பீகாரி மொழிகள்

பிகாரி மொழிகள் (Bihari languages) என்பது இந்தியாவிலுள்ள பீகாரில் பேசப்படும் மொழிகளை குறிக்கும். இம்மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை. இம்மொழிகள் முக்கியமாக இந்திய மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் நேபாளத்தில் பேசப்படுகிறது.[1][2]

பிகாரி
பிராந்தியம்பீகார்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1bh
ISO 639-2bih
ISO 639-3

இந்த மொழிகளை பேசுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதிலும், 'மைதிலி' மட்டுமே இந்தியாவில் அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றது, இது இந்திய அரசியலமைப்பின் 92 வது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு அந்தஸ்தை பெற்றது, 2003 ஆம் ஆண்டில் (2004 இல் அங்கீகாரம் பெற்றது). [3] மைதிலி மற்றும் போஜ்பூரி இரண்டும் நேபாளத்தில் அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது.[4]பீகாரில், கல்வி மற்றும் உத்தியோகபூர்வ விஷயங்களுக்கு பயன்படுத்தப்படும் மொழி இந்தியாகும்.[5] இந்த மொழிகள் 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தி உச்சரிப்பாகவே இருந்தன. இது மாநில மற்றும் தேசிய அரசியலில் இம்மொழிகள் ஆபத்தான நிலைமைகளை உருவாக்குகிறது.[6] 1950இல் சுதந்திரம் அடைந்த பிறகு பீகார் அதிகாரப்பூர்வ மொழிச் சட்டத்தில் இந்திமொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது. 1981 ல் பீகாரில் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த இந்தி அகற்றப்பட்டது[7]. உருது இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியின் நிலையை பெற்றது.[சான்று தேவை]

மொழி பேசுபவர்கள்

பிகாரி மொழிகளை பேசுபபவர்கள் பற்றிய எண்ணிக்கை பற்றிய சரியான ஆதாரமின்மை காரணமாக கணக்கெடுப்பது மிகவும் கடினமாகும். நகர்ப்புற பிராந்தியத்தில் இந்த மொழியின் பெயரை இந்தி மொழியில் மொழி பெயர்த்துள்ளதாலும், அவர்கள் சாதாரண சூழல்களில் பயன்படுத்துவதாலும், அதைப்பற்றி தெரியாத காரணத்தினாலும். இந்த பிராந்தியத்தின் படித்த மற்றும் நகர்ப்புற மக்கள் தங்கள் மொழிக்கான பொதுவான பெயராக இந்தி என்று நம்புகின்றனர்[8].

பிகாரி குழுவில் சேர்க்கப்பட்ட சில முக்கிய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள்

மொழி[9]ஐ.எசு.ஓ 639-3எழுத்துகள்பேசுபவர்களின் எண்ணிக்கை[8]புவியியல் ரீதியான பரவல்
அங்கிகாஅன்ப்முன்னதாக அங்க லிபி; தேவநாகரி743,600[10]கிழக்கு பீகார், வடகிழக்கு சார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு மதேசி மக்கள்
பஜ்ஜிக்கா மொழிமுன்னதாக திர்குட்டா; தேவநாகரி8,738,000[சான்று தேவை]வட மத்திய பீகார் மற்றும் கிழக்கு மதேசி மக்கள்
போஜ்புரிபோமுன்னதாக கைத்தி; தேவநாகரி39,519,400[11]வடக்கு பீகார், கிழக்கு உத்தரப் பிரதேசம், வடமேற்கு சார்க்கண்ட், வடக்கு சத்தீசுகர், வடகிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் மத்திய மதேசி மக்கள்
கோர்த்தாஎன்.ஏபெங்காலி எழுத்து, தேவநாகரி8.04 மில்லியன் [12]வட கிழக்கு சார்க்கண்ட்
குடுமலிkywதேவநாகரி, சிச் (அதன் சாத்தியமான ஸ்கிரிப்டாக பரிந்துரைக்கப்படுகிறது)556,809 [13]வட கிழக்கு சார்க்கண்ட், மேற்கு வங்காளம்
மகாஹிமேக்முன்னதாக கைத்தி; தேவநாகரி14,035,600[11]வடக்கு பீகார்
மைதிலிமைதிருகுட்டா, கைத்தி மற்றும் தேவநாகரி33,890,000[11]வடக்கு மற்றும் கிழக்கு பீகார், சார்க்கண்ட்[14] மற்றும் கிழக்கு மதேசி மக்கள்
பஞ்சபர்கானியாtdbதேவநாகரி, சில நேரங்களில் பெங்காலி & கைத்தி274,000[சான்று தேவை]மேற்கு வங்காளம், சார்க்கண்ட் மற்றும் அசாம்
நாக்புரிsckதேவநாகரி5.1 மில்லியன் [15]மேற்கு மத்திய சார்க்கண்ட் வட கிழக்கு சத்தீசுகர் வடக்கு ஒடிசா
சுர்ஜாபுரிsjpதேவநாகரி2,256,228 [16]வட கிழக்கு பீகார்

பிகார் மொழியில் ஒருசில மொழிகளில் மைதிலி மொழி கலந்திருப்பதாகவும், மேலும் பிற பிகாரி மொழிகளுடன் ஒப்பிடுகையில் அது அண்டைமாநில மொழியான பெங்காலிக்கு மிகவும் ஒற்றுமைகள் இருப்பதைக் குறிப்பிடுகிறது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்s

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பீகாரி_மொழிகள்&oldid=3792397" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை