பாகல்

பாகற்காய்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Cucurbitales
குடும்பம்:
வெள்ளரிக் குடும்பம்
பேரினம்:
Momordica
இனம்:
M. charantia
இருசொற் பெயரீடு
Momordica charantia
Descourt.
இரண்டு பாதி மற்றும் இரண்டு குறுக்குவெட்டுகளுடன் ஒரு முழு பாகல்.

பாகல் (Momordica charantia) என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும், பாகற்கொடியைக் குறிக்கிறது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை (தாவர) வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) என்னும் பண்படுத்தாத(rouch) செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.[1] பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும்.[2][3] இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவிலிருந்து, சீனாவிற்கு 14 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.[4]

வளரியல்பு

இம்மூலிகைக் கொடி 5 மீட்டர் (16 அடி) நீளம் வரை வளரக்கூடிய இயல்புடையதாகும். இதன் இலையமைவு, எளிய, மாறுபட்ட கோணத்தில் இருக்கும். இலையளவு 4–12 செ. மீ. (1.6–4.7 அங்குலம்) இலை விளம்புகள் ஆழமாக பிளவுபட்டு, 3-7 வரை பிரிந்து, உள்வாங்கி இருக்கும். ஒவ்வொரு தாவரமும் தனித்தனியான ஆண், பெண் மலர்களைக் கொண்டு இருக்கும். பூமியின் வடகோளத்தில் சூன், சூலை மாதங்களில் பூக்கும் இயல்புடையதாக இருக்கிறது. கனியாதல் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெறுகிறது. கனியானது அடர் மஞ்சள் நிறத்திலும், விதைகள் பட்டையாக மஞ்சள் நிறத்திலும், சதைப்பகுதி சிவப்பாகவும் இருக்கும். இச்சதைப்பகுதியை அப்படியே சமைக்காமல் சாலட் ஆக உண்ணும் வழக்கம் பல தெற்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன.[5] நன்கு பழுத்தக்கனி, ஆரஞ்சு நிறமாக மாறும் இயல்புடையது ஆகும்..

வகைகள்

சீன இனம்
இந்திய இனம்
மிதி பாகல்

பாகற்காயில் பல வகைகள் உள்ளன. அவற்றின் அளவிலும், வடிவத்திலும் இவை வேறுபடுகின்றன.இருப்பினும், வேளாண்மையினர் இருவகை இனங்களையே விளைவிக்கின்றனர். ஒன்று பொடியாக, 6–10 cm (2.4–3.9 அங்) அளவு இருப்பது, இதனை மிதி / குருவித்தலை பாகற்காய் என்கின்றனர். இவ்வினம் இந்தியாவிலும், வங்காள தேசத்திலும் மற்றொன்று பெரிதாக நீளமாக இருக்கும். அதனை கொம்பு பாகற்காய் என்றழைக்கின்றனர். இந்த கொம்பு பாகல் இனங்கள் இந்தியாவிலும் சீனத்திலும் வேறுபட்டு இருக்கின்றன. இந்திய இனம் அடர் பச்சை நிகூறமாகவும், முனைகள் கூராகவும் இருக்கும்., சீன பாகலின் அளவு 20–30 cm (7.9–11.8 அங்) இருக்கும்.வெளிர் பச்சை நிறத்திலும், முனைகள் மழுங்கியும் இருக்கிறது.

மருத்துவ ஆய்வுகள்

  1. Momordica charantia var. muricata
    • இச்சிற்றினத்தின் பச்சைச்சாறை உண்பதால், ஆக்சிசனேற்ற அயற்சி (Oxidative stress), இழைநார்ப் பெருக்கம், , கல்லீரல் சிதைவு (hepatic damage in CCl4) போன்றவை தடுக்கப்படுவதாக எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபித்துள்ளன.[6]
  2. Momordica charantia var. charantia என்ற இரு சிற்றின வகைகள், மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவுகின்றன.[7][8]

ஊட்டசத்து

பாகற்காய்
உப்பில்லா வேகவைத்த, நீர்வடித்த உணவு
உணவாற்றல்79 கிசூ (19 கலோரி)
4.32 g
சீனி1.95 g
நார்ப்பொருள்2 g
0.18 g
0.84 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
lutein zeaxanthin
(1%)
6 மைகி
(1%)
68 மைகி
1323 மைகி
தயமின் (B1)
(4%)
0.051 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(4%)
0.053 மிகி
நியாசின் (B3)
(2%)
0.28 மிகி
(4%)
0.193 மிகி
உயிர்ச்சத்து பி6
(3%)
0.041 மிகி
இலைக்காடி (B9)
(13%)
51 மைகி
உயிர்ச்சத்து சி
(40%)
33 மிகி
உயிர்ச்சத்து ஈ
(1%)
0.14 மிகி
உயிர்ச்சத்து கே
(5%)
4.8 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(1%)
9 மிகி
இரும்பு
(3%)
0.38 மிகி
மக்னீசியம்
(5%)
16 மிகி
மாங்கனீசு
(4%)
0.086 மிகி
பாசுபரசு
(5%)
36 மிகி
பொட்டாசியம்
(7%)
319 மிகி
சோடியம்
(0%)
6 மிகி
துத்தநாகம்
(8%)
0.77 மிகி
நீர்93.95 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Momordica charantia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாகல்&oldid=3589653" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை