ஐஓஎஸ்

ஐஓஎஸ் என்பது ஒரு கைத் தொலைபேசி இயக்கு தளம். இது ஆப்பிள் நிறுவனத்தால் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோன் என்ற நவீன நுண்ணறி பேசி கருவிக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கு தளம். இந்த இயக்கு தளமானது மற்ற ஆப்பிள் கருவிகளான ஐபாட் டச் (செப்டம்பர் 2007), ஐ-பேடு (ஜனவரி 2010),ஐ-பேடு மினி (நவம்பர் 2012) மற்றும் இரண்டாம் தலைமுறை ஆப்பிள் டிவி (செப்டம்பர் 2010) போன்றவற்றிலும் இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் நுண்ணறி பேசி மற்றும் கூகிள் ஆண்ட்ராய்டு போல்லல்லாமல், ஆப்பிள் அல்லாத வன்பொருளில் இந்த இயக்கு தளத்தை நிறுவ உரிமம் இல்லை. மார்ச் 2018 வரை, ஐஓஎஸ் மென்பொருள் விற்பனைத்தளமாகிய ஆப் ஸ்டோரில் 20,00,000க்கும் மேலான பயன்பாட்டு மென்பொருள்கள் விற்பனைக்கு உள்ளன அதில் 10,00,000 மென்பொருள்கள் ஐ-பேடுக்கானவை.[3] இந்த பயன்பாட்டு மென்பொருள்கள் 130 பில்லியன் தடவைக்கு மேல் பதிவிறக்கம் செய்யபட்டுள்ளன.[4]

ஐஓஎஸ்
நிறுவனம்/
விருத்தியாளர்
ஆப்பிள் நிறுவனம்
முதல் வெளியீடுசூன் 29, 2007; 16 ஆண்டுகள் முன்னர் (2007-06-29)
கிடைக்கும் மொழிகள்34 மொழிகள்[1][2]
இணையத்தளம்www.apple.com/ios/%20அப்பிள்%20ஐஒஎஸ்

ஐஓஎஸ்-இன் முக்கிய பதிப்புகள் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் 17, 2018 அன்று இதன் 12வது பதிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான ஐஓஸ் 12.1 அக்டோபர் 30, 2018 அன்று வெளிவந்தது. மற்றும் ஐஓஎஸ் 12.1.1ன் 3வது பீட்டா பதிப்பு, நவம்பர்பர் 15, 2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

வரலாறு

மேக்வோர்ல்ட் மாநாடில் ஜனவரி 9, 2007 நடைபெற்றது. அதில் ஐபோன் (iPhone) அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் அந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தலைமுறை ஐபோன் வெளியிடப்பட்டது.[5] முதலில் இந்த இயங்குதளத்திற்கு தனியாக பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை, "ஓஎஸ்-எக்ஸ் தளத்தில் ஐபோன் இயங்குகிறது" என மட்டுமே சொல்லப்பட்டது.[6] ஆரம்பத்தில் வெளியாரால் உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் இதில் இயங்காது என கூறப்பட்டது.[7][8] அக்டோபர் 17, 2007 அன்று, ஆப்பிள் சாப்ட்வேர் டெவெலெப்மெண்ட் கிட்(SDK) உருவாக்கத்தில் உள்ளது எனவும் பிப்ரவரி மாதத்தில் இது பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.[9] சாப்ட்வேர் டெவெலெப்மெண்ட் கிட்(SDK) மூலம் ஐபோன் மற்றும் ஐபோன் பயன்பாட்டளர்களுக்கு தேவையான பயன்பாட்டு மென்பொருட்களை மூன்றாம் தரப்பு நிரலமைபாளர்களால் உருவாக்க முடியும். மார்ச் 6, 2008 அன்று, முதல் சாப்ட்வேர் டெவெலெப்மெண்ட் கிட்(SDK) பீட்டா பதிப்பை வெளியிட்டது அதோடு ஐபோன் இயக்கு தளத்திற்கு "ஐபோன் ஓஎஸ்" என்று புதிய பெயரிடப்பட்டது.

2007 விடுமுறை பருவத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்கள் விற்கப்பட்டது. ஜனவரி 27, 2010 அன்று, ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் டச் விட பெரிய திரை கணினியான ஐ-பேடை அறிவித்தது. இது இணைய உலாவல், ஊடக நுகர்வு, மற்றும் புத்தகங்கள்(iBooks) படிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என அறிவித்தது .[10]

ஜூன் 2010 இல், ஐபோன் ஓஎஸ் என்பது ஐஓஎஸ்(iOS) என ஆப்பிளால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் ஐஓஎஸ்(iOS) என்பது சிஸ்கோ நிறுவனத்தால் அதன் இயக்கு தளத்தில் உபயோகிக்கப்பட்ட பெயராகும் ஒரு தசாப்தமாக இந்த பெயரை உபயோகித்து வருகிறது. பின்னால் சட்ட ரீதியான பிரச்சினைகள் எதுவும் வரக்கூடாது என்பதால் ஆப்பிள் இந்த பெயரை சிஸ்கோ நிறுவனத்திடம் இருந்து உரிமமாக பெற்றுக்கொண்டது .[11] 2011 ஆண்டு இறுதியில், ஐஓஎஸ்(iOS) நுண்ணறி பேசி மற்றும் கணினிகள் 60 சதவீத பங்குச்சந்தையை கொண்டு இருந்தன.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளித் தொடர்புகள்


ஐஓஎஸ் இயங்குதளங்கள்
ஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐஓஎஸ்&oldid=3849874" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை