பொதுநலவாய விளையாட்டுக்கள்

பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுக்கள் (Commonwealth Games) என்பவை ஒரு பன்னாட்டு, பல-விளையாட்டுப் போட்டிகள் கொண்ட நிகழ்வாகும். ஒவ்வொரு நான்காண்டுகளுக்கொருமுறை நடத்தப்படும் அவை பொதுநலவாய நாடுகளின் உயர் மட்ட விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளாகும். பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வழக்கமாக ஏறத்தாழ 5,000 மாக இருக்கும். பொதுநலவாய விளையாட்டுக்களின் கூட்டமைப்பு (CGF) இந்த விளையாட்டுக்களை இயக்கவும் கட்டுப்படுத்தவும் பொறுப்பான நிறுவனமாகும்.

பொதுநலவாய விளையாட்டுகள்
Commonwealth Games
பொதுநலவாய விளையாட்டுகளின் கூட்டமைப்பு சின்னம், 2001ஆம ஆண்டு வடிவமைக்கப்பட்டது

குறிக்கோள்மனிதம்– சமநிலை– வெற்றி
தலைமையகம்இலண்டன், ஐக்கிய இராச்சியம்
பொதுநலவாய செயலகம்மாண்புமிகு. மைக்கேல் ஃபென்னல் OJ, CD
இணையதளம்பொதுநலவாய விளையாட்டுகள் கூட்டமைப்பு

அத்தகைய முதல் போட்டி நிகழ்வாக, பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள் என அறியப்பட்டு, கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின், ஹாமில்டனில் 1930 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 1954 ஆம் ஆண்டில் இப்பெயரானது பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்றிருந்து. பின்னர் 1970 ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள் என மாற்றப்பட்டது. தற்போதைய பெயரான பொதுநலவாய விளையாட்டுக்கள் என்பது 1978 ஆம் ஆண்டு முதல் அதிகாரபூர்வமாக்கப்பட்டது[1].

பல ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் போல, இந்த விளையாட்டுப் போட்டிகள் பொதுநலவாய நாடுகளின் சில முக்கிய விளையாட்டுக்களை உள்ளடக்கியுள்ளது: அவை லான் பவல்ஸ், ரக்பி செவன்ஸ் மற்றும் நெட்பால் போன்றவையாகும்.

தற்போது பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 54 உறுப்பினர்கள் உள்ளனர் மற்றும் 71 அணிகள் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். ஐக்கிய ராச்சியத்தின் நான்கு அங்கங்களான - இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை (ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஐக்கிய இராச்சியம் ஒரே அணியை அனுப்புவது போலல்லாமல்) பொதுநலவாய விளையாட்டுக்களுக்கு தனித்தனியான அணிகளை அனுப்புகின்றன. மேலும் பிரிட்டன் சார்நிலைப்பகுதிகள் - குயெர்ன்சி, யேர்சி, மற்றும் மாண் தீவு - மற்றும் பல பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள் தனித்தனியான அணிகளை அனுப்புகின்றன. ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த பிரதேசமான நார்ஃபோக் தீவு அதன் தனி அணியை அனுப்புகிறது. நியூசிலாந்தின் இரு சுதந்திர கூட்டமைப்புக்களான குக் தீவுகள் மற்றும் நியுவே ஆகியவையும் அவ்வாறே செய்கின்றன.

ஆறே அணிகள் மட்டுமே அனைத்து பொதுநலவாய விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ளன. அவையாவன: ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகும். பதக்க எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா அதிகபட்சமாகப் பத்துப் போட்டிகளில் எடுத்துள்ளது, இங்கிலாந்து ஏழு போட்டிகளிலும் கனடா ஒரேயொரு போட்டியிலும் எடுத்துள்ளது.

1930 ஆம் ஆண்டு விளையாட்டில் பெண்கள் நீச்சல் போட்டிகளில் மட்டுமே போட்டியிட்டனர்.[2] 1934 ஆம் ஆண்டு முதல், பெண்கள் சில தடகள விளையாட்டுகளிலும் போட்டியிட்டனர்[சான்று தேவை].

அடுத்த பதிப்பு 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் தில்லியில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் பெருமளவு நிதி விரயமும் ஊழலும் நடைபெற்றுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் வெளியாகி உள்ளன.[3][4] பல்வேறு விளையாட்டுத் திடல்களும் சேவைமையங்களும் முடிவுறாத நிலையில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரத்தை எட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் 2014 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளன.

துவக்கம்

பிரித்தானியப் பேரரசின் உறுப்பு நாடுகளை ஒரு விளையாட்டு போட்டியின் மூலம் ஒன்று சேர்த்து கொண்டுவருவதை முதன்முதலாக 1891 ஆம் ஆண்டு, தி டைம்ஸ் இதழில் ரெவரெண்ட் ஆஸ்ட்லெ கூப்பர் (Reverend Astley Cooper) எழுதிய ஒரு கட்டுரையில், "அனைத்து பிரித்தானிய-அனைத்து ஆங்கிலேயரிடையே விளையாட்டுப் போட்டிகள் மற்றும் திருவிழா ஒன்றினை நான்காண்டிற்கொருமுறை நடத்தி பிரித்தானிய பேரரசின் நற்பெயரையும் கூடுதல் புரிந்துணர்வையும் வளர்க்கும் வழிமுறை"யாக பரிந்துரைத்தார்.

1911 ஆம் ஆண்டு, இலண்டனில் பேரரசின் திருவிழா ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவினை கொண்டாட நடத்தப்பட்டது. திருவிழாவின் ஒரு பகுதியாக பேரரசிற்கிடையிலான போட்டிகள் நடத்தப்பட்டன, அதில் ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிகா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியன குத்துச் சண்டை, மல்யுத்தம், நீச்சல் மற்றும் தடகளப் போட்டிகள் போன்ற போட்டிகளில் போட்டியிட்டன.

1928 ஆம் ஆண்டு, கனடாவின் மெல்விலே மார்க்ஸ் ராபின்சென் (Melville Marks Robinson) முதன் முதலான பிரித்தானிய பேரரசுப் போட்டிகளை ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டார். இரு வருடங்களுக்குப் பிறகு இவை ஒன்டாரியோவின் ஹாமில்டனில் நடத்தப்பட்டன.

திறப்பு விழா மரபுகள்

  • 1930 முதல் 1950 ஆம் ஆண்டு வரை, நாடுகளின் அணி வகுப்பில் பிரித்தானிய ஒன்றியக் கொடியை ஏந்திச் செல்லும் ஒருவர் மட்டுமே முன் செல்வார். அது பிரித்தானியப் பேரரசில் பிரிட்டனின் முதன்மையான இடத்தை அடையாளப்படுத்தியது.
  • 1958 ஆம் ஆண்டிலிருந்து, பக்கிங்காம் அரண்மனையிலிருந்து துவக்க விழா நடைபெறும் இடம் வரை தடகள வீரர்கள் கோல் ஒன்றினை ஏந்திச் செல்லும் தொடர் ஓட்டம் ஒன்று இருந்துள்ளது. இந்தக் கோலினுள்ளே தடகள வீரர்களுக்கான ராணியின் வாழ்த்துச் செய்தி இருந்தது. கோலினை கடைசியாக ஏந்திச் செல்பவர் வழக்கமாக போட்டியினை நடத்தும் நாட்டின் பிரபல விளையாட்டு நபராக இருப்பார்.
  • அனைத்து இதர நாடுகளும் ஆங்கில எழுத்துமுறை வரிசைப்படி அணி வகுக்கும். தவிரவும், முந்தைய விளையாட்டுக்களை நடத்திய நாட்டின் தடகளவீரர்கள் அணி வகுப்பில் முதலாவதாக நடந்து செல்வர், தற்போதைய விளையாட்டினை நடத்தும் நாடு கடைசியாக நடந்து செல்லும். 2006 ஆம் ஆண்டில் புவியியல் பகுதிப்படி ஆங்கில எழுத்துமுறை வரிசையில் நாடுகள் அணி வகுத்தன.
  • பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கான மேடையில் இருக்கும் கம்பங்களில் மூன்று நாடுகளின் கொடிகள் பறக்கும்: முந்தைய போட்டியினை நடத்திய நாடு, தற்போதைய போட்டியினை நடத்தும் நாடு மற்றும் அடுத்தப் போட்டியினை நடத்தும் நாடு ஆகியவை இதிலடங்கும்.
  • ஒலிம்பிக் போட்டிகளை விடத் துவக்க விழாவில் படைத்துறை மிக அதிகமாக செயலாற்றும். இது பழையப் பேரரசின் பிரித்தானிய இராணுவ மரபுகளைக் கௌரவப்படுத்தும் விதமானதாகும்.

புறக்கணிப்புகள்

காமன்வெல்த் விளையாட்டுகள் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் போலவே, அரசியல் புறக்கணிப்புக்களிலினால் பாதிக்கப்பட்டதாகும். நைஜீரியா 1978 பொதுநலவாய விளையாட்டுக்கள் 1978 விளையாட்டுக்களை நியூசிலாந்து நிறவெறி கொண்ட தென்னாபிரிக்காவுடன் கொண்டிருந்த விளையாட்டுத் தொடர்புகளை எதிர்த்து புறக்கணித்தது. மேலும் ஆப்பிரிக்காவிலிருந் 59 நாடுகளில் 32 நாடுகளும், ஆசியா மற்றும் கரிபியன் தீவுகளும் 1986 பொதுநலவாய விளையாட்டுகளை மார்கரெட் தாட்சர் தலைமையிலான பிரித்தானிய அரசின் தென் ஆப்பிரிகாவுடனான விளையாட்டுத் தொடர்புகளை எதிர்த்து புறக்கணித்தன. தென் ஆப்பிரிகாவினை முன்னிட்டே 1974, 1982 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளின் விளையாட்டுகளுக்கும் புறக்கணிப்பு எச்சரிக்கைகள் விடப்பட்டு இருந்தன.

நிகழ்வுகள்

விளையாட்டுகளின் இடங்கள் மற்றும் பங்கேற்கும் நாடுகள்

பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள்

பிரித்தானிய பேரரசு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கள்

பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள்

  • 1970 விளையாட்டுக்கள் – எடின்பரோ, ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்
  • 1974 விளையாட்டுக்கள் – கிரைஸ்ட்சர்ச், நியூசிலாந்து

பொதுநலவாய விளையாட்டுக்கள்

போட்டியிடும் நாடுகள்/சார்பு நிலை நாடுகள்

போட்டியிட்டுள்ள நாடுகள்/சார்பு நிலை நாடுகள்

 1994–

குறிப்புகள்

1: ஏடன், தென் அரேபியாவாக மாறியது அது காமன்வெல்த்தை விட்டு 1968 ஆம் ஆண்டு விலகியது.
2: 1966 ஆம் ஆண்டில் கயானாவாக மாறியது.
3: 1973 ஆம் ஆண்டில் பெலிஸ்சாக மாறியது.
4: ஸ்ரீ லங்காவாக 1972 ஆம் ஆண்டில் மாறியது.
5: 1957 ஆம் ஆண்டில் கானாவாக மாறியது.
6: 1997 ஆம் ஆண்டில் சீனாவிற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டப்போது பொதுநலவாயத்தை விட்டு விலகியது.
7: 1930 ஆம் ஆண்டில் அயர்லாந்து ஒருங்கிணைந்த அணியாக முழு அயர்லாந்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது, மேலும் 1934 ஆம் ஆண்டில் அயர்லாந்து குடியரசு மற்றும் வட அயர்லாந்தாக இருந்தது. ஐரிஷ் சுதந்திர நாடு 1937 ஆம் ஆண்டில் அயர்லாந்து என் மறு பெயர் சூட்டப்பட்டது (ஆனாலும் அதன் பெயரான ஐரிஷ் ஐரே எனவும் அறியப்பட்டது) ஜனவரி 1 1949 ஆம் ஆண்டில் தன்னை குடியரசாகப் பிரகடனப்படுத்திக் கொண்டப் போது பொதுநலவாயத்தை விட்டு விலகியது.
8: மலேயா, வடக்கு போர்னோ, சாராவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை மலேசியக் கூட்டமைப்பாக 1963 ஆம் ஆண்டில் இருந்தன. சிங்கப்பூர் 1965 ஆம் ஆண்டில் கூட்டமைப்பை விட்டு விலகியது.
9: 1949 ஆம் ஆண்டில் கனடா இணைந்தது.
10: தென் ரொடிசியா மற்றும் வட ரொடிசியா ஆகியவை நியாசாலாந்து கூட்டமைப்பில் இணைந்து ரொடிசிய நியாசாலாந்து கூட்டமைப்பாக 1953 துவங்கி 1963 ஆம் ஆண்டு வரை நிலைத்திருந்தன.
11: 1953 ஆம் ஆண்டில் வட ரொடிசியா மற்றும் தென் ரொடிசியாவாக பிரிந்தன.
12: 1958-1962 வரை ரொடிசியா மற்றும் நியாசாலாந்து பகுதியாக போட்டியிட்டன.
13: சான்சிபார் மற்றும் தாங்கநீயகா கூட்டமைப்பாகச் சேர்ந்து1964 ஆம் ஆண்டில் தான்சானியாவை அமைத்தன.
14: காமன்வெல்த்திலிருந்து 2003 ஆம் ஆண்டில் விலகியது.
15: 2009 ஆம் ஆண்டில் பொதுநலவாய அமைப்பு மற்றும் விளையாட்டுகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.[5]

இனி பங்கேற்கக் கூடிய பொதுநலவாய நாடுகள்/சார்பு நாடுகள்

மிகச் சில பொதுநலவாய நாடுகளே இன்னும் பங்கேற்காது உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள்

வார்ப்புரு:இதனையும் காண்க

பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பினால் 31 விளையாட்டுகள் (இரு பல்-துறை விளையாட்டுக்கள்) மற்றும் 7 உப-விளையாட்டுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்திலும் முக்கிய விளையாட்டுக்கள் உள்ளடக்கப்பட வேண்டும். விளையாட்டை நடத்தும் நாடு கூடுதல் விருப்பத்தேர்வாக மேலும் போட்டிகளைச் சேர்க்கலாம். அவை கூடைப்பந்து போல் அணி விளையாட்டுகளாகவும் இருக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்கள் என்பவை பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டவையாகும். இவற்றை விரிவாக்க வேண்டிய தேவை உள்ளது. போட்டியை நடத்தும் நாடுகள் இத்தகைய விளையாட்டுக்களை அவை கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வரை தமது நிகழ்வுகளில் தேர்ந்தெடுக்காது.[7]

விளையாட்டுவகைஆண்டுகள்
வில்வித்தைவிருப்பத் தேர்வு1982, 2010
தட கள விளையாட்டுக்கள்முக்கியமானவை1930–தற்போது வரை
பூப்பந்தாட்டம்முக்கியமானவை1966–தற்போது வரை
கூடைப்பந்துவிருப்பத் தேர்வு2006
பில்லியர்ட்ஸ்அங்கீகரிக்கப்பட்டதுஇதுவரையில்லை
குத்துச்சண்டைமுக்கியமானவை1930–தற்போது வரை
சிறு படகோட்டம்அங்கீகரிக்கப்பட்டதுஇதுவரையில்லை
மிதிவண்டி ஓட்டப்பந்தயம்விருப்பத் தேர்வு1934–தற்போது வரை
நீரில் பாய்தல்விருப்பத் தேர்வு1930–தற்போது வரை
வாள்வீச்சு (விளையாட்டு)அங்கீகரிக்கப்பட்டது1950–1970
குழிப்பந்தாட்டம்அங்கீகரிக்கப்பட்டதுஇதுவரையில்லை
சீருடற்பயிற்சிகள்
(கலைத்தன்மை மற்றும் தாளமுடன்)
விருப்பத் தேர்வு1978, 1990– தற்போது வரை
எறிபந்தாட்டம்அங்கீகரிக்கப்பட்டதுஇதுவரையில்லை
வளைதடிப் பந்தாட்டம்முக்கியமானவை1998–இன்று வரை
ஜூடோவிருப்பத் தேர்வு1990, 2002, 2014
லான் பவுல்சுமுக்கியமானவை1930–தற்போது வரை (1966 தவிர)
உயிர்காக்கும் (கடற்கரை) விளையாட்டுஅங்கீகரிக்கப்பட்டதுஇதுவரையில்லை
விளையாட்டுவகைஆண்டுகள்
நெட்பால்முக்கியமானவை1998–இன்று வரை
துடுப்பு படகோட்டம்அங்கீகரிகப்பட்டது1930, 1938–62, 1986
ரக்பி செவன்ஸ்முக்கியமானவை1998–இன்று வரை
பாய்மரப் படகோட்டம்அங்கீகரிக்கப்பட்டதுஇதுவரையில்லை
துப்பாக்கிச் சுடுதல்விருப்பத் தேர்வு1966, 1974–தற்போது வரை
சாஃப்ட் பால்அங்கீகரிக்கப்பட்டதுஇதுவரையில்லை
ஸ்குவாஷ்முக்கியமானவை1998–இன்று வரை
நீச்சற் போட்டிமுக்கியமானவை1994–தற்போது வரை
ஒருங்கிசைந்த நீச்சல்விருப்பத் தேர்வு1986, 2006
மேசைப்பந்தாட்டம்விருப்பத் தேர்வு2002–தற்போது வரை
டென்னிசுவிருப்பத் தேர்வு2010
டென்பின் பவுலிங்அங்கீகரிக்கப்பட்டது1998
முத்திறன் போட்டிவிருப்பத் தேர்வு2002, 2006, 2014
கைப்பந்தாட்டம்அங்கீகரிக்கப்பட்டதுஇதுவரையில்லை
புனல்பந்தாட்டம்அங்கீகரிக்கப்பட்டது1950
பாரம்தூக்குதல்முக்கியமானவை1950–தற்போது வரை
மல்யுத்தம்விருப்பத் தேர்வு1930–இதுவரை(1990 மற்றும் 1998 தவிர)

விளையாட்டு வீரர்கள், விளையாட்டுக்கள் மற்றும் நாடுகள்

இந்தப் பட்டியல் ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்ற மொத்த விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை, (ஆண்கள் மற்றும் பெண்கள்), அவர்கள் போட்டியிட தேர்ந்தெடுத்த விளையாட்டுகளின் எண்ணிக்கை மற்றும் போட்டியிடும் நாடுகளின் எண்ணிக்கை (சார்பு நிலை நாடுகள் உட்பட) ஆகியவற்றைக் காட்டுகிறது.

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

ஆண்டுவிளையாட்டு வீரர்கள்ஆண்கள்பெண்கள்விளையாட்டுக்கள்நிகழ்வுகள்அலுவலர்நாடுகள்
2006450016224771
2002386317372
199836381570
199426691263
199020731020555
198616601016527
198215801214345
197814751112647
197412769772991012137238
1970174411012142
1966131611011034
1962863917835
19581122922835
1954662912724
195059049595912
193846474315
1934500617
1930400611

1விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்குவர்.2 4 அணி விளையாட்டுக்கள் உள்ளடங்கியது.3 3 அணி விளையாட்டுக்கள் உள்ளடங்கியது.

2022 போட்டிகள்

இந்த அமைப்பு நடத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான போடியை தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தயுள்ளதாக நியூசிலாந்தில் உள்ள ஆக்கிலாந்து நகரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் தென் ஆப்பிரிக்காவிலேயே காமல்வெல்த் போட்டியை நடத்தும் முதல் நகரமாக டர்பன் விளங்குகிறது. .[8]

மேலும் காண்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Commonwealth Games
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


  • காமன்வெல்த் குளிர் கால விளையாட்டுக்கள்
  • காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுக்கள்
  • இந்தியப் பேரரசு விளையாட்டுக்கள்
  • ஜூயே டெ லா பிராங்கோபோனி
  • லுஸோபோனி விளையாட்டுக்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விளையாட்டுகளின் அதிகார பூர்வ வ்லைத்தளங்கள்

நாடுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை