சாலமோன்

சாலமோன் (ஆங்கில மொழி: Solomon, எபிரேயம்: שְׁלֹמֹה(Shlomo), அரபு மொழி: سليمان‎(Sulaymān), கிரேக்க மொழி: Σολομών (Solomōn)) என்பவர் ஒன்றிணைந்த யூதா-இஸ்ரயேல் நாட்டின் அரசராக ஆட்சிசெய்தவரும் தாவீது அரசனின் மகனும் ஆவார்.

சாலமோன் அரசர்
இஸ்ரயேலின் அரசர்
முன்னிருந்தவர்தாவீது
பின்வந்தவர்ரெகபெயாம்
வாரிசு(கள்)ரெகபெயாம்
மரபுதாவீதின் வழி
தந்தைதாவீது
தாய்பத்சேபா
பிறப்புஎருசலேம்
இறப்புஎருசலேம்

விவிலியக் குறிப்புகள்

1 அரசர்கள், 1 குறிப்பேடு,[1] என்னும் விவிலிய நூல்கள் சாலமோனை ஒன்றிணைந்த யூதா-இசுரயேல் நாட்டின் அரசராக அடையாளம் காட்டுகின்றன. யூத சமய நூலாகிய தால்முத் சாலமோனை 48 இறைவாக்கினருள் ஒருவராகக் கருதுகிறது.[2] சாலமோன், தாவீது அரசருக்கும் பத்சபா என்னும் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்.[3] சாலமோனின் தந்தை தாவீது வட பகுதியாகிய இசுரயேலையும் தென் பகுதியாகிய யூதாவையும் வலுவான அரசாக மாற்றினார். அவருக்கு முன் சவுல் இசுரயேலின் முதல் அரசராக இருந்தார். இவ்வாறு, சாலமோன் ஒன்றிணைந்த அரசின் மூன்றாவது, மற்றும் கடைசி அரசர் ஆனார்.

சாலமோனின் ஆட்சிக்குப் பின் வட நாடு இசுரயேல் என்றும், தென்னாடு யூதா என்றும் தனித்தனியாகப் பிரிந்தன.

குர்ஆன் சாலமோனை முதன்மையான இறைவாக்கினராக சுலைமான் நபி கருதுகின்றது. சாலமோனுடைய ஆட்சிக்காலம் ஏறக்குறைய கி.மு. 970 முதல் கி.மு. 931 வரையென கணிக்கப்படுகின்றது.

சாலமோனின் சிறப்பு

சாலமோன் தன் நாட்டின் தலைநகராகிய எருசலேமில் கடவுளுக்கு புகழ்மிக்க கோவிலைக் கட்டினார். இது "முதல் கோவில்" (First Temple) என்று அழைக்கப்படுகிறது.[3]. மேலும், விவிலியம் சாலமோனைத் தலைசிறந்த ஞானி என்று சித்தரிக்கிறது. சாலமோனின் அறிவுத்திறனையும் புகழையும் கேள்விப்பட்டு, சேபா நாட்டு அரசி அவரைச் சந்தித்து விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார் (1 அரசர்கள் 10:1-13).

அரசர் சாலொமோனை சேபா அரசி சந்தித்தல். 17ஆம் நூற்றாண்டு ஓவியம். ஆன்ட்வெர்ப், ஒலாந்து.

சாலலொமோனின் ஆட்சியின்போது புகழ்மிக்க பல கட்டடங்கள் எழுப்பப்பட்டன.

சாலமோன் ஆட்சிக்காலத்தில் நாட்டில் அமைதி நிலவியது. செல்வம் கொழித்தது. ஆயினும் விவிலியத்தின்படி, சாலமோன் யாவே என்னும் உண்மைக் கடவுளின் வழிபாட்டை மறந்து, தம் மனைவியரின் தெய்வங்களை வழிபட்டார்; சிலைவழிபாட்டை ஆதரித்தார். இதனால் கடவுள் அவரைத் தண்டித்தார்.[4]

சாலமோனின் வாரிசு

சாலமோனின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் ரெகபெயாம் ஆட்சி செய்தார் என்று விவிலியம் கூறுகிறது (1 அரசர்கள் 11:43). சாலமோன் வழிமரபில் வந்த யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார்.

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாலமோன்&oldid=2928036" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை