கிழக்கு ஐரோப்பிய சமவெளி

கிழக்கு ஐரோப்பியச் சமவெளி (East European Plain) என்பது ஐரோப்பாவிலுள்ள ஒரு மிகப்பெரியச் சமவெளிசமவெளி ஆகும். இது இரசியாவின் அறிவியல் அறிஞர்களால் இரசியச் சமவெளி என்றும்[2][3] வரலாற்றின்படி சர்மாட்டிக் சமவெளி என்றும் அழைக்கப்படுகிறது.[4] இது வட மற்றும் மத்திய ஐரோப்பியச் சமவெளிக்குக் கிழக்காக நீண்டு பரந்து உள்ளது,[5] மேலும் இது பல பீடபூமிகளைத் தன்னகத்தே கொண்டு 25 டிகிரி தீர்க்கரேகைக்குக் கிழக்காக நீண்டுள்ளது. இதில் மேற்காக உள்ள வாலினியன் – பொடொலியன் உயர்நிலம், மத்திய இரசிய உயர்நிலம் மேலும் வோல்கா உயர்நிலத்தைச் சூழ்ந்துள்ள கிழக்கு எல்லையும் அடங்கும். இந்தச் சமவெளியானது ட்னீபர் வடிநிலம், ஒகா-டான் தாழ்நிலம் மற்றும் வோல்கா வடிநிலம் போன்ற தொடர் பெரிய ஆற்று வடிநிலங்கள் அடங்கியது ஆகும். தெற்குமுனையின் ஐரோப்பியச் சமவெளி நெடுகிலும் காகசஸ் மற்றும் கிரிமியன் மலைத்தொடர்கள் உள்ளன.[5] வட ஐரோப்பிய சமவெளியோடு (வடமேற்கு ஃபிரான்சு, நெதர்லாந்து, ஜெர்மனி முதல் வடகிழக்கு போலந்து வரை செல்கிறது) பால்டிக்ஸ் (எஸ்டோனியா, லட்வியா மற்றும் லிதுவானியா), மோல்டோவா, தென்மேற்கு ரோமானியா மற்றும் அதன் தென் எல்லை விரிபரப்பு வடபல்கேரியாவிலுள்ள டானுபியன் சமவெளி (லுடோகோரி மற்றும் தெற்கு டோப்ருஜா அடங்கும்), இது பெரும் ஐரோப்பியச் சமவெளியின் ஐரோப்பிய நிலத்தில் மலைகளற்ற பெரும்பகுதிகளைக் கொண்ட நிலப்பரப்பாக உள்ளது.[6]

கிழக்கு ஐரோப்பியச் சமவெளியின் தோராயமான பரவலை விவரிக்கும் படம்[1]

பரவல்

கிழக்கு ஐரோப்பியச் சமவெளியானது ஏறத்தாழ முழு பால்டிக் மாநிலங்களையும் உள்ளடக்குகிறது.[2] அவற்றுள் பெலாரஸ், உக்ரைன், மோல்டோவா, ருமேனியா மற்றும் ரசியாவின் ஐரோப்பிய பகுதி அனைத்தும் அடங்கும். இந்தச் சமவெளியானது ஏறத்தாழ நான்கு மில்லியன் அல்லது நாற்பது லட்சம் சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. சராசரியாக 170 மீட்டர் (560 அடி) உயரம் கொண்டது. இதன் மிக உயர்ந்த புள்ளி 346.9 மீட்டர் (1,138.1 அடி) உயரத்தில் வால்டாய் குன்றுகளில் உள்ளது.

எல்லைகள்

மண்டல உட்பிரிவுகள்

  • பெலாரஸ்
    • பெலாருசியன் முகடு
    • பொலேஸியா
  • பல்கேரியா
    • டானுபியன் சமவெளி
  • எஸ்டோனியா [2]
  • கஸாக்கஸ்தான் (ஐரோப்பிய பகுதி)
  • லாட்வியா [2]
  • லித்துவானியா [2]
  • போலந்து [2]
    • ரோஸ்டோக்ஸி
    • மாஸோவியன் தாழ்நிலம்
  • ரோமானியா / மால்டோவா
    • மோல்டாவியன் சமவெளி (மோல்டாவா, ரோமானியா, உக்ரைன்)
    • வால்லசியன் சமவெளி (தாழ் டானுபியன் சமவெளியின் வடக்கு பகுதி)
  • ரஷ்யா (ஐரோப்பிய பகுதி)
    •  டிமான் முகடு
    • வடக்கு முகடு
    • மாரி தாழ்நிலம்
    • வால்டாய் குன்றுகள்
    • ஸ்மொலென்ஸ்க் – மாஸ்கோ உயர்நிலம்
    • மத்திய இரசிய உயர்நிலம் (ரசியா, உக்ரைன்)
    • ஓகா – டான் தாழ்நிலம்
    • வோல்கா உயர்நிலம்
    • ஆப்ஷ்ச்சி ஸிர்ட்
    • காஸ்பியன் தாழ்நிலம்
  • உக்ரைன்
    • சியான் தாழ்நிலம்
    • வோல்ஹைனியன் – போடோலியன் உயர் நிலம்
      • பொடொலியன் சமவெளி
    • பொலோஸியன் தாழ்நிலம்
    • ட்னீபர் உயர்நிலம்
      • கிவ் மலைகள்
    • மத்திய உயர்நிலம்
    • கருங்கடல் உயர்நிலம்
    • அஸொவ் உயநிலம் / டோனெட்ஸ் முகடு

பிற முதன்மை நிலப்பரப்புகள்

கீழ்கண்ட முக்கிய நிலப்பரப்புகள் கிழக்கு ஐரோப்பியச் சமவெளியில் காணப்படுகின்றன.(அவை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன)வடக்கு ருசியத் தாழ்நிலம்
பால்டிக் உயர்நிலம்
குமா-மனிச் தாழ்நிலம் / அமிழ்வு நிலம்
புகுல்மா-பெலபே உயர்நிலம்
வ்வாட்ஸ்கி உவாலி

பெரிய ஆறுகள்

வோல்கா ஆறு, டானுபே, உரால் ஆறு, விஸ்டுலா, தினேப்பர், டான் ஆறு (ருசியா), பெகோரா ஆறு, காமா ஆறு, ஓகா ஆறு, பெலயா ஆறு, டௌகாவா, நெர்மன் ஆறு, ப்ரிகோல்வா ஆறு ஆகியவை இப்பகுதியில் பாயும் பெரிய ஆறுகளாகும்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை