சமவெளி

சமவெளி (Plain) என்ற புவியியல் சொற்பதமானது, சமமான நிலப்பகுதியைக் குறிக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து அதிக உயர வேறுபாடு இல்லாமலும், பெரும்பாலும் மலைகள், கடல்களின் தொடக்க நிலப்பகுதிகளாகவும் இவை காணப்படுகின்றன. அவ்வாறு நிலப்பகுதிகள் , மலைப்பள்ளத்தாக்குகளாவும், பீடபூமிகளாகவும், உயர்நிலங்களாகவும் (high/up lands - கடல்மட்ட அளவு = 500-600 மீட்டர் உயரத்தில்) நிலவுகின்றன.[1] இ்ப்புவியின் மூன்றில் ஒரு பகுதி, சமவெளிப்பகுதிகளாக அமைந்துள்ளது.[2]ஒரு சமவெளியானது, அந்நிலத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப இருக்கும் வலிமையான இயற்கைக் காரணிகளான, நீர், காற்று, பனி, அரிப்பு போன்றதொன்றால் உருவாகின்றது. அவ்வாறு உருவாகும் போது அதிக புல்களைக் கொண்ட நிலமாக அமைந்து, அவற்றின் தன்மைகளால் வேறுபட்டு திகழ்கின்றன.[3] இதனால் கால்நடை வளர்ப்பும், அதனைச் சார்ந்து வேளாண்மையும், சிறப்பாகச் செய்யத்தக்க, புவியிடமாக விளங்க்குகின்றன.[4]

ஒரு சமவெளியின் பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தேயுடைய கிரிசு நாட்டுச் சமவெளி

சமவெளி வகைகள்

தலைச்சமவெளித் தோற்றம்
பனியாற்றுப் படிவு(sandurs[5])) என்று அழைக்கப்படும், ஐசுலாந்து பனிச்சமவெளியொன்று(Skeiðarárjökull)

சமவெளிகளை, அவைகளின் தோற்ற அடிப்படையில், மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

1. அமைப்புச் சமவெளிகள் (Structural plains) :உலகின் பெரும்பான்மையான தாழ்நிலப்பகுதி, இத்தகைய சமவெளிகளைக் கொண்டு திகழ்கின்றன.[6]

2. அரிப்புச் சமவெளிகள் (Erosional plains) :ஓடும் நீர், ஆற்று வெள்ளம், நகரும் பனி போன்றவற்றால், நிலத்தின் மேற்பகுதி அரிக்கப்பட்டு, தலைச்சமவெளிகள்(peneplains) [7] முதலில் தோன்றுகின்றன. பின்னர் இவை தொடர் மண் அரிப்புகளால், உயிரினங்கள் வாழத்தகுந்த சமவெளிகளாக மாறுகின்றன.

3. படிவுச் சமவெளிகள் (Depositional plains) : அரிப்புச் சமவெளிகளின் காரணிகளான, காற்று, பனி, வெள்ளம், கடல் அலை போன்றவைகள் பலவகையான இயற்கைப் பொருட்களை அது படியும் மண்ணில் படியச் செய்கின்றன. இவை தொடர்ந்து ஒன்றன் மீது ஒன்று படிவதால், அக்குறிப்பிட்ட மண் பெருமளவில் அதிகரித்துப் படிவுச்சமவெளிகள் தோன்றுகின்றன. இதனால் முன்பு இருந்ததை விட, வளமான மண் அடுக்குகள் தோன்றுகின்றன.[8]

3.1. வண்டல் சமவெளிகள் (Alluvial plains) : புதுவெள்ளம் கொண்டு வரும் நீரானது, ஏராளமான மண், நுண்ணுயிரிகள் போன்ற வளங்களைத் தன்னகத்தே கொண்டு வந்து படியச் செய்கின்றன. அவை படியச் செய்யும் சமவெளிகள், வண்டல் சமவெளிகள் எனலாம்.[9]இவற்றிலும் பல வகைகள் உள்ளன. ஏரி வண்டல் சமவெளி(Lacustrine plain)[10], பாறைக்குழம்புச் சமவெளி(Lava plain)[11], ஆறுகள் வளைந்து வளைந்து ஓடுவதால் ஏற்படும் வளைவுச் சமவெளி (Scroll plain) முதலியவைகளை முக்கிய எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

3.2. பனிச் சமவெளிகள்(Glacial plains) : பனிக்கட்டிகளாலும், அவற்றின் நகர்தலாலும் தோன்றுகின்றன. இந்த வகை பனிச்சமவெளிகளில், பல வகைகள் உள்ளன. இதில் பனியாற்று நகர்வு படிவுச் சமவெளி(Outwash plain) முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

உலகின் முக்கிய சமவெளிகள்

ஆப்பிரிக்கச் சமவெளிகள்

2008 ஆம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்கா; 30,000 ச. கி. மீ உள்ள சிருங்கதிச் சமவெளிப்ப பகுதியும், அங்குள்ள ஆறும் வளத்துடன் காணப்படுகின்றன
பல நூற்றாண்டுகளாக நடைபெறும், 2012 ஆம் ஆண்டின் சிருங்கதி பாலூட்டிகளின் சமவெளி இடப்பெயர்வு

ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல இடங்கள், பகல் பொழுது வெப்ப மிகுதியாகவும், இரவில் குளிர் மிகுதியாகவும் காணப்பட்டு வாழ்வியில் சூழ்நிலைகள் கடுமையாக இருக்கின்றன. தட்ப வெப்ப நிலைகள் இவ்வாறு வேறுபடுவதால், உயிரியல் வளங்களும் வேறுபட்டு காணப்படுகின்றன. சிங்கம், யானை போன்ற வன்விலங்குகள், சமவெளிப் பகுதிகளில் ஆதிக்கம் மிக்கதாகக் காணப்படுகின்றன. உலகின் பத்து இயற்கை அதிசயங்களில் ஒன்றான சிருங்கதி இடப்பெயர்வு, இங்குள்ள சமவெளிப்பகுதிகளில் நடைபெறுகிறது. ஆப்பிரிக்கச் சமவெளிகளில் பல பகுதிகளும், வாழிடங்களும் கட்டமைக்கப் பட்டுள்ளன. கிழக்கு ஆபிரிக்காவில் ஆப்பிரிக்க எருமைகளும், தெற்கு வெள்ளை காண்டாமிருகங்களும், ரூத்செல்டு ஒட்டகச்சிவிங்கியும், ஆப்பிரிக்கச் சிறுமான்களும், தொம்சன் சிறுமான்களும், ஆழமில்லாக் கடல்களில் மாகேம்களும் கொண்டு வேறுபட்டு காணப்படுகின்றன.[12]தென்னாப்பிரிக்காச் சமவெளிகளில் மாசாய் ஒட்டகச்சிவிங்கிகளும், சாப்லி மான்வகைகளும்,(Sable antelope) தீக்கோழிகளும் பெருமளவில் காணப்படுகின்றன.[13]நடு ஆப்பிரிக்காவில் பின்வெளிர்சிவப்புப் பெலிகன் பறவைகளும் (Pink-backed pelican), தட்டைக்கால் நாரைகளும், ரூபெல் பிணந்தின்னிக் கழுகுகளும் அதிக எண்ணிக்கையில், சமவெளி வாழிடங்களைக் கொண்டுள்ளன.

ஆசிய சமவெளிகள்

உரிமியா சமவெளி ஏரியில் வாழும் பழங்குடியினர், ஈரான்(படத்தின்காலம்=?)
ஆற்றுச் சமவெளியின் மரக்காடுகள், சைபீரியா
கேடூச் சமவெளியில் போரோபுதூர் கோவில், இந்தோனேசியா

ஐரோப்பிய சமவெளிகள்

மலைகளில்லா, ஐரோப்பாவின் பெரிய சமவெளி, பல நாடுகளிடையே அமைந்துள்ளது[16] (சாம்பல் நிறம்)

ஐரோப்பிய நில அமைவுகளில் மிகப்பெரியதாக இருக்கக்கூடியவைகளில், இப்பெருஞ்சமவெளியும் ஒன்று.[17] இதன் தொடக்கம், 491 கிலோமீட்டர் நீளமுள்ள பனி சூழ்ந்த பிரனீசு மலைத்தொடரிலிருந்து, மேற்கில் பிரான்சு கடற்கரைப் பகுதியான பிஸ்கே விரிகுடா வரையும், கிழக்கில் இரசியாவின் உரால் மலைகள் வரையும் அமைந்துள்ளது.[18] வடக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளான நோர்டிக் நாடுகள், நோர்வே, சுவீடன், சுவல்பார்டு, வடக்கு இங்கிலாந்து, போலந்து, டென்மார்க், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, வட பிரான்சு செக் குடியரசு ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க நாடுகளில், இச்சமவெளி அமைந்துள்ளது. இதன் குறுகிய பகுதி ஏறத்தாழ 320 கி.மீட்டர்களாகவும், அகன்ற பகுதி ஏறத்தாழ 3200 கி.மீட்டர்கள் கொண்டதாகவும் விளங்குகின்றன. மேலும், கடல் மட்டத்தில் இருந்து, 450 மீட்டர்களல் அமைந்துள்ளது. மிகவும் குளிர்ச்சியும், வெதுவெதுப்பான கோடைகாலமும் கொண்ட தட்ப வெப்பத்தைக் கொண்டிருக்கிறது. பல நாடுகளிலும் ஓடும், லுவார் ஆறு, ரைன் ஆறு, விசுத்துலா(Vistula) ஆகிய முதன்மை ஆறுகளால், இந்த பெருஞ்சமவெளி பிரிக்கப்பட்டுள்ளது. இச்சமவெளி தவிர, சிறிய அளவிலான சமவெளிகளும் உள்ளன. அனைத்து ஐரோப்பிய சமவெளிகளிலும், அகன்ற இலைக் கொண்ட மரங்கள் அதிகமாகவும், பிற கலப்பின வன வளங்களையும் கொண்டு, ஒரு நிலையான உயிரினம் வாழும் பகுதிகளாத் திகழ்கின்றன.

அமெரிக்கச் சமவெளிகள்

வளைகுடா கடற்கரைச் சமவெளி (Gulf Coastal Plain), அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிக்கோ.
உயர் சமவெளி(சிவப்பு), அமெரிக்க ஐக்கிய நாடு. கனடா

அமெரிக்கச் சமவெளிகள், அமெரிக்காக்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் வளம் செழித்து காணப்படுபவைகளின் பெயர்களும், அச்சமவெளி அமைந்துள்ள நாடுகளின் பெயர்களும், கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அ) வட அமெரிக்காவில் உள்ள, கீழ்கண்ட சமவெளிகள் குறிப்பிடத்தக்கவையாகக் கருதப் படுகின்றன.

ஆ) நடு அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும், கீழ்கண்ட சமவெளிகள் முக்கியமானவைகள் ஆகும்.

ஓசியானியாச் சமவெளிகள்

மலைத்தொடர்களையும் தன்னகத்தே உடைய மனியோடோடோச்(Maniototo) சமவெளி, ஆத்திரேலியா

ஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். இச்சொல்லானாது, பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது[19][20][21]. இவற்றில் முக்கியமானது ஆத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும் சமவெளிகள் ஆகும்.

  • ஆத்திரேலியாவில் போகோங்குச் சமவெளி(Bogong High Plains), சிட்னியில் காணப்படும் கும்பர்லாந்துச் சமவெளி (Cumberland Plain), மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் எசுபிரேன்சுச் சமவெளிகள்(Esperance Plains), ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் உள்ள மொலாங்லோச்(Molonglo) சமவெளி, பேர்த்தில் உள்ள அன்னக்கடற்கரைச்(Swan Coastal) சமவெளி ஆகியன, அந்நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் இடங்களாகத் திகழ்கின்றன.
  • நியூசிலாந்தில் அமைந்துள்ள அவாருவாச்(Awarua) சமவெளி சௌத்துலாந்திலும், கான்டெர்பர்ரி சமவெளியும், ஒடாகோப் பகுதியில் காணப்படும் அவுராக்கிச்(Hauraki) சமவெளியும், மனியோடோடோ (Maniototo) சமவெளியும், தையிரிச்(Taieri) சமவெளியும், அந்நாட்டின் முக்கிய சமவெளிகள் ஆகும்.

காட்சியகம்

இவற்றையும் பார்க்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Plains
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சமவெளி&oldid=3586845" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை