யங்கின் மட்டு

யங்கின் மட்டு (Young's modulus), இழுவைத் தகைப்பு அல்லது மீள்தன்மை மட்டு, என்பது மீள்தன்மையுடைய பொருட்களின் கெட்டித் தன்மையை அளக்கப் பயன்படும் ஒரு கணியமாகும். இது ஒரு அச்சின் வழியேயான தகைப்புக்கும் அவ்வச்சின் வழியேயான விகாரத்துக்கும் இடையிலான விகிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வரையறை ஊக்கின் விதிக்கமைவான வீச்சில் மாத்திரமே வலிதாகும்.[1] திண்மப் பொறியியலில், தகைப்பு - விகார வளையியின் யாதேனுமொரு புள்ளியிலுள்ள படித்திறன், தான்சன் மட்டு எனப்படும். தகைப்பு - விகார வளையியின் விகிதசம எல்லையினுள் உள்ள தான்சன் மட்டு, யங்கின் மட்டு எனப்படும்.

இறப்பரின் யங்கின் மட்டு மிகவும் குறைவென்பதால் இலகுவில் இழுபடக்கூடியதாக உள்ளது.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்தானிய விஞ்ஞானியான தோமசு யங்கின் நினைவாக இது பெயரிடப்பட்டது. எவ்வாறாயினும், இவ் எண்ணக்கரு 1727லேயே லியனாட் ஒயிலர் என்பவரால் விருத்தி செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான ஆரம்பப் பரிசோதனைகள் இத்தாலிய விஞ்ஞானியான ஜோர்தானோ ரிக்கார்டியினால் 1782ல் மேற்கொள்ளப்பட்டன.[2]

அலகுகள்

யங்கின் மட்டு தகைவுக்கும் (அழுத்தத்தின் அலகுகள்) திரிபுக்கும் (அலகுகள் அற்றது) உள்ள விகிதம் ஆகும். இதனால் யங்கின் குணகம் அழுத்தத்தின் அலகுகளைக் கொண்டுள்ளது. பன்னாட்டு அலகுகளில் இது பாசுக்கல் (Pa அல்லது நி/மீ2 அல்லது மீ−1·கிகி.செக்−2).

கணித்தல்

ஒரு பொருளின் குறித்த அச்சு வழியேயான தகைப்பை (stress), விகாரத்தால் பிரிப்பதன் மூலம் யங்கின் மட்டைக் கணிக்கலாம். தகைப்பு என்பது குறித்த குறுக்கு வெட்டுப் பரப்பில் தொழிற்படும் இழுவை விசையினால் தரப்படும். விகாரம் என்பது அவ் இழு விசைக்கு உட்படும் போது பொருளின் அச்சு வழியேயான நீளத்தில் ஏற்படும் நீட்சிக்கும், ஆரம்ப நீளத்துக்குமான விகிதத்தால் தரப்படும்.

யங்கின் மட்டைக் கணிக்கும் முறை

இதில்,

E - யங்கின் மட்டு
F -இழுவையின் கீழுள்ள பொருளில் தொழிற்படும் விசை;
A0 -விசை தொழிற்படும் குறுக்கு வெட்டுப் பரப்பு;
ΔL -பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றம்;
L0- பொருளின் ஆரம்ப நீளம்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யங்கின்_மட்டு&oldid=2746474" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை