லும்பினி

நேபாளத்தின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள புத்த மதப் புனித யாத்திரைத் தலம்

லும்பினி,(நேபாளி மொழி & சமஸ்கிருதம் लुम्बिनी ,பொருள்:"விரும்பத்தகுந்த") நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத புனிதயாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, சித்தார்த்தன் எனும் கௌதம புத்தரைப் பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
லும்பினி, புத்தரின் பிறப்பிடம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுiii, vi
உசாத்துணை666
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1997 (21ஆவது தொடர்)
லும்பினி
लुम्बिनी
நகரம்
நாடுநேபாளம்
மண்டலம்லும்பினி
மாவட்டம்ரூபந்தேஹி
ஏற்றம்150 m (490 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிநேபாளி மொழி
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+05:45)
அஞ்சல் சுட்டு எண்32914
தொலைபேசி குறியீடு71
மாயாதேவி கோயில், லும்பினி, நேபாளம்
லும்பினி, கௌதம புத்தர் பிறந்த இடம், யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட, உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று

புத்த மதத்தினரைப் பெருமளவில் கவரும் நான்கு புனித யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. ஏனைய மூன்றும் குசிநகர், புத்த காயா, வைசாலி, சாரநாத் என்பனவாகும். லும்பினி இமய மலை அடிவாரத்தில் உள்ளது. இது கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

லும்பினியில், மாயாதேவி கோயில் உட்படப் பல கோயில்களும் புஷ்கர்னி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இவ்வேரியிலேயே புத்தரைப் பெற்றெடுக்குமுன் மாயாதேவி மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது. புத்தரின் முதற் குளியலும்கூட இந்த ஏரியிலேயே இடம்பெற்றது. இங்கே கபிலவஸ்து அரண்மனை இடிபாடுகளையும் காணமுடியும்.

லும்பினியை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[1]

பார்க்க வேண்டிய பிற இடங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lumbini
என்பதில் ஊடகங்கள் உள்ளன.





"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லும்பினி&oldid=3531210" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை