பிளேடு ரன்னர்

பிளேடு ரன்னர் (ஆங்கிலம்: Blade Runner) 1982 ஆம் ஆண்டு ஒரு அறிபுனைத் திரைப்படம் ஆகும். ரிட்லி சுகாட்டினால் இயக்கப்பட்டது. ஹாரிசன் போர்ட், இரட்கர் ஹாவுவர், சான் யங், மற்றும் எட்வர்டு ஒல்ம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருங்காலத்து 2019 லாஸ் ஏஞ்சலஸ் மாநகரத்தில் அமையப்பெறுகிறது. இந்தக் காலகட்டத்தில், விண்வெளிக் குடியிருப்புகளில் பணி செய்ய செயற்கையான மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். அவற்றில் சில செயற்கை மனிதர்கள் புவியிற்கு தப்பித்து மனிதர்களாய் வாழ்கின்றனர். காவலர் ரிக் டெக்கர்டிற்கு (ஃபோர்டு) இவர்களை கண்டறிந்து வேட்டையாடும் பணி வழங்கப்படுகிறது. ஆனால் இவர் தயக்கம் காட்டுகிறார்.

பிளேடு ரன்னர்
Blade Runner
Collage of a man holding a gun, a woman holding a cigarette, and a futuristic city-scape.
பிளேடு ரன்னரின் சுவரொட்டி
இயக்கம்ரிட்லி சுகாட்
தயாரிப்புமைக்கேல் டீலி
திரைக்கதை
  • ஹாப்டன் பான்சர்
  • டேவிட் பிபிள்ஸ்
இசைவான்செலிசு
நடிப்பு
ஒளிப்பதிவுஜோர்டன் குரொனன்வெத்
படத்தொகுப்பு
  • டெர்ரி ராலிங்சு
  • மார்சா நகஷிமா
கலையகம்
  • த லாட் கம்பனி
  • ஷா பிரதர்சு
  • பிளேடு ரன்னர் பார்ட்னர்ஷிப்சு
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுசூன் 25, 1982 (1982-06-25)
ஓட்டம்117 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா[2][3]
Hong Kong[4]
ஆக்கச்செலவு$30 மில்லியன்[5]
மொத்த வருவாய்$41.5 மில்லியன்[6]

இத்திரைப்படம் முதலில் அதிகம் வருவாய் ஈட்டவில்லை. சில விமர்சகர்கள் மட்டும் கதையின் சிக்கல்கள் மட்டும் திரைவண்ணங்களை புகழ்ந்தனர். வெறு சிலர் திரைப்படத்தின் குறைந்த வேகத்தினையும் குறைந்த சண்டைக் காட்சிகளையும் கடுமையாக விமர்சித்தனர். வருடங்கள் பிறகே பெரிதும் பாராட்டப்பட்டு, இவ்வகையான திரைப்படங்களிற்கு முன்மாதிரியாக மாறியது.

இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக பிளேடு ரன்னர் 2049 அக்டோபர் 2017 இல் வெளிவந்தது.

பல்வேறு கருத்து மாறுபாடுகளினால் இத்திரைப்படத்திற்கு ஏழு வெவ்வேறு பதிப்புகள் உருவாக்கப்பட்டன. இரசிகர்களுக்காக 1992 ஆம் ஆண்டில் ரிட்லி சுகாட்டின் இயக்குநரின் வெட்டு வெளியிடப்பட்டது. இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு ஆக வெளியிடப்பட்ட முதல் திரைப்படங்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டில், இத்திரைப்பட வெளியீட்டின் 25 வருட நிறைவினை கொண்டாட, வார்னர் புரோஸ். பிளேடு ரன்னரின் இறுதி வெட்டினை வெளியிட்டது. இயக்குனர் ரிட்லி சுகாட்டின் விருப்பத்திற்கு ஏற்ப அமையப்பெற்று வெளியிடப்பட்ட பதிப்பு இது மட்டுமே.

தயாரிப்பு

நடிகர்கள்

இத்திரைப்படத்தில் நடிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது, குறிப்பாக ஹீரோ பாத்திரத்திற்கு.[7] பல மாதங்களாக இயக்குனர் ரிட்லி சுகாட்டும் தயாரிப்பாளர்களும் டசுடின் ஹாஃப்மனினை நடிக்க அழைத்தனர். ஆனால் அவர் கருத்து வேறுபாடுகளினால் வெளியேறினார்.[7] ஹாரிசன் ஃபோர்ட் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காகவும், ஃபோர்டின் பிளேடு ரன்னர் ஈடுபாட்டிற்காகவும், இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் பரிந்துரையாளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8] திரைப்பட தயாரிப்பு கோப்புகளின்படி, ஜீன் ஹாக்மன், சான் கானரி, ஜாக் நிக்கல்சன், பால் நியூமன், கிளின்ட் ஈஸ்ட்வுட், டாம்மி லீ ஜோன்சு, ஆர்னோல்டு சுவார்செனேகர், அல் பசீனோ மற்றும் பர்ட் ரெனால்ட்சு ஆகியோர் ஹீரோ பாத்திரத்திற்காக கண்டறியப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர்.[7]

பிளேடு ரன்னர் திரைப்படத்தில் அப்போது அறியப்படாத நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.[9][7]

இசை

சாரியட்ஸ் ஆப் பயர் திரைப்படத்திற்கு இசையமைத்து, அதற்கு ஆசுக்கர் விருதினை வென்ற வான்செலிசு இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். [10]

திரை வண்ணங்கள்

பிளேடு ரன்னர் திரைப்படத்தின் திரைவண்ணங்கள் மற்றும் அசைவூட்டங்கள் இன்றுவரை பெரிதும் பாராட்டப்படுகிறது.[11][12] அக்காலத்து தொழிநுட்பங்கள் அனைத்து அதன் முழுமைக்கும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. திரைப்படமாக்கலில் புதுவிதமான தொழில்நுட்பங்களைப் உருவாக்கி பயன்படுத்தியமைக்கு இத்திரைப்படத்தின் அசைவூட்ட பொறியியலாளர்கள் பெரிதும் பாராட்டப்பட்டனர்.[13][11] சில நுட்பங்கள் குலோசு என்கவுன்டர்சு ஆஃப் த தெர்டு கைன்டு திரைப்பட தயாரிப்பின் பொழுது உருவாக்கப்பட்டு இங்கு பயன்படுத்தப்பட்டன.[14]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

பிளேடு ரன்னர் பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டு, அதில் சிலவற்றினையும் வென்றது.[15]

ஆண்டுவிருதுபிரிவுமுடிவு
1982லாஸ் ஏஞ்சலசு திரைப்பட விமர்சகர்கள் குழுமம்சிறந்த ஒளிப்பதிவுவெற்றி
1983பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்சிறந்த ஒளிப்பதிவுவெற்றி
சிறந்த உடை அமைப்புவெற்றி
சிறந்த தொகுப்புபரிந்துரை
சிறந்த இசைபரிந்துரை
சிறந்த ஒப்பனைபரிந்துரை
சிறந்த தயாரிப்புவெற்றி
சிறந்த ஒலிபரிந்துரை
சிறந்த திரை வண்ணங்கள்பரிந்துரை
ஹியூகோ விருதுசிறந்த நாடகப்படம்வெற்றி
இலண்டன் திரைப்பட விமர்சகர்கள் குழுசிறப்பு விருதுவெற்றி
கோல்டன் குளோப் விருதுகள்சிறந்த அசல் இசைபரிந்துரை
அகாதமி விருதுசிறந்த தயாரிப்புபரிந்துரை[16]
சிறந்த திரை வண்ணங்கள்பரிந்துரை[17][18]
சனி விருதுகள்சிறந்த இயக்குனர்பரிந்துரை
சிறந்த அறிவியல் புனைவுத் திரைப்படம்பரிந்துரை
சிறந்த திரைவண்ணங்கள்பரிந்துரை
சிறந்த துணை நடிகர்பரிந்துரை
பேன்டாசுபோர்டோசர்வதேச திரைப்பட விருதுபரிந்துரை
1993பேன்டாசுபோர்டோசர்வதேச திரைப்பட விருதுபரிந்துரை
1994சனி விருதுகள்சிறந்த காணொளி வெளியீடுபரிந்துரை
2008சிறந்த காணொளி வெளியீடுவெற்றி

வரவேற்பு

பல்வேறு சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளது,

ஆண்டுவழங்கியவர்பட்டியல்இடம்மேற்.
2001தி வில்லேஜ் வாய்சுஇருபதாம் நூற்றாண்டின் சிறந்த 100 திரைப்படங்கள்94[19]
2002OFCSகடந்த 100 ஆண்டிகளின் சிறந்த 100 அறிவிய புனைவுத் திரைப்படங்கள்2[20]
சைட் & சவுண்டு2002 பட்டியல்45[21]
50 கிளாசிக்கர், பிலிம்இல்லை[22]
2003இறப்பதற்கு முன் பார்க்கவேண்டிய 1001 திரைப்படங்கள்[23]
என்டர்டெயின்மெண்ட் வீக்லிதீவிர இரசிகர்கள் கொண்ட சிறந்த 50 திரைப்படங்கள்9[24]
2004தி கார்டியன், அறிவியலாளர்கள்அனைத்து காலத்து சிறந்த 10 அறிவியல் புனைவுத் திரைப்படங்கள்1[25][26][27]
2005டோட்டல் பிலிம்அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள்47[28]
டைம் இதழின் விமர்சகர்கள்அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள்இல்லை[29][30][31]
2008நியூ சயின்டிசுடுஅனைத்து காலத்து சிறந்த அறிவியல் புனைவுத் திரைப்படங்கள்1[32][33]
எம்பையர்அனைத்து காலத்து சிறந்த 500 திரைப்படங்கள்20[34]
2010ஐஜிஎன்அனைத்து காலத்து சிறந்த 25 அறிவியல் புனைவுத் திரைப்படங்கள்1[35]
டோட்டல் பிலிம்அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள்இல்லை[36]
2012சைட் & சவுண்டு'2012 விமர்சகர்கள் - சிறந்த 250 திரைப்படங்கள்69[37]
சைட் & சவுண்டு'2012 இயக்குனர்கள் - சிறந்த 100 திரைப்படங்கள்67[38]
2017எம்பையர்அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள்13[39]

குறிப்புகள்

மேற்கோள்கள்

புத்தகங்கள்

வெளியிணைப்புகள்



"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிளேடு_ரன்னர்&oldid=3849783" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை