பென் அஃப்லெக்

பெஞ்சமின் கெசா அஃப்லெக்-போல்ட் (ஆங்கில மொழி: Benjamin Géza Affleck-Boldt) (பிறப்பு: ஆகத்து 15, 1972) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் தனது நடிப்புத்திறன் மூலம் இதுவரையில் இரண்டு அகாதமி விருதுகள் மற்றும் மூன்று கோல்டன் குளோப் விருதுகளை.வென்றுள்ளார்.

பென் அஃப்லெக்
பிறப்புபெஞ்சமின் கெசா அஃப்லெக்-போல்ட்
ஆகத்து 15, 1972 (1972-08-15) (அகவை 51)
பெர்க்லி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1981–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜெனிபர் கார்னர்
(தி. 2005; ம.மு. 2018)
பிள்ளைகள்3
உறவினர்கள்கேசி அஃப்லெக் (சகோதரர்)

இவர் 1984 மற்றும் 1988 இல் ஒளிபரப்பான 'வோயேஜ் ஆஃப் தி மிமி' என்ற கல்வித் தொடரில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் மல்ராட்ஸ் (1995), சேசிங் ஆமி (1997) மற்றும் டாக்மா (1999) உள்ளிட்ட பல்வேறு கெவின் சிமித் படங்களில் தோன்றினார். அதை தொடர்ந்து 1997 இல் 'குட் வில் ஹண்டிங்' என்ற படத்துக்காக திரைக்கதை எழுதியதற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான கோல்டன் குளோப் விருது மற்றும் அகாதமி விருதையும் இவரும் மற்றும் இவரது சிறுவயது நண்பர் மற்றும் நடிகர் மேட் டாமனும் வென்றபோது சிறந்த திரைக்கதையாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார்.

இவர் 2010 களில் தி டவுன் (2010) என்ற குற்ற நாடகத்தை இயக்கி, இணைந்து எழுதியுள்ளார் மற்றும் நடித்தார் மற்றும் 2012 இல் அரசியல் திரில்லர் படமான ஆர்கோ[1] என்ற படத்தை இயக்கி நடித்தார், இரண்டுமே விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. இதற்காக இவர் சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருது மற்றும் பாஃப்டா விருதையும், சிறந்த படத்திற்கான கோல்டன் குளோப், பாஃப்டா மற்றும் அகாதமி விருதையும் வென்றார். பின்னர் இவர் உளவியல் திரில்லர் படமான கான் கேர்ள் (2014), திரில்லர் படமான தி அக்கவுண்டன்ட் (2016), அதிரடி-சாகச படமான டிரிபிள் பிரான்டியர் (2019), விளையாட்டு நாடகப்படமான தி வே பேக் (2020) மற்றும் நகைச்சுவை நாடகப்படமான தி டெண்டர் பார் (2021) ஆகியவற்றில் நடித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட மீநாயகன் படங்களில் பேட்மேனை சித்தரித்து வெளியான பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016),[2] ஜஸ்டிஸ் லீக் (2017) மற்றும் சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவர் ஆகத்து 15, 1972 இல் கலிபோர்னியாவில்[3][4] உள்ள பெர்க்லேயில் முன்னாள் நடிகரான திமோதி பையர்ஸ் அஃப்லெக் மற்றும் தாயார் கிறிஸ்டோபர் அன்னே ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது இளைய சகோதரர் நடிகர் கேசி அஃப்லெக் ஆவார்.[5] இவர் மிகவும் சிறுவயதில் இருக்கும் போது மாசச்சூசெட்ஸ்ற்கு குடிபெயர்ந்தனர்,[6] மேலும் 1984 ஆம் ஆண்டில் இவரது பெற்றோர்கள் விவாகரத்துப் பெற்றனர்.

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பென்_அஃப்லெக்&oldid=3438373" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை