எய்சேபியோ

போர்த்துக்கீசிய கால்பந்து வீரர்

எய்சேபியோ , (Eusébio da Silva Ferreira; 25 சனவரி 1942 – 5 சனவரி 2014) , மொசாம்பிக்கில் பிறந்த போர்த்துகீசிய கால்பந்து வீரர். கால்பந்து வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று அறியப்பட்டார் .[2][3]

எய்சேபியோ
சுய தகவல்கள்
முழுப் பெயர்எய்சேபியோ ட சில்வா ஃபெரேரா
பிறந்த நாள்(1942-01-25)25 சனவரி 1942
பிறந்த இடம்மொசாம்பிக்
இறந்த நாள்5 சனவரி 2014(2014-01-05) (அகவை 71)
இறந்த இடம்லிஸ்பன், போர்த்துகல்
உயரம்1.75 m (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்)
பன்னாட்டு வாழ்வழி
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
1961–1973போர்த்துகல்[1]64(41)

தொழில்முறை போட்டிகள்

ஆப்ரிக்க நாடான மொசாம்பிக், போர்ச்சுகலின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலப்பகுதியில், அவர் போர்த்துகல் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்.சுமார் பத்தாயிரம் டாலர்கள் அளவுக்கு பணம் கொடுத்து தமது அணிக்காக விளையாட ஃபென்ஃபிகா அணி அவரை ஒப்பந்தம் செய்தது.[4] போர்ச்சுகல் அணிக்காக 64 போட்டிகளில் விளையாடிய அவர் அந்நாட்டுக்காக 41 கோல்களை அடித்துள்ளார்.[5]

போர்ச்சுகலில் உள்ள பென்பிகா விளையாட்டரங்கத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள எய்சேபியோவின் சிலை
போர்த்துகல் அணிக்காக
வருடம்தோற்றங்கள்கோல்கள்
196121
196252
196310
196464
196577
19661212
196763
196821
196942
197010
197152
197294
197343
மொத்தம்6441

சிறப்புகள்

1962 ஆம் ஆண்டு ஃபென்ஃபிகா அணி ஐரோப்பிய கால்பந்து கோப்பையை வென்றதில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது.[6] இவர் 1966 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் மிக அதிக அளவில் கோல்களை அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றவர் .தனது கால்பந்து வாழ்க்கையில் தொழில்முறை ரீதியில் அவர் விளையாடிய 745 போட்டிகளில் அவர் 733 கோல்களை அடித்துள்ளார். காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுபவர், கறுஞ்சிறுத்தை என்று அவர் வெகுவாகப் புகழப்பட்டார் .[4]

இறப்பு

இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் , தனது 71 ஆவது வயதில் சனவரி 5 , 2014இல் காலமானார். அவரது மரணத்தை முன்னிட்டு போர்த்துகல் நாட்டு அரசு மூன்று நாள் அரசுமுறை துக்கம் அறிவித்தது.[4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எய்சேபியோ&oldid=3863974" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை