அமெரிக்க உள்நாட்டுப் போர்

அமெரிக்க உள்நாட்டுப்போர்

இடது மேல்: டெனெசியில், ஸ்டோன்ஸ் ஆற்றில் ரோஸ்கிரான்ஸ்; வலது மேல்: கெட்டிஸ்பர்க்கில் கூட்டமைப்புக் கைதிகள்; கீழ்: ஆர்க்கன்சாசில், ஹிண்ட்மான் துறைப் போர்
நாள்ஏப்ரல் 12 1861ஏப்ரல் 9 1865
இடம்முக்கியமாக தென் அமெரிக்க மாநிலங்களில்
ஐக்கிய அமெரிக்காவின் வெற்றி; மீளமைப்பு; அடிமை முறை ஒழிக்கப்பட்டது
பிரிவினர்

ஐக்கிய அமெரிக்க நாடுகள் ("ஐக்கிய அமெரிக்கா")

அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ("கூட்டமைப்பு")

தளபதிகள், தலைவர்கள்
ஆபிரகாம் லிங்கன்,
யுலிசீஸ் கிராண்ட்
ஜெபர்சன் டேவிஸ்,
ராபர்ட் ஈ. லீ
பலம்
2,200,0001,064,000
இழப்புகள்
110,000 போரில் சாவு,
360,000 மொத்த இறப்பு,[1]
275,200 காயம்
93,000 போரில் சாவு,
258,000 மொத்த இறப்பு,
137,000+ காயம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் (American Civil War, 1861–1865) அல்லது மாநிலங்களுக்கு இடையேயான போர் என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும், தென் மாநிலங்களில், ஜெபர்சன் டேவிஸ் என்பவர் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உள்நாட்டுப் போர் ஆகும்.[2]

வரலாறு

ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் சுதந்திர மாநிலங்களையும், அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது ஆபிரகாம் லிங்கனினதும் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் அடிமை முறை விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர்.[3]

குடியரசுக் கட்சியின் வெற்றி

இந்த உடன்பாடு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்கா மேற்கு நோக்கி அப்போது வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சில ஆண்டுகளில் புதிய மாநிலங்கள் ஒவ்வொன்றாக அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிதாய் இணைந்த மாநிலங்களில் பண்ணை அடிமைமுறையைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்குமிடையில் மறுபடியும் பிரச்சினைத் தோன்றியது. இந்த நிலையில்தான் அடிமைமுறையானது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்கிற கோட்பாட்டை வலியுறுத்தியவர் ஆப்ரஹாம் லிங்கன் ஆவார். 1860 இல் நிகழ்ந்த அமெரிக்கத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1861 இல் அமெரிக்கக் குடியரசின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. லிங்கன் தலைவரானால் தங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகுதியாகுமென்று ஏழு தென் மாநிலங்கள் அச்சப்பட்டன. அவை, லிங்கனை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. மேலும், அவை அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாகவும் தம்மை அறிவித்துக் கொண்டன. கூட்டமைப்பு (கான்ஃபெடரசி) என்ற பெயரில் நாடு ஒன்றை அத் தென் மாநிலங்கள் ஏற்படுத்திக் கொண்டன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வெளியிடப்பட்டது. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதாலும், ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதியதாலும், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ லீ ஆவார்.

போரின் போக்குகள்

கிழக்குப் பகுதியில் கூட்டமைப்பின் தளபதி ராபர்ட் ஈ. லீ (Robert E. Lee), ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். எனினும் 1863 ஜூலை மாதத்தில் கெட்டிஸ்பர்க் என்னுமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. விக்ஸ்பர்க் கையும் (Vicksburg), ஹட்சன் துறையையும் (Port Hudson) யுலிசீஸ் கிராண்ட் (Ulysses S. Grant) கைப்பற்றியதுடன் மிசிசிப்பி ஆற்றின் முழுமையான கட்டுப்பாடு ஐக்கிய அமெரிக்காவிடம் வந்தது. 1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, வர்ஜீனியாவின் ரிச்மண்ட்டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி வில்லியம் ஷெர்மன் (William Sherman) ஜோர்ஜியாவின் அட்லான்டாவைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற கடல் நோக்கிய படையெடுப்பைத் தொடங்கினார். 1865 ஏப்ரலில் ஆப்பொமாட்டக்ஸ் மாளிகையில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன.

போரின் விளைவுகள்

பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியில் சரணடைந்துவிட்டன. அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர்.வரலாற்று ஜான் ஹட்லெஸ்டோன் என்பவரின் கூற்று படி இறந்தவர்களில் அனைத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆண்களில் பத்து சதவீதம் 20-45 வயதுடையவர்கள் என்றும் தெற்கு மாகாண வெள்ளையின ஆண்களில் 30 சதவீதம் 18-40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன. மேலும், அமெரிக்க உள்நாட்டு போரே முதல் தொழில்துறை சார்ந்த போர் ஆகும்.இப்போரின் போது தான் ரயில்பாதைகள், தந்தி,நீராவி படகுகள், மற்றும் பெருமளவிலான தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கப்பல் கட்டுமிடங்கள், வங்கிகள், போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தி போன்ற பல தொழில்கள் விரிவு படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

ஒன்றியம் மற்றும் கூட்டமைப்பிற்கு இடையேயான ஒப்பீடு, 1860–1864
வருடம்ஒன்றியம்கூட்டமைப்பு
மக்கட்தொகை186022,100,000 (71%)9,100,000 (29%)
186428,800,000 (90%)[கு 1]3,000,000 (10%)[4]
தளையற்றவர்கள்186021,700,000 (81%)5,600,000 (19%)
அடிமைகள்1860400,000 (11%)3,500,000 (89%)
1864negligible1,900,000[கு 2]
சிப்பாய்கள்1860–642,100,000 (67%)1,064,000 (33%)
தொடருந்து வழித்தட மைல்கள்186021,800 (71%)8,800 (29%)
186429,100 (98%)[5]negligible
உற்பத்தியாளர்கள்186090%10%
186498%negligible
ஆயுத உற்பத்தி186097%3%
186498%negligible
பஞ்சுப் பொதிகள்1860negligible4,500,000
1864300,000negligible
ஏற்றுமதி186030%70%
186498%negligible

இழப்புகள்

இந்த போரின் விளைவாக குறைந்தபட்சம் 1,030,000 பேர் உயிரிழந்தனர் (இது மக்கள் தொகையில் 3 சதவிகிதம் ஆகும்), இதில் 620,000 சிப்பாய்கள் (மூன்றில் இரண்டு பங்கு சிப்பாய்கள் நோய்வாய்பட்டு இறந்தனர் ) மற்றும் 50,000 பொதுமக்கயும் இப்போரில் இறந்தனர். இப்போரின் முடிவில் இறப்பு எண்ணிக்கை சுமார் 750,000 ஆகும் என்று பிங்ஹாம்டன் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஜே. டேவிட் ஹக்கர் நம்புகிறார், பாரம்பரியமாக மதிப்பிடப்பட்டதைவிட 20 சதவிகிதம் அதிகமாகவும், 850,000 ஆக உயரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது.[6][7] மற்ற எந்த ஐக்கிய அமெரிக்கப் போர்களை விட இந்த உள்நாட்டுப் போரானது அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. [8]

1860 ஆம் ஆண்டைய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி 13 முதல் 43 வயதுடைய வெள்ளையர் ஆண்களில் 8 சதவீதம் பேர் போரில் இறந்தனர். இதில் 6 சதவீதம் வடக்கிலிருந்தும் 18 சதவீதம் தெற்கிலும் வசித்தவர்களாவர். [9][10] யுத்தத்தின் போது சிறை முகாம்களில் 56,000 படையினர் இறந்தனர்.[11] 60,000 ஆண்கள் போரில் தங்கள் கை கால்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.[12]

ஐக்கிய இராணுவத்தில் ​​பணியாற்றிய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான 15 சதவிகிதத்தினர் பின்வருமாறு இழப்புகளைச் சந்தித்தனர்.[13]

110,070 பேர் போரின் போது கொல்லப்பட்டனர் (67,000) அல்லது காயங்களால் 43,000 பேர் இறந்தனர் 199,790 பேர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். ( அதில் 75 சதவீதம் பேர் போரினால் ஏற்பட்ட நோயாலும், மீதமுள்ள மற்ற நோய்காரணிகளாலும் இறந்தனர்)24,866 பேர் கூட்டமைப்பு சிறை முகாம்களில் இறந்தனர்9,058 பேர் விபத்துகளால் அல்லது மூழ்கடித்தல் மூலம் கொல்லப்பட்டனர்15,741 மற்ற அல்லது வகைப்படுத்தப்பட முடியாத இறப்புகள்359,528 மொத்த இறப்புகள்கூடுதலாக கடற்படைகளில் 4,523 பேர் கொல்லப்பட்டனர் (போரில் 2,112) மற்றும் 460 கப்பற்படை வீரர்கள் (148 பேர் போரில்) இறந்தனர்

கூட்டமைப்பின் இறப்பு எண்ணிக்கைகளில் கருப்பினத் துருப்புக்கள் 10 சதவிகிதம் ஆவர். அவர்களில் 15 சதவிகிதம் நோயால் இறந்தனர் ஆனால் போரில் கொல்லப்பட்டவர்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே. ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே இழப்புகள் அதிகமாக இருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து இறப்புக்களில் இருந்தும், இராணுவத்தில் பதிவுசெய்யப்பட்ட ஏறத்தாழ 20 சதவீத ஆபிரிக்க அமெரிக்கர்கள் உள்நாட்டுப் போரின் போது தங்கள் உயிர்களை இழந்தனர்.[14]:16 குறிப்பிடத்தக்க வகையில், கருப்பின வீரர்களின் இறப்பு விகிதம் வெள்ளை வீரர்களைக் காட்டிலும் கணிசமாக உயர்ந்தது.

அடிமை முறை

19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் பலவும் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் இணைந்தன.

மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதி எல்லைகள், 1864–5.
   ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்
   ஐக்கிய அமெரிக்க ஆட்சிப்பகுதிகள்
   கேன்சஸ், கேன்சஸ் நெருக்கடிக்குப் பின்னர் சுதந்திர மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் சேர்ந்தது.
   அடிமை முறையை ஏற்றுக்கொண்ட ஐக்கிய அமெரிக்க எல்லை மாநிலங்கள்
   கூட்டமைப்பு
   கூட்டமைப்பினால் கோரப்பட்டுச் சில சமயங்களில் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகள்

குறிப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை