பன்னாட்டு புக்கர் பரிசு

பன்னாட்டு புக்கர் பரிசு (International Booker Prize), முன்னதாக மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு (Man Booker International Prize) என்பது ஐக்கிய இராச்சியத்தில் பன்னாட்டளவில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது 2004 யூன் முதல், மேன் புக்கர் பரிசுடன் சேர்த்து பன்னாட்டுப் பரிசாக அறிமுகம் செய்யப்பட்டது.[1] மேன் குழுமத்தின் நிதியுதவியுடன், 2005 முதல் 2015 வரை, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அல்லது பொதுவாக ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கும் ஒரு படைப்பிற்காக எந்தவொரு தேசிய இனத்தைச் சேர்ந்த எழுத்தாளருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப்பட்டது.[2] இது ஒரு நூலாசிரியரின் "தொடர்ச்சியான படைப்பாற்றல், மேம்பாடு மற்றும் உலக அரங்கில் புனைகதைக்கான ஒட்டுமொத்த பங்களிப்பு",[3] அத்துடன் எந்த ஒரு தலைப்பையும் விட எழுத்தாளரின் பணிக்கான அங்கீகாரமாக இருந்தது.

பன்னாட்டு புக்கர் பரிசு
International Booker Prize
முதன்முதலில் இப்பரிசு வென்ற இசுமாயில் காதர்
விருது வழங்குவதற்கான காரணம்சிறந்த ஆங்கில (அல்லது ஆங்கில மொழிமாற்றத்திற்குரிய) நூல்
நாடுஐக்கிய இராச்சியம்
வழங்குபவர்புக்கர் பரிசு அறக்கட்டளை
வெகுமதி(கள்)£50,000
முதலில் வழங்கப்பட்டது2005; 19 ஆண்டுகளுக்கு முன்னர் (2005)
இணையதளம்thebookerprizes.com/the-international-booker-prize

2016 ஆம் ஆண்டு முதல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஐக்கிய இராச்சியம் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்திற்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசினை வென்ற நூலுக்கு £50,000 வழங்கப்படுகிறது. இது எழுத்தாளருக்கும், மொழிபெயர்ப்பாளரிற்கும் இடையே சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.[4][5]

சர் மைக்கேல் மோரிட்சு, அவரது மனைவி ஆரியட் எய்மன் ஆகியோரின் "கிரான்க்சுடார்ட்" என்ற தொண்டு நிறுவனம் புக்கர் பரிசுகளுக்கு 2019 சூன் 1 முதல் ஆதரவளித்து வருகிறது. இந்த நாளில் இருந்து இப்பரிசுகள் புக்கர் பரிசு, பன்னாட்டு புக்கர் பரிசு என்று அறியப்படுகிறது. புக்கர் பரிசு அறக்கட்டளைக்கும், பரிசுகளுக்கும் அவர்கள் அளித்த ஆதரவைப் பற்றி, மோரிட்சு பின்வருமாறு கருத்துரைத்தார்: "புத்தகத்தைப் படித்து நேரத்தைச் செலவிடாத ஒரு நாளை நம்மால் யாரும் நினைத்துப் பார்க்க முடியாது. புக்கர் பரிசுகள் என்பது சிறந்த புனைகதையிலிருந்து வரும் நுண்ணறிவு, கண்டுபிடிப்புகள், இன்பங்களைப் பற்றிய செய்திகளைப் பரப்புவதற்கான வழிகள்".

வரலாறு

2016 இற்கு முன்னர்

ஆண்டுஆசிரியர்நாடுமொழிபெயர்ப்பாளர்மொழி
2005இசுமைல் காதர்அல்பேனியா-அல்பேனியம்
2007சினுவா அச்சிபேநைஜீரியா-ஆங்கிலம்
2009ஆலிசு மன்ரோகனடா-ஆங்கிலம்
2011பிலிப் ரொத்ஐக்கிய அமெரிக்கா-ஆங்கிலம்
2013லிடியா டேவிசுஐக்கிய அமெரிக்கா-ஆங்கிலம்
2015லாசுலோ கிராசுனகோர்க்காய்அங்கேரிசியார்ச் சர்ட்டெசு, ஒட்டிலி முல்செத்அங்கேரியம்

2016 முதல்

ஆண்டுஆசிரியர்நாடுமொழிபெயர்ப்பாளர்நாடுபடைப்புமொழி
2016கான் காங்தென் கொரியாதெபோரா சிமித்ஐக்கிய இராச்சியம்The Vegetarian
(채식주의자)
சைவம்
கொரியம்
2017டேவிட் கிராஸ்மன்இஸ்ரேல்யெசிக்கா கோகென்இசுரேல்/ஐக்கிய இராச்சியம்/அமெரிக்காA Horse Walks Into a Bar
(סוס אחד נכנס לבר‎)
ஒரு குதிரை மதுக்கடைக்குள் நுழைகிறது
எபிரேயம்
2018ஓல்கா தோக்கர்சுக்குபோலந்துசெனிபர் குரொப்ட்ஐக்கிய அமெரிக்காFlights
(Bieguni)
துருவங்கள்
போலியம்
2019ஜோஹா அல்-ஹார்திஓமான்மாரிலின் பூத்ஐக்கிய அமெரிக்காCelestial Bodies
(سـيّـدات الـقـمـر، روايـة)
நிலாவின் பெண்கள், ஒரு புதினம்
அரபு
2020மரீக்கி லூக்கசு ரிச்னவெல்டுநெதர்லாந்துமிசேல் அட்சிசன்ஐக்கிய இராச்சியம்The Discomfort of Evening
(De avond is ongemak)
மாலை நேரம் சிரமமாக உள்ளது
இடச்சு
2021தாவீது தியொப்பிரான்சுஅன்னா மொசுக்கோவாக்கிசுஐக்கிய அமெரிக்காAt Night All Blood Is Black
(Frère d'âme)
ஆன்மாவின் சகோதரர்
பிரெஞ்சு
2022கீதாஞ்சலி சிறீஇந்தியாடெய்சி ராக்வெல்ஐக்கிய அமெரிக்காTomb of Sand
(रेत समाधि)
மணல் கல்லறை
இந்தி

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை