சோடியம் ஆக்சைடு

சோடியம் ஆக்சைடு (Sodium oxide) என்பது Na2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாது வடிவத்தில் கிடைப்பதில்லை என்றாலும் பீங்கான்கள் மற்றும் கண்ணாடிகளில் பயன்படுத்தப்படுகிறது, சோடியம் ஐதராக்சைடின் அடிப்படை நீரிலி சோடியம் ஆக்சைடு என்பதால் தண்ணீர் சேர்க்கப்பட்டால் NaOH உற்பத்தி செய்யப்படுகிறது.

சோடியம் ஆக்சைடு
சோடியம் ஆக்சைடு
சோடியம் ஆக்சைடு
சோடியம் ஆக்சைடு
சோடியம் ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஆக்சைடு
வேறு பெயர்கள்
இருசோடியம் ஆக்சைடு
இனங்காட்டிகள்
1313-59-3 Y
EC number215-208-9
InChI
  • InChI=1S/2Na.O/q2*+1;-2
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்73971
SMILES
  • [O-2].[Na+].[Na+]
UN number1825
பண்புகள்
Na2O
வாய்ப்பாட்டு எடை61.98 g·mol−1
தோற்றம்வெண்மையான திண்மம்
அடர்த்தி2.27 கி/செ.மீ3
உருகுநிலை 1,132 °C (2,070 °F; 1,405 K)
கொதிநிலை 1,950 °C (3,540 °F; 2,220 K)
தீவிர வினையினால் NaOH உருவாகும்
கரைதிறன்எத்தனாலுடன் வினைபுரியும்
கட்டமைப்பு
படிக அமைப்புபுளோரைட்டு எதிர் (முகமைய கனசதுரம்), cF12
புறவெளித் தொகுதிFm3m, No. 225
ஒருங்கிணைவு
வடிவியல்
நான்முகி (Na+); கனசதுரம் (O2−)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
-416 கி.யூ/மோல்[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
73 யூ/மோல்•கெ[1]
வெப்பக் கொண்மை, C72.95 யூ/மோல்•கெல்வின்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்அரிக்கும், நீருடன் தீவிரமாக வினைபுரியும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்ICSC 1653
GHS pictogramsThe corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[2]
H314[2]
P280[2]
தீப்பற்றும் வெப்பநிலைதீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்சோடியம் சல்பைடு
சோடியம் செலீனைடு
சோடியம் தெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள்இலித்தியம் ஆக்சைடு
பொட்டாசியம் ஆக்சைடு
ருபீடியம் ஆக்சைடு
சீசியம் ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references
Na2O + H2O → 2 NaOH

கார உலோக ஆக்சைடுகள் M2O (M = Li, Na, K, RB) போன்ற கார உலோக ஆக்சைடுகள் புளோரைட்டு எதிர் கட்டமைப்பில் படிகமாகின்றன. இந்த நோக்குருவில் எதிர்மின் அயனிகள், நேர்மின் அயனிகளின் இடநிலை அமைப்புகள் தொடர்புடைய CaF2 இல் உள்ள தங்கள் நிலைப்பாடுகளுடன் நேரெதிர் அமைப்பில் படிகமாகியுள்ளன. சோடியம் அயனிகள் நான்கு ஆக்சைடு அயனிகளுடன் நான்முகி வடிவில் ஒருங்கிணைக்கப்பட்டும், எட்டு சோடியம் அயனிகள் ஆக்சைடு கனசதுரத்திலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன [3][4].

தயாரிப்பு

சோடியத்துடன் சோடியம் ஐதராக்சைடு, சோடியம் பெராக்சைடு அல்லது சோடியம் நைட்ரைட்டு சேர்ந்து வினைபுரிவதால் சோடியம் ஆக்சைடு உருவாகிறது:[5]

2 NaOH + 2 Na → 2 Na2O + H2
Na2O2 + 2 Na → 2 Na2O
2 NaNO2 + 6 Na → 4 Na2O + N2

ஐதராக்சைடு, பெராக்சைடு அல்லது நைட்ரைட்டு எதுவாக இருந்தாலும் சோடியத்தினால் ஒடுக்கப்படும் வினைகளாகவே இவ்வினைகள் அமைகின்றன.

காற்றில் எரியும் சோடியம் 20% Na2O மற்றும் 20% சோடியம் பெராக்சைடு, Na2O2. ஆகியனவற்றை உருவாக்குகிறது.

6 Na + 2 O2 → 2 Na2O + Na2O2

மாறாக சோடியம் கார்பனேட்டை 851°செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினாலும் சோடியம் ஆக்சைடும் கார்பன் டை ஆக்சைடும் உருவாகின்றன.

Na2CO3 → Na2O + CO2

208°செல்சியசு வெப்பநிலையில் சோடியம் அசுகார்பேட்டு சிதைவடைந்து பியூரான் வழிப்பொருட்களாகவும் சோடியம் ஆக்சைடாகவும் மாறுகிறது.[6]

பயன்பாடுகள்

கண்ணாடி தயாரித்தல்

கண்ணாடிகள் தயாரித்தலில் சோடியம் ஆக்சைடு குறிப்பிடத்தக்க ஒரு பகுதிப்பொருளாக விளங்குகிறது. சோடா எனப்படும் சோடியம் கார்பனேட்டாக இங்கு இது பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான கூட்டமைப்பு கொண்ட பலபடிகளாக கண்ணாடிகள் காணப்படுவதால் இவற்றில் சோடியம் ஆக்சைடின் இருப்பு வெளிப்படையாகத் தெரிவதில்லை. பேரளவில் தயாரிக்கப்படும் கண்ணாடிகள் 15% சோடியம் ஆக்சைடு, 70% சிலிக்கா (சிலிக்கன் டையாக்சைடு), 9% கால்சியம் ஆக்சைடுகளைக் கொண்டுள்ளன. சிலிக்கா உருகும்போது அதன் வெப்பநிலையை குறைக்கும் ஓர் இளக்கியாக சோடியம் கார்பனேட்டு பயன்படுகிறது. தூய்மையான சிலிக்காவைக் காட்டிலும் சோடா கண்ணாடி மிகக்குறைந்த வெப்பநிலையையும் சற்று இழுவைத்தன்மையையும் கொண்டுள்ளது. சிலிக்கன் டையாக்சைடும் சோடியம் கார்பனேட்டும் வினைபுரிந்து சோடியம் சிலிக்கேட்டுகளாக Na2[SiO2]x[SiO3]. என்ற பொதுவாய்ப்பாட்டுடன் உருவாவதால் இம்மாற்றங்கள் நிகழ்கின்றன.

Na2CO3 → Na2O + CO2
Na2O + SiO2 → Na2SiO3.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sodium oxide
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சோடியம்_ஆக்சைடு&oldid=3849677" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை