செமாராங்

இந்தோனேசியாவின் நடுச்சாவக மாகாணத்தின் தலைநகரம்

செமாராங் நகரம் இந்தோனேசியாவின் சாவகத் தீவின் வட கரையில் அமைந்துள்ள ஒரு பெரு நகராகும். மத்திய சாவக மாகாணத்தின் தலை நகரான செமாராங் நகரின் பரப்பளவு 225.17 சதுர கிலோ மீற்றர் ஆகும். ஒன்றரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வாழும் இந்நகரம் இந்தோனேசியாவின் ஐந்தாவது பெரிய நகரமாகும்.[1] இந்நகரின் அமைவிடம் 6°58′S 110°25′E / 6.967°S 110.417°E / -6.967; 110.417 ஆகும். நெதர்லாந்து காலனியாதிக்க காலத்திலிருந்து இன்று வரை இந்நகரம் இந்தோனேசியாவின் முக்கிய துறைமுக நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வகை நிலங்களையும் ஒருங்கே கொண்ட இந்நகரில் இந்தோனேசியச் சீனர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

செமாராங்
அலுவல் சின்னம் செமாராங்
சின்னம்
நாடுஇந்தோனேசியா
மாகாணம்மத்திய சாவகம்
பரப்பளவு
 • மொத்தம்225.17 km2 (86.94 sq mi)
மக்கள்தொகை (2003)
 • மொத்தம்1,393,000
நேர வலயம்WIB (ஒசநே+7)
இணையதளம்www.semarang.go.id
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் செமாரங் நகரில் அமைந்திருந்த ஒரு சீன இல்லம்

நிருவாகம்

செமாராங் நகரம் 16 நிருவாக மாவட்டங்களாகவும் 177 உப-மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 1906 வரையில் இந்நகரம் பூபதி (ஆளுநர்) ஒருவரின் கீழேயே இருந்து வந்தது. 1906 இன் பின்னர் நகரபிதா (மேயர்) ஒருவரின் கீழ் உள்ளது.

மொழி

இந்தோனேசியாவின் பல பாகங்களிலிருந்தும் இங்கு வந்து வசிப்போர் பல்வேறு மொழிகளைப் பேசக்கூடியோராயிருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாக வாழும் சாவக மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது அது மிகவும் குறைவானதே. இங்குள்ள மக்கள் அநேகமாக சாவகம் அல்லது இந்தோனேசிய மொழியே பேசுகின்றனர். இங்கு அதிகமாக வாழும் சீனர்கள் ஹோக்கியன் அல்லது மாண்டரின் மொழியைப் பேசுகின்றனர்.

தரைத்தோற்றம்

இந்நகரம் சாவகத் தீவின் மத்திய சாவக மாகாணத்தின் வட கரையில் அமைந்துள்ளது. இங்கு கடலை அடுத்ததாகவே மலைப்பாங்கான நிலப் பகுதிகளைக் காணலாம். செமாராங் நகரைச் சூழவுள்ள பகுதிகளில் அதிகளவில் புகையிலைப் பயிர்ச் செய்கை இடம் பெறுகிறது.

காலநிலை

செமாராங் அயன மண்டல மழைக்காட்டுக் காலநிலையையும் பகுதியளவில் அயன மண்டல பருவப் பெயர்ச்சிக் காலநிலையையும் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், செமாராங்
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
உயர் சராசரி °C (°F)29.4
(85)
29.4
(85)
30
(86)
31.1
(88)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
32.2
(90)
32.2
(90)
31.1
(88)
30
(86)
31.02
(87.8)
தாழ் சராசரி °C (°F)25
(77)
25
(77)
25
(77)
25.6
(78)
25.6
(78)
25
(77)
24.4
(76)
24.4
(76)
25
(77)
25.6
(78)
25.6
(78)
25
(77)
25.09
(77.2)
பொழிவு mm (inches)430
(16.93)
360
(14.17)
320
(12.6)
230
(9.06)
160
(6.3)
80
(3.15)
80
(3.15)
60
(2.36)
100
(3.94)
160
(6.3)
220
(8.66)
330
(12.99)
2,780
(109.45)
ஆதாரம்: Weatherbase [2]

சகோதர நகரங்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
செமாராங்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செமாராங்&oldid=3196982" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை