போச்புரி

வடகிழக்கு இந்தியாவின் சில மாநிலங்களில் பேசப்படும் ஒரு மொழியாகும். எடுத்துக்காட்டாக, தெராய்(ந

போச்புரி [போச்புரி : 𑂦𑂷𑂔𑂣𑂳𑂩𑂲 𑂦𑂰𑂭𑂰 ] ஒரு வட இந்திய மொழி. இது மேற்கு பீகார், வட மேற்கு சார்கண்ட், உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி அதற்கு அண்டிய நேப்பாள நாட்டின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. இது தனி மொழியா அல்லது இந்தியின் வட்டார வழக்கா என்பது தொடர்பாக கருத்துவேறுபாடுகள் உண்டு. இந்திய அரசு இந்த மொழியை இந்தி மொழியின் வட்டார வழக்கு என்றே கருதுகிறது. இந்த மொழியில் ஒரு சில திரைப்படங்களும் உண்டு.

பேசுவோர் எண்ணிக்கை

டைம்சு ஆவ் இந்தியா நாளிதழில் வெளியான கட்டுரையில் குறித்துள்ளபடி உத்தரப் பிரதேசத்தில் ஏறத்தாழ 70 மில்லியன் மக்களும், பீகாரில் மேலும் ஒரு 80 மில்லியன் மக்களும் போச்புரி மொழியைத் தங்கள் முதல் அல்லது இரண்டாவது மொழியாகப் பேசுகின்றனர். பீகார் மற்றும் பூவாஞ்சல் பகுதிகளின் வெளியேயும் மேலும் 6 மில்லியன் மக்கள் போச்புரி மொழியைப் பேசுகின்றார்கள். இப்பகுதிகள்: நேப்பாளம், குறிப்பாக அங்கே பிர்குஞ்சுப் பகுதி, மோரீசியசு, பீச்சி (Fiji), சுரினாம், கயானா, உகாண்டா, சிங்கப்பூர், டிரினிடாட் மற்றும் டொபாகோ, செயின்ட் வின்சென்ட், கிரெனாடின், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஆகியவை ஆகும். ஆகவே உலகம் முழுவதிலும், போச்புரி மொழி பேசுவோர் ஏறத்தாழ 150 மில்லியன் ஆகும். [1]

ஆனால் இந்தியாவின் ஏற்புபெற்ற 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தி மொழியின் வட்டாரக் கிளைமொழியாக (dialect), போச்புரி மொழி பேசுவோர் தொகை 33 மில்லியன் ஆகும்.[1]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் போச்புரிப் பதிப்பு
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=போச்புரி&oldid=3793984" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை