மோசுல்

மோசுல் (Mosul, அரபு மொழி: الموصلal-Mawṣil, அல்-மௌசில்; குர்தியம்: Mûsil/Nînewe; துருக்கியம்: Musul) வடக்கு ஈராக்கில் உள்ளதொரு நகரமாகும். இது நினிவே மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தலைநகர் பக்தாத்திலிருந்து வடமேற்கில் 400 km (250 mi) தொலைவில் அமைந்துள்ளது. பழமையான நகரப்பகுதி டைகிரிசு ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது; ஆற்றின் கிழக்குக் கரையில் தொன்மையான அசிரிய நகரான நினிவே அமைந்திருந்தது. தற்போதைய மாநகரப் பகுதி இரு கரைகளிலும் உள்ள நகரப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இரு கரைகளையும் ஐந்து பாலங்கள் இணைக்கின்றன. பெரும்பாலான மக்கள் அராபியர்களாவர் (அசிரியர், ஈராக்கி துருக்கியர் மற்றும் குர்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்). ஈராக்கில் பக்தாத்தை அடுத்த மிகப் பெரும் நகரம் இதுவாகும்.[1]

மோசுல்

الموصل
மோசுலில் உள்ள டைக்ரசு ஆறும் பாலமும்
மோசுலில் உள்ள டைக்ரசு ஆறும் பாலமும்
நாடு Iraq
ஆளுகைநினிவே மாகாணம்
மாவட்டம்மோசுல்
மக்கள்தொகை (2008)
 • நகர்ப்புறம்1,800,000
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் +3

புகழ்பெற்ற மசுலின் துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு இந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.[2] வரலாற்றுப்படி இப்பகுதியில் மற்றொரு முக்கிய தயாரிப்புப் பொருளாக மோசுல் பளிங்கு விளங்குகிறது.

1987 இல் இந்நகரத்தின் மக்கள்தொகை 664,221 ஆகும்; 2002இல் மக்கள்தொகை 1,740,000 ஆகவும் 2008இல் 1,800,000 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[3]

சூன் 2014 இல் வட ஈராக்கு தாக்குதலின்போது இந்த நகரத்தை இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு கைப்பற்றியது.

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மோசுல்&oldid=3602505" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை