்தோனேசியப் பொருளாதாரம்
நாணயம்ரூபியா (IDR)
நிதி ஆண்டு1,சனவரி முதல் 31,திசம்பர் வரை
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்ஏபெக், உலக வணிக அமைப்பு, ஜி-20, ஐஓஆர்-ஏஆர்சி, ஆர்செப், பிற
புள்ளி விவரம்
மொ.உ.உ$870 பில்லியன் (2014 மதிப்.) பெயரளவில்
$2.554 டிரில்லியன் (2014) கொ.ஆ.ச
மொ.உ.உ வளர்ச்சி 6.46% (கொ.ஆ.ச)(2014)[1]
நபர்வரி மொ.உ.உ$11,135 (கொ.ஆ.ச, 2015 மதிப்.)
துறைவாரியாக மொ.உ.உவேளாண்மை: 14.4%, தொழில்: 47%, சேவைகள்: 38.6% (2012 மதிப்.)
பணவீக்கம் (நு.வி.கு)4.61% (அக்டோபர் 2012)
கினி குறியீடு38.1 (2011)[2]
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைவேளாண்மை: 38.9%, தொழிற்துறை: 22.2%, சேவைகள்: 47.9% (2012 மதிப்.)
வேலையின்மை6.6% (2012)
முக்கிய தொழில்துறைபாறை எண்ணெய்யும் இயற்கை எரிவளியும், துணி, உடை, காலணி, சுரங்கத் தொழில், சீமைக்காரை, உரம், எந்திரத் தொகுதி, மின்னணுவியல், வன்பொருள், மென்பொருள், தொலைத்தொடர்பு, ஒட்டுப்பலகை, இயற்கை மீள்மம், உணவு, சுற்றுலா
தொழில் செய்யும் வசதிக் குறியீடு120வது[3]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$199.1 பில்லியன் (2012 மதிப்.)[4]
ஏற்றுமதிப் பொருட்கள்எண்ணெய்யும் வளிமமும், சீமைக்காரை, உணவு, மின் கருவிகள், கட்டுமானம், ஒட்டுப்பலகை, துணி, இயற்கை மீள்மம்
முக்கிய ஏற்றுமதி உறவுகள் Japan 14.8%
 China 12.4%
 Singapore 9.1%
 United States 8.6%
 India 7.1%
 South Korea 6.3%
 Malaysia 5.8% (2013 மதிப்.)[5]
இறக்குமதி$185 பில்லியன் (2012 மதிப்.)
இறக்குமதிப் பொருட்கள்எந்திரத் தொகுதியும் சாதனங்களும், வேதிப்பொருள், எரிமம், உணவுகள்
முக்கிய இறக்குமதி உறவுகள் China 16%
 Singapore 13.7%
 Japan 10.3%
 Malaysia 7.1%
 South Korea 6.2%
 Thailand 5.7%
 United States 4.9% (2013 est.)[6]
மொத்த வெளிக்கடன்$187.1 பில்லியன் (31 திசம்பர் 2012 மதிப்.)
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்மொ.உ.உவில் 23.9% (2012 மதிப்.)[7]
வருவாய்$140.8 பில்லியன் (2012 மதிப்.)
செலவினங்கள்$160.6 பில்லியன் (2012 மதிப்.)
கடன் மதிப்பீடுஇசுடாண்டர்ட் அண்ட் புவர்சு:[8]
BB+ (Domestic)
BB+ (Foreign)
BBB- (T&C Assessment)
Outlook: Stable
மூடியின்:[9]
Baa3
Outlook: Stable
Fitch:[9]
BBB-
Outlook: Positive
அந்நியச் செலாவணி கையிருப்பு$110.30 பில்லியன் (அக்டோபர் 2012)[10]
Main data source: CIA World Fact Book
'

2012இல் இந்தோனேசியா ஜ-20 குழுமத்தில் விரைந்து வளரும் நாடுகளில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி சீனாவிற்கு அடுத்த இரண்டாம் நிலையை எட்டியது. இருப்பினும் 2014இல் இந்தியா மீண்டும் இந்நிலையை கைப்பற்றியது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை