மையநோக்கு விசை

மையநோக்கு விசை (centripetal force) என்பது ஒரு பொருளை வளைந்த பாதையில் பயணிக்க வைக்கும் விசையாகும். அதன் திசை எப்பொழுதும் பொருளின் திசைவேகத்திற்கு செங்குத்தானதாகவும் அக்கணத்தில் வளைவுப் பாதையின் மையத்தை நோக்கிச் செல்வதாகவும் இருக்கும். மையநோக்கு விசையே வட்ட இயக்கத்திற்கு காரணமாகும்.

உருளைக் கூட்டை வாகனங்கள் வட்டப்பாதையில் சுற்றுகின்றன.
சீரான வட்ட இயக்கத்தை உணரும் ஒர் உடலிற்கு அதன் வட்டப்பாதையை தக்கவைப்பதற்கு படத்தில் காட்டப்பட்ட அச்சின் திசையில் ஓர் மையநோக்கு விசை தேவைப்படுகிறது.

எளிமையாக கூறுவதாயின் மையநோக்கு விசையென்பது சீரான வேகத்தில் இயங்கும் பொருளை வட்டப்பாதையில் வைத்திருக்கும் அதன் ஆரத்தின் வழியே வட்டத்தின் மையத்தினை நோக்கியிருக்கும் விசை எனலாம்.

சமன்பாடு

வளைவின் ஆரை r ஆக இருக்கும் பாதையில் v எனும் தொடுகோட்டு வேகத்துடன் இயங்கும் m நிறையுள்ள பொருளின் மீது செயல்படும் மையநோக்கு விசை:[1]

இங்கு மையநோக்கு முடுக்கம்.

இவ்விசை வட்டத்தின் மையம் பற்றிய கோணவேகம் ω சார்பாக இவ்வாறு எழுதப்படலாம்:

ஒர் சுழற்சிக்கான கால அளவு Tயைக் கொண்டு சமன்பாட்டைப் பின்வருமாறு எழுதலாம்:

[2]

மையநோக்கு விசைக்கான மூலங்கள்

ஒரு கோளைச் சுற்றி வரும் செயற்கைக்கோளிற்கு மையநோக்குவிசை அக்கோளின் ஈர்ப்பு விசையால் வழங்கப்படுகிறது.

கயிற்றில் கட்டி கிடைத்தளத்தில் சுழற்றப்படும் பொருளுக்கான மையநோக்கு விசை அக்கயிற்றின் இழுவையால் வழங்கப்படுகிறது.

மேற்கோள்களும் குறிப்புகளும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மையநோக்கு_விசை&oldid=3398743" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை