டிஸ்கவரி தொலைக்காட்சி

(Discovery Channel) டிஸ்கவரி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இந்த பொதுத்துறை நிறுவனம் ஜூன் 17 ஆம் தியதி 1985- ல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இதன் தலைமைச் செயல் அதிகாரி 'டேவிட் ஸாஸ்லாவ்'. இது ஆவணப்படங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. ஆகஸ்ட் 2013 நிலவரப்படி அமெரிக்காவில் 98,891,000 வீடுகளில் இத்தொலைக்காட்சி சேவை வழங்குகிறது.[2]

டிஸ்கவரி தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம்17 ஜூன், 1985[1]
உரிமையாளர்டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ்
பட வடிவம்1080i (HDTV)
480i (SDTV)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஒளிபரப்பாகும் நாடுகள்உலகளாவிய
வலைத்தளம்Discovery.com
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
UHF colombo india
24
Uhf Chennai bangaladesh
23
செயற்கைக்கோள்
Dish TV India23
D2H videocon
1234
12
145
Dialog telekom Dialog TV
Airtel DTH
IPTV
SLTmobitel PEOTV47

வரலாறு

'ஜாண் ஹெண்டிரிக்ஸ்' என்பவர் 1982 -ல் பிபிசி மற்றும் ஆலன் & கம்பெனி ஆகியோர்களின் உதவியுடன் $5 மில்லியன் முதலீட்டில் இதைத் தொடங்கினார்.[3].ஜூன் 17, 1985 - ல் தனது முதல் ஒளிபரப்பைத் தொடங்கிய போது தினமும் மாலை 3 மணி முதல் காலை 3 மணி வரை என 12 மணி நேர ஒளிபரப்பில் 156,000 வீடுகளில் இத்தொலைக்காட்சியைப் பார்த்தனர்.

வழங்கப்படும் மொழிகள்

இத் தொலைக்காட்சி சர்வதேச அளவில் 170 நாடுகளில் 431 மில்லியன் வீடுகளுக்குச் சேவை வழங்குகிறது. ஸ்பானிஷ் , ஜெர்மன் , உருசிய மொழி , செக் , தமிழ் , ஹிந்தி , டச்சு , போர்த்துக்கீச மொழி , இத்தாலிய மொழி , நார்வே மொழி , சுவீடிய மொழி , டேனிய மொழி , பின்னிய மொழி , துருக்கிய மொழி , போலிய மொழி , அங்கேரிய மொழி , ருமேனிய மொழி , அராபிய மொழி , ஸ்லோவினியம் , ஜப்பானிய மொழி , கொரிய மொழி , மற்றும் செர்பிய மொழி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

தமிழ் ஒளிபரப்பு

2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தியதி தமிழில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. தமிழகத்தில் 10 மில்லியன் வீடுகளுக்கு சேவை வழங்கிவருகிறது.[4][5]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை