சிந்தி மொழி

சிந்தி மொழி (ஆங்கில மொழி: Sindhi English pronunciation: /ˈsɪndi/;[5] சிந்தி மொழி: سنڌي‎, சிந்தி உச்சரிப்பு: [sɪndʱiː]) தெற்காசியாவின் சிந்துப் பகுதியில் பேசப்பட்டு வரும் ஒரு மொழியாகும். இப்பகுதி தற்போது பாகிஸ்தான் நாட்டின் மாகாணங்களுள் ஒன்றாகும். இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானியப் பிரிவைச் சேர்ந்த இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்று. இது பாகிஸ்தானில் சுமார் 18.5 மில்லியன் மக்களாலும், இந்தியாவில் ஏறத்தாழ 2.8 மில்லியன் மக்களாலும் பேசப்பட்டு வருகிறது. இது மேற்படி இரண்டு நாடுகளிலும் உத்தியோக பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இம் மொழி ஒர் இந்திய-ஆரிய மொழியாக வகைப்படுத்தப்பட்டு உள்ள போதும், இதில் திராவிட மொழிச் செல்வாக்குக் காணப்படுவதால் இது ஒரு தனித்துவமான மொழியாக விளங்குகிறது. பெரும்பாலான சிந்தி போசுவோர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் செறிந்து வாழ்கின்றனர்.[6] ஏனையோர் இந்தியாவிலும், உலகின் வேறுபல நாடுகளில் இடம்பெயர்ந்தும் வாழ்கின்றனர்.

சிந்தி
سنڌي
பெர்சோ-அரேபிய எழுத்தில் எழுதப்பட்ட சிந்தி மொழி
நாடு(கள்)பாக்கித்தான் மற்றும் இந்தியா
பிராந்தியம்சிந்து மற்றும் அண்டை பகுதிகள்
இனம்சிந்தி மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
அண். 32 மில்லியன்  (2017)[1]
இந்திய-ஐரோப்பியம்
பெர்சோ-அரபு (நாஸ்க்), தேவநாகரி (இந்தியா) and others
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 பாக்கித்தான் இந்தியா[a][b]
Regulated by
  • சிந்தி மொழி ஆணையம் (பாக்கித்தான்)
  • சிந்தி மொழி மேம்பாட்டுக்கான தேசிய சபை (இந்தியா)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sd
ISO 639-2snd
ISO 639-3snd
மொழிக் குறிப்புsind1272  (Sindhi)[4]
Linguasphere59-AAF-f
{{{mapalt}}}
2017 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு பாக்கித்தானிய மாவட்டத்திலும் சிந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களின் விகிதம்
{{{mapalt2}}}
ஆபத்தில் உள்ள உலக மொழிகளின் யுனெஸ்கோ அட்லஸின் வகைப்பாடு முறையின்படி சிந்தி அழியும் நிலையில் இல்லை
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

எழுத்து முறை

இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்து சிந்திகள் சிந்து மாகாணத்தை விட்டு வெளியேறியபோது, சிந்தி மொழி பரவத் தொடங்கியது. முன்னர் இம் மொழி தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டு வந்தது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், கிழக்கிந்தியக் கம்பனியின் உதவியுடன், சிந்து மொழிக்காக மாற்றம் செய்யப்பட்ட அரபி எழுத்துமுறை உருவாக்கப்பட்டது. பிரிவினைக்குப் பின்னர், இந்திய அரசு, அரபி எழுத்து முறையுடன், தேவநாகரி எழுத்து முறையையும் மீண்டும் அறிமுகப்படுத்தியது [7].

பாடதிட்டம்

தென்கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள பாடசாலைகளில் சிந்தி மொழி முதல் மொழியாகப் பயிற்றப்படுகிறது. இந்தியாவில், சிறப்பாக மகாராட்டிர மாநிலத்தில் பல பாடசாலைகள் சிந்திச் சமுதாயத்தினரால் நடத்தப்படுகின்றன. இப் பாடசாலைகளில் சிந்தி கல்வி மொழியாகவோ அல்லது ஒரு பாடமாகவோ இருக்கிறது. சிந்தி மொழி ஏராளமான சொற்களைக் கொண்டது. இதனால், இது இலக்கியங்களை ஆக்குவதற்கு ஏற்ற மொழியாக விளங்கியது. கவிதைகள் உட்படப் பல இலக்கியங்கள் இம்மொழியில் ஆக்கப்பட்டன. சிந்தியின் கிளைமொழிகள் பாகிஸ்தானின், தெற்குப் பஞ்சாப், பலூச்சிஸ்தான், வடமேற்கு முன்னரங்க மாகாணம் ஆகிய இடங்களிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பேசப்பட்டு வருகின்றன.

குறிப்புகள்

உசாத்துணை


ஆதாரங்கள்

வெளியிணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சிந்தி மொழிப் பதிப்பு
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சிந்தி மொழி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிந்தி_மொழி&oldid=3736130" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை