செங்குந்தர்

செங்குந்தர் (Sengunthar, கைக்கோளர், செங்குந்த முதலியார், செங்குந்த கைக்கோள முதலியார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்) எனப்படுவோர் தமிழ் சமூகத்தினர் ஆவர்.[7][8] இவர்கள் இந்திய மாநிலமான, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக வசிக்கின்றனர். மேலும் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் அண்மை நாடான தமிழீழம் மற்றும் இலங்கையின் வட மாகாணத்திலும் வசிக்கின்றனர்.[9]

செங்குந்தர்
குல தெய்வம் (ஆண்)முருகன் சுப்பிரமணிய சுவாமி[1][2][3]
மதங்கள் சைவ சமயம், வீர சைவம், இந்து[4]
மொழிகள்தமிழ்
பகுதிதமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கருநாடகம், இலங்கை[5][6]
தொடர்புடைய குழுக்கள்தமிழர்

இவர்கள் முடியாட்சி காலங்களில், அக்காலத்திய படைத் தளபதிகளாக, படைவீரர்களாகவும்[10] மற்றும் நெசவு தொழில் செய்த சமூகம் ஆவர்.[11] பெரும்பான்மையான இச்சமூக மக்கள் முதலியார் என்கிற பட்டத்தைத் தம் பெயருக்குப் பின்னால் போடுவர்.[12]

இவர்கள் ஆண் வழி வம்சாவழியை கண்டறிவதற்க்கு கோத்திரம் முறையை பின்பற்றுகிறார்கள். பெரும்பான்மையான இச்சமூகத்தினர் கோத்திரம் என்பதைகூட்டம் அல்லது பங்காளி வகையறா என்று சொல்லிவருகிறார்கள்.[13][14]

பெயர்க்காரணம்

  1. செங்குந்தர் - செங்குந்தம் என்றால் இரத்தத்தால்(செம்மை) சிவந்த வேல் (குந்தம்) என்று பொருள். செங்குந்தர் என்றால் 'அத்தகைய' செந்நிறமான வேல் ஆகிய ஈட்டியை உடையவர்.
  2. கைக்கோளர் என்றால் வலிமையான (கோள்-வலிமை) கைகளை உடையவர் என்று பொருள்.[15].[16][17]
  3. "முதலி" என்பது உயர் இராணுவ அதிகாரிகளைக் குறிக்கிறது. பின் அதுவே 'முதலியார்' என்றானது.[18]

தோற்றம்

முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து பிறந்தவர்கள் ஒன்பது வீரர்கள் (நவவீரர்கள்), அதாவது வீரபாகு,[19] வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேஸ்வரர், வீரபுராந்தரர், வீரராக்கதர், வீரமார்த்தாண்டர், வீரரந்தகர் மற்றும் வீரதீரர் ஆகியோர் முருகனின் படையில் சூரபாத போரில் அரக்கனைக் வீழ்த்த தலைமையேற்றனர். அரக்கனைக் கொன்ற பிறகு, போர்வீரர்கள் சிவனிடம் ஒரு தொழிலை ஏற்றுக்கொள்வதாகக் கூறினர், இது எந்தவொரு உயிரினத்தையும் அழிக்கவோ அல்லது காயப்படுத்தவோ சம்பந்தப்படாது, நெசவு அத்தகைய தொழிலாக இருப்பதால், அவர்கள் அதில் பயிற்சி பெற்றனர். மேற்கண்ட தளபதிகளில் ஒருவரான வீரபாகுவின் மகள் சித்திர வள்ளியை மன்னர் முசுகுந்த சோழன் மணந்தார். இந்த நவவீரர்கள்(ஒன்பது வீரர்கள்) மற்றும் முசுகுந்த சோழனின் சந்ததியரே செங்குந்த கைக்கோளரின் முதல் தலைமுறை ஆகும்.[20][21]

வரலாறு

சேந்தன் திவாகரம் காலம்

இவர்களை பற்றிய முந்தைய இலக்கிய சான்றுகள், 'சேந்தன் திவாகரர்' எழுதிய "ஆதி திவாகரம்" அல்லது "சேந்தன்திவாகரம் " என்ற தமிழ் அகராதியில் காணப்படுகின்றன. திவாகர நிகண்டு,

  • "செங்குந்தப்படையர் சேனைத் தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர்"

என்ற 6ஆம் நூற்றாண்டு வரிகள் மூலம் செங்குந்தர், சேனைத்தலைவர், தந்துவாயர் (நெசவாளர்), காருகர் (நெசவாளர்), கைக்கோளர் ஆகிய ஐந்து பெயர்க்களும் ஒரே மக்களை குறிக்கும் பெயர்கள் என அறியமுடிகிறது. இந்த அகராதி, அநேகமாக 6 ஆம் நூற்றாண்டில் இருந்து, அவர்களை நெசவாளர்கள் மற்றும் சேனாதிபதிகள் என்று குறிப்பிடுவதன் மூலம், அந்த நேரத்தில் சமூகத்தில் அவர்களின் இரட்டை பங்கைக் குறிக்கும். அகம்படிகளான இவர்கள் சேனாதிபதி பதவியை அடையலாம் என்பதை அறிய முடிகின்றது. மேலும் இவர்கள் குறிஞ்சி நாட்டார் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால், இவர்கள் குறிஞ்சி நில அகம்படிகளாகலாம்.[22][23]

சோழர் காலம்

இடைக்கால சோழர் காலத்தில் கைக்கோளர் இராணுவத்தில் பணியாற்றினார்.பல செங்குந்தர்கள் சேனாதிபதிகளாகவும் (சேனை), படைத்தளபதிகளாகவும் (தளம்), அணிபதிகளாகவும் (அணி), படைத்தலைவர்களாகவும்(படை) சோழர்களின் அரசில் இருந்திருக்கின்றனர்.

செங்குந்த கைக்கோள சேனாதிபதிகள் "சமந்த சேனாபதிகள்" அல்லது "சேனைத்தலைவர்" அல்லது மூன்று கைமா சேனைத்தலைவர்[24] என்று அழைக்கப்பட்டனர்.[25][26]

சோழர்படையில் தெரிஞ்ச கைக்கோளப்படை, எனும் படைப்பிரிவு இருந்தது, கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.[27]

  • 1.அபிமான பூஷண தெரிஞ்ச கைக்கோளப்படை
  • 2.அருள்மொழிதேவ தெரிஞ்ச கைக்கோளப்படை
  • 3.கண்டராதித்த தெரிஞ்ச கைக்கோளப்படை
  • 4.கரிகாலசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை
  • 5.சமரகேசரி தெரிஞ்ச கைக்கோளப்படை
  • 6.சிங்களாந்தக தெரிஞ்ச கைக்கோளப்படை
  • 7.பராந்தகச்சோழ தெரிஞ்ச கைக்கோளப்படை
  • 8.பார்திபசேகர தெரிஞ்ச கைக்கோளப்படை
  • 9.வீரசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை
  • 10.விக்ரமசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை .

அந்தந்த மன்னர் பெயரை முன்னொட்டாக வைத்து அவருடைய (தெரிந்த)படை என அழைக்கப்பட்டது.

11 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகளின் படி, சோழ வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் செங்குந்த கைக்கோளர் நெசவு மற்றும் வர்த்தகத்தில் தனது ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டனர். அத்துடன் அந்த நலன்களைப் பாதுகாக்க அவசியமான இராணுவ விஷயங்களில் ஒரு பங்கைக்கொண்டிருந்தனர். அவர்கள் சோழர் காலத்தில் "அய்யவோல் 500" வர்த்தகக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர். மேலும் 8 ஆம் நூற்றாண்டிலேயே அவர்கள் படைகள் இருந்ததாகவும், சோழ பேரரசர்களுக்கு மெய்க்காப்பாளர்களாக செயல்பட சில குறிப்பிட்ட நபர்கள் நியமிக்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன.[சான்று தேவை]

இத்தகைய வரலாற்று பதிவுகள் அவர்களின் இராணுவ செயல்பாட்டை வலியுறுத்துகின்றன.

கவிஞர் ஒட்டக்கூத்தர் அவர்களை மகிமைப்படுத்துவதோடு, அவற்றின் தோற்றம் தெய்வங்களின் படைகளுடன் இருப்பதாக அறிவுறுத்துகிறார்.[28]

'விஜய ராமசாமியின்' கூற்றுப்படி, பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏராளமான செங்குந்த கைக்கோளர்கள் தொண்டை மண்டலத்தில் இருந்து கொங்கு மண்டலத்துக்கு குடிபெயர்ந்தனர்.[29]

காங்கேயன் என்னும் சிற்றரசன் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். புலவர் ஒட்டக்கூத்தரைப் பேணியவன். இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக்கு உட்பட்டு ஆண்டுவந்த சிற்றரசன். இவனது தலைநகர் காஞ்சிபுரம். போர் மறவர்களாக விளங்கிய செங்குந்த கைக்கோளர் மரபினன். புலவர் ஒட்டக்கூத்தர் இவனைப் போற்றிய நூல் காங்கேயன் நாலாயிரக் கோவை.[30]

சோழ சமுதாயத்திலும் சோழ இராணுவத்திலும் செங்குந்த கைக்கோளரின் தாக்கம் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

விஜயநகர காலம்

13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, பின்னர் இவர்கள் முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக்கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.[31][32]

வரலாற்றியலாளர் தீபக் குமாரின் கூற்றுப்படி, "செங்குந்த கைக்கோள நெசவாளர்கள் பெரும்பாலும் "குடி" (குடிமை)த்திறனை அதாவது நிலக் குத்தகை-பயிரிடும் உரிமை மற்றும் காணியாட்சியையும் அதாவது நிலத்தின் மீதான பரம்பரை உடைமை உரிமை கொண்டுள்ளனர்.

[33]

விஜயநகர சாம்ராஜ்யத்தின் சதாசிவ ராயாவின் காலத்தில், பிரம்மபுரிஸ்வரர் கோயிலின் ஸ்தானதர் அவர்கள் செங்குந்த கைகோளர் படைப்பிரிவின் சில நிலங்களை பயிரிடுவதாக ஒரு ஒப்பந்தம் செய்தனர்.[33][34]

ஹிமான்ஷுபிரபா ராயின் கூற்றுப்படி, 1418 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை கோயிலில், செங்குந்த கைகோளர்களுக்கு சங்கு ஊதுவதற்கும், பல்லக்குகள் மற்றும் யானைகளை சவாரி செய்வதற்கும் உரிமை வழங்கப்பட்டது.[35]

16 ஆம் நூற்றாண்டில் சில செங்குந்த கைகோளர்கள் கொங்கு நாட்டில் இருந்து கேரள பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இன்று கேரளாவில் இவர்கள் கேரளமுதலி அல்லது கைக்கோளமுதலி என்று அழைக்கப்படுகிறார்கள்.[29]

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர். மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை இவர்கள் அளித்திருக்கின்றனர்.[36][37]

"சண்முகன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர்செங்குந்தரே"

"சிங்களமாதிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே"என்ற, பழைய நூல்களில் வரும் அடிகளால் செங்குந்தர் தன்மை விளங்கும்.

கோத்திரங்கள்

இச்சமூகத்தினர் கோத்திரம் என்பதை கூட்டம் அல்லது பங்காளி வகையறா அல்லது "குலவம்சம்" என்று சொல்லிவருகிறார்கள்.[38]

கோத்திரம்(கூட்டம்/ பங்காளி வகையறா/ குலவம்சம்) என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும்(பங்காளிகள் ஆவர்). ஒரு கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அதே கோத்திரத்தை சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே கோத்திர பெயரை சார்ந்தவர்கள் பங்காளிகள். (எ.கா): அதாவது உலகத்தில் உள்ள அனைத்து (நல்லான்) கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் நல்லான் என்ற ஒருவரின் வழிதோன்றல் ஆகும். ஆகவே ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரே கோத்திரத்தை(கூட்டம்/பங்காளி வகையறா/ குலவம்சம்) சேர்ந்தவர்ள் பங்காளிகள் ஆவர்.[14][39]

இச்சமூகத்தில் 400க்கும் மேற்பட்ட கோத்திரங்கள் உள்ளன.[40]

  • vaithishwarar kothiram
  • அகஸ்தீஸ்வரர் கோத்திரம்
  • அகத்திசின்னான் கூட்டம்
  • அகத்திபிச்சான் கூட்டம்
  • அன்னதான சோழர்கோத்திரம்/(சமயம் பட்டம்)
  • அன்னூரான் கோத்திரம்
  • அண்ணமார் கோத்திரம்
  • அண்ணாத்தார் கோத்திரம்
  • அந்தியூரார் கோத்திரம்
  • அல்லாம்பழனி கோத்திரம்(அன்னம்)
  • அம்பலவாணர் கோத்திரம்
  • அலங்கரான் கோத்திரம்
  • அருள்முருகன் கோத்திரம்
  • அம்ணியம்மாள் கோத்திரம்
  • அத்தியப்பமுதலி கூட்டம்
  • அதியமான் கோத்திரம்
  • அரசுரான் கோத்திரம்
  • அழகப்பன் கோத்திரம்
  • அலங்காரவேலன் கோத்திரம்
  • அப்பாய்அரவாய் கோத்திரம்
  • அரசன் கோத்திரம்
  • அனந்த கோத்திரம்
  • அடப்பான் கோத்திரம்/ செம்மேரை
  • ஆண்டி கோத்திரம்/ வேம்பகுமாரன்
  • ஆராங் கோத்திரம்
  • ஆலாங்காட்டான் கோத்திரம்
  • ஆனூரார் கோத்திரம்
  • ஆயி நாடார்
  • ஆறுமுகம் கோத்திரம்
  • ஆனந்தன் கோத்திரம்
  • ஆக்கவழி கோத்திரம்
  • ஆட்டுக்காரன் கோத்திரம்
  • ஆட்டையாம்பட்டி வாத்தியார் கோத்திரம்
  • இராசி கோத்திரம்
  • இலைப்புளியான் கோத்திரம்
  • உடையாங் கோத்திரம்
  • உதிரமலை கோத்திரம்
  • உண்டிக்காரர் கோத்திரம்
  • உலகப்பன் கோத்திரம்
  • ஊமத்தூரார் கோத்திரம்
  • ஊமையம்பட்டியான் கோத்திரம்
  • எருமைக்காரர் கோத்திரம்
  • எட்டிமரத்தான் கூட்டம்
  • எல்லக்கிழா கூட்டம்
  • எல்லம்மா கோத்திரம்
  • ஏச்சன் கோத்திரம்
  • ஒகாயனூரார கோத்திரம்
  • ஓட்டுவில்லைகாரர் கோத்திரம்
  • ஓயாமாரி கோத்திரம்
  • ஓண்டி கோத்திரம்
  • ஸ்ரீலஸ்ரீஇம்முடி பரஞ்சோதிகுருக்கள் கோத்திரம்
  • ஜெயவேல் கோத்திரம்
  • ஜெயமுருகன் கோத்திரம்
  • கருமாண வாத்தியார் கோத்திரம்
  • கருவலூரார் கோத்திரம்
  • கணக்கன் கோத்திரம்
  • கணியாம்பட்டி கோத்திரம்
  • கருதுகாளியம்மன் கோத்திரம்
  • கருநல்லன் கோத்திரம்
  • கரூரார் கோத்திரம்
  • கட்டைய கூட்டம்
  • கட்ராயன் கோத்திரம்
  • கடம்பராயன் கோத்திரம்
  • கஞ்சிவேலான் கோத்திரம்
  • கச்சுபள்ளி கோத்திரம்
  • கன்னிமார் கோத்திரம்
  • கருப்பூரார் கோத்திரம்
  • கத்திரியர் கோத்திரம்
  • கந்தசாமி கோத்திரம்
  • கந்தசாமி கோத்திரம்
  • கந்தமுதலி கோத்திரம்
  • கதிர்வேல் கோத்திரம்
  • கண்டி கோத்திரம்
  • கண்டிதராயன் கோத்திரம்
  • கருவீரன் கோத்திரம்
  • கவுண்டக்காளி கோத்திரம்
  • கள்ளக்கரையான் கோத்திரம்
  • களப்பிள்ளதாச்சி கோத்திரம்
  • கருப்பண்ணன்/கருப்ப முதலி
  • கரிச்சிபாளையத்தான் கோத்திரம்
  • கம்பிக்கொடியன் / நந்திக்கொடியன் குலம்
  • காசிவேலன் கோத்திரம்
  • காலத்தீஸ்வரன் கோத்திரம்
  • காரியூரார் கோத்திரம்
  • காஞ்சான் கோத்திரம்
  • காளமேகப்புலவர் கோத்திரம்
  • காடை கோத்திரம்
  • காளிப்பட்டியார் கோத்திரம்
  • காடையாம்பட்டியார் கோத்திரம்
  • காஞ்சியளன் கோத்திரம்
  • காவாமுதலி கோத்திரம்
  • கார்த்திகேயன் கோத்திரம்
  • காக்காவாரண்வாசி கோத்திரம்
  • கானூரான் கோத்திரம்
  • காவக்காரன் கோத்திரம்
  • கீரனூரார் கோத்திரம்
  • குஞ்சாங் கோத்திரம்
  • குலசனன் கோத்திரம்
  • குப்பிச்சிமுதலி கோத்திரம்
  • குட்டிமுதலி கோத்திரம்
  • குருநாதன் கோத்திரம்
  • குமரகுரு கோத்திரம்
  • குமாரசாமி கோத்திரம்
  • குலவி கோணான் கோத்திரம்
  • குழந்தைசெட்டி கோத்திரம்
  • குழந்தைவேல் கோத்திரம்
  • குள்ளன் கோத்திரம்
  • குதிரைக்காரன் கோத்திரம்
  • குன்னத்தூரார் கோத்திரம்
  • கொம்மக்கோயான்முதலி கோத்திரம்
  • கொக்காணி கோத்திரம்
  • கொசப்பச்சையார் கோத்திரம்
  • கொண்டைக்கட்டி தேவன் கோத்திரம்
  • கொள்ளட்டான் கோத்திரம்
  • கொத்துக்காட்டான் கோத்திரம்
  • கொங்க கோத்திரம்
  • கொங்கர் கோன்/ நாட்டாமங்கலத்தார்
  • கொக்கோணிப்பழனி கோத்திரம்
  • கோட்டைமாரி கோத்திரம்
  • கோட்டையண்ணன் கோத்திரம
  • கேரள கும்ப கோத்திரம்
  • கோனங் கோத்திரம்
  • கௌரி கோத்திரம்
  • சக்திவேல் கோத்திரம்
  • சந்தியப்பன் கோத்திரம்
  • சண்முகம் கோத்திரம்
  • சரவணபவா கோத்திரம்
  • சம்பங் கோத்திரம்/ சம்பங்கருங்காலி குலம்
  • சடதேவர்/சடைதேவர் கோத்திரம்
  • சடையம்பாளையத்தார் கோத்திரம்
  • சரவத்துர் கோத்திரம்
  • சமயமுதலி கோத்திரம்
  • சமுத்திரபாளையத்தார் கோத்திரம்
  • சாமக்குளத்தார் கோத்திரம்
  • சாவந்அப்பாச்சி கோத்திரம்/மார்க்கண்டேயன்
  • சிறு வேங்கை கோத்திரம்
  • சின்ன குளத்தூ் கோத்திரம்
  • சிலம்புமுதலி கோத்திரம்/ செலம்பண்ணன்
  • சின்ன பட்டக்காரன் கோத்திரம்
  • சின்னாஞ்செட்டி கோத்திரம்
  • சிதம்பரமுதலி கோத்திரம் / சிதம்பரத்தான்
  • சித்தநாதன் கோத்திரம்
  • சின்னண்ணன், பெரியண்ணன் கோத்திரம்
  • சிங்காரவேல் கோத்திரம்
  • சிங்காண்டி கோத்திரம்
  • சிவியூரார் கோத்திரம்
  • சீரங்கமுதலி கோத்திரம்
  • சுப்பிரமணியம் கோத்திரம்
  • சுப்பிரமணியமுதலி கோத்திரம்
  • சுவாமிநாதன் கோத்திரம்
  • சூரியமுதலி கோத்திரம்
  • செங்கலை கோத்திரம்
  • சென்னி கோத்திரம்
  • செம்மாரர் கோத்திரம்
  • செம்பமுதலி கோத்திரம்
  • செந்தேவன் கோத்திரம்
  • செஞ்சி கோத்திரம்
  • செம்பூத்தர் கோத்திரம்
  • செங்கோட்டுவேல் கோத்திரம்
  • செங்கான் கோத்திரம்
  • சொக்கான் கோத்திரம்
  • சொக்கநாதன் கோத்திரம்
  • சமயமுதலி கோத்திரம்
  • சொக்கமுதலி கோத்திரம்
  • சொக்கலா முதலி கோத்திரம்
  • சொறிய முதலி கோத்திரம்
  • சென்ராயன் கோத்திரம்
  • சோலைமுதலி/ பூஞ்சோலை முதலி கோத்திரம்
  • சேவற்கொடியோன் கோத்திரம்
  • சேவூரார் கோத்திரம்/ கணேசர் பட்டம்
  • சேலத்தார் கோத்திரம்
  • சோத்துகட்டி கோத்திரம்
  • ஞானபண்டிதன் கோத்திரம்
  • ஞானவேல் கோத்திரம்
  • தடிவீரன் கோத்திரம்
  • தங்கவேல் கோத்திரம்
  • தலைக்கட்டுப்பான் கோத்திரம்
  • தடத்துக்காளி கோத்திரம்
  • தணிகாசலம் கோத்திரம்
  • தண்டாயுதபாணி கோத்திரம்
  • தவுத்திரமுதலி கோத்திரம்
  • தடிமாரன் கோத்திரம்/ தட்டய நாட்டு தடிமாரன்
  • தம்பியண்ணன் கோத்திரம்
  • தடிமுத்தான் கோத்திரம்
  • தலையன் கோத்திரம்
  • தம்பிரான் கோத்திரம்
  • தாசமுதலி கோத்திரம்
  • தாடிக்கொம்பர் கோத்திரம்
  • தாண்டவமுதலி கோத்திரம்
  • தானாமுதலி கோத்திரம்
  • தாரை நாட்டாமைகாரர் கோத்திரம்/ பூவேழ்நாட்டு பட்டக்காரர்
  • திமிரியான் கூட்டம்
  • திருப்பலீஸ்வரர் கோத்திரம்
  • தீர்த்தமுதலி கோத்திரம்
  • தீர்த்தகிரி கோத்திரம்
  • தூங்கநாரி கோத்திரம்/ தூங்காநதி
  • தெற்கத்தையன் கோத்திரம்
  • தேர்முட்டியார் கூட்டம்
  • தேவதாண்டவ கோத்திரம்
  • தொட்டிக்காரர் கோத்திரம்/ கைலாச முதலி
  • தொண்டைமண்டல பட்டம் கோத்திரம்
  • நல்லான் கோத்திரம்
  • நல்லமுத்தான் கோத்திரம்
  • நாரி/சௌராமங்கலத்தார் கோத்திரம்
  • தேவேந்திரன்/தேவர்முதலி கோத்திரம்
  • நல்லதம்பிரான் கோத்திரம்
  • நம்பி அப்பன் கோத்திரம்
  • நவகற்கள் அணிந்தற் கோத்திரம்
  • நாராயணன் கோத்திரம்
  • நாகமுதலி கோத்திரம்
  • நாதமுதலி கோத்திரம்
  • நாமக்காரன் கோத்திரம்
  • நெய்காரங் கோத்திரம்
  • நொச்சில் வீரப்பன் கோத்திரம்
  • பட்டி கோத்திரம்
  • பட்டாளியர் கோத்திரம்
  • பழனியூரார் கோத்திரம்
  • பச்சையன் கோத்திரம்
  • படேகரார் கோத்திரம்
  • பழனியப்பன் கோத்திரம்
  • பட்டக்காரர் கோத்திரம்
  • பச்சனான்முதலி கோத்திரம்/யானைகட்டி
  • பரமசிவன் கோத்திரம்
  • பரமகாளி கோத்திரம்
  • பண்ணையர் கோத்திரம்
  • பாசியூரார் கோத்திரம்
  • பாலமுருகன் கோத்திரம்
  • பிட்டுக்காரன் கோத்திரம் / நல்லாஞ்செட்டி
  • பீமன் கோத்திரம்
  • புள்ளிக்காரர் கோத்திரம்
  • புஞ்சைபுளியான் கோத்திரம்
  • புளிஞ்சகஞ்சியார் கோத்திரம்
  • புலிகுத்தி குலம்
  • புகழுரார் கோத்திரம்
  • புலவனார் பட்டம்/ ராஜ கோத்திரம்
  • பூந்துரையான் கோத்திரம்
  • பூசன் கோத்திரம்
  • பூசாரி கோத்திரம்
  • பூண்டிபெரியதனக்காரர் கோத்திரம்
  • பூமுதலி கோத்திரம்
  • பூனை கோத்திரம்/ செல்லப்ப முதலி
  • பெரிய கோத்திரம்
  • பெரியகுளத்தூ் கோத்திரம்
  • பொங்கய்யமுதலி கூட்டம்
  • பொன்தேவி கோத்திரம்
  • பொய் சொல்லான்/பொய் உறையான்
  • பொங்கலூரார் கோத்திரம்
  • பொஞ்சி கோத்திரம்
  • போக்கர் கோத்திரம்
  • மணிகட்டிசடையன் கோத்திரம்
  • மணல்கொடியார் கோத்திரம்
  • மத்தாளகாரர் கூட்டம்
  • மண்ணையர் கோத்திரம்
  • மயில்வாகனன் கோத்திரம்
  • மயூரப்ப்ரியன் கோத்திரம்
  • மல்லூரான் கோத்திரம்
  • மகிழி கோத்திரம்
  • மாகாளி கோத்திரம்
  • மாட்ராயன் கோத்திரம்
  • மாணிக்கவேல் கோத்திரம்
  • மாணிக்கம் கோத்திரம்
  • மாம்பாக்கர் கோத்திரம்
  • மானூரார் கோத்திரம்
  • மாயன் கோத்திரம்
  • முனியமுதலி கோத்திரம்
  • முத்துக்குமரன் கோத்திரம்
  • சாவடிமுத்தண்ண முதலி குலம்
  • முருகன் கோத்திரம்
  • மூக்கு தொண்டி கோத்திரம்
  • மூக்குத்திகச்சாடை கோத்திரம்
  • மூப்பன் கோத்திரம்
  • மொக்கயன் கோத்திரம்
  • முண்டுக்காரர் கூட்டம்
  • மொட்டையப்பமுதலி கோத்திரம்
  • மொளசியர் கோத்திரம்
  • ரங்கஜாலதண்டர் கோத்திரம்
  • ரத்னகிரி கோத்திரம்/ கோழிகுஞான்
  • ராக்கவெட்டான் கோத்திரம்
  • ராக்கி கோத்திரம்
  • ராமச்சந்திரன் கோத்திரம்
  • வயிரம் கோத்திரம்
  • வடுவன் கோத்திரம்
  • வடிவேல் கூட்டம்
  • வலியன் கோத்திரம்
  • வஜ்ரவேல் கோத்திரம்
  • வடகுத்தியார் கோத்திரம்
  • வரதமுதலி கோத்திரம்
  • வாணவராயன் கோத்திரம்
  • வாழ்த்துமுதலி கோத்திரம்/ வாத்திமுதலி
  • விருமாண்டன் கோத்திரம்/ விருமாண்டை
  • வினையறுத்தான் கோத்திரம்/ வினைதீர்த்தான்
  • வீரபத்திரன் கோத்திரம்
  • வீரமுத கோத்திரம்
  • வீரவேல் கூட்டம்
  • வீரன் கோத்திரம் / வீரக்குமாரர்
  • வெள்ளைசித்தர் கோத்திரம்
  • வெள்ளைமணியக்காரர் கோத்திரம்
  • வெள்ளியம்பர் கோத்திரம்
  • வெள்ளையம்மன் கோத்திரம் (வாரக்கநாடு பட்டக்காரர்)
  • வெற்றிவேல் கோத்திரம்
  • வெறியன் கோத்திரம்
  • வெள்ளவழத்தம் கோத்திரம்
  • வெள்ளாத்தூரர் கோத்திரம்
  • வேண்டராயன் கோத்திரம்
  • வேலவர் கோத்திரம்
  • வேட்டிகாரர் கோத்திரம்
  • வைரவேல் கோத்திரம்
  • துருவத்தார் கோத்திரம்
  • மலைய குலம்
  • தலப்பாக்கார் கோத்திரம்
  • சூராண்டி குலம்
  • பிச்ச கோலர் குலம்
  • திமிரி நமசி குலம்
  • பெறியான் கோத்திரம்
  • குமரப்ப முதலி குலம்
  • 6 நாட்டு பட்டக்காரர் கோத்திரம்
  • 24 நாட்டு பட்டக்காரர் கோத்திரம்

மக்கள் பரப்பு

இவர்கள் தமிழகத்தில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் நூல் மற்றும் ஆடை சார்ந்த வணிகத்திலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.[41]

தொல்லியல் குறிப்புகள்

கல்வெட்டு குறிப்புகள்

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தென்னிந்திய கல்வெட்டுகளில் செங்குந்த கைக்கோளர் சமூகம் பல்வேறு சமயங்களில் மன்னர்களிடம் பெற்ற பட்டங்கள் கீழ்கண்டவை.

முதலியார், சமய முதலி, கந்தராயன், கேடரதரையன், வீர வீர பல்லவராயன், பல்லவராயன், காடவராயன், சேனாதிபதி, சமய சேனாதிபதி, சமந்த சேனாதிபதி, பட்ட மனம் காத்தன், களின்கராயன், மலுவ சக்ரவர்த்தி, இருங்கோளன், வாதராயன், உயவந்தன், பாண்டிய தரயன், அறையாண், அரசு, தேவன், பாண்டியன், பிரம்மராயன், முடி கொண்ட சோழன், கனகராயன், சித்ராயன், கச்சிராயன், விழுதிபண்மன், கண்டியதேவன், நாட்டார், நாடாள்வார், பெருமாள், செட்டி, சோழகங்கன், சோழகோணார், விஜயராயன்.[42]

செப்பேடுகள்

  • நாவினால் மழுவெடுத ஞானப்பிரகாசர் செப்பேடு: திருச்சேய்ஞலூர் ஆதீனமடாதிபதியான ஞானப்பிரகாச சுவாமிகள் செங்குந்தர் சமூகத்தின் செங்குந்தர் வரலாற்றை பிரசங்க ஓலைச்சுவடிகளாக இயற்றியதற்காக 72 நாட்டு செங்குந்த கைக்கோளர் குல சமுதாயம் இவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை பற்றி விளக்கும் செப்பேடு.[43]
  • சுவாமிமலை செப்பேடு: அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலில் செங்குந்த கைக்கோளர் சமூகத்தின் கொடியேற்றம் மண்டகப்படி, ஐந்தாம் திருநாள் மண்டகப்படி, சூரசம்கார மண்டகப்படி, காலை சந்தி கட்டளை போன்ற உரிமை ஒன்றாய் சமூகத்தின் உரிமைகளுக்கு 72 நாட்டை சேர்ந்த இச்சமுதாய மக்கள் கொடுக்க வேண்டிய வரி விபரத்தை பற்றி கூறும் செப்பேடு.[44]
  • பழனி நவவீரர் செப்பேடு: சமீபத்தில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழனியில் கண்டெடுக்கப்பட்ட வீரபாகு உள்ளிட்ட நாங்க வீரர்கள் உருவம் பதித்த செப்பேடு இச்சமுதாயத்தின் சூரசம்ஹாரம் மண்டகப்படி கொடியேற்ற மண்டபம் படி உரிமை பற்றிய செப்பேடு.[45]
  • சிதம்பரம் வெல்லப்பிறந்தான் முதலியார் செப்பேடு: அந்நியர் படையெடுப்பின் போது சிதம்பரம் நடராஜர் கோவிலை காப்பாற்றிய படைத்தளபதி வெல்லப்பிறந்தான் முதலியார் குடும்பம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு காலைச்சத்தி கட்டளை முதல் பூஜை செய்யும் உரிமை பற்றி விளக்கும் செப்பேடு.
  • வீரபாகு சமய செப்பேடு: செங்குந்தர் கைக்கோளர் சமூகத்தின் மூதாதையரான வீரபாகுவுக்கு இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பழனியில் சிறப்புப் பூஜை நடத்தினர், அதற்குப் பலநாட்டு செங்குந்த கைக்கோளர்கள் கொடுக்க வேண்டிய வரியும் மற்றும் பிற சமூகமான நகரத்துச் செட்டியார் கச்சி ராயர், மழவராயர், சோழகனார் போன்ற சிற்றரசர்கள் கொடுத்த நன்கொடையைப் பற்றிக் கூறும் விளக்கும் செப்பேடு. இச்செப்பேட்டை எழுதியவர் திருசேய்ஞலூர் ஆதீனம் நாவினால் மழுவெடுத்த ஞானப்பிரகாச வள்ளலார்.
  • சேவூர் நவகண்டம் செப்பேடு: அவிநாசி அருகே சேவூர் கிராமத்தில் இச்சமுகத்தை சேர்ந்தசித்தர் முத்துக்குமார சுவாமி நவக்கண்டம் செய்து கொண்டு சிவலோகம் அடைந்த செய்தி மற்றும் இச்சமூகத்தின் விரிவான வரலாறு கூறும் செப்பேடு.
  • ஈரோடு வன்னியர் செப்பேடு: செங்குந்தர்கள் வீரபாகு நவவீரர் வம்சம் எனவும் செங்குந்தருக்கும் அக்னி குலம் விருது உள்ளது எனவும், போரிலே செங்குந்தர் வன்னியருடன் இணைந்து சிலகாலங்களில் களம் கண்டனர் எனவும், முருக கடவுள் மந்திரத்தை செங்குந்தர் யுத்த களத்தில் உபயோகித்தனர் என்றும், கடல் கடந்த கடாரம் மலேசியா வரை சோழர்காக போர் செய்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.[46]
  • சோழர் பூர்வ பட்டயம்: கரிகால சோழனின் ஆணைக்கிணங்க செங்குந்த கைக்கோளர் குல சமய முதலியார் சேனாதிபதி தலைமையில் கொங்கு மண்டலத்தில் பல சமூக மக்களை குடியேற்றத்தை பற்றி கூறும் ஆவணம்.[47]
  • முத்து விஜய ரகுநாத சேதுபதி பட்டயம்: 1714ஆம் ஆண்டில் சேதுபதி மன்னர் பட்டுக்கோட்டைக்கு சென்ற போது செங்குந்த சமூகத்தை சேர்ந்த உடையான் என்பவர் தங்க இலையில் அரசருக்கு அறுசுவை விருந்து அளித்ததை பற்றி கூறும் செப்பேடு.[48]

இலக்கிய குறிப்புகள்

  • செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, செங்குந்த கைக்கோளர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்தர் பிரபந்தத் திரட்டு[49] என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இது முதலில் வண்ணக்களஞ்சியம் காஞ்சி ஸ்ரீ நாகலிங்க முனிவரால் 1926 இல் வெளியிடப்பட்டது மற்றும் 1993 இல் சபாபதி முதலியார் அவர்களால் மீண்டும் வெளியிடப்பட்டது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே செங்குந்த கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.[50][51]
  • செங்குந்தர் பிள்ளைத்தமிழ், இது ஞானப்பிரகாச சுவாமிகள், திருசிபுரம் கோவிந்த பிள்ளை மற்றும் இலக்குமணசாமி ஆகியோரால் எழுதப்பட்டது. பனை-இலை கையெழுத்துப் பிரதிகளில் இருந்து எடுக்கப்பட்ட செங்குந்தர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு, இது 18 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்டது
  • ஈட்டியெழுபது, செங்குந்தர் கைக்கோளர்களைப் பற்றிய முக்கிய இலக்கியப் படைப்பு. இரண்டாம் ராஜராஜ சோழரின் ஆட்சியில் பொ.ச. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒட்டக்கூத்தரின் கவிதைகள் இதில் அடங்கும். இது செங்குந்தரின் புராண தோற்றம், செங்குந்தர் தலைவர்களின் பயணம் ஆகியவற்றை விவரிக்கிறது மற்றும் 1008 கைக்கோளர் தலை துண்டித்துக் கொண்டது, அதை எழுத முயற்சிக்கிறது.[52]
  • எழுப்பெழுபது, இது ஒட்டக்கூத்தர் எழுதிய ஈட்டி எசுபாத்தின் தொடர்ச்சியான எசுபேஜுபாது. இந்த வேலையில், 1008 செங்குந்தர்களின் தலைகளை அந்தந்த உடல்களுக்கு மீண்டும் இணைக்குமாறு சரஸ்வதி தெய்வத்தை வணங்குவது.
  • களிப்பொருபது, இது மூன்றாம் குலோத்துங்க சோழன் தொகுத்த பத்து சரணங்களின் தொகுப்பு. 1008 தலைகள் மீண்டும் இணைக்கப்பட்டபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இந்த சரணங்கள் பாடிய பிறகு எழுதப்பட்டன. இந்த சரணங்களில் இரண்டாம் ராஜராஜ சோழனின் நீதிமன்றத்தில் அதைக் கண்ட பாடல்கள் அடங்கும், அவரும் அவரின் வாரிசான குலோத்துங்க சோழன் III தொகுத்தார்.
  • திருக்கை வழக்கம், இது செங்குந்த கைக்கோளர்களின் நற்செயல்களையும் அவற்றின் சைவ மதக் கொள்கைகளையும் விவரிக்கும் நூல் ஆகும். இதை எழுதியவர் புகழேந்திப் புலவர்.

குறிப்பிடத்தக்க நபர்கள்

பண்டைய காலம்

தமிழ்கடவுள் முருகப்பெருமானின் போர்ப்படை இராணுவத்தின் ஒன்பது தளபதிகள் (செங்குந்த நவவீரர்கள்)

  1. வீரபாகு
  2. வீரகேசரி
  3. வீரமகேந்திரர்
  4. வீரமகேஸ்வரர்
  5. வீரபுரந்திரர்
  6. வீரராக்காத்தர்
  7. வீரமார்த்தாண்டர்
  8. வீராந்தகர்
  9. வீரதீரர்


  • காளஹஸ்தி ஞானப்பூங்கோதை அம்மன்: செங்குந்த கைக்கோளர் சமூகம் வெள்ளத்தூர் கோத்திரத்தில் பிறந்த கடவுள்.[53][54][55]
  • வீரமாதேவி: ராஜேந்திர சோழனின் மனைவி, சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய நிர்வாகி.[56]
  • பழுவூர் வீரன் / பழுவூர் நாராயணன்: பழுவூர் ஆட்சி செய்த இரட்டை சகோதரர்கள். கன்னட ராஷ்டிர கூடர்களை வீழ்த்தியதால் பராந்தக சோழன் இவர்கள் பெயரை ஒரு ஏரிக்கு வைத்தார்(வீராணம் ஏரி).
  • தஞ்சை வேம்பன்: பராந்தக சோழனின் அமைச்சர்.
  • ராய கௌதம் முதலியார்: சோழர்கள் கலிங்கத்தை (ஒடிசா) வெல்ல உதவிய சிற்றரசர்.
  • சந்திரமதி முதலியார்: 17 ஆம் நூற்றாண்டில் தென் கொங்குநாட்டின் (ஈரோடு பகுதி) சிற்றரசராக இருந்தார். ஈரோடு கோட்டையை கட்டியவர்.[57][58][59][60]
  • சின்னான் முதலியார்: இவர் 16ஆம் நூற்றாண்டில் இராசிபுரம் பகுதியை ஆட்சி செய்தவர். இவர் முருகனின் தீவிர பக்தர். இவர் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மலையில் உள்ள நான்காவது மண்டபம் இவர் கட்டியது.[61]
  • ஒட்டக்கூத்தர் முதலியார்: 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மூன்று சோழ மன்னர்களுக்கு அமைச்சராகவும், அவைப்புலவராகவும் இருந்தவர். கவிச்சர்க்கரவர்த்தி, கவிராட்ச்சசன் என்று அலைக்கப்படுவார்.[62]


தொழில்

அ. குழந்தைவேல் முதலியார்: (பட்டாளியர் கோத்திரம்)இந்திய தொழிலதிபரும், சுதந்திர போராட்ட வீரரும், சென்னை சில்க்ஸ், குமரன்தங்க மாளிகை, எஸ்.சி.எம் குழுமத்தின் நிறுவனரும் ஆவர்.[63]

எஸ். முத்துசாமி முதலியார்: நீலகிரி சூப்பர்மார்க்கெட் என்ற இந்தியாவின் முதல் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் நிறுவனர். சொக்கநாதன் கோத்திரம் பங்காளிகள்.

  • எம். எத்திராஜ் முதலியார்:

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பின்னி மில்ஸ் உரிமையாளரும், ராமசந்திரா மருத்துவமனையின் பங்குதாரர்.

சுதந்திர போராட்ட வீரர்கள்

  • திருப்பூர் குமரன்: (எருமைகார கோத்திரத்தில் சென்னிமலையில் பிறந்தவர். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்றத்தை உருவாக்கி இளைஞர்களை சுதந்திர போராட்டத்திற்க்கு கொண்டு வந்தவர்.[64]
  • தில்லையாடி வள்ளியம்மை: தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.[65]
  • கு. மு. அண்ணல் தங்கோ: தனித்தமிழ் அறிஞரும், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் ஆவார்.[66]
  • 'தியாகி' தீர்த்தகிரியார்: தர்மபுரியைச் சார்ந்த விடுதலை போராட்ட வீரர். இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு, உப்பு சத்தியாகிரகம், நீல் சிலையை அகற்றும் போராட்டங்களின்போது பல்வேறு கட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார்.[67][68].
  • தியாகி சின்னமுத்து முதலியார்: தருமபுரியை சேர்ந்த சுதந்திரப் போராளி. தியாகி சுப்பிரமணிய சிவாவின் நெருங்கிய நண்பர், அவருடன் சேர்ந்து பல போராட்டங்களில் செய்தவர்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அணியை சார்ந்தவர்.
  • டி.வி. காசிவிஸ்வநாதன் முதலியார்: திருச்செங்கோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர். இவர் திருச்செங்கோட்டில் மகாத்மா காந்தி கோவிலைக் கட்டியவர்
  • வெயிலுகந்த முதலியார்: தூத்துக்குடி கடலையூரை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்.

இலக்கியம்

நாயன்மார்கள்

  • கணம்புல்ல நாயனார்: வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். 63 நாயன்மார்களில் முக்கியமான நாயன்மார் ஆவர்.[83][84][85]
  • தண்டியடிகள் நாயனார்: தண்டியடிகள் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர். இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார்.[86][87][88]
  • சிறுத்தொண்ட நாயனார்

ஆன்மீகம்

மக்கள் சேவை

  • காலஹஸ்தி வள்ளல் வேங்கடராச முதலியார்: பெரும் செல்வந்தர் மற்றும் 16ஆம் சேறைக் கவிராச பிள்ளை என்ற புலவரை ஆதரித்த வள்ளல்.
  • ராவ் பகதூர் தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்: நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுப்பிடிதவர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உருவாக நிறுவனத்துக்கு தனது 620 ஏக்கர் வயல் நிலத்தை தானமாக கொடுத்தவர்தான்.[93]
  • டி. வி. ராஜேஸ்வர்: முன்னாள் ஐபிஎஸ், இந்திய உளவுத்துறையின் தலைவர், 4 மாநிலங்களின் முன்னாள் ஆளுநர். பத்மவிபூஷண் விருது பெற்றவர்.
  • ராஜா சர் சவலை ராமசாமி முதலியார்: பிரித்தானியாவின் இந்தியா 19ஆம் நூற்றாண்டின் மாபெரும் செல்வந்தர். 50க்கும் மேற்பட்ட சத்திரம் மருத்துவமனைகள் அமைத்துக் கொடுத்தவர். ஷெரிப் பதவியில் இருந்த முதல் இந்தியர். மெட்ராஸ் மகாஜன சபை மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவனர்களில் ஒருவர்.
  • பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து முதலியார்: சென் டெக்ஸ் என்ற கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி பல ஆயிரம் நெசவாளரை வாழ வைத்தவர்.[94]
  • தி.நா. சபாபதி முதலியார்: செங்குந்தர் மகாஜன சங்க நிறுவனர். [95]
  • ஈரோடு எஸ். மீனாட்சிசுந்தர முதலியார்: செங்குந்தர் சமூகத்தை பொதுப் பட்டியலில் இருந்து பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க சட்டப் போராட்டங்களை நடத்தியவர். ஈரோடு நகர்மன்றத் தலைவராக பணியாற்றி தனது சொந்த செலவில் உருவாக்கி கலைமகள் கல்வி நிலையத்தை ஈரோடு மக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என உயில் எழுதி வைத்தவர்.
  • வி.எஸ். செங்கோட்டையா முதலியார் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் மருத்துவமனைகளை மக்களுக்காக கட்டிக் கொடுத்த பெரும் செல்வந்தர். பெருந்துறை காசநோய் மருத்துவமனைக்கு 107 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியவர்.
  • வி. வி. சி. ஆர். முருகேச முதலியார்: நூற்றுக்கும் மேற்பட்ட கோவில், கல்வி நிலையங்களை புதுப்பிக்க நிதி அளித்தவர்.ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக நிறுவனர். பழனி முருகன் கோவிலுக்கு வின்ச் ரயில் தங்கத்தேர் வைரவேல் தங்க மயில் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியவர்.
  • ஈரோடு பி.கே. கோபால்: தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு சேவை செய்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
  • ஜ. சுத்தானந்தன் முதலியார்: (மாயன் கோத்திரம்)சிறந்த மக்கள் சேவகர். நிறுவனர் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி மற்றும் எம்.பி.நாச்சிமுத்து என் ஜகநாதன் பொறியியல் கல்லூரி.[96]
  • மயில்சாமி அண்ணாதுரை: இஸ்ரோவின் பிரபல இந்திய விஞ்ஞானி மற்றும் இவர் சந்திரயான், மங்கள்யான் மிஷன் திட்ட இயக்குநர். பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
  • தாரமங்கலம் எம்.அண்ணாமலை: விண்வெளி விஞ்ஞானி. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குனர்.இந்திய அரசு 2011 இல் பத்ம ஸ்ரீ விருது வழங்கியது.
  • பி.வி.நாதராஜ முதலியார்: முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி.
  • நீதிபதி டி.என்.சிங்கரவேலு:

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி.

  • சி.வ. கோவர்தன்: முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்.
  • நீதிபதி எஸ்.ஜெகதீசன்: முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி.
  • நீதிபதி எஸ்.டி. ராமலிங்கம்: முன்னாள் நீதிபதி, மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.
  • பனபாக்கம் ஆர். சுதாகர்: ஹிமார்ச்சல் பிரதேசம், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி.
  • நீதியரசர் ரவிசந்திரபாபு: மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.
  • முன்னால் நீதியரசர் எம். சத்யநாராயணன்: மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.
  • கே.வி. ஞானசம்பந்தன்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.
  • டி.ஏ.எஸ். பிரகாசம்: ஐஏஎஸ் அதிகாரி மற்றும் செங்குந்தர் சமுதாய பொருளாதார தொண்டுமன்றத்தின் நிறுவனர்.
  • குழந்தைவேலு: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி
  • டி.டி. ராமசாமி: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
  • குருசாமிபாளையம் A. பழனிவேல் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி.
  • ஆர் சண்முகம்: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.
  • பாப்பம்மாள் மருதாசல முதலியார்: கோவை மேட்டுபாளைத்தில் 105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்து பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்.

சினிமா துறை

  • சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்

டி.ஆர். சுந்தரம் முதலியார்: தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் நபர். ஐந்து முன்னாள் முதல்வர்களுக்கு முதலாளியால் இருந்தவர்.

  • பி. எஸ். வீரப்பா: மூன்று தலைமுறையில் பிரபல வில்லன் நடிகர் மற்றும் தமிழ் படங்களின் தயாரிப்பாளர். இவர் தனது வாழ்க்கையில் கலைமாமணி விருதும், ராஜீவ் காந்தி விருதும் பெற்றார்.
  • ஏ. ஜெகநாதன்:

50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இயக்குனர்

  • ஆர்.கே.சேகர்:

மலையாள படங்களுக்கு இசை நடத்துனர் மற்றும் இசையமைப்பாளர். அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை.

  • ஜி.வி.பிரகாஷ்குமார்:

தமிழ் திரைப்பட இசை இயக்குனர்.

  • ஆனந்த் ராஜ்:

பிரபல தமிழ் திரைப்பட நடிகர்.

  • ஆர்.கே.செல்வமணி:

தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இவர் தமிழக இயக்குநர்கள் சங்கத்தின் தற்போதைய செயலாளராக உள்ளார்.

  • பா. விஜய்: தமிழ் பாடலாசிரியர் மற்றும் நடிகர்.
  • நா. முத்துக்குமார்: தமிழ் பாடலாசிரியர்.
  • பி.எஸ்.வி. ஹரிஹரன்: திரைப்பட தயாரிப்பாளர்.
  • பாண்டியராஜன்: ஒரு நடிகர், இயக்குனர் பல நகைச்சுவையான தமிழ் படங்களில் முன்னணி.

அரசியல்

  • ஆ.வே. முத்தையா முதலியார்: பிரெஞ்சு-இந்திய (புதுவை) ராஜாங்க பிரதம மந்திரி.
  • கா. ந. அண்ணாதுரை முதலியார் : முன்னாள் தமிழக முதலமைச்சர், தி்முக கட்சி நிறுவனர்.[97]
  • சி.பி. சுப்பையா முதலியார்: கோயம்புத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர்
  • புலவர் கோவிந்தன்: சிறந்த தமிழறிஞர், செய்யாறு தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர். தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும், துணைத்தலைவராக ஒருமுறையும் பணியாற்றியவர்.
  • கோவிந்தசாமி பழனிவேல்: மலேசியாவின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்.
  • சிறீ சபாரத்தினம்: தமிழீழம் விடுதலைப் போராட்ட வீரர்.
  • மு. ஆலாலசுந்தரம்: இலங்கைத் தமிழ் அரசியல்வாதி மற்றும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்.
  • சதாசிவம் கனகரத்தினம்: இலங்கையின் வன்னி மாவட்டத்தின் முன்னாள் எம்.பி. நல்லூரில் உள்ள செங்குந்த இந்து கல்லூரியில் கல்வி பயின்றவர்.
  • சோ. தட்சணாமூர்த்தி முதலியார்: புதுச்சேரி மாநிலத்தின் முன்னால் அமைச்சர்.[98]
  • எஸ்.கே. சம்பந்தன் முதலியார்: அரக்கோணம் லோக்சபா தொகுதியில் இருந்து எம்.பி யாக வெற்றி பெற்றவர். நான்கு முறை எம்.எல்.சி யாக வெற்றி பெற்றவர், குறிஞ்சிப்பாடியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர்.
  • காஞ்சி மணிமொழியார்: தமிழ் அறிஞர், சமூகத் தொண்டாளர். தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்.[99]
  • ஏ. ஜே. அருணாச்சலம்: ஒருமுறை எம்.எல்.சி யாக வெற்றி பெற்றவர். இரண்டு முறை குடியாத்தம் தொகுதியில் இருந்த எம்.எல்.ஏ வெற்றி பெற்றவர்.காமராசர் முதலமைச்சர் ஆக வேண்டி தன் MLA பதவியை ராஜினாமா செய்து தன் தொகுதியான குடியாத்தம் தொகுதியில் அவரை நிற்க வைத்து வெற்றி பெற செய்து காமராசரை முதலமைச்சர் ஆக்கியவர்.பல நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கியவர்.
  • பி.ஏ. சாமிநாதன் முதலியார்: திருப்பூர் மக்களவை தொகுதியிலிருந்து எம்.பி யாக இரு முறை (1967,1971) வெற்றி பெற்றவர். புன்செய் புளியம்பட்டி முன்னாள் நகர்மன்றத் தலைவர்.

(பூசன் கோத்திரம் பங்காளிகள்)

  • காஞ்சி பன்னீர்செல்வம்: உத்திரமேரூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இரண்டு முறை காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
  • சி.கோபால் முதலியார்: (எச்சான் கோத்திரம்)சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர். அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்.[100]
  • என்.ஜி.பார்த்திபன்: (எச்சான் கோத்திரம்)சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர்.[101]
  • எம். ஆர். கந்தசாமி முதலியார்: வீரபாண்டி தொகுதியின் முதல் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றவர். சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.
  • இ.எஸ். தியாகராஜன் முதலியார்: (எச்சான் கோத்திரம்)பள்ளிப்பட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர். இவர் டாக்டர் இ.எஸ்.எஸ். இராமனின் சித்தப்பா [102]
  • டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன்: (எச்சான் கோத்திரம்)பள்ளிப்பட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்.[103] [104]
  • எம். சுந்தரம் முதலியார்: இரண்டு முறை ரிஷிவந்தியம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றவர்.[105][106]
  • எஸ். சிவராஜ்: நன்கு முறை ரிஷிவந்தியம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றவர்.[107]
  • சு. முருகையன்: மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றிப் பெற்றவர்.[108]
  • டி. பட்டுசாமி முதலியார்: வந்தவாசி தொகுதியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்.[109]
  • வி.ஜி. தனபால்: 1996 ல் குடியாதம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • மிசா ஏ.கா. துரைசாமி முதலியார்: குடியாத்தம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவர்.
  • கா. அ. சண்முக முதலியார்: திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்ற தலைவர் மற்றும் செங்குந்தர் சங்க முன்னாள் தலைவர்.
  • எஸ்.பி. மணவாளன்: திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.
  • ஜி.பி. வெங்கிடு: கோபிசெட்டிப்பாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். (சூரிய முதலி கோத்திரம்)
  • வீரவநல்லூர் சங்கரசுப்பிரமணியன் முதலியார்: திருநெல்வேலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர்மன்றத் தலைவர்.
  • ஏ. சௌந்தர்ராஜன்: பெரம்பலூர்

தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

  • எஸ்.ஜே. ராமசாமி முதலியார்: 1962 மற்றும் 1967 யில் அரக்கோணம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். 1977 இல் சோளிங்கர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆக வெற்றி பெற்றார்.
  • எஸ்.சி. சடயப்பா முதலியார்: 1957 இல் அரக்கோணம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக வெற்றிப்பெற்றவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.
  • டி. சீனிவாச முதலியார்: ஈரோட்டின் நகராட்சி தலைவராக இருந்தார். அவரது கடின உழைப்பால் ஈரோடு வ.உ.சி பூங்கா புது குடியிருப்புகள் மற்றும் காவேரி நதி நீரை ஈரோட்டிற்கு (தி ஈரோட் வாட்டர் ஒர்க்ஸ்) கொண்டு வந்தார்.
  • விசாலாட்சி: திருப்பூர் மேயராக வெற்றி பெற்ற முதல் பெண்.
  • ரேவதி தேவி பாரதி: கோபிசெட்டிபாளையத்தின் முதல் பெண் நகர்மன்ற தலைவர்.
  • பாபு கோவிந்தராஜன்: கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • டி.எஸ். முத்துக்குமாரசாமி முதலியார்:

பிரித்தானியாவின் இந்தியா நீதிக்கட்சியில் திருவண்ணாமலை முன்னாள் நகர்மன்ற தலைவர். இந்த நகரத்தில் அடிப்படை வசதிகலை செய்தவர்.

  • ஏ. ராமு முதலியார்: திருவண்ணாமலை முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • டி.எஸ். சாமிநாத முதலியார்: திருவண்ணாமலை முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • டி.வி. தேவராஜ் முதலியார்: மூன்று முறை முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்
  • வி.வி.சி.ஆர். கந்தப்ப முதலியார்: திருச்செங்கோடு முதல் நகர்மன்ற தலைவர்.
  • அர்த்தநாரி

முதலியார்: திருச்செங்கோடுநகராண்மைக் கழகத்தின்முதல் தலைவர்.

  • பச்சியன்ன

முதலியார்: திருச்செங்கோடுஊராட்சியின் முதல்தலைவர்

  • எம்.பழனிசாமி முதலியார்: கோபிசெட்டிபாளையத்தின் முதல் நகர்மன்ற தலைவர்.
  • சின்னசாமி முதலியார்: கரூர் முன்னாள் முனிசிபல் சேர்மன்.
  • ராஜலிங்க முதலியார்: கரூர் முன்னாள் முனிசிபல் சேர்மன்.
  • ம. சாமிநாத முதலியார்: காஞ்சிபுரம் முன்னாள் நகர்மன்ற தலைவர். செங்குந்தர் சமூகம கடைசி ஆண்டவர் நாட்டாமை.
  • ஏ. அங்கமுத்து முதலியார்: அரக்கோணம் முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • கே. எம். எல்லப்ப முதலியார்: அரக்கோணம் முன்னாள் நகர்மன்றத் தலைவர்
  • எஸ். வைத்தியலிங்க முதலியார்: திண்டிவனம் முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • பி. ஜெயராம் முதலியார்: திண்டிவனம் முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • வீரபத்திரர் முதலியார்: திருப்பத்தூர் முன்னாள் நகர்மன்ற தலைவர். மூன்று முறை
  • வி.ஆர். ஜகதீச முதலியார்: தருமபுரி முன்னாள் நகர்மன்ற தலைவர்.
  • தமிழ்நாடு செல்வராஜ்:

கரூர் முன்னாள் நகர மன்ற தலைவர்.

  • சி.எம். பழனியாண்டி முதலியார்: சேலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர்.
  • வி. ராமலிங்க முதலியார்: சேலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர்.
  • டி. கோவிந்தராஜன் முதலியார்: திருக்கோவிலூரின் முன்னாள் நகர்மன்ற தலைவர்
  • டி.ஏ. ஆதிமூல முதலியார்: குடியாத்தம் முன்னாள் நகரமன்ற தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்.
  • பாபு: தர்மபுரி பாப்பாரப்பட்டி முன்னாள் நகர்மன்றத் தலைவர்.
  • டி.எஸ். மாதேசன்: தாரமங்கலம் முன்னாள் நகர்மன்ற தலைவர் மற்றும் சேலம் மாவட்ட அதிமுக பொருளாளர்.
  • ராணா கே.வி. லட்சுமணன்: தொழிலதிபர் மற்றும் ஈரோடு மாவட்டம் முன்னாள் அதிமுக செயலாளர்.
  • எஸ். ரவிச்சந்திரன்:செய்யாறு முன்னாள் நகர்மன்றத் தலைவர் .
  • சி.பி. திருநாவுக்கரசு: மூத்த வழக்கறிஞர் மற்றும் புதுச்சேரி மாநில திமுக கட்சியின் முன்னாள் தலைவர். இவர் 1997 இல் பாண்டிச்சேரி தொகுதியில் இருந்து ராஜ்ய சபா எம்.பி யாக வெற்றி பெற்றவர்.
  • வி.பி. சிவக்கொழுந்து:

லாஸ்பேட்டை தொகுதியிலிருந்து எம்எல்ஏ வாக வெற்றி பெற்றவர், புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகரும் ஆவார்.

  • வி.பி. ராமலிங்கம்: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்.
  • எம். பண்டாரிநாதன்: திருமலைராயன்பட்டினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • எம். விஸ்வேஸ்வரன்: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • எம். வைத்தியநாதன்: லாஸ்பேட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • ஆர். வைத்தியநாதன்: லாஸ்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
  • வையாபுரி மணிகண்டன்: முத்தயால்பேட்டை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக 2016 ஆண்டில் வெற்றிப்பெற்றவர்.
  • முத்தியால்பேட்டை ப. சண்முகம்: புதுச்சேரி நகரமன்ற மேயராகவும், சட்டப்பேரவை தலைவராகவும் பதவி வகித்தவர். எம்.எல்.ஏ வாக வெற்றிப்பெற்றவர்.
  • சிதம்பர முதலியார்: வில்லியனூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • கு. முருகையன்: முத்தியால்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • மு. பாலசுப்பிரமணியன்: முத்தியால்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • டாக்டர் எஸ். ஆனந்தவேலு: முத்தியால்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
  • எஸ். செல்வகணபதி: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்.
  • வி. சுவாமிநாதன்:புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். புதுச்சேரி பாஜக கட்சி தலைவர்.
  • ஜோ. பிரகாஷ் குமார்: 2021 ஆம் ஆண்டில் சுயேட்சை வேட்பாளராக முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர்.
  • ஏ. மாரியப்பன் முதலியார்: சேலம் தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்.[110][111]
  • ஏ. கே. சி. சுந்தரவேல்: திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றவர்.[112]
  • டி. பி. ஆறுமுகம்: (வீரபத்திரன் கோத்திரம்)திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப்பெற்றவர். செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் நூறுவனர்.[113]
  • ஆதி சங்கர்: 2009 ல் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் இருந்தும், 1999 தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்தும் இரு முறை எம்.பி யாக வெற்றிப்பெற்றார்.
  • வி. சி. சந்திரகுமார்: ஈரோடு தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்.[114]
  • பி. செங்குட்டுவன்: வேலுர் தொகுதியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்.[115]
  • தா. மோ. அன்பரசன்: தமிழக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக முன்னால் அமைச்சர்.[116]
  • ஏ. பி. சக்த்திவேல்: சேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி) உறுப்பினர்.
  • சேவூர் ராமச்சந்திரன்(கடம்பராயான் கோத்திரம்), இவர்ஆரணி தொகுதியிலிருந்து உறுப்பினரானவர். இவர் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.[117][118]

இதையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செங்குந்தர்&oldid=3911217" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை