மரியோ மோலினா

மரியோ ஜோஸ் மோலினா ஹென்ரிக்ஸ் ( Mario José Molina Henríquez ) (19 மார்ச் 1943 – 7 அக்டோபர் 2020), மரியோ மோலினா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு மெக்சிகோவை சேர்ந்த வேதியியலாளர் ஆவார். அண்டார்டிக் ஓசோன் துளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் குளோரோபுளோரோகார்பன் (CFC) வாயுக்களால் பூமியின் ஓசோன் படலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கண்டறிந்ததற்காக 1995 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். மெக்சிகோவில் பிறந்து வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் விஞ்ஞானி எனவும் மெக்சிகோவில் பிறந்து நோபல் விருதைப் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. [4] [5]

மரியோ மோலினா
2011இல் மரியோ
பிறப்புமரியோ ஜோஸ் மோலினா ஹென்ரிக்ஸ்
(1943-03-19)19 மார்ச்சு 1943
மெக்சிக்கோ நகரம், மெக்சிகோ
இறப்பு7 அக்டோபர் 2020(2020-10-07) (அகவை 77)
மெக்சிகோ நகரம், மெக்சிகோ
துறைவேதியியல்
பணியிடங்கள்
விருதுகள்
துணைவர்
  • லுசியா டான்
    (தி. 1973; ம.மு. 2005)
  • கௌடாலுப் அல்வாரெசு
    (தி. 2006)
இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம் (in எசுப்பானிய மொழி)
வெளி ஒலியூடகங்கள்
"Whatever Happened to the Ozone Hole?: An environmental success story", Distillations Podcast 230, Science History Institute, 17 April 2018
"The Sky Is Falling", History This Week

இவரது வாழ்க்கையில், கலிபோர்னியா பல்கலைக்கழகம், இர்வின், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம், சான் டியாகோ,கலிபோர்னியா பல்கலைக்கழகம் போன்றவற்றில் வளிமண்டல அறிவியல் மையம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பதவிகளை வகித்தார். மெக்சிகோ நகரத்தில் உள்ள ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியோ மோலினா மையத்தின் இயக்குநராகவும் இருந்தார். மோலினா மெக்சிகோவின் அதிபர் என்ரிக் பெனா நீட்டோவின் காலநிலை கொள்கை ஆலோசகராக இருந்தார். [6]

இறப்பு

மோலினா 7 அக்டோபர் 2020 அன்று மாரடைப்பு காரணமாக 77 வயதில் இறந்தார். [7] [8][9] [10]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மரியோ_மோலினா&oldid=3680405" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை