வைகறை தொழுகை

இஸ்லாத்தில் அன்றைய முதல் கட்டாய பிரார்த்தனை

வைகறை தொழுகை (அரபு மொழி: صلاة الفجرṣalāt al-faǧr) ( ஃபஜ்ர் /சுபஹ் தொழுகையென பரவலாக அறியப்படுகிறது) என்பது முஸ்லிம்களது நாளாந்த ஐவேளை தொழுகைகளில் ஒன்றாகும்.[1] இது இரண்டு ரக்அத்துக்களைக் கொண்டது. அரபு மொழியில் பஜ்ர் என்பது விடியலைக் குறிக்கிறது. ஐவேளை தொழுயானது இஸ்லாமிய மார்க்க கடமைகள் ஐந்தில் இரண்டாவதாகும்.

வயது வந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது. தொழுகையின் முக்கிய நோக்கம் இறைவனை நினைவு கூறுவதாகும்.

புனித ரமழான் மாதத்தில் முஸ்லிங்கள் பஜ்ர் அதானைத் தொடர்ந்து நோன்பினை கடைபிடிப்பார்கள். குர்ஆனில் சூரா 24 (அன்-நூர்) சூராவில் ஃபஜ்ர் தொழுகை குறிப்பிடப்பட்டுள்ளது.[2] அல் பஜ்ர் என்ற பெயரில் குர்ஆன் சூரா ஒன்றும் காணப்படுகிறது.

தொழுகையில் வைகறை தொழுகை அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், ழுஹர் என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும், அஸர் என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும், மஃரிப் என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும், இஷா என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும். ஐவேளை தொழுகைக்கான அழைப்பான அதான்(தொழுகைக்கான அழைப்பு) பள்ளிவசலால் நியமக்கப்பட்டிருக்கும் முஅத்தின் என்பவரால் சொல்லப்படும்.

வைகறை தொழுகை பர்ளான இரண்டு ரக்அத்களை கொண்டது. சுபஹ் தொழுகைக்கான அதான் ஏனைய நான்கு நேரங்களிலும் சொல்லப்படும் அதானில் தூக்கத்தை விட தொழுகை மேலானது என்ற சொற்தொடர் சொல்லப்படுகிறது.[3] மேலும், வழமையாக சுபஹ் தொழுகையில் குனூத் ஓதப்படும்.

நாடுமொழிமுதன்மை
அரபு உலகஅரபுصلاة الفجر(ஸலாத் அல் ஃபஜ்ர்)
பாரசீகம்பாரசீக , தாரி , தாஜிக்نماز صبح
(நமாஸ் சுபஹ்)
ஹிந்துஸ்தான்உருதுنماز فجر

(ஃபஜ்ர் நமாஸ்)
துருக்கிதுருக்கியசபஹ் நமாசி
அஜர்பைஜான்அஜெரிசுப்ஹ் நமாசி
அல்பேனியா , கொசோவோஅல்பேனியNamazi i sabahut, Namaz i mëngjesit
பால்கன்செர்பிய-குரோஷியன் , போஸ்னியன்சுபன்-நமாஸ்
வங்காளம்பெங்காலிফজর (ஃபொஜ்ர்)
போலந்துபோலிஷ்Fadżr
கிரேட்டர் சோமாலியாசோமாலிஸலாதா ஃபஜ்ர்,
மலாய் தீவுஇந்தோனேஷியன் , மலாய் , ஜாவானீஸ் , சுடனீஸ்சலாத் சுப்ஹ்,
உஸ்பெகிஸ்தான்உஸ்பெக்Bomdod namozi
ஈராக் குர்திஸ்தான்சொரானிنوێژی بەیانی

வைகறை தொழுகை பற்றிய ஹதீஸ்கள்

நபி முகம்மது(ஸல்) அவர்கள் அறிவித்தார். ‘சூரியன் உதிப்பதற்கு முன் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் ஸுப்ஹை அடைந்து கொள்கிறார். சூரியன் மறைவதற்கு முன் அஸருடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் அஸர் தொழுகையை அடைந்து கொள்கிறார்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[4]

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இரண்டு தொழுகைகளை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ நபி(ஸல்) அவர்கள் விட்டதேயில்லை. அவை ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், அஸர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.[5]

நபி முகமது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். 'அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்' என்று அவர்கள் விடையளிப்பார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[6]

இவற்றையும் பார்க்கவும்

  • வுழூ
  • ழுஹர் தொழுகை
  • அஸர் தொழுகை
  • மஃரிப் தொழுகை
  • இஷா தொழுகை
  • திக்ர்
  • தஸ்பீஹ் தொழுகை

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வைகறை_தொழுகை&oldid=3588232" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை