மதுவம்

மதுவம் (ஈஸ்ட்)
Saccharomyces cerevisiae இன மதுவம் நுணுக்குக்காட்டியில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
Phyla and Subphyla

Ascomycota

  • Saccharomycotina (true yeasts)
  • Taphrinomycotina
    • Schizosaccharomycetes (fission yeasts)

கதைப்பூஞ்சைத் தொகுதி

  • Agaricomycotina
    • Tremellomycetes
  • Pucciniomycotina
    • Microbotryomycetes

மதுவம் எனப்படுவது கிட்டத்தட்ட 1500 இனங்களை உள்ளடக்கிய பூஞ்சை எனப்படும் உயிரியல் இராச்சியத்தைச் சேர்ந்த, ஒருகல மெய்க்கருவுயிரி நுண்ணுயிர்களாகும்[1]. ஏனைய பூஞ்சைகளைப் போலல்லாது இவை தனிக்கலங்களால் ஆன அசையக்கூடிய தனிக்கல உயிரிகளாகும். இனங்களுக்கிடையே கல அளவில் வேறுபாடு இருக்கும். 3-4 µm விட்டத்திலிருந்து 40 µm விட்டம் வரை வேறுபட்டது[2]. மதுவம் மனிதனுக்கு அதிக அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நுண்ணுயிர்களுள் ஒன்றாகும். அற்கஹோல் குடிபான உற்பத்தி, வெதுப்பகத் தயாரிப்புகள், தோசை சமைத்தல், எத்தனோல் எரிபொருள் உற்பத்தி என்பவற்றில் இவ்வங்கி பயன்படுத்தப்படுகின்றது. காற்றின்றிய நிபந்தனையில் மதுவக் கலங்கள் எத்தனோல் நொதித்தல் மூலம் உருவாக்கும் எத்தனோல் எனப்படும் ஒரு வகை அற்கஹோலே இவ்வாறு பல தயாரிப்புகளுக்கும் மூலப்பொருளாக உள்ளது. அனேகமான மதுவ இனங்கள் இழையுருப்பிரிவு மூலம் இலிங்கமில் முறையில் இனம்பெருகினாலும், இவற்றில் இலிங்க முறை இனப்பெருக்கமும் அவதானிக்கப்பட்டுள்ளது.பொதுவாக அனைத்து தனிக்கலப் பூஞ்சை இனங்களும் மதுவம் என அழைக்கப்படுவதால் மதுவ இனங்கள் ஒரே கூர்ப்பில் உருவான உயிரினங்கள் அல்ல. இவை வெவ்வேறு- பேசிடோமைக்கோட்டா, அஸ்கோமைக்கோட்டா கணங்களைச் சேர்ந்தவையாஅக உள்ளன.

போசணையும் வளர்ச்சியும்

இவை இரசாயனப் பிறபோசணி உயிரிகளாகும். இவை தம்மைச் சூழவுள்ள நீர்ச்சூழலில் நொதியங்களை விடுவித்து எளிய உணவுப் பதார்த்தங்களை அகத்துறிஞ்சுகின்றன. குளுக்கோசு போன்ற எளிய வெல்லங்களைப் பிரதான சக்தி முதலாகப் பயன்படுத்துகின்றன. இவை பொதுவாகக் காற்றின்றிய சூழலை நாடுபவையாக உள்ளன. காற்றுள்ள நிலமையிலும் இவற்றால் சீவிக்க முடியும். குளுக்கோசை எத்தனோலாக மாற்றும் நொதித்தலின் மூலம் இவை தமக்குத் தேவையான அனுசேப சக்தியை உருவாக்குகின்றன. நடுநிலையான அல்லது சிறிதளவு அமிலத்தன்மையுள்ள ஊடகத்தில் இவை துரித வளர்ச்சியைக் காண்பிக்கும். பொருத்தமான வளர்ச்சி ஊடகத்தில் இவற்றை வளர்க்கும் போது இவை நன்றாக வளர்ச்சியடைந்தாலும், பின்னர் இவை எத்தனோலின் விஷத்தன்மை காரணமாக இறந்து விடுவதையும் அவதானிக்கலாம். எஞ்சும் எத்தனோல் மனிதத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மதுவம்&oldid=3399440" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை