காடழிப்பு

மனிதப் பயன்பாட்டுக்காக காட்டுப் பகுதிகளை அழித்தல்

காட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், காட்டு வளங்களின் சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன. பொதுவாக, குறிப்பிடத்தக்க பரப்பளவு கொண்ட காடுகளை அழிப்பது, உயிரியற் பல்வகைமையைக் (biodiversity) குறைத்து, சூழலையும் தரம் குறைத்து விடுகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் பெருமளவில் காடழிப்பு இடம் பெற்று வருகிறது. உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மற்றும் வட அமெரிக்க நாடுகள் தொழில்துறையில் பயன்படுத்துகின்ற மரப்பொருடகளில் பாதியை இவை பயன்படுத்துகின்றன.[1] இது புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

தெற்கு மெக்சிக்கோவில் வேளாண்மைக்காக எரிக்கப்பட்ட காடு.
கிழக்கு பொலீவியாவில், டியெராஸ் பாஜாஸ் திட்டத்தின் கீழ் இடம்பெறும் காடழிப்பு, செய்மதிப் படம். நிழற்படம்: நாசா.
ஆஸ்திரீலியாவின் பெனாம்பிராவில் வேளாண்மைக்காகக் காடழிப்பு.

போதிய அளவு காடாக்க நடவடிக்கைகள் இன்றி மரங்கள் வெட்டப்படுவதாலேயே தாக்கங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. காடாக்கம் நடைபெற்றாலும் குறிப்பிடத்தக்க அளவு உயிரியற் பல்வகைமைக் குறைவு ஏற்படும். வேண்டுமென்றே செய்யப்படும் காடழிப்பு ஒருபுறம் இருக்க, உணரப்படாமலே, மனிதச் செயற்பாடுகளால், காடழிப்பு இடம் பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எடுத்துக் காட்டாக, காட்டு நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் புதிய மரக்கன்றுகள் உருவாகாமல் தடுக்கப்படுவதால், இயற்கையான காட்டின் மீளுருவாக்கம் தடைப்பட்டு மெதுவான காடழிப்பு ஏற்படக்கூடும். இவற்றையும் விட இயற்கைச் சீற்றங்களும் காடழிப்புக்குக் காரணிகள் ஆகக் கூடும். திடீரென ஏற்படுகின்ற காட்டுத்தீ, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகளைச் சில நாட்களிலேயே அழித்து விடுகின்றன. மேய்ச்சலாலும், காட்டுத் தீயாலும் ஏற்படுகின்ற தாக்கங்களின் கூட்டு விளைவு, வறண்ட பகுதிகளின் காடழிப்புக்கு முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இருக்கின்றது.

காடுகள் அழிவதால் ஏற்படுகின்ற நேரடித் தாக்கங்கள் ஒரு புறம் இருக்க, மறைமுகமான தாக்கங்களும் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விளிம்பு விளைவு (edge effects), வாழிடத் துண்டாக்கம் (habitat fragmentation) போன்றவை காடழிப்பின் விளைவுகளை மேலும் பெரிதாக்குகின்றன.

கிழக்கு பொலிவியாவில் காடழிப்பு ஏற்பட்டதன் செயற்கைக்கோள் புகைப்படம்

காடழிப்பு அல்லது காடு வெட்டுதல் என்பது ஒரு வனத்தையோ அல்லது வரிசையான மரங்களையோ வெட்டி, வெற்றிடம் உருவாக்கி அதை வனமல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தைக் கொண்டு வருவதாகும்.[2] காடழிப்பினால் வனங்கள் பண்ணைகளாகவும் கால்நடை வளர்ப்பு பண்ணைகளாகவும், நகர்ப்புறமாகவும் மாற்றப்படுகின்றன.

2011 ஆம் ஆண்டு உலகின் பாதிக்கும் மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டிருந்தன.[3]வார்ப்புரு:Toc left பெரும்பாலானவை முந்தைய 50 ஆண்டுகளில் அழிக்கபட்டவை ஆகும். உலகின் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகள் 1990யிலிருந்து அழிந்து கொண்டு வருகின்றன. மேலும் உலகின் பாதிக்கும் மேற்பட்ட விலங்கினங்களும், தாவர இனங்களும் வெப்பமண்டல காடுகளில் வாழ்கின்றன.

காடழிப்பு என்பது ஒரு பகுதியில் உள்ள அனைத்து மரங்களை அகற்றும் நடவடிக்கையை விவரிக்க தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மிதமான தட்ப வெப்பத்தை உடைய பகுதிகளில் நிலையான வனவியல் நடைமுறைகளுக்கு இணங்க மீளுருவாக்கத்திற்காக அனைத்து மரங்களையும் அகற்றுவது இழப்பு மீட்பு அறுவடை என விவரிக்கபடுகிறது. இடையூறுகள் இல்லாத நிலையில் காட்டின் இயற்கை மீளுருவாக்கம் பெரும்பாலும் ஏற்படாது.[4][5]

காடழிப்பு பல காரணங்களால் ஏற்படும்: மரங்கள் எரிபொருள் பயன்பாட்டிற்காகவும் (சில நேரங்களில் கரி வடிவில்), விற்பனைக்காகவும் மரத்துண்டுகளுக்காகவும் வெட்டப்படுகின்றன. வெற்றிடங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம், விளை பொருள் தோட்டங்கள் மற்றும் குடியேற்றங்களாக பயன்படுத்தப்படுகின்றன. காடுகளை மீண்டும் வளர்க்காமல் மரங்களை அகற்றுவது வாழ்விட சேதம், பல்லுயிர் இழப்பு மற்றும் வறண்ட நிலம் முதலியவற்றை ஏற்படுத்தும். இது வளிமண்டல கரியமில வாயுவை நீக்காமல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். போரில் எதிரி படைகளுக்கு வள ஆதாரங்கள் பயன்படாமல் இருப்பதற்காகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. வியட்நாம் போரின் போது வியட்நாமில் அமெரிக்க இராணுவம் எஜென்ட் ஆரஞ்சு என்ற தாவர கொல்லிகளை பயன்படுத்தியது காடழிப்பிற்கு நவீன எடுத்துக்காட்டு ஆகும். காடழிப்பு ஏற்பட்ட இடங்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான மண் அரிப்பு நேர்வதுடன் விளை நிலம் தரிசு நிலமாக தரங்குறைந்து விடுகிறது.

உள்ளார்ந்த மதிப்பைப் பற்றிய அவமதிப்பு அல்லது அறியாமை, உரிய மதிப்பு இல்லாமை, தளர்வான வன மேலாண்மை மற்றும் குறைபாடுள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள் போன்றவை பெரிய அளவில் காடழிப்பு ஏற்படுவதற்குக் காரணிகளாகும். பல நாடுகளில், இயற்கையாகவும் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காடழிப்பு தொடர்ந்து பிரச்சினையாக உள்ளது. காடழிப்பினால் மரபழிவு, காலநிலைமாற்றம், பாலைவனமாக்கல் மற்றும் மக்கள் இடம்பெயர்வு முதலிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. தற்போதைய நிலைமைகளையும் புதைபடிவ பதிவு மூலம் அறிய வரும் பழைய நிலைமைகளையும் உற்று நோக்கும் போது இது விளங்கும்.[6]

விவசாய நிலத்திற்காக காட்டழிப்பு

குறைந்த அளவு, அமெரிக்க $4,600 மொத்த உள்நாட்டு உற்பத்தி உடைய நாடுகளில், காடழிப்பு விகிதம் அதிகரிப்பது குறைந்துள்ளது.[எப்போது?][7][8]

காரணங்கள்

காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டு (UNFCCC) செயலகத்தின் படி, காடழிப்பிற்கான பெரும் நேரடி காரணம் விவசாயம் ஆகும். வாழ்வாதார விவசாயம் 48% ; வணிக வேளாண்மை 32%; மரத்தை துண்டுகளாக்குவது 14% :எரிபொருள் 5% காடழிப்பிற்குக் காரணமாகும்.[9]நிபுணர்கள் தொழில்துறை மரம் விழ்த்துதல், உலக காடழிப்பிற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாக உள்ளது என்பதை ஒத்து கொள்ளவில்லை.[10][11] சிலர், வேறு வழியில்லாததால் ஏழை மக்கள் காடுகள் அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று வாதிடுகின்றனர். மற்றும் சிலர் காடுகள் அழிக்க, பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவைக் கொடுக்கும் திறன் ஏழை மக்களிடம் இல்லை என்று வாதிடுகின்றனர். அதிக இனப்பெருக்க விகிதங்கள் காரணமாக மக்கள்தொகை அதிகரித்துள்ளது. வெப்பமண்டலக் காடுகள் அழிவதற்கான காரணங்களில் இதன் பங்கு 8% என்று ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.[12]

சமகால காடழிப்பிற்கான மற்ற காரணங்களுள், அரசாங்க நிறுவனங்களின் ஊழலும் அடங்கும்,[13][14] செல்வம் மற்றும் அதிகாரத்தின் நியாயமற்ற விநியோகம்,[15] [16][17]

மக்கள் தொகை வளர்ச்சி, அதிக மக்கள் தொகை, மற்றும் நகரமயமாக்கல் முதலியவையும் காடழிப்பிற்கு காரணங்களாகும்.[18] உலகமயமாக்கல் என்பது காடழிப்பிற்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது,[19][20] இருந்தும் உலகமயமாக்கலின் விளைவுகளினால் (புதிய தொழிலாளர்களின் இடமாற்றும், மூலதனம், பொருட்கள், மற்றும் கருத்துக்கள்) வனங்கள் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு உள்ளன.[21]

இந்தோனேசியாவில் உள்ள மர கடைசி தொகுதி, எண்ணெய் பனை தோட்ட ஐந்து காடழிப்பு.

2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ", ஓர் உள்ளூர் அமைப்பில் மக்கள் இயக்கவியல் பங்கு குறைவானதாகவோ அற்றும்ல்லது உறுதியானதாகவோ இருக்கலாம் " என்று கண்டறிந்துள்ளது . காடழிப்பு மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தம் மந்தமான பொருளாதார, சமூக, தொழில்நுட்ப நிலைமைகள் ஆகியவற்றினால் ஏற்படலாம்.[22]

காட்டின் சூழலமைப்புக்களின் சீரழிவிற்குக் காரணம் வனப்பாதுகாப்பை விட, காடழிப்பு அதிக லாபம் மற்றும் பொருளாதார சலுகைகள் அளிப்பதேயாகும். காடுகளின் உரிமையாளர்கள் மற்றும் காடுகள் சார்ந்த சமூகங்களுக்கு பயன் தரும் வகையில், பல முக்கிய வன செயல்பாடுகளுக்கு சந்தையோ வெளிப்படையான பொருளாதார மதிப்போ இல்லை.[23] உலகின் பார்வையில், கரிம தேங்கிடமாகவும் பல்லுயிரின காப்பிடமகவும் இருக்கும் காட்டின் நன்மைகள் பணக்கார வளர்ந்த நாடுகளையே சென்று அடைகிறது. இந்த சேவைகளுக்குப் போதுமான இழப்பீடு வளரும் நாடுகளுக்குக் கிடைப்பதில்லை என்றும் கருதுகிறார்கள். ஐக்கிய அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கள் காடுகளை வெட்டி இந்த காடழிப்பில் இருந்து பெரிதும் பயனடைந்தனர். ஆனால் வளரும் நாடுகளுக்கு அதே வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன், பணக்கார நாடுகளினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்னைக்கு இந்த ஏழை நாடுகள் வன பாதுகாத்தலுக்கு ஆகும் செலவுகளை ஏற்க வேண்டி உள்ளது வஞ்சத்தனமாகும்.[24]

கடந்த 30 ஆண்டுகளில் காடழிப்பு காரணிகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.[25] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்வு ஆதாரத்திர்க்காகவும், இந்தோனேசியா, லத்தீன் அமெரிக்கா, இந்தியா, ஜாவா முதலிய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் அரசாங்க ஆதரவு பெற்ற அபிவிருத்தி திட்டங்ககள் போன்ற முதன்மை காரணங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன. 1990களில் காடழிப்பு பிரித்தெடுக்கும் தொழில் நிறுவனங்கள், பெரிய அளவிலான கால்நடை பண்ணைகள், விரிவான விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை காரணிகளால் ஏற்பட்டது.[26]

சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

வளிமண்டலம்

மடகாஸ்கரில் சட்டவிரோத எரிப்பு நடைமுறைகள்

ref>"NASA – Top Story – NASA DATA SHOWS DEFORESTATION AFFECTS CLIMATE".</ref>[27][28][29][30]காடழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வாகும். இது காலநிலை மற்றும் புவியியலை வடிவமைக்கிறது.காடழிப்பு புவியை வெப்பமடையச் செய்வதோடு, பச்சையக விளைவிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வெப்ப மண்டல காடுகளை அழித்தல் சுமார் 20% உலக பச்சையக வாயுக்களின் உமிழ்விற்குக் காரணம்.[31][32] அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றங்களைப் பற்றிய குழுவின் படி, முக்கியமாக வெப்ப மண்டலப் பகுதிகளில் கரியமிலவாயு உமிழ்வுகளில் மூன்றில் ஒருபங்கு காடழிப்பினால் ஏற்படுகின்றது. ஆனால் சமீபத்திய கணக்கீடுகளின் படி, காடழிப்பு மற்றும் காடுகள் சீரழிவினால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம் மொத்த மனித கரியமில வாயு வெளியேற்றத்தில் 20% ஆகும்.[33][34] காடழிப்பு கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் தங்கச் செய்கிறது. கரியமில வாயு வளி மண்டலத்தில் அதிகமாக சேரும் போது அது படலம் போல் படர்ந்து சூரிய கதிர்களைத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்தக் கதிர்வீச்சு வெப்பமாக மாறுவதால் உலக வெப்ப மயமாதலுக்குக் காரணமாகிறது.[35] இதையே பச்சையக விளைவு என்று அழைக்கிறோம்.[36] பிற தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது வளிமண்டலத்தில் இருந்து கரிமப் பொருளை கரியமிலமாக உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடும். செழிப்பாக வளரும் மரங்களாலும் செழுமையான காடுகளாலும் மட்டுமே, ஓர் ஆண்டு அல்லது இன்னும் நீண்ட காலகட்டத்தில் கரிமப் பொருளை நீக்க முடியும். மரச் சிதைவினாலும் மற்றும் மரங்களை எரிப்பதாலும் கரிமப் பொருள் மீண்டும் வளிமண்டலத்தில் சேர்கிறது. கரிமப் பொருளைக் காடுகள் உட்கொள்வதற்கு, வெட்டப்பட்ட மரங்களைக் கொண்டு நீண்ட காலத்திற்கு நிலையான பொருள்களைச் செய்வதோடு மீண்டும் மரங்களைப் பயிர் செய்தல் வேண்டும்.[37] காடழிப்பு மண்ணில் உள்ள கரிமப் பொருள்கள் வெளியேறுவதற்குக் காரணமாகிறது. கரிமப் பொருள்களின் உறைவிடமாகிய காடுகள், சூழல் நிகழ்வுகளைப் பொருத்து, அவற்றின் தேங்கிடமாகவோ அல்லது மூலமாகவோ அமையலாம். முதிர்ந்த காடுகள் கரிமப் பொருள் ஆதாரமாகவோ அல்லது தேங்கிடமாகவோ மாறி மாறி அமைகின்றது. காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில், நிலம் வேகமாக வெப்பமாவதால் அவ்விடங்களில் காற்று மேலெழுந்து மேகங்கள் உருவாகி இறுதியில் அதிக மழைபொழிகிறது.[38] புவி இயற்பியல் திரவ இயக்கவியல் ஆய்வகத்தின்படி, வெப்ப மண்டலக் காடழிப்பினால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்யும் மாதிரிகள் வெப்பமண்டல வளிமண்டலத்தில் பரவலான ஆனால் மிதமான வெப்பநிலை உயர்வைக் காட்டுகிறது. எனினும், மாதிரி வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காட்டவில்லை. மாதிரியில், வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் காலநிலையில் எந்தக் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் இல்லை எனக் காட்டினாலும், பிழைகள் இருக்கலாம் மற்றும் முடிவுகள் முற்றிலும் திட்டவட்டமானவை இல்லை.

மழைக்காடுகள் உலகின் பிராண வாயுவிற்கு முக்கிய பங்களிக்கிறது என்ற எண்ணத்திற்கு மாறாக ஆராய்ச்சியாளர்கள்,[39] வளிமண்டல பிராண வாயுவிற்கு மழைக்காடுகளின் பங்களிப்பு மிக குறைவானதே என்றும் காடழிப்பு வளிமண்டல பிராணவாயுவின் அளவை அதிகம் பாதிப்பதில்லை என்றும் கூறுகிறார்கள்.[40][41] இருப்பினும், காட்டை அழித்து வெளியிடம் ஆகுவதற்காக காட்டு --NSS-IITM-tamil (பேச்சு) 18:26, 20 ஏப்ரல் 2013 (UTC)தாவரங்கள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப் படுவதினால் கரியமில வாயு வெளியாகி உலக வெப்பமயமாதலுக்குக் காரணமாகிறது. விஞ்ஞானிகள் வெப்பமண்டலக் காடுகளை அழிப்பதினால், வளிமண்டலத்தில் கரிமப் பொருளின் வெளியீடுகளில் ஆண்டு ஒன்றிற்கு 1.5 பில்லியன் டன்களாகும்.[42]

மண்

ரியோ டி ஜெனிரோ பிரேசிலிய நகரில் களிமண் பயன்பாட்டிற்காக காடழிப்பு

இடையீடு இல்லாத காடுகளில் மண்ணின் இழப்பு மிக குறைவாகும். ஒரு சதுர கிலோமீட்டர்க்கு சுமார் 2 மெட்ரிக் டன்களாகும். காடழிப்பினால் அதிகமான நீர் வழிந்தோடி விடுவதாலும், குப்பைகளினால் மண் பாதுகாப்பு குறைவதன் மூலமும், மண் அரிப்பு விகிதம் அதிகரிக்கிறது. மண்ணின் உவர்ப்பு தன்மை குறைவதால் வெப்பமண்டல மழைக்காடுகளில் மண்ணிற்கு இது ஒரு நன்மையாகவும் இருக்கிறது. வனவியல் நடவடிக்கைகள் மூலம் சாலைகள் விரிவாக்கம் மற்றும் இயந்திர மயமான உபகரணங்கள் பயன்பாட்டின் மூலம் அரிப்பு அதிகரிக்கிறது.

சீனாவின் சாம்பல் மஞ்சள் நிறமான வண்டல் மண் பீடபூமியின் காடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டன. அந்த நாள் முதல் மண் அரிப்பு ஏற்படுவதுடன். வியக்கத்தகு பள்ளதாக்குகள் உருவாக்கி அரிக்கப்பட்ட மண் ஆற்றுநீருக்கு மஞ்சள் நிறத்தைத் தருவதால் மஞ்சள் ஆறு என்ற பெயர் பெற்றது. காடழிப்பினால் ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதனால் இந்த ஆற்றை சீனாவின் துன்பம் என்று அழைக்கிறார்கள்.

மரங்கள் அகற்றப்படுவதால் எப்போதும் அரிப்பு விகிதம் அதிகரிப்பது இல்லை. தென்மேற்கு அமெரிக்க சில பகுதிகளில், புதர்கள் மற்றும் மரங்கள் புல்வெளி மீது படர்கிறது . மரங்கள் படர்ந்துள்ளதால் அவற்றிற்கு இடையே புல் இழப்பு அதிகரிக்கிறது. வெற்று பகுதிகளில் மண் அரிப்பு அதிகமாகிறது பண்டேலியர் தேசிய நினைவுச் சின்னத்தில் உள்ள அமெரிக்க வன சேவை, முன்பிருந்த சுற்றுச்சூழலை மீட்கவும், மற்றும் மரங்களை அகற்றி, மண் அரிப்பைக் குறைக்கவும் வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றன.

மர வேர்கள் மண்ணை பிணைக்கவும், மற்றும் மண் போதுமான ஆழமற்று இருந்தால் அவற்றை அடியிலுள்ள பாறைப்படுகையுடன் இணைக்கவும் உதவுகிறது. செங்குத்தான சரிவுகளில் மரம் அகற்றப்படுவதினால் நிலச்சரிவு ஏற்பட்டு அருகே வாழும் மக்களுக்கு ஆபத்து அதிகரிக்கிறது.

பல்லுயிரின வளம்

பல்லுயிரின வளம் சரிவிற்கு மனித அளவிலான காடழிப்பே காரணமாகும்.[43] மற்றும் உலக அளவில் பல இனங்களின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறது. காடுகள் உள்ள பகுதிகளை அகற்றுவதோ, அல்லது அழிப்பதோ சூழல் சீர்கேட்டிற்கும், பல்லுயிரின இழப்பிற்கும் காரணமாகிறது.[6][44]

காடுகள் பல்லுயிரின வளத்தை ஆதரிப்பதுடன் வனவிலங்கிற்கு வாழ்விடமாகவும் மருத்துவ தாவரங்கள் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் சிறந்த இடமாகவும் திகழ்கிறது.[45] காட்டிலுள்ள சில தாவர வகைகள் புதிய மருந்துகளுக்கு மாற்ற முடியாத மூலங்களாகும் அதாவது டாசோல் போன்றவை. காடழிப்பு ஈடு செய்ய முடியாத மரபணுவேறுபாடுகளை அழித்து விடுகிறது.[46]

2009 ஆம் ஆண்டு, பெரும்பாலான சட்டவிரோதமாக பெறப்பட்ட ரோஸ்வுட் மடகாஸ்கரில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது

வெப்பமண்டல மழைக்காடுகள் பூமியில் மிகவும் மாறுபட்ட சூழல் தொகுப்பாகும்.[47][48] உலகின் பிரபலமான பல்லுயிரின வளத்தில் 80% உயிரினவளம், வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும்.[49][50][51] காடுகள் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டதாலும் அழிக்கப்பட்டதாலும் பல்லுயிர்வளம் குறைந்து சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.[52]

மழைக்காடுகள் காடழிப்பினால் ஒரு நாளிற்கு 137 தாவர, விலங்கு மற்றும் பூச்சி இனங்கள் மற்றும் ஓர் ஆண்டுக்கு 50,000 உயிரினங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[53][54] வெப்பமண்டல மழைக்காடுகளின் காடழிப்பே ஹோலுஸீன் மக்கள் அழிவிற்கு காரணமாகும். காடழிப்பினால் பாலூட்டிகளும் பறவைகளும் ஆண்டொன்றிற்கு ஒரு சிற்றினம் விகிதம் அழிந்து கொண்டு இருக்கின்றன. மொத்த உயிரினங்களுக்குள் வருடத்திற்கு சுமார் 23,000 இனங்கள் அழிந்து விடுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் 40% , 21 ம் நூற்றாண்டிற்குள் அழிந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[55] இந்த கணிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் உள்ள காடுகள் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அபாயத்திற்கு உள்ளாகிய சிற்றினங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு, மற்றும் மரங்களும் தாவரங்களும் பரந்து நிலையாக உள்ளன என்று 1995 ஆண்டின் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.

சிற்றினங்கள் அழிவு பற்றிய அறிவியல் விளக்கங்கள் போதுமானதாக இல்லாததால் காடழிப்பினால் ஏற்படும் பல்லுயிர் இழப்பைப் பற்றிய கணிப்புகள் துல்லியமாக இருப்பதில்லை. காடு சார்ந்த பல்லுயிர் இழப்பு பற்றிய கணிப்புகள் எல்லாம் காடுகள் அழிந்தால், இனங்களின் எண்ணிக்கை அதேபோல் குறையும் என்று ஓர் அடிப்படை அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன.[56] காடழிப்பினால் ஏற்படும் வாழ்விட இழப்பு மட்டுமே பெரிய அளவில் சிற்றினங்கள் இழப்பை ஏற்படுத்துவது இல்லை. மாதிரிகள் உண்மையான காடழிப்பு நடந்து பகுதிகளில் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனங்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்டுகின்றன.[57]

பிரேசிலிய அமேசான் பற்றிய ஒரு சமீபத்திய ஆய்வு இதுவரை அழிவுகள் இல்லாத போதிலும் கணிக்கப்பட்ட அழிவுகளில் 90 சதவீகிதம் அடுத்த 40 ஆண்டுகளில் ஏற்படும் என்று கூறுகிறது.[58]

பொருளாதார பாதிப்பு

உயிரியல் பன்முகத்தன்மை(CBD) பற்றி பான் நகரில் நடந்த மாநாட்டில் காடழிப்பு மற்றும் இயற்கை சீர்கேடுகளினால் உலகில் உள்ள ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தின் குறைவோடு 2050க்குள் உலகின் ஜிடிபி 7% குறைந்துவிடும் என்று அறிக்கை கூறுகிறுது.[59] வரலாற்று ரீதியாக, நீர் மற்றும் விவசாய நிலங்கள் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவியதைப் போலவே காடுகளில் இருந்து கிடைத்த வனப்பொருள்கள்களின் பயன்பாடு ஒரு முக்கிய பங்காற்றியது. இன்றும் வளர்ந்த நாடுகளில் கட்டிடம் வீடுகள் முதலியவற்றிற்கும் மரக்கூழ் காகிதம் செய்யவும் மரங்களைப் பயன்படுத்துகிறார்கள். வளரும் நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்கள் வெப்ப மூட்டுவதற்கும் மற்றும் சமையலுக்கும் விறகுகளைச் சார்ந்திருக்கிறார்கள்.[60]

காட்டு உற்பத்திப் பொருட்களின் தொழில்துறை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பகுதியாகும். குறுகிய கால நலன்களுக்காக, காடுகளை வேளாண்மை நிலங்களாக மாற்றுவதும், காடுகளிலிருந்து கிடைக்கும் மரப் பொருட்களை அதிகமாக சுரண்டுவதும், பொதுவாக நீண்ட கால வருமானம் மற்றும் நீண்ட கால உயிரியல் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேற்கு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், தென்கிழக்கு ஆசியா மற்றும் பல பகுதிகளில் சரிந்துவரும் மரம் அறுவடைகளினால் குறைந்த வருவாய் ஏற்பட்டுள்ளது. சட்ட விரோதமாக மரம் வெட்டுவதால் ஆண்டுதோறும் தேசிய பொருளாதாரத்திற்கு, பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுத்துகிறது.[61]

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் காடழிப்பிற்கு ஒரு காரணமாகும்.[62] வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் மிக விரைவான பொருளாதார (தொழில்துறை) வளர்ச்சி கொண்ட உலகின் வளரும் நாடுகளில் காடழிப்பின் பாதிப்பு அதிகம் இருக்கும். 1995 ஆம் ஆண்டு, வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி 6% ஆகும். வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி 2% ஆகும். நம் மக்கள் தொகை வளர, புதிய வீடுகள், சமூகங்கள், மற்றும் நகரங்களில் விரிவாக்கம் ஏற்படும். புதிய விரிவாக்கத்தை இணைக்கும் சாலைகள், நம் அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியாகும். கிராமப்புற சாலைகள் மூலம் பொருளாதாரத்தில் மேம்பாடு ஏற்படுவதோடு, காடழிப்பும் அதிகமாகிறது. அமேசான் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளை சுற்றியுள்ள 100 கி.மீ.க்குள் காடழிப்பு ஏற்பட்டுள்ளது[63].

காடழிப்பு விகிதம்

உலக காடழிப்பு[64] 1852ஆம் ஆண்டு தீவிரமாக துரிதப்படுத்தப்பட்டது.[65][66] 1947ஆம் ஆண்டில் நம் உலகத்தின் முதிர்ந்த காடுகள் 15-16 மில்லியன் சதுர கீமிராக இருந்தது. இதில் பாதிக்கும் மேலான காடுகள் (7.5-8 மில்லியன் சதுர கீமி) தற்போது அழிக்கப்பட்டு விட்டன. அறிஞர்கள் 2030 க்குள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் 10% காடுகளே மிஞ்சி இருக்கும் மற்றும் 10% காடுகள் சீரழிந்த நிலையில் இருக்கும் என்றும் 80% காடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களும் அழிந்து விடும் என்றும் கணித்து இருக்கிறார்கள். சில வரைபட வல்லுனர்கள் ஓர் எளிய வரை படத்தைப் பயன்படுத்தி நாட்டின் காடழிப்பை வெளிப்படையான அளவில் சித்தரிக்க முயன்றனர்.[67][68]

மதிப்பீடுகளும் வெப்பமண்டலக் காடுகளின் அழிப்பைப் போலவே பரவலாக வேறுபடுகிறது.[69][70][70] விஞ்ஞானிகள் உலகின் வெப்ப மண்டல மழைக்காடுகள் ஐந்தில் ஒரு பங்கு 1960 மற்றும் 1990 இடையே அழிக்கப்பட்டன என்று கணித்துள்ளனர். அவர்கள் மழைக்காடுகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு 14% நிலப்பரப்பில் இருந்தன. உலகின் நிலப்பரப்பில், 5-7% மட்டுமே இப்போது வெப்பமண்டலக் காடுகள் உள்ளன. 21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அனைத்தும் நீக்கப்படும் என்று கூறுகிறார்கள்.[71]

செயற்கைக்கோள் படங்களை 2002இல் பகுப்பாய்வு செய்ததில் ஈரப்பதம் மிக்க வெப்பப் பகுதியில் உள்ள காடழிப்பு விகிதம் (வருடத்திற்குச் சுமார் 5.8 மில்லியன் ஹெக்டேர்) பொதுவாக மேற்கோள் விகிதங்களை விட சுமார் 23% குறைவாக இருந்தது.[72] மாறாக, செயற்கைக்கோள் படங்களின் ஒரு புதிய ஆய்வின்படி அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு முன்பு மதிப்பிடப்பட்டுள்ளது போல இருமடங்கு வேகமாக இருக்கிறது.[73][74]

தொகுப்புகளை புலி வனத்தை சுற்றி காடழிப்பு

சிலர் காடழிப்பு போக்குகள் ஒரு குச்னெட்ச் வளைவைப் பின்பற்றுகிறது என்று வாதிட்டாலும், அது பொருளாதாரம் அல்லாத காட்டின் மதிப்புகளை (எடுத்துக்காட்டாக, இனங்கள் அழிவதை) கணிக்க இயலாது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஒரு 2005 அறிக்கை, பூமியின் மொத்த காட்டுப் பகுதி தொடர்ந்து ஆண்டுக்கு 13 மில்லியன் ஹெக்டேர் குறைக்கிறது. எனினும், காடழிப்பின் உலக விகிதம் சமீபத்தில் குறைந்து வருகிறது என்று மதிப்பிட்டுள்ளது.[75][76] இன்னும் சிலர் மழைக்காடுகள் எப்போதைக் காட்டிலும் விரைவாக அழிந்து வருகின்றன என்று கூறுகின்றனர். ஐ.நா. கணக்கெடுப்பின்படி காடு என்பது 10% மரங்களை உடைய நிலப்பரப்பு என்பதால் அது வெப்பமண்டல சமதள புல்வெளி சூழலும் மற்றும் சேதமடைந்த காடுகள் உள்ள பகுதிகளையும் குறிக்கும் ,"என்று லண்டனை தளமாக கொண்ட மழைக்காடு நிறுவனம் குறிப்பிடுகிறது. ஐநா காடுகளின் வகைகளை வேறுபடுத்தி கூறவில்லை. அது மட்டுமின்றி அவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நாடுகளின் வனவியல் துறைகளில் இருந்து கிடைத்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு சேகரித்த தகவல்கள் வெளியிடுவர்.(சட்டவிரோதமான அதிகார பூர்வமற்ற நடவடிக்கைகளை கணக்கில் எடுக்கப் படவில்லை).[77]

மழைக்காடுகளை அழிப்பதினால் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உண்டாகும் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. 90% மேற்கு ஆப்பிரிக்கா கடலோர மழைக்காடுகள் 1900 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளன. தெற்கு ஆசியாவில் 88% மழைக்காடுகள் அழிந்துள்ளன. உலகின் மழைக்காடுகளில் அமேசான் பள்ளத்தாக்குகளில் உள்ள அமேசான் மழைக்காடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அமேசான் காடுகள் சுமார் 4 மில்லியன் சதுர கிலோமீட்டர் உள்ளடக்கியது. 2000 மற்றும் 2005 இடையே அதிக வெப்ப மண்டல காடழிப்பு விகிதம் உள்ள பகுதிகள் மத்திய அமெரிக்கா (ஒவ்வோர் ஆண்டும் அதன் காடுகள் 1.3% இழக்கிறது) மற்றும் வெப்ப மண்டல ஆசியாவாகும். மத்திய அமெரிக்காவில், தாழ்நில வெப்பமண்டல காடுகள் மூன்றில் இரண்டு பங்கு 1950 முதல் மேய்ச்சல் நிலமாக மாறியது மற்றும் 40% மழைக்காடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் அழிந்து விட்டன. பிரேசில் அதன் 90-95% மாட்டா அட்லாண்டிகா காடுகளை இழந்துள்ளது. பராகுவே 2010 இல் ஒரு சீரற்ற முறையில் மேற்கொண்ட 2 மாத காலஆய்வில் அந்த நாட்டின் மேற்கு பகுதிகளில் 15,000 ஹெக்டேர் என்ற விகிதத்தில் அதன் அரை ஈரமான இயற்கை காடுகளை இழந்துள்ளது, பராகுவே பாராளுமன்றம் இயற்கை காடுகளை வெட்டுவதை தடை செய்யும் சட்டத்தை 2009யில் இயற்ற மறுத்தது.

மடகாஸ்கர் அதன் கிழக்கு மழைக்காடுகளில் 90% இழந்துள்ளது.[78][79] 2007 இல் 1% குறைவான ஹெய்டி காடுகள் மட்டுமே இருந்தது. மெக்ஸிக்கோ, இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, வங்காளம், சீனா, இலங்கை, லாவோஸ், நைஜீரியா, காங்கோ, லைபீரியா, கினியா, கானா மற்றும் ஐவரி கோஸ்ட் ஜனநாயக குடியரசு தங்கள் மழைக்காடுகளின் பெரும் பகுதிகளை இழந்துள்ளனர்.[80][81] பல நாடுகளில், குறிப்பாக பிரேசில், தங்கள் காடழிப்பு ஒரு தேசிய அவசரம் என்று அறிவித்துள்ளனர்.[82][83] அடர்ந்த காடுகளை உடைய கனடிய காடுகளில் 50% காடுகள் அழிந்தது அல்லது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில் காடழிப்பு

1951 முதல் 1980 வரையில் ஐந்து இட்சம் எக்டேர் காடுகள் அணைக்கட்டுப் பாசனத்திட்டங்களுக்காக அழிக்கப்பட்டன[84].

காடுகள் பெருக்கல்

உலகின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஆசிய நாடுகளில், காடாக்கல் மற்றும் காடு வளர்ப்பு காட்டுப் பகுதிகளை அதிகரித்து வருகிறது. உலகின் 50 அதிக காடுகள் உடைய நாடுகளுக்குள் 22 நாடுகளில் கானகத்தின் அளவு அதிகரித்துள்ளது.[85] ஆசியாவில் 2000 மற்றும் 2005 இடையே காடுகள் 1 மில்லியன் ஹெக்டேர் அளவு அதிகரித்துள்ளது. எல் சால்வடோர் உள்ள வெப்ப மண்டல வனங்கள் 1992 மற்றும் 2001 இடையே 20%க்கும் மேல் விரிவடைந்துள்ளது. 2050க்குள் உலக வனப்பகுதியின் பரப்பளவு 10% (இந்தியாவின் பரப்பளவு) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[86]

சீனா மக்கள் குடியரசில் காடுகளுக்கு பெரிய அளவில் பேரழிவு ஏற்பட்டது. அரசு கடந்த காலத்தில் ஒவ்வொரு உடல்வலிமைவுடைய 11 வயது மற்றும் 60 வயதிற்குள் உள்ள ஆண்கள் ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து மரங்கள் வரை நட வேண்டும் அல்லது சமமான அளவு மற்ற காட்டு சேவைகள் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளானர். குறைந்த பட்சம் 1 பில்லியன் மரங்கள் 1982 முதல் ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் நடப்பட்டு வருகின்றன என்று கூறுகின்றனர். மேலும்,மரங்கள் நடுவதன் மூலம் கோபி பாலைவனம் விரிவடைவதை தடுப்பதையும் நிறுத்துவதையும் நோக்கமாக கொண்ட சீனா பசுமைசுவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், நட்டப் பின்னர் அதிக சதவீதம் (75%) மரங்கள் அழிந்து விடுவதன் காரணமாக, இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக இல்லை. 1970ல் இருந்து சீனாவில் காட்டு பகுதியில் ஒரு 47 மில்லியன் ஹெக்டேர் அதிகரிப்பு உள்ளது. சீனாவில் மரங்கள் எண்ணிக்கை சுமார் 35 பில்லியன் காடுகள் நிறைந்த நிலப்பகுதி 4.55% மாக அதிகரித்துள்ளது. வனப்பகுதி 20 ஆண்டுகளுக்கு முன்னர் 12% ஆக இருந்தது, இப்போது 16,55% ஆகும்.[87]வான்வழி காடுகளை மீளமைத்தல், மண் அரிப்பு கட்டுப்டுத்தும் அமைப்பு மற்றும் கடல் நீர் பசுமையகம் அதனோடு இணைந்து சஹாரா வன திட்டம் முதலியவை சீனாவின் ஆர்வமான திட்டங்கள் ஆகும்.

மேற்கத்திய நாடுகளில் ஒரு நிலைநிறுத்தப்பட்ட முறையில் அறுவடை மற்றும் உற்பத்தியான மரப்பொருட்களை நுகர்வோர் தேவை என கருதுவதால் வன துறை தங்கள் வன மேலாண்மை மற்றும் மர அறுவடை நடைமுறைகளை அதிகரித்து வருகின்றனர் .

ஆர்போர் டே அறக்கட்டளை மழை வன மீட்பு திட்டம் காடழிப்பு தடுக்க உதவும் தொண்டு நிறுவனமாகும் . தொண்டுநிறுவனங்கள் மரம் வெட்டும் நிறுவனங்கள் அதை வாங்குவதற்கு முன்பே மழைக்காடுகள் நிலத்தை பாதுகாப்பதற்காக நன்கொடை பணத்தை பயன்படுத்துகிறது. இந்த நிறுவனம் காட்டு நிலத்தில் வாழும் பழமையான பழங்குடியினர் வாழ்க்கையையும் பாதுகாக்கிறது. சர்வதேசசமூக வனவியல், குளுமை பூமி, இயற்கை பாதுகாப்பு, இயற்கைக்கான உலகளாவிய நிதியம், சர்வதேசபாதுகாப்பு, ஆப்பிரிக்க பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பச்சைஅமைதி போன்ற நிறுவனங்கள் காட்டின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பச்சை அமைதி நிறுவனம் வளமான காடுகளின் வரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மனித இனத்திற்கு முன்பு (8000 ஆண்டுகளுக்கு முன்பு) மற்றும் தற்போதைய (குறைந்த) காடுகள் அளவு காட்டும் எளிய கருப்பொருள் வரைபடத்தை உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.[88] இந்த வரைபடங்கள் மக்களால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய தேவையான காடு வளர்ப்பு அளவை குறிக்கும்.

காண்க

  • ரோமானியர் காலத்தில் காடுகள் அழிப்பு
  • பாலைவனமாக்கல்
  • பொருளாதார பாதிப்பை பகுப்பாய்வு
  • சுற்றுச்சூழல் தத்துவம்
  • காகித சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
  • வனப்பகுதி
  • சட்டவிரோத பதிவு
  • நில பயன்பாடு, நில பயன்பாட்டு மாற்றம் மற்றும் காடுவளர்ப்பு
  • ஈரப்பதம் மறுசுழற்சி
  • மலை உச்சியில் நீக்கம்
  • இயற்கை இயற்கை
  • புதிய கற்காலம்
  • மிகுதியான மக்கள்தொகை
  • மழைக்காடுகள்
  • வெட்டி எரித்தல்
  • ஸ்லாஷ் மற்றும் எரிப்பதை
  • காட்டுப்பகுதிகள்
  • உலக வனவியல் காங்கிரஸ்
  • வனத்துறை சர்வதேச வருடம்
  • பல்வுயிரிப் பெருக்கம்

ஆதாரங்கள்


பிற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Deforestation
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காடழிப்பு&oldid=3860716" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை