கேத்தரின், வேல்சு இளவரசி

கேத்தரின், வேல்ஸ் இளவரசி (Catherine, Princess of Wales), கேத்தரின் எலிசபெத் "கேட்" மிடில்டன் (Catherine Elizabeth "Kate", பிறப்பு; 9 சனவரி 1982),[2] வேல்ஸ் இளவரசர் இளவரசர் வில்லியமின் மனைவி ஆவார். அவர்களது திருமணம் 2011 ஏப்ரல் 29 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெற்றது.

கேத்தரின்
Catherine
வேல்ஸ் இளவரசி (மேலும்)
2018 இல் வேல்ஸ் இளவரசி
பிறப்பு9 சனவரி 1982 (1982-01-09) (அகவை 42)
ரீடிங், பெர்க்சயர், இங்கிலாந்து
துணைவர்இளவரசர் வில்லியம், வேல்சு இளவரசர்
(29 ஏப்ரல் 2011)
குழந்தைகளின்
பெயர்கள்
ஜோர்ஜ்
சார்லட்
பெயர்கள்
கேத்தரின் எலிசபெத்
மரபுவின்சர் அரண்மனை (திருமணத்திற்குப் பின்னர்)
தந்தைமைக்கேல் மிடில்ட்டன்
தாய்கரோல் கோல்ட்சிமித்
மதம்இங்கிலாந்து திருச்சபை[1]

2013 சூலை 22 இல், கேத்தரின் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயானார். இந்த முதலாவது குழந்தை கேம்பிரிட்சின் இளவரசர் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வரக்கூடிய இரண்டாவது முடிக்குரிய இளவரசர் ஆவார்.[3][4] 2015 மே 2 இல், சார்லட் என்ற இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். சார்லட் ஐக்கிய இராச்சியத்திற்கு மூன்றாவது முடிக்குரியவர் ஆவார்.[5]

மிடில்டன் பெர்க்சையரில் வளர்ந்தவர். மார்ல்பரோ கல்லூரியில் பயின்று பின்னர் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்திற்கு மேல்படிப்புக்குச் சென்றார். அங்குதான் 2001ஆம் ஆண்டு வேல்சு இளவரசர் வில்லியமைச் சந்தித்தார். ஒருவரையொருவர் விரும்பிய நேரத்தில் தன்னை ஊடகங்கள் பின்தொடர்ந்து தொல்லைப்படுத்துவதாக புகார் கூறினார். ஏப்ரல் 2007ஆம் ஆண்டில் ஊடகங்கள் இருவருக்குமிடையே பிளவு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தன. நண்பர்களாக தங்கள் உறவைத் தொடர்ந்த இருவரும் 2007ஆம் ஆண்டிலேயே மீண்டும் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து மிடில்டன் பல அரசாங்க நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார். அவருடைய புதுப்பாங்கு உணர்வுகளுக்காக பாராட்டப்பட்டு பல "சிறப்பாக ஆடை அணிந்தவர்கள்" பட்டியல்களில் இடம் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கேத்தரின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை