சாலட்

சாலட்(salad), என்பது, சமைக்கப்படாத பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். லெட்யூஸ், கேரட், வெள்ளரி, சலரி, காளான், வெங்காயம் போன்ற மரக்கறிகள், அன்னாசி, மாம்பழம், அவகாடோ போன்ற பழங்கள், பாதாம், கயூ, வால்நட் போன்ற கொட்டைகளும் கலந்து சாலட் தயாரிக்கப்படும்.[1][2] சுவைக் கலவைகள் (தக்காளிச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சிச்சாறு போன்றவை), பாலாடைக்கட்டி, இறைச்சி, இறால் போன்றவற்றையும் சிலர் சேர்ப்பர். மிளகு, உப்பு போன்ற சுவைப் பொருட்களையும் சிலர் சேர்ப்பர். பெரும்பாலும் பச்சையாக, பெரிதும் கொழுப்பு இல்லாத பொருட்களால் சாலட் செய்யப்படுவதால் சாலட் உடலுக்கு நல்லது எனப்படுகிறது.இது பொதுவாக அறை வெப்பநிலை அல்லது குளிர்வித்து பரிமாறப்படுகிறது. ஆனால் தெற்கு செருமனி நாட்டில் உருளைக்கிழங்கு பயன்படுத்தி செய்யும் சாலட் மிதமான வெப்பநிலையில் பரிமாறப்படுகிறது.

சாலட்

சொற்பிறப்பு

சால்மன் மீன் மற்றும் ரொட்டியுடன் இலை காய்கறிகளாலான "சாலட்" உணவு

"சாலட்" என்னும் ஆங்கில வார்த்தை பிரெஞ்சு மொழியில் சலடெ என்பதிலிருந்தும், இலத்தீன் மொழியில் "ஹர்பா செலடா" என்பதற்கு உப்பிடப்பட்ட காய்கள் என்னும் பொருளில் அமைந்துள்ள சொல்லிலிருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. "சலட்டா" என்னும் சொல் ஆங்கிலச் சொல்லான "சால்ட்" என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், 14ம் நூற்றாண்டில் ரோம் நகரில் காய்கறிகளை உப்பு கலந்த தண்ணீர் அல்லது உப்பிடப்பட்ட எண்ணெய்யில் சேர்த்து பயன்படுத்தினர் எனவும், சாலட் என்னும் சொல் ஆங்கிலச் சொல்லான "சால்ட்" என்பதற்கு ஒத்ததாக உள்ளது எனவும் குறிப்புகள் காணப்படுகின்றன.[3]

சாலட்டின் வகைகள்

சாலட் என்பது துண்டாக நறுக்கப்பட்ட பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் பழங்களின் கலவையாகும்.

இலை காய்கறி சாலட்

இலை காய்கறி சாலட்

இலை காய்கறி சாலட் என்பது, இலை காய்கறிகளான இலைக்கோசு வகைகள், பசளி, மற்றும் வெங்காயத்தாள் போன்ற பச்சை இலைகளைக் கொண்டு செய்வதாகும்.

காய்கறி சாலட் என்பது வேகவைக்காமல் பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகளான) வெள்ளரி, குடைமிளகாய், தக்காளி, வெங்காயம், கேரட், சிவரிக்கீரை, முள்ளங்கி, காளான், ஆனைக்கொய்யா, ஆலிவ் இலைகள், வோக்கோசு, பீட்ரூட், மற்றும் பச்சை அவரை போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுவதாகும். இதில் விதைகள், கொட்டைகள், உலர் பருப்புகள் மற்றும் சில பூக்கள் போன்றவற்றை வைத்து அலங்கரிப்பது உண்டு.

அசைவ உணவைக் கொண்டு தயாரிக்கும் சாலட்டில் வேகவைத்த முட்டை, பன்றி இறைச்சி, மற்றும் பாலாடைக்கட்டி போன்றவற்றை அலங்கரிப்பதற்காக சேர்த்துக் கொள்வர். இது பெரும்பாலும் இரவு நேர உணவாக இருக்கிறது.[4]

பவுண்ட் சாலட்

அமெரிக்க வகை உணவு: மயோனெய்சு, முட்டையுடன் கூடிய உருளைக்கிழங்கு சாலட்

பவுண்ட் சாலட் என்பது கெட்டியான மயோனெய்சு பயன்படுத்தி செய்யப்படுவதாகும். பெரும்பாலும் இது ரொட்டி அல்லது சான்விச் இடையில் வைத்து நிரப்பப்படுகிறது. இது சுற்றுலாத் தலங்களில் பிரபலமாக உள்ளது.

பிரதான உணவு சாலட்

பாரம்பரிய சிலோவாக்கியா மீன், மற்றும் மயோனெய்சு கலந்த சாலட்

பிரதான உணவு அல்லது "இரவு உணவு சாலட்" அல்லது "என்ட்ரி சாலட்" என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சொல்லப்படும் இந்த வகையில் கோழி மற்றும் கடல் உணவுகள் கலந்திருக்கும்.[5]

பழ சாலட்

பழ சாலட்

ஆப்பிள், திராட்சை, கொய்யா போன்ற புதிய பழங்கள் அல்லது பதப்படுத்தப்பட்ட பழக்கலவை சேர்த்து செய்யப்படும் சாலட் பழ சாலட் எனப்படுகிறது.[5]

இனிப்பு சாலட்

அம்ரோசியா

இனிப்பு சாலட்டுகளில் மிக குறைந்த அளவே இலை காய்கறிகள் சேர்க்கப்படும். பொதுவாக இது இனிப்புச் சுவையுடன் இருக்கும். பொதுவான வகைகள் ஜெலட்டின் அல்லது கடைந்த கிரீம் உடன் தயாரிக்கப்படுகின்றன; எடுத்துக்காட்டாக, ஜெல்லோ சாலட், பிஸ்தா சாலட் மற்றும் அம்ப்ரோசியா (பழ சாலட்) போன்றவற்றைக் கூறலாம்.[5]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாலட்&oldid=3553557" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை