பச்சையம்

பச்சையம் (Chlorophyll - கிரேக்க சொல் மூலம்: chloros = பச்சை, phyllon = இலை) என்பது தாவரங்கள், பாசி வகைகள், சிலவகை பாக்டீரியாக்கள் ஆகியவற்றிலுள்ள ஒரு பச்சை வர்ண ஒளிச்சேர்க்கை நிறமி ஆகும். ஒளிச்சேர்க்கையின் முதல்படியாக பச்சையத்தின்மீது ஒளி விழுகிறது. இதன் மூலம் அது அயனாக்கம் (ionise) ஆகிறது. இதில் விளையும் வேதியியல் ஆற்றலை ஏ.டி.பி மூலக்கூறுகள் (molecules) உள்வாங்கி, பின்னர் அதைப்பயன்படுத்தி கரியமில வாயுவையும் நீரையும் காபோவைதரேட்டு மற்றும் ஒட்சிசனாக வேதிமாற்றம் செய்கின்றன. மின்காந்த அலை நிறமாலையின் (spectrum) சிவப்பு மற்றும் நீல நிறக்கதிர்களை அதிகம் உள்வாங்குவதால் பச்சையம் பச்சை வண்ணம் கொண்டுள்ளது.

பச்சையம் இலைகளுக்குப் பச்சை நிறத்தைக் கொடுப்பதுடன், ஒளித்தொகுப்பில் பயன்படுத்துவதற்கான ஒளியையும் உறிஞ்சுகிறது.
தாவர உயிரணுக்களில் உள்ள பச்சையமணிகளில் பச்சையம் உயர் செறிவாகக் காணப்படுகின்றது.
Absorption maxima of chlorophylls against the spectrum of white light.
SeaWiFS-derived average sea surface chlorophyll for the period 1998 to 2006.

அணு அமைப்பு

பச்சையம் ஒரு குளோரின் நிறமியாகும். அது ஹீம் போன்ற போர்ஃபிரின் நிறமிகளை ஒத்த அணு அமைப்பைக் கொண்டுள்ளது. குளோரின் வளையத்தின் மத்தியில் ஒரு மெக்னீசியம் அயன் (ion) உள்ளது. பலவகை பக்கச் சங்கிலிகள் இருந்தாலும், பொதுவாக ஒரு நீண்ட ஃபைடில் (phytyl) சங்கிலி இருக்கும். இயற்கையில் இது பல வடிவங்களில் அமைந்துள்ளது:

பச்சையம் aபச்சையம் bபச்சையம் c1பச்சையம் c2பச்சையம் d
மூலக்கூறு வேதியியல் வாய்ப்பாடுC55H72O5N4MgC55H70O6N4MgC35H30O5N4MgC35H28O5N4MgC54H70O6N4Mg
C3 குழு-CH=CH2-CH=CH2-CH=CH2-CH=CH2-CHO
C7 குழு-CH3-CHO-CH3t-CH3-CH3
C8 குழு-CH2CH3-CH2CH3-CH2CH3-CH=CH2-CH2CH3
C17 குழு-CH2CH2COO-Phytyl-CH2CH2COO-Phytyl-CH=CHCOOH-CH=CHCOOH-CH2CH2COO-Phytyl
C17-C18 பிணைப்புஒற்றைஒற்றைஇரட்டைஇரட்டைஒற்றை
காணப்படுவதுஎங்கும்பொதுவாக நிலச் செடிகளில் மட்டும்பல்வேறு பாசிகளில்பல்வேறு பாசிகளில்சில சிவப்புப் பாசிகளில்
பச்சையம் a, b மற்றும் d ன் பொது வரைபடம்
பச்சையம் c1 மற்றும் c2 ன் பொது வரைபடம்

இன்றியமையாமை

பச்சையும் வெண்மையும் கொண்ட இலை ஒன்றிலிருந்து மாவுச் சத்தை நீக்கிவிட்டு அந்த இலையை சிறிது நேரம் வெயிலில் வைத்திருக்க வேண்டும். அதன்பின் அயோடின் கரைசல் கொண்டு ஆய்வு செய்தால் மாவுச் சத்து பச்சையான இடங்களில் மட்டுமே இருப்பதைக் காணலாம். இதன்மூலம் ஒளிச்சேர்க்கைக்கு பச்சையம் இன்றியமையாதது என அறியலாம்.

இவற்றையும் பார்க்கவும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பச்சையம்&oldid=3610430" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை