பாத்திம கலீபகம்

பாத்திம கலீபகம் (Fatimid Caliphate, அரபி:الفاطميون) எகிப்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட இசுலாமிய கலீபகம் ஆகும். பெரும்பான்மையோரால் அங்கீகரிக்கப்பட்ட கலீபகங்களின் வரிசையில் அமையப்பெற்ற ஒரே சியா இசுலாமிய கலீபகம் இது. கிபி 909ல் முகம்மது நபியின் மகள் பாத்திமாவின் வழி வந்த அப்துல்லா அல் மகதி பில்லா என்பவரால் இது தோற்றுவிக்கப்பட்டது. இதன் பேரிலேயே இது பாத்திம கலீபகம் என அழைக்கப்படுகின்றது. இதன் கலீபாக்கள் சியா இசுலாமின் இசுமாயிலி பிரிவின் இமாமாகவும் இருந்தனர். இவர்களின் ஆட்சி அதன் உட்சத்தில் வட ஆப்பிரிக்கா, எகிப்து, சிசிலி, சிரியா, பாலசுத்தீனம், லெபனான் மற்றும் கெசாசு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. 1070 வாக்கில் துருக்கிய மற்றும் சிலுவைப்போராளிகளின் படையெடுப்பால் சரிவை சந்திக்கத் தொடங்கிய இந்த பேரரசு, 1171ல் அய்யூப்பிய வம்ச பேரரசர், சலாகுத்தீன் எகிப்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது[1].

பாத்திம இசுலாமிய கலீபகம்
الدولة الفاطمية
அல்-பாத்திமியூன்
கிபி 909–கிபி 1171
கொடி of பாத்திம கலீபகம்
கொடி
பாத்திம கலீபகம் தனது உச்சத்தில், கிபி 969.
பாத்திம கலீபகம் தனது உச்சத்தில், கிபி 969.
தலைநகரம்மகுதியா (909-969)
கெய்ரோ (969-1171)
சமயம்
சியா இசுலாம், இஸ்மாயிலி பிரிவு
அரசாங்கம்முடியாட்சி
கலீபா 
• 909-934
அப்துல்லா அல்-மகதி பில்லா
• 1160-1171
அல்-அகித்
வரலாறு 
• தொடக்கம்
5 சனவரி கிபி 909
• கெய்ரோ நிர்னயம்
ஆகத்து 8, 969
• முடிவு
கிபி 1171
பரப்பு
9695,100,000 km2 (2,000,000 sq mi)
மக்கள் தொகை
• 
62000000
நாணயம்தினார்
முந்தையது
பின்னையது
அப்பாசியக் கலீபகம்
[[அய்யூப்பிய வம்சம்]]
அல்மொகத் பேரரசு

இன்றைய எகிப்தின் தலைநகரமான கெய்ரோ, இவர்களின் ஆட்சியிலேயே நிர்மானிக்கப்பட்டது. கிபி 969ல் உருவாக்கப்பட்ட இந்த நகரத்தின் அப்போதைய பெயர் அல்-காகிரா என்பதாகும்[2]. இன்றும் இந்த நகரத்தில் இருக்கும் அல்-அசார் பல்கலைக்கழகம், அல்-கக்கீம் பள்ளிவாசல் போன்றவை பாத்திம கலீபகத்தின் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாத்திம_கலீபகம்&oldid=3095086" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை