டைன் ஆற்றங்கரை நியூகாசில்

டைன் ஆற்றங்கரை நியூகாசில் (Newcastle upon Tyne, /njˈkɑːsəl/ (), நியூகாசில் அப்பான் டைன், சுருக்கமாக நியூகாசில்) வடகிழக்கு இங்கிலாந்தின் டைனும் வியரும் கௌன்ட்டியில் அமைந்துள்ள நகரமும் பெருநகர் பரோவும் ஆகும். வரலாற்றின்படி1974ஆம் ஆண்டுவரை இது நார்தம்பர்லாந்து கௌன்ட்டியின் அங்கமாக இருந்தது. டைன் ஆற்றின் வடகரையில் வடகடலிலிருந்து 8.5 mi (13.7 km) தொலைவில் உள்ளது.[2] முன்பு உரோமைப் பேரரசின் குடியிருப்பாக இருந்த பொன்சு ஏலியசு என்றவிடத்திலேயே இந்நகரம் வளர்ந்துள்ளது.[3][4] இங்கு இங்கிலாந்தைக் கையகப்படுத்திய நோர்மாந்திய பிரபு வில்லியத்தின் (பின்னர் இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்) மகன் குர்தோசு இங்கு கட்டிய புதிய கோட்டையை ஒட்டி இந்நகரத்தின் பெயர் அமைந்தது. கம்பளி வணிகத்தில் முதன்மையான மையமாக விளங்கிய இந்நகரம் பின்னாளில் பெரும் சுரங்கத் தொழில் நகரமாக மாறியது. இங்குள்ள துறைமுகம் 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டது;அதனுடன் கப்பல் கட்டும் தொழிற்கூடங்களும் டைன் ஆற்றின் போக்கோடு கட்டமைக்கப்பட்டன. உலகின் பெரிய கப்பல் கட்டும் மற்றும் கப்பல் சரிபார்ப்புத் தொழில் மையமாக விளங்கியது. தற்போது இவற்றில் பல முடங்கி மூடப்பட்டு விட்டன. இன்றைய காலத்திற்கேற்ப நிறுவன தலைமையகங்கள், கல்வி மற்றும் எண்ணிம தொழினுட்ப மையம், சில்லறை வணிகம், சுற்றுலா மற்றும் பண்பாட்டு மையங்கள் என புதிய சேவைத்துறை தொழில்கள் தழைக்கின்றன.

டைன் ஆற்றங்கரை நியூகாசில் நகரம்
நியூகாசில்
பெருநகர் பரோ & நகரம்
Official logo of டைன் ஆற்றங்கரை நியூகாசில் நகரம்
நகர மன்றத்தின் மரபுவழி மேலங்கி
அடைபெயர்(கள்): தி டூன்
குறிக்கோளுரை: "Fortiter Defendit Triumphans"
"வீரமான தற்காப்பால் வெற்றி"
இங்கிலாந்தினுள் நியூகாசிலின் அமைவிடம்
இங்கிலாந்தினுள் நியூகாசிலின் அமைவிடம்
நாடுஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடுஇங்கிலாந்து
மண்டலம்வடகிழக்கு இங்கிலாந்து
சிறப்பு கௌன்டிடைனும் வியரும்
நிர்வாகத் தலைமையகம்நியூகாசில் நகர மையம்
நிறுவப்பட்டது2வது நூற்றாண்டு
நகர அரசியலமைப்புஹென்றி II
கௌன்டி அமைப்பு1400
நகரத் தகுதி1882
அரசு
 • வகைபெருநகர் பரோ, நகரம்
 • ஆட்சி அமைப்புநியூகாசில் நகர மன்றம்
 • மேயர்ஜாக்கி சீசெங்கர்[1]
பரப்பளவு
 • பெருநகர் பரோ & நகரம்113 km2 (44 sq mi)
மக்கள்தொகை
 • பெருநகர் பரோ & நகரம்279,100
 • பெருநகர்879,996 (டைன்சைடு)
1,093,400 (டைனும் வியரும்)
1,650,000 (டைனும் வியரும் நகர மண்டலம்)
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0)
அஞ்சல்குறியீடுNE
தொலைபேசி குறியீடு0191
ISO 3166-2GB-NET
ONS code00CJ (ONS)
E08000021 (GSS)
OS grid referenceNZ249645
NUTS 3UKC22
Demonymஜியோர்டி], நோவோகாசுத்திரியர்
இணையதளம்www.newcastle.gov.uk

நியூகாசில் பிரவுன் ஏல் எனப்படும் மதுவகையும் டைன் பாலமும் இந்நகரை அடையாளப்படுத்துகின்றன. இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் நியூகாசில் யுனைடெட் காற்பந்துக் கழகமும் இந்நகரை அடையாளப்படுத்துகிறது. உலகின் மிகவும் புகழ்பெற்ற அரை மராத்தன், கிரேட் நார்த் இரன் 1981இல் தொடங்கப்பட்டதிலிருந்து இங்குதான் நடத்தப்படுகிறது.[5]

இப்பகுதி மக்கள் ஜியோர்டி என்ற விளிப்பெயரால் அறியப்படுகின்றனர்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை