வின்சென்ட் வான் கோ

வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு: [ˈvɪnsɛnt ˈʋɪləm vɑn ˈɣɔx] (); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது.

வின்சென்ட் வான் கோ
Vincent Van Gogh
வின்சென்ட் வான் கோ தன்னைத்தானே வரைந்தது (1887)
தேசியம்டச்சு
அறியப்படுவதுஓவியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்விண்மீன்கள் நிறைந்த இரவு
அரசியல் இயக்கம்பின்-உணர்வுப்பதிவுவாதம்

இவர் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். வான் கோக் குழந்தைப்பருவத்திலிருந்து தீவிரமான அதே சமயம் அமைதியான சிந்தனையாளராக வளர்ந்தார். இவர் இளைஞராக இருந்தபோது முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார், வேலை நிமித்தமாகப் பயணங்களை மேற்கொண்டார், ஆனால் அவர் லண்டனுக்கு மாற்றப்பட்ட பின்னர் மனச்சோர்வடைந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், அவர் மதப்பணிக்கு வந்து, தெற்கு பெல்ஜியத்தில் ஒரு புராட்டஸ்டன்ட் மிஷனரியாக நேரத்தைச் செலவிட்டார். அங்கு மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களைப் பார்த்து இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். 1881 ஆம் ஆண்டில் ஓவியம் வரைவதற்கு முன், அவர் உடல் நலமின்றியும் தனிமையிலும் இருந்தார், பின் அவரது பெற்றோருடைய வீட்டிற்குச் சென்றார். அவரது தம்பி தியோ அவருக்கு நிதி உதவி செய்துவந்தார். அவரது முந்தைய படைப்புகள், பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் காட்டும் சித்திரங்கள் ஆகியனவாக இருந்தன. 1886 இல், அவர் பாரிஸ் நகருக்குச் சென்றார், அங்கு அவர் எமிலி பெர்னார்ட் மற்றும் பால் கவுஜின் உட்பட அங்கத்துவ கலை இயக்க உறுப்பினர்களைச் சந்தித்தார், இவர்கள் உணர்வுப்பதிவுவாத கலை இயக்கத்துக்கு எதிராகப் பேசினர்.

வான் கோக் மனநோய் மற்றும் மருட்சிகளால் அவதிப்பட்டார், மேலும் அவரது மன உறுதியற்ற தன்மையக் குறித்து அவர் கவலையடைந்தபோதிலும், அவர் அவரது உடல் ஆரோக்கியத்தைப் புறக்கணித்தார், ஒழுங்காகச் சாப்பிடாமல், பெரிதும் குடித்தார். வறுமையால் அவருக்குக் கோபம் அதிகரித்தது. ஒரு சமயம் கோபத்தில் அவர் தனது இடது காது பகுதியைத் துண்டித்துக்கொண்டார். அவர் ஒரு காலகட்டத்தில் செயிண்ட்-ரெமியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்றார். அவர் மருத்துவமனையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பாரிஸ் அருகிலுள்ள ஆவெர்ஸ்-சூர்-ஓஸ்ஸில் உள்ள ஆபுர்கெ ரவொக்ஸிற்கு குடிபெயர்ந்த பிறகு, ஹோமியோபதி மருத்துவரான பால் காகேட்டையின் கவனிப்பில் இருந்தார். அவரது மன அழுத்தம் தொடர்ந்து, சூலை 27, 1890 இல், வான் கோக் மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். காயமுற்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் இறந்தார்.

இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.

இளமை

வின்செண்ட் வில்லியம் வான்கோ நெதர்லாந்தில் உள்ள குரூட் சுண்டெர்ட் எனுமிடத்தில் 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.[1][2] வான்கோ பிறப்பதற்கு முன்பே சரியாக ஓராண்டுக்கு முன்னர் அதே தேதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனார் எனவே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது. அந்த மரணத்திற்கு பின் பிறந்ததால் அண்ணனுக்கு வைத்த பெயரையே அவருக்கும் வைத்தனர்.[note 1] இது தெரிந்தபோது வான்கோவுக்கு ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை ஏற்படத் தொடங்கியது. அண்ணன் பெயரை தாங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் அதற்கு காரணமாயிருந்திருக்கலாம். வான் கோவின் தந்தை தியோடரஸ் வான்கோ ஒரு மதபோதகராக இருந்தார் ஓவியமும் மதமும் இவரது குடும்பத்தில் இரு முக்கியப்பணியாக இருந்தது.[3][4] வான்கோவின் சகோதரர் தியோ வான்கோ ஒரு புகழ்பெற்ற ஓவியராவார். இவர் 1857, மே 1 ஆம் நாள் பிறந்தார். இவரது மற்றொரு சகோததரர் கோர். வான்கோவுக்கு சகோதரர்களத் தவிர எலிசபெத், அன்னா, வில்லிமினா என்ற மூன்று சகோதரிகளும் இருந்தனர்.[5] அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான் கோவை முன்கோபியாகவும், முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது.

கல்வி

வின்சென்ட் அண். 1866, அண். வயது 13

குழந்தைப்பருவம் முதலே மிக இறுக்கமான மனநிலையில் இருந்த வான்கோ 1860 இல் சுண்டெர்ட் கிராமத்தில் இருந்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு 200 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே பாடம் போதித்தார் 1861 முதல் 1864 வரை வான்கோவும் அவரது சகோதரி அன்னாவும் வீட்டிலேயே பாடம் பயின்றனர். பின்னன் 20 கி. மீ தொலைவில் உள்ள செவென்பெர்கெனில் 'சான் புரொவிலி உண்டு உறைவிடப்பள்ளி'யில் சேர்க்கப்பட்டார். தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்தது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. 1866 செப்டம்பர் 15 இல் தில்பர்கில் உள்ள இரண்டாம் வில்லியம் கல்லூரியில் சேர்ந்தார்.ஆனால் அவருக்கு படிப்பின் மீது நாட்டம் இல்லை.[6] இருந்தாலும் அவரை அரித்து வந்த தாழ்வு மனப்பான்மை மனச்சோர்வாக மாறத்தொடங்கியது. எனவே வெளியூரில் ஓவியக்கூடம் நடத்தி வந்த உறவினர் வீட்டிற்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு சென்றபோதுதான் அவருக்கு ஓவியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அங்கு பாரிசின் புகழ்பெற்ற ஓவியரான கான்டாண்டைன் சி.ஹுயிமன் என்பவர் ஆசிரியராக இருந்தார். சிறுவயது முதலே ஓவியத்தில் ஈடுபாடுமிக்கவராகத் திகழ்ந்த வான்கோவுக்கு அவர் முறைப்படியான ஓவியக்கலையை போதித்தார்.[7]

காதல்

வான்கோவின் ஓவியம் 87 ஹாக்ஃபோட் வீதி

பெற்றோரின் அன்பும், உடன் பிறந்தவர்களின் அன்பும் இல்லாமல் வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாத வான்கோவுக்கு அவரது மாமா செண்ட் என்பவர் உதவியாக இருந்தார். அவர் வான்கோவுக்காக 'தி ஹேக்'கில் ஒரு ஓவியக் கூடத்தில் பணியில் சேர உதவினான் சில நாள் பயிற்சிக்குப் பிறகு அவ்வோவியக் கூடம் லண்டனுக்கு மாற்றப்பட்ட காரணத்தால் வான்கோவும் லண்டன் செல்லவேண்டியதாயிற்று.[8] இப்பணியில் அவர் வெற்றிகரமாக ஈடுபடவும் பணம் சம்பாதிக்கவும் செய்தார். இதுவே அவர் மகிழ்வாக இருந்த காலமாகும். அன்புக்காக ஏங்கியதாலோ என்னவோ தாம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் பெண் யூகினி லோயர் என்பவரை நேசிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்றுக்கொள்ள மறுக்கவே அவரது சோகமும், மனச்சோர்வும் அதிகமானது. இது அவரது நடவடிக்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது.[9]

பணிகள்

இலண்டன் திரும்பிய வான்கோ ஊதியமில்லாமல் ஒரு சிறு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் காணும் காட்சிகளை ஓவியமாக வடிக்கத் தொடங்கினார். பள்ளியின் உரிமையாளர் மிடிலெசெக்சுக்குக் குடிபெயர்ந்ததால் வான்கோவும் உடன் சென்றார்.[10] வாழ்க்கையில் என்ன செய்வது? என்று தெரியாமல் பலமுறை குழம்பினார் வான் கோ.[6] தந்தையைபோல எளிமையாக மதபோதகர் ஆகலாமா என்றுகூட அவர் யோசித்தார். சுமார் ஓராண்டு வாஸ்மெஸ் என்ற நிலக்கரி சுரங்க ஊழியர்களின் கிராமத்தில் அவர் மதபோதனையில் ஈடுபடார்.

The house where Van Gogh stayed in Cuesmes in 1880; while living here he decided to become an artist

அங்கு இவர் வரைந்த ‘தி பொட்டேட்டோ ஈட்டர்ஸ்’ ஓவியம் உலகப்புகழ் பெற்றது. கிறித்துமசு விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும்போதும் விவிலியத்தை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்தார்[11]. மதபோதகார இருந்தபோது வான்கோ தன்னைத்தானே வருத்திக்கொண்டு இறைச்சியை உண்ணாது மரக்கறி உணவுகளையே உண்டு கடும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.[12][13][note 2] அவரது போதனை முறைகளை ஏற்காத தேவாலாயம் அவரது பதவியை பறித்தது.[14] எனவே வான்கோ பிரெஸ்ஸல்சு சென்றார்.

ஓவியங்கள்

வான்கோ விலைமாதர்களில் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இல்லற வாழ்க்கை அவருக்கு கொடுமையானதாக அமைந்தது. பல ஆண்டுகள் பொறுத்த அவர் கடைசியில் மணமுறிவு செய்துகொண்டார். மனதை ஒருநிலைப்படுத்தி ஓவியத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்தபோது அவருக்கு வயது 33. அப்போதும் அவர் வறுமையிலேயே காலம் தள்ள வேண்டியிருந்தது. வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. தன் சகோதரன் தியோ அவ்வபோது கொடுத்த பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டிய வான் கோ ஓவியங்கள் வரையத்தொடங்கினார். தன் கவனம் முழுவதையும் ஓவியங்கள் மீது பதித்தார். ஆதிகால குகை ஓவியங்கள், கேட்விக் ஓவியங்கள். மறுமலர்ச்சி ஓவியங்கள், உணர்ச்சிமிகு ஓவியங்கள் இயற்கை ஓவியங்களின் என தனது ஓவியத்தில் ஒரு புதிய பரினாமத்தை ஏற்படுத்தினார் வான் கோ. 'உணர்வு வெளிப்பாடு' என்ற புதியபாணியை அவர் தன் ஓவியங்களில் அறிமுகம் செய்தார். அவருடைய ஓவியங்கள் பளிச்சென்று வண்ணமயமாக இருக்கும். அவர் வரைந்த ஓவியங்களில் உலகப்புகழ் பெற்றது பன்னிரண்டு சூரியகாந்தி பூக்கள் நிறைந்த பூச்சாடி ஓவியம் ஆகும்.

30 வயதிற்கு மேல் ஓவியம் வரைய ஆரம்பித்தாலும் வான் கோவின் கடைசி ஆறு ஆண்டுகளில் சுமார் 700 தூரிகை ஓவியங்களையும், 800 எண்ணெய் ஓவியங்களையும் வரைந்தார். ஆனால் அவற்றில் ஒரே ஒரு ஓவியத்தை மட்டுமே வான்கோவாவால் விற்க முடிந்தது. அதுவும் வீட்டு வாடகை கடனுக்காக அந்த ஓவியத்தை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை மனச்சோர்வு முற்றியபோது வான்கோ கத்தியை எடுத்து தனது ஒரு காதை அறுத்துக்கொண்டார். பின்னாளில் காதில் கட்டுபோட்ட மாதிரி தமது உருவத்தைத் தானே வரைந்தார் வான் கோ.

இறப்பு

அவரது மனச்சோர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர் மனநிலை மருத்துவமணைக்கு போவதும் வருவதுமாக இருந்தார். வாழ்க்கை முழுவதும் ஒரு வித மனநோயாளியாக சோகத்திலேயே வாழ்ந்த அவர் தனது 37 ஆம் வயதில் 1890 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் துப்பாக்கியால் தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டார்.[15] ஆனால் அவர் சுட்டுக்கொண்டதாகக் கூறப்படும் துப்பாக்கி இதுவரை கண்டறியப்படவில்லை.[16] இரண்டு நாட்கள் கழித்து 1890 ஆம் ஆண்டு சூலை 29 ஆம் நாள் அவர் உயிர் பிரிந்தது. அவரது சகோதரர் தியோவிடம் பேசிய அவரது கடைசி வார்த்தை 'துயரம் என்றும் தொடரும்' ‌என்பதாகும்.[15][17] வின்சென்ட் வான் கோ குறித்து பல்லாண்டு காலம் ஆய்வு செய்து, அவரது வாழ்க்கை சரிதத்தை எழுதியவர்களான ஸ்டீவன் நைபே, மற்றும் கிரெகோரி ஒயிட் ஸ்மித் ஆகிய இருவர் வான் கோ தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் இரண்டு உள்ளூர் சிறுவர்கள் அவரை தவறுதலாகச் சுட்டுவிட்டனர் என்றும் , அவர்களைப் பாதுகாக்க காவல் துறையினரிடன் வான் கோ பொய் சொன்னார் என்று கூறுகிறார்கள்.[18] வாழ்ந்தபோது அவரது படைப்புகளை மதிக்காத உலகம் அவர் இறந்த பிறகு அவற்றை விலை மதிக்க முடியாதவை என்று வியந்தது. 1990-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற 'கிரிட்டிக்ஸ்' ஓவிய ஏலத்தில் வான் கோவின் 'டாக்டர் கேச்' (Portrait of Dr. Gache) என்ற ஓவியம் $0 கோடி அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.[19]

மேற்கோள்கள்

அடிக்குறிப்புகள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வின்சென்ட்_வான்_கோ&oldid=3634218" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை