தாலமி பேரரசு

தாலமைக் பேரரசு (Ptolemaic Kingdom) (/ˌtɒləˈm.ɪk/; பண்டைக் கிரேக்கம்Πτολεμαϊκὴ βασιλεία, Ptolemaïkḕ Basileía)[3] (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) அலெக்சாண்டரின் இறப்புக்கு பின்னர், ஹெலனிய காலத்தில் அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் தாலமி சோத்தர் எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். பண்டைய எகிப்து உள்ளடக்கிய மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் அலெக்சாந்திரியா நகரம் ஆகும். இப்பேரரசின் இறுதி மன்னர் சிசேரியனை கிமு 30-இல் உரோமைப் பேரரசின் படைத்தலைவர் அகஸ்ட்டஸ் கொன்றதால், எகிப்தில் தாலமிப் பேரரசின் ஆட்சி முடிவுற்றது. எகிப்து, உரோமைப் பேரரசின் மாகாணம் ஆனாது.

எகிப்தின் கிரேக்க தாலமி பேரரசு
Πτολεμαϊκὴ βασιλεία
Ptolemaïkḕ Basileía
கி மு 305–கி மு 30
சியுசு தெய்வத்தின் கழுகு [1] of Ptolemaic Kingdom
சியுசு தெய்வத்தின் கழுகு [1]
கி மு 30ல் தாலமைக் பேரரசு (பச்சை நிறத்தில்)
கி மு 30ல் தாலமைக் பேரரசு (பச்சை நிறத்தில்)
தலைநகரம்அலெக்சாந்திரியா
பேசப்படும் மொழிகள்பண்டைய கிரேக்க மொழி, எகிப்திய மொழி, பெர்பர் மொழிகள்
சமயம்
செராபிஸ்[2]
அரசாங்கம்முடியாட்சி
பார்வோன் 
• கி மு 305–283
முதலாம் தாலமி சோத்தர் (first)
• கி மு 51–30
ஏழாம் கிளியோபாட்ரா (last)
வரலாற்று சகாப்தம்Classical antiquity
• தொடக்கம்
கி மு 305
• முடிவு
கி மு 30
நாணயம்கிரேக்க திராச்மா
முந்தையது
பின்னையது
[[ மாசிடோனியா]]
[[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]]
[[எகிப்து (ரோமானிய மாகாணம்)]]
தற்போதைய பகுதிகள் Cyprus
 Egypt
 Libya
 Turkey
 Israel
 Palestine
 Lebanon
 Syria
 Jordan
கிரேக்க தாலமி வம்சத்தை நிறுவிய பேரரசர் தாலமி சோத்தர் (கி மு 305 –282 )
இரண்டாம் தாலமி கி மு 309 – 246)
மூன்றாம் தாலமியின் உருவம் பொறித்த நாணயம்
நான்காம் தாலமி
ஏழாம் கிளியோபாட்ராவின் உருவம் பொறித்த நாணயம்


இப்பேரரசு ஏழாம் கிளியோபாட்ரா காலத்தில், எகிப்தை ஆண்ட கிளியோபாட்ராவி மகன் சிசேரியன் ஆட்சிக் காலத்தில், உரோமானிய படைத்தலைவர் அகஸ்ட்டஸ் படையெடுப்பால் கி மு 30-இல் முடிவுற்றது. அப்போது எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட ஹெலனிய கால தாலமைக் பேரரசின் காலத்தில் எகிப்து மற்றும் கிரேக்கத்தின் வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[4]

தாலமி பேரரசின் பரப்பு

துவக்க கால தாலமைக் பேரரசில் தற்கால எகிப்து, லிபியா, துருக்கி, இசுரேல், சைப்பிரஸ், பாலஸ்தீனம், லெபனான், சிரியா மற்றும் ஜோர்டான் நாடுகள் அடங்கியிருந்தது. பேரரசின் இறுதிக் காலத்தில் கிமு 30ல் தற்கால எகிப்து, துனிசியா மற்றும் லிபியா நாடுகள் இருந்தன.

வரலாறு

பாபிலோனில் கி மு 323இல் அலெக்சாண்டர் மறைந்த போது[5] அவரது படைத்தலைவர்களுக்குள் கிரேக்கப் பேரரசை யார் ஆள்வது என்ற பிணக்கு (தியாடோச்சி-Diadochi) ஏற்பட்டது. துவக்கத்தில் அலெக்சாண்டரின் சிறு வயது குழந்தையான நான்காம் அலெக்சாண்டரின் பிரதிநிதியாக கிரேக்கப் பேரரசை பெர்டிக்காஸ் (Perdiccas) என்பவர் வழிநடத்தினார்.

கிரேக்கப் பேரரசின் எகிப்தின் ஆளுநராக முதலாம் தாலமி சோத்தர் கி மு 323இல் நியமிக்கப்பட்டார். ஹெலனிய காலத்தில், கிரேக்கப் பேரரசை அதன் படைத்தலைவர்களும் ஆளுநர்களும் பிரித்து கொண்டதால் கிரேக்கப் பேரரசு சிதறியது. முதலாம் தாலமி சோத்தர் கிரேக்கப் பேரரசின் எகிப்து பகுதிகளுக்கு தனி உரிமையுடன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவரது தாலமைக் வம்சம் எகிப்தை ஏறத்தாழ 300 ஆண்டுகள் ஆண்டது.

பண்டைய எகிப்திய பண்பாட்டு, நாகரீகம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றிய தாலமைக் வம்சத்தின் மன்னர்கள் தங்களை பார்வோன் எனும் அடைமொழியுடனும், இளவரசர்கள் தாலமி என்ற அடைமொழியுடனும்; இளவரசிகள் கிளியோபாட்ரா, அர்சினொ மற்றும் பெரிநைஸ் போன்ற அடைமொழிகளுடனும் அழைக்கப்பட்டனர்.

ரோமானியர்களின் ஆட்சி

கிளியோபாட்ராவின் இறப்பிற்குப் பின் கி மு 30இல் எகிப்தை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசு, எகிப்தை உரோமைப் பேரரசின் மாகாணமாக இணைத்துக் கொண்டனர்.

தாலமி பேரரசர்கள்

ஏழாம் கிளியோபாற்றாவின் சித்திரம், கிபி முதல் நூற்றான்டு[6][7]
  1. தாலமி சோத்தர் -ஆட்சிக் காலம் கிமு 303 – 282
  2. இரண்டாம் தாலமி - கிமு 285 – 246
  3. மூன்றாம் தாலமி - கிமு 246 – 221
  4. நான்காம் தாலமி - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)
  5. ஐந்தாம் தாலமி - கிமு 203 – 181
  6. ஆறாம் தாலமி - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா)
  7. எட்டாம் தாலமி - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)
  8. ஒன்பதாம் தாலமி - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81
  9. பத்தாம் தாலமி - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா)
  10. பதினொன்றாம் தாலமி - கிமு 80
  11. பனிரெண்டாம் தாலமி - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)
  12. பதிமூன்றாம் தாலமி - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  13. பதிநான்காம் தாலமி - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  14. சிசேரியன் - கிமு 44 – 30 (ஏழாம் கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீசரின் மகன்)

தாலமி பேரரசின் இராணிகள்

  1. முதலாம் கிளியோபாட்ரா
  2. இரண்டாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 145 – 116
  3. மூன்றாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 81 – 80
  4. நான்காம் கிளியோபாட்ரா
  5. ஐந்தாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55
  6. ஆறாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58
  7. நான்காம் அர்சினோ - காப்பாட்சியாளராக
  8. ஏழாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 51 – 30

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேல் வாசிப்பிறகு




"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாலமி_பேரரசு&oldid=3512145" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை