2021 சுயஸ் கால்வாய் வழித்தடை

2021 சுயஸ் கால்வாய் வழித்தடை என்பது (2021 Suez Canal obstruction) மார்ச் 23, 2021 அன்று, எவர் கிவ்வன், எனும் கோல்டன் கிளாஸ் கொள்கலன் கப்பல், எகிப்தின் சுயஸ் கால்வாயில் தரைத்தட்டியதால் ஏற்பட்ட போக்குவரத்து தடையினைக் குறிப்பதாகும்.[3] சுமார் 400-மீட்டர்-நீளம் (1,300 அடி) உள்ள இந்தக் கப்பல் மணிக்கு 74 கிலோ மீட்டர் வேகமுடைய புழுதிப் புயலில் சிக்கியது. இதனால் கப்பலின் போக்கு திசையினை மாற்றியது. கப்பல் கால்வாயின் தரைப்பகுதி ஒன்றில் சிக்கிக்கொண்டது.[4] ஆனால் அதிகாரிகள் இதற்கு புழுதிப்புயல் மட்டும் காரணமல்ல, தொழில்நுட்ப மனித தவறுகளும் பொறுப்பு என்கின்றனர். கால்வாயின் ஒரு கரைப்பகுதியில் கப்பல் தரைதட்டியதால், கால்வாயின் வழியாகக் கப்பல்கள் கடந்து செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டது[5]

2021 சுயஸ் கால்வாய் வழித்தடை
செயற்கைகோள் புகைப்படம், எவர் கிவ்வன் கப்பல் சுயஸ் கால்வாயினை தடைசெய்த காட்சி, மார்ச் 24 2021
Map
Map
நாள்23–29 மார்ச்சு 2021 (2021-03-23 – 2021-03-29)
நேரம்07:40 EGY (05:40 ஒ. அ. நே.)
காலம்6 நாள்-கள் and 7 மணிநேரம்-கள்
அமைவிடம்சுயஸ் கால்வாய், சுயஸ், எகிப்து
புவியியல் ஆள்கூற்று30°01′03″N 32°34′48″E / 30.0175°N 32.5800°E / 30.0175; 32.5800[1]
வகைதரைதட்டிய கப்பல்
காரணம்புழுதிப்புயல், அதிதீவிர காற்று
உயிர்ச்சேதங்கள்
1 மரணம்(அடையாளம் தெரியாத)[2]

மார்ச் 27, கப்பல் தரை தட்டிய நான்கு நாட்களுக்குப் பின்னர் சுமார் 300 கப்பல்களின் போக்குவரத்து தரைப்பட்டு சுயஸ் கால்வாய் வழியாகச் செல்ல வரிசையில் காத்து நிற்கின்றன. அதே நேரத்தில் நிலைமை சாதாரண நிலைக்குக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மார்ச் 27, 2021 வரையிலும் எவர் கிவ்வன் கப்பல் கால்வாயில் தான் சிக்கியுள்ளது[5][6] இரண்டு தடங்களைக் கொண்ட கால்வாயின் பகுதிக்கு தெற்கே இந்த தடங்கல் உள்ளதால், மற்ற கப்பல்கள் இந்தக் கப்பலைக் கடந்து செல்ல இயலவில்லை.[7]

பின்னணி

சுயஸில் சுயஸ் கால்வாயின் வான்வழிக் காட்சி

உலகின் மிக முக்கியமான வர்த்தக பாதைகளில் ஒன்றான சுயஸ் கால்வாய் வணிகப் போக்குவரத்திற்காக 1869 இல் திறந்துவிடப்பட்டது.[8] போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் கடல் போக்குவரத்து நிபுணர் காமில் எக்லோஃப், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஆசியாவிலிருந்து செல்லும் அனைத்து கப்பல்களும் சுயஸ் கால்வாய் வழியாகவே செல்லவேண்டும். இத்தகைய "முற்றிலும் முக்கியமான" வழியாக இது உள்ளது என்று குறிப்பிட்டார்.[9]:{{{3}}} ஒரு நாளைக்கு சுமார் ஐம்பது கப்பல்கள் இந்த கால்வாய் வழியாகப் பயணிக்கின்றன. உலகளாவிய மொத்த வர்த்தகத்தில் சுமார் 10 சதவீதம் இந்த 193-கிலோமீட்டர் (104 nmi) நீளக் கால்வாய் வழியே பயணிக்கின்றது.[10] எவ்வாறாயினும், இதன் நீளத்தின் பெரும்பகுதியில், இரு திசை போக்குவரத்திற்கு உகந்த அகலமாக இல்லை. கப்பல்களின் பயணிகள் நீர் வழிப்பாதையின் இந்த பகுதிகளை மாற்றும் திருப்பங்களை எடுக்க வேண்டும். விரிவாக்கத் திட்டம் மேற்கொள்ளப்பட்டாலும். அவை ஓரளவு மட்டுமே பயன்படுகிறது. கால்வாயின் குறிப்பிடத்தக்கப் பகுதிகள் ஒருவழிப் பாதையாகவே இருக்கின்றன.[11]

இந்த சம்பவத்திற்கு முந்தைய ஆண்டுகளில், சுயஸ் கால்வாயில் ஏராளமான கப்பல்கள் இதுபோன்று தரைத்தட்டி சிக்கல்களை சந்தித்துள்ளன. 25 பிப்ரவரி 2016 அன்று, உக்ரைனிலிருந்து குயிங்தவோவுக்குச் சென்ற பெரும் சுமை கப்பலான நியூ கேதரினா கால்வாயில் தரைதட்டியது. பன்னிரண்டு நாட்களுக்குப் அதன் பயணப்பாதைக்கு மீட்கப்பட்டது. ஆனால் இக்காலகட்டத்தில் கால்வாயில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.[12] ஏப்ரல் 28, 2016 அன்று, எம். எஸ். சி. பேபியோலா என்ற கொள்கலன் கப்பல் இயந்திர சிக்கலை எதிர்கொண்ட பின்னர் கிரேட் பிட்டர் ஏரியில் தரைதட்டி நின்றது. கால்வாய் அதிகாரிகள் வடக்கு செல்லும் அனைத்து போக்குவரத்தினையும் தற்காலிகமாக நிறுத்திவைத்தனர். மேலும் கால்வாயில் தெற்கே பயணித்த அனைத்து போக்குவரத்தினையும் நிறுத்த கட்டாயப்படுத்தினர். எம்.எஸ்.சி பேபியோலாவின் பயணம் ஏப்ரல் 30 அன்று மாற்றியமைக்கப்பட்டு சுயஸ் கால்வாய் வழியாகத் தொடர்ந்தது.[13][14] 17 ஜூலை 2018 அன்று, சரக்குப் பெட்டக கப்பல் ஈனியாஸ் கால்வாயில் தாறுமாறாக ஓடி மூன்று பெரும் சரக்கு கப்பல்களான சகிசயா கலோன், பனாமக்ஸ் அலெக்சாண்டர் மற்றும் ஒசியோஸ் டேவிட் மீது மோதியது.[15][16]

அயர்லாந்தின் தேசிய கடல்சார் கல்லூரி விரிவுரையாளரும் முன்னாள் மாலுமியான பில் கவனாகின் கருத்துப்படி, சுயஸ் கால்வாய் வழியாகப் பயணம் செய்வது "மிகவும் சிக்கலான மற்றும் அதிக ஆபத்து நிறைந்த நடவடிக்கையாகும்." இங்கு கப்பல் கொள்கலன்களுக்கு எதிராகக் காற்று வீசுவது "ஒரு படகோட்டம் போல் செயல்படும்". இந்த காற்றானது எவர் கிவ்வன் போன்ற கனமான கப்பல் இயக்கத்தில் உந்துதலை ஏற்படுத்தும் எகிப்தின் சுயஸ் கால்வாய் ஆணையத்தின் சார்பில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலுவல் சார்ந்த கடல் மாலுமிகள் எகிப்தின் சுயஸ் கால்வாயைக் கடந்து செல்லும் கப்பலை வழிநடத்துவர். தற்பொழுது விபத்துக்குள்ளான கப்பலில் விபத்து நடந்த நேரத்தில் இரண்டு எகிப்தின் சுயஸ் கால்வாய் ஆணைய முன்னோடிகள் இருந்தனர்.

எவர் கிவவன் ஒரு கோலடன் வகை கொள்கலன் கப்பல் ஆகும். உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வகையில் 11 கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மற்ற கோல்டன் வகை கப்பல்களுடன் ஒப்பிடும்போது எவ கிவ்வன் மிகப்பெரியது. இந்த கப்பல் 25 டிசம்பர் 2015 அன்று கட்டப்பட்டது. 9 மே 2018 இல் துவங்கப்பட்டு 25 செப்டம்பர் 2018 இல் நிறைவடைந்து.[17] இதன் உரிமையாளர் யப்பானின் இமாபரி கப்பல் கட்டமைப்பின் துணை நிறுவனமான ஷோய் கிசென் கைஷா ஆகும். மேலும் இதனை இயக்குவது தைவானைத் தளமாகக் கொண்ட எவ கிரீன் மரைன் நிறுவனமாகும். இந்த கப்பல் பனாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[18] இக்கப்பலில் பணிபுரிந்த அனைத்து குழுவினரும் இந்தியாவினைச் சார்ந்தவர்கள்.

சம்பவம்

எவர் கிவ்வன் மார்ச் 2020

சம்பவம் நடந்த நேரத்தில், எவர் கிவ்வன் மலேசியாவின் தஞ்சங் பெலிபாஸிலிருந்து நெதர்லாந்தின் ராட்டர்டாமிற்கு சென்று கொண்டிருந்து.[19][20] இது வடக்கு நோக்கிச் செல்லும் வாகன வரிசையில் ஐந்தாவது இடத்திலில்[21] மன்சியட் ரக்கோல கிராமத்தின் அருகே இருந்தது.[22]

23 மார்ச் 2021 அன்று, 07:40 EGY (UTC + 2) இல், எவர் கிவன் சுயஸ் கால்வாய் வழியாகப் பயணித்தபோது மணல் புயலில் சிக்கியது. மணிக்கு 74 km/h (40 knots) வேகத்தினை எட்டிய பலத்த காற்று காரணமாக "கப்பலின் வழிநடத்தும் திறன் இழந்தது". இதனால் கப்பல்கூடு விலகியது.[3][19][23] எவர் கிவ்வன் 151 கிமீ (82 nmi) குறியில் (நடுநிலக் கடலில் சயீது துறைமுகத்திலிருந்து அளவிடப்படுகிறது; 10 கிமீ (5.4 nmi) சுயஸ் வளைகுடாவில் உள்ள சுயஸ் துறைமுகத்திலிருந்து), தரை தட்டி தன்னை விடுவிக்க முடியாமல் பக்கவாட்டாக மாறி, இருபுறமும் கால்வாயைப் போக்குவரத்தினைத் தடுத்தது.[3] எவர் கிவ்வனின் கப்பல் மாலுமி மற்றும் பயணக் குழுவினர் முழுவதும் இந்திய நாட்டினைச் சார்ந்தவர்கள். இவர்களுக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[24]

இந்த சம்பவத்திற்குப் பங்களிக்கும் காரணியாகக் கரை விளைவு குறிப்பிடப்பட்டுள்ளது.[25][26][27][28]

கால்வாயின் இரு முனைகளிலும் 200 இக்கும் மேற்பட்ட கப்பல்கள் எவர் கிவ்வன் மூலம் தடைசெய்யப்பட்டன. இதில் ஐந்து பெரிய கொள்கலன் கப்பல்களும் அடங்கும்.[29]:{{{3}}} இவற்றில் 41 மொத்த சுமைக் கப்பல்கள் மற்றும் 24 கச்சா எண்ணெய் கப்பல்களும் அடங்கும்.[30] பாதிக்கப்பட்ட கப்பல்களில் சுமார் 16.9 மில்லியன் டன் எடையினைக் கொண்டுள்ளன. இவற்றில் சில இப்பகுதியில் உள்ள துறைமுகங்களிலும் நங்கூரம் பாய்ச்சியும் நிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பல இடங்களில் ஆங்காங்கே சிறிய சரக்குக் கப்பல்கள் முதல் பெரிய கப்பல்கள் வரை நிறுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவின் கடற்படை ஆல்டே-வகை ஆயிலர் கோலா கப்பல் மொத்த சரக்கு கப்பலான ஆர்க் ராயலுடன் மோதியது.[31][32][33][34]

பதில்வினை

எவர் கிவ்வன் கப்பலுக்குப் பின்னால் உள்ள இரு கப்பல்களை அகற்றி அதிக இடைவெளியினை ஏற்படுத்தித் தரைதட்டிய கப்பலை மீண்டும் மிதக்கவைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எரிபொருள், நிலைப்படுத்தும் நீர், மற்றும் கொள்கலன்கள், கனரக இயந்திரங்கள் கப்பலிலிருந்து அகற்றப்பட்டன. அகழ்பொறி மூலம் தோண்டும் வேலை தொடங்கியது.[35] கப்பலை இழுக்கும் முயற்சியில் எட்டு இழுவைப் படகுகள் செயலில் உள்ளன.[36] ராயல் போஸ்கலிசு வெஸ்ட்மின்ஸ்டரின் தலைமை நிர்வாகி பீட்டர் பெர்டோவ்ஸ்கி, இந்த நடவடிக்கையில் "நாட்கள் முதல் வாரங்கள் வரை ஆகலாம்" என்று கூறினார்.[37]

25 மார்ச் அன்று சூயஸ் கால்வாய் அதிகாரிகள் எவர் கிவ்வன் கப்பலினை மீட்கும் வரை சுயஸ் கால்வாய் போக்குவரத்தினை நிறுத்தி வைத்தனர்.[38][39] ஆனால் எகிப்தின் ஜனாதிபதி அப்துல் பத்தா அல்-சிசியின் துறைமுக ஆலோசகர், "அதிகபட்சமாக 48 முதல் 72 மணிநேரத்தில் கால்வாய் சரிசெய்யப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.[40] சுயஸ் கால்வாய் ஆணையமும் அதன் தூர்வாரலில் சுமார் 87 சதவீதம் முடிந்துவிட்டதாகக் கூறியது.[41]

மார்ச் 26 அன்று, கப்பலை அகற்றுவதற்கான முயற்சிகளுக்கு உதவுவதற்காக அகழ்வாராய்ச்சி நிபுணர்களின் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை மதிப்பீட்டுக் குழு அளித்த வாய்ப்பை கால்வாய் ஆணையம் ஏற்றுக்கொண்டது.[42]

மார்ச் 27ஆம் நாள், 14 இழுவைப்படகினைப் பயன்படுத்து, உயர் ஓதத்தினைச் சாதகமாக்கி மீட்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக சுயஸ் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்தனர். யுகிடோ கிக்காகி, தலைவர், சோயி கிசென் எவர் கிவ்வன் கப்பல் சேதமடையவில்லை என்றும், தண்ணிரை எடுத்துக்கொள்வதில்லை என்றும், மிதக்க ஆரம்பித்தால், இயங்கத்துவங்கும் எனத் தெரிவித்தார்.[43] தற்போதைய சூழலில் கால்வாய் போக்குவரத்திற்காக எப்போது திறக்கப்படலாம் என்பதற்கான தகவல் இல்லை. நிலைமை தீர்ப்பது கடினமான ஒன்றாகும். தாமதமான கப்பல்கள் போக்குவரத்து நிறைந்த துறைமுகங்களுக்குச் செல்லவும், சரக்குகளை இறக்குவதற்கும் கூடுதல் தாமதங்களை எதிர்கொள்ளக்கூடும். எவர் கிவ்வன் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் கப்பல் போக்குவரத்தில் கூடுதல் தாமதங்கள் தொடரக்கூடும். மார்ச் 27 நிலவரப்படி, இரு முனைகளிலும் கால்வாயின் நடுவிலும் 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிற்கின்றன. பல கப்பல்கள் நெருங்கி வருகின்றன அல்லது அவற்றின் பாதைகளை மாற்றியுள்ளன.[44]

பொருளாதார தாக்கம்

சென்டினல் -1 செயற்கைக்கோள் படம், தடங்கல் காரணமாக சுயஸ் வளைகுடாவில் போக்குவரத்து நெரிசல்

இந்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அன்றாட பொருட்களின் தேவையில் தாமதத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.[45] கடல்சார் வரலாற்றாசிரியர் சால் மெர்கோக்லியானோ அசோசியேட்டட் பிரெசிடம், "ஒவ்வொரு நாளும் கால்வாய் மூடப்பட்டுள்ளது. கொள்கலன் கப்பல்கள் மற்றும் டேங்கர்கள் உணவு, எரிபொருள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஐரோப்பாவிற்கு வழங்கவில்லை, ஐரோப்பாவிலிருந்தும் தூரக் கிழக்கு நாடுகளுக்குப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை" என்று கூறினார்."[8][19] லாயிட்ஸ் பட்டியல் தடுப்பு தாமத செலவை ஒரு மணி நேரத்திற்கு 400 மில்லியன் அமெரிக்க டாலராகவும்[46][47] மேலும் தடையை அகற்ற ஒவ்வொரு நாளும் எடுக்கும் முயற்சியின் போது கூடுதலாக 9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களைச் சீர்குலைக்கும் என மதிப்பீடு செய்துள்ளது.[29][48]

மூலோபாய எரிசக்தி மற்றும் பொருளாதார ஆராய்ச்சியின் தலைவர் மைக்கேல் லிஞ்ச், "எண்ணெய் விலையில் சமீபத்திய சரிவின் காரணமாக வாங்குவது மீண்டும் சுயஸ் கால்வாயினை மூடுவதால் அதிகருக்கும் என்றார். டபுள்யு டி ஆர் ஜி பொருளாதாரம் ஆற்றல் பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் தற்போதுள்ள சேமிப்பினால் எண்ணெய் விநியோகத்தில் சில நாட்கள் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது என்றார்.[49] ஆனால் இந்த நிகழ்வு பொருட்கள் சந்தைப்படுத்தலை தாமதப்படுத்தும் என்றார். குறைக்கடத்திகளைப் பயன்படுத்தும் தொழிலகங்கள் மட்டுமே பாதிக்கும். நீண்ட காலத்திற்கு பொருட்களின் பற்றாக்குறையைத் தணிக்க, எதிர்கால ஏற்றுமதிகளை இயல்பை விட சற்று முன்கூட்டியே ஆணையிட்டு தாமதத்தினை சரி செய்யலாம்.[49][9] இருப்பினும், மற்றொரு நிறுவனத்தின் ஆலோசகர் சூயஸ் கால்வாயில் ஒரு குறுகிய கால இடையூறு கூட விநியோகச் சங்கிலியுடன் பல மாதங்களுக்குத் தொடர் விளைவினை (டோமினோ விளைவை) ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.[50]

ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான கடல் போக்குவரத்திற்கான இயல்புநிலை மாற்றுப் பாதை ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி உள்ளது. இது சுமார் 9,000 கிமீ (4,900 nmi) நீளமுடையது தோராயமாகப் பயணத்திற்கு 10 நாட்கள் எடுக்கும்.[51] மார்ச் 26க்குள், சில கப்பல்கள் ஏற்கனவே நன்னம்பிக்கை முனையினைச் சுற்றிச் செல்ல மீண்டும் அனுப்பப்பட்டன. இவை கூடுதலாக 6,100 கிமீ (3,300 nmi) தூரத்தினை 12 பயண நாட்கள் கூடுதலாகச் செலவழித்துச் செல்ல வேண்டும் எனச் சர்வதேச கப்பல் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.[52][53] இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி ரஷ்யா தனது ஆர்டிக் கப்பல் வழித்தடங்களை மாற்றாகப் பயன்படுத்தி ஆபிரிக்காவைச் சுற்றி பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டுகிறது.[54]

மதிப்புமிக்க கப்பல்கள் ஒரு சிறிய பகுதியில் இருப்பதால், திருட்டுக் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதால் கப்பல் நிறுவனங்கள் பகுரைனை தளமாகக் கொண்ட அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படையிடம் பாதுகாப்பு குறித்து விசாரிக்கச் துவங்கியுள்ளன.[55]

மீட்புப் பணிகள்

சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகன் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயில் 23 மார்ச் 2021 அன்று (செவ்வாய்க்கிழமை) எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்குக் கப்பல் தரைதட்டி நின்றது. வேகமான காற்று மற்றும் மணல் புயலால் மறைக்கப்பட்ட பார்க்கும் திறன் ஆகியவற்றால் 400 மீட்டர் நீளமுள்ள இந்தச் சரக்குப் கப்பல் தரைதட்டியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தன. இது தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மனித பிழைகள் காரணமாக நடந்து இருக்கலாமா என்பது குறித்த தகவல்கள் துவக்கக் கட்ட விசாரணையில் தெரியவரும்.

28 மார்ச் 2021 (ஞாயிறு) வரை 18 மீட்டர் ஆழத்தில், 27,000 கியூபிக் மீட்டர் அளவு மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது என்று சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்தது. இழுவைப் படகுகள் மற்றும் அகழ்வுக் கருவிகள் ஆகியவற்றின் துணையுடன் இந்தக் கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வந்தன. கடல்சார் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளும் 'இன்ச்கேப்' நிறுவனம் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளது.[56]

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை