பியூரின்

பியூரின் (Purine) ஒரு நறுமணமுள்ள, பல்லினவட்ட கரிமச் சேர்மமாகும். இதில், பிரிமிடின் வளையம், இமிடசோல் வளையத்துடன் இணைந்துள்ளது. பியூரின்கள், பதிலீடு செய்யப்பட பியூரின்கள் மற்றும் அதன் இடமாற்றியங்களும் இயற்கையில் அதிகமாக காணப்படுகின்ற நைட்ரசன் உள்ள பல்லினவட்ட கரிமச் சேர்மங்களாகும்[1].

பியூரின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
7H-பியூரின்
இனங்காட்டிகள்
120-73-0 Y
ChEBICHEBI:17258 Y
ChEMBLChEMBL302239 Y
ChemSpider1015 Y
InChI
  • InChI=1S/C5H4N4/c1-4-5(8-2-6-1)9-3-7-4/h1-3H,(H,6,7,8,9) Y
    Key: KDCGOANMDULRCW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H4N4/c1-4-5(8-2-6-1)9-3-7-4/h1-3H,(H,6,7,8,9)
    Key: KDCGOANMDULRCW-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள்Image
KEGGC15587 Y
ம.பா.தPurine
பப்கெம்1044
SMILES
  • c1c2c(nc[nH]2)ncn1
பண்புகள்
C5H4N4
வாய்ப்பாட்டு எடை120.12 g·mol−1
உருகுநிலை 214 °C (417 °F; 487 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பியூரின்களும், பிரிமிடின்களும் இரு நைட்ரசனைக் கொண்ட அடித்தளப் பொருள் குழுமங்களை (உட்கரு அமிலங்களிலுள்ள இரண்டு உட்கரு அடித்தளங்களையும் சேர்த்து) உருவாக்குகின்றன. நான்கில் இரண்டு டி.என்.ஏ. மூலக்கூறுகள் மற்றும் நான்கில் இரண்டு ஆர்.என்.ஏ. மூலக்கூறுகள் பியூரின்களாகும்.

குறிப்பிடத்தக்க பியூரின்கள்

பூமியில் உள்ள இயற்கையில் காணப்படும் பியூரின்களின் அளவு மிக அதிகமாகும். உட்கரு அமிலங்களிலுள்ள நான்கில் இரண்டு உட்கரு அடித்தளங்களான அடெனின் (A) (2) மற்றும் குவானின் (G) (3) ஆகியன பியூரின்களாகும். டிஆக்சி ரைபோநியூக்கிளிக் அமிலம் (டி.என்.ஏ.) மற்றும் ரைபோநியூக்ளிக் அமிலங்களில் (ஆர்.என்.ஏ.) உள்ள உட்கரு பியூரின் அடித்தளங்கள் எதிர்நிரப்பு பிரிமிடின்களுடன் ஹைட்ரசன் பிணைப்புகளை உருவாக்குகின்றன. டி.என்.ஏ.-வில் பியூரின்களான அடெனின் (A) மற்றும் குவானின் (G), பிரிமிடின்களான தைமின் (T) மற்றும் சைடோசினுடன் (C) முறையே பிணைகின்றன. ஆர்.என்.ஏ.-வில் அடெனினின் (A) எதிர்நிரப்பு, தைமினுக்குப் (T) பதிலாக யுராசில் (U) ஆகும். எனவே, கீழ்வரும் பிணைகள் உருவாகின்றன: அடெனின்:யுராசில் மற்றும் குவானின்:சைடோசின். இவ்வகைப் பிணைப்பு, எதிர்நிரப்பு அடித்தள பிணைப்பு எனப்படும்.

குறிப்பிடத்தக்க பிற பியூரின்கள்: ஹைபோசேந்தைன் (4), சேந்தைன் (5), தியோபுரோமைன் (6), காஃபின் (7), யூரிக் அமிலம் (8) மற்றும் ஐசோகுவானின் (9).

செயற்பாடுகள்

டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. மூலக்கூறுகளான, அடெனின் (A) மற்றும் குவானின் (G) ஆகியவற்றில் முக்கியமாகச் செயல்படுவதைத் தவிர, பியூரின்கள் பலவிதமான பிற முக்கிய உயிரிமூலக்கூறுகளிலும் குறிப்பிடத்தக்க இடுபொருளாக உள்ளது: உதாரணமாக, அடெனோசின் டிரைபாஸ்பேட் (ATP), குவானோசின் டிரைபாஸ்பேட் (GTP), சுழலான அடெனோசின் மோனோபாஸ்பேட் (cAMP), நிகோடினமைட் அடெனின் டைநியூகிளியோடைட் (NADH), மற்றும் துணைநொதி ஏ and (Co A). பியூரின் (1) மட்டும் இயற்கையில் காணப்படுவதில்லை என்றாலும் கரிமத் தொகுப்பினால் இதனை உருவாக்க முடியும்.

பியூரின்கள், பியூரினோஏற்பிகள் மீது செயல்படுவதன்மூலம் நரம்பு பரப்பிகளாக செயலாற்ற முடியும். உதாரணமாக அடெனோசின், அடெனோசின் ஏற்பிகளைத் தூண்டுகிறது.

வரலாறு

பியூரின் (purum uricum) என்னும் பெயரை முதன்முதலில் 1884-ஆம் ஆண்டு செருமானிய வேதியியலர் எமில் ஃபிஷர் உபயோகப்படுத்தினார். இவர் முதலாவதாக 1899-ஆம் ஆண்டு பியூரினைத் தயாரித்தார்[2]. ஷீலே என்பவரால் 1776-ஆம் ஆண்டு சிறுநீரக கற்களிலிருந்துப் பிரித்தெடுக்கப்பட்ட யூரிக் அமிலத்தை (8) ஆரம்பப் பொருளாகக் கொண்டு பியூரின் தொகுக்கப்பட்டது[3].

பாஸ்பரஸ் பெண்டாகுளோரைடுடன் (PCl5) யூரிக் அமிலத்தை (8) வினைபுரிய செய்து 2,6,8-டிரைகுளோரோ பியூரின் (10) பெறப்பட்டது. இதை, ஐதரசன் அயோடைடு (HI) மற்றும் பாஸ்போனியம் உப்புடன் (PH4I) இணைந்து 2,6-டைஅயோடோ பியூரினாக (11) மாற்றப்பட்டது. இவ்விளைபொருள், துத்தநாக தூசியினைக் கொண்டு பியூரினாகக் (1) குறைக்கப்பட்டது. பியூரின்கள், பிரிமிடின்களைக் காட்டிலும் அளவில் பெரியன.

வளர்சிதைமாற்றம்

பியூரின்களைத் தொகுக்க, சிதைக்க பல உயிரினங்களும் ஊன்ம ஆக்கச்சிதைவு வழித்தடங்களைக் கொண்டுள்ளன. பியூரின்கள் ரைபோசுடன் இணைந்து நியூக்கிளியோசைடுகளாக உயிரி முறையில் தொகுக்கப்படுகின்றன.

இனோசிடால் மானோபாஸ்பேட் (IMP) தொகுப்பு.
வண்ணதிட்ட விளக்கங்கள் பின்வருமாறு: நொதிகள், துணைநொதிகள், தளப்பொருள் பெயர்கள், மாழை அயனிகள், கனிம மூலக்கூறுகள்

உணவு மூலங்கள்

பியூரின்கள், இறைச்சி மற்றும் இறைச்சி பொருள்களில் (முக்கியமாக, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில்) மிகுந்த செறிவுடன் காணப்படுகின்றது. பொதுவாக, தாவர உணவுவகைகளில் பியூரின்கள் குறைந்த அளவே உள்ளது.[4]அதிக பியூரின் செறிவுள்ள உணவுகள்: இனிப்பு ரொட்டி வகைகள், நெத்திலி மீன்கள், சாளை மீன்கள், கல்லீரல், மாட்டு சிறுநீரகங்கள், மூளை, இறைச்சி சாரங்கள், வாளை மீன்கள், கானாங்கெளுத்தி மீன்கள், இரட்டை வழிச் சோழிகள், வேட்டை விலங்குகளின் கறி, பியர் (மதுவத்திலிருந்து) மற்றும் இறைச்சி (அ) மரக்கறி குழம்பு.

மிதமான அளவு பியூரின் உள்ள உணவுகள்: மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழியின வளர்ப்புப் பறவைகள், பிற மீன்கள் மற்றும் கடலுணவுகள், தண்ணீர்விட்டான் கொடி, முட்டைகோசு (பூக்கோசு), பசளிக் கீரை, காளான்கள், பச்சைப் பட்டாணிகள், பருப்பு வகைகள், உலர்ந்த பட்டாணிகள், கொட்டைகள், புல்லரிசி, கோதுமைத் தவிடு, கோதுமை முளை மற்றும் மரவகை ரோஜா இனம்[5]

அதிக அளவு இறைச்சி மற்றும் கடலுணவு உண்பது கீல்வாதம் வருவதற்கான இடர்பாடுகளுடன் அதிக அளவுத் தொடர்புடையதாகவும், அதே சமயத்தில் அதிக அளவு பால் பொருள்களை உண்பது கீல்வாதம் வருவதற்கான இடர்பாடுகளுடன் குறைந்த அளவுத் தொடர்புடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மிதமான அளவு பியூரின்-செறிந்த காய்கறிகள் மற்றும் புரதங்களை உண்பது கீல்வாதம் வருவதற்கான இடர்பாடுகளுடன் அதிக அளவுத் தொடர்புடையதில்லை[6].

பூமியிலுள்ள விண்கற்களை ஆராய்ந்த நாசா ஆய்வுகளின் 2011-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, பியூரின்கள் மற்றும் அதன் தொடர்புடைய கரிம மூலக்கூறுகள் (டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. மூலக்கூறுகளான, அடெனின் (A) மற்றும் குவானின் (G) ஆகியவற்றையும் சேர்த்து) புவிக்கப்பால் வான்வெளியில் உருவாகியிருக்கக்கூடும் எனத் தெரிவிக்கிறது[7][8]

ஆய்வகத் தொகுப்பு

வளர்சிதைமாற்றத்தினால் உருவாக்கப்படும் பியூரின்களைத் தவிர, செயற்கையான முறையிலும் பியூரினைத் தயாரிக்க இயலும்.

திறந்த கலனில் ஃபார்மமைடை இருபத்தியெட்டு மணிகளுக்கு 170 °செ வெப்பநிலையில் சூடுபடுத்தும்போது பியூரின் (1) பெருமளவு கிடைக்கிறது[9].

இணைக்கப்பட்ட மேற்கோளில் மேற்கண்ட வினைகளும், இவைபோன்ற பிறசெய்திகளும் உயிரினங்களின் தோற்றம் குறித்த சூழலில் விவாதிக்கப்பட்டுள்ளன[10].

நான்கு ஹைட்ரசன் சயனைடு மூலக்கூறுகள் நாற்படியாதல் மூலம் கிடைக்கும் டைஅமினோ-மேலியோ-டைநைட்ரைல் (12) என்னும் வேதிப்பொருளிலிருந்து இயற்கையில் கிடைக்கும் அனைத்து பியூரின்களும் உருவாக்கப்படுகிறது[11][12][13][14][15].

அமைன் பதிலிட்ட பிரிமிடின் மற்றும் ஃபார்மிக் அமிலத்திற்கிடையான முதல்தர வினையானது, வில்ஹெல்ம் டிராபேவின் பெயரால் டிராபே பியூரின் தொகுப்பு (1900) என்றழைக்கப்படுகிறது[16]

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பியூரின்&oldid=3690159" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை