சிவெர்த்லோவ்சுக் மாகாணம்

சிவெர்த்லோவ்சுக் மாகாணம் (Sverdlovsk Oblast, உருசியம்: Свердло́вская о́бласть, சிவெர்த்லோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது உரால் நடுவண் மாவட்டத்தைச் சேர்ந்தது. இதன் நிர்வாக மையம் எக்கத்தரீன்பூர்க் (முன்னர் சிவெர்த்லோவ்சுக் என்று அறியப்பட்டது). இதன் மக்கள்தொகை 4,297,747 ஆகும். (2010 கணக்கெடுப்பின்படி)[5]

சிவெர்த்லோவ்சுக் மாகாணம்
Sverdlovsk Oblast
மாகாணம்
Свердловская область
சிவெர்த்லோவ்சுக் மாகாணம் Sverdlovsk Oblast-இன் கொடி
கொடி
சிவெர்த்லோவ்சுக் மாகாணம் Sverdlovsk Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்உரால்[1]
பொருளாதாரப் பகுதிஉரால்[2]
நிர்வாக மையம்எக்கத்தரீன்பூர்க்
அரசு
 • நிர்வாகம்சிவெர்த்லோவ்சுக் சட்டமன்றம்
 • ஆளுநர்எவ்கேனி கைவாசெவ்[3]
பரப்பளவு[4]
 • மொத்தம்1,94,800 km2 (75,200 sq mi)
பரப்பளவு தரவரிசை17வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5]
 • மொத்தம்42,97,747
 • Estimate (2018)[6]43,25,256 (+0.6%)
 • தரவரிசை5வது
 • அடர்த்தி22/km2 (57/sq mi)
 • நகர்ப்புறம்83.9%
 • நாட்டுப்புறம்16.1%
நேர வலயம்[7] (ஒசநே+5)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-SVE
அனுமதி இலக்கத்தகடு66, 96, 196
அலுவல் மொழிகள்உருசியம்[8]
இணையதளம்http://www.midural.ru/

புவியியல்

இந்த ஒப்ளாஸ்து பெரும்பாலான மத்திய மற்றும் வட யூரல், கிழக்கு சரிவுகளில் முழுவதும் பரவி மேற்கு சைபீரிய பகுதியினுள் அடங்கியதாக உள்ளது. உரால் மலைகள்உரல் மலைகளின் தென்மேற்கில் உள்ள மேற்கு சரிவுகளில் மீது இந்த ஒப்ளாஸ்ட் பரவியுள்ளது.இதன் உயர்ந்த மலைகள் என்பது வட உரால் மலைப்பகுதியில் உள்ள கொன்சாகோவ்சுகி கமென் உயரம் 1,569 மீட்டர் (5,148 அடி), டென்சிகின் கமென் இதன் உயரம் 1,492 மீட்டர் (4,895 அடி). மத்திய யூரலில் கவனிக்கத்தக்க சிகரங்கள் இல்லை என்றாலும் பெரும்பாலும் மலைப்பாங்கான நாடு; சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 300 இல் இருந்து 500 மீட்டர் (980 முதல் 1,640 அடி) வரை இருக்கிறது. முதன்மையான ஆறுகள் தவாடா, துரா, சுசோவாயா, மற்றும் யூஃபா , பிந்தைய இரண்டு ஆறுகள் காமா ஆற்றின் கிளை ஆறுகள் ஆகும்.இந்த ஒப்லாஸ்து தன் எல்லைகளாக, மேற்கில் இருந்து கடிகார சுற்றில் பேர்ம் பிரதேசம், கோமி குடியரசு, கான்டி-மான்ஸி தன்னாட்சி வட்டாரம், தியூமென் ஒப்லாஸ்து, குர்கன் ஒப்லாஸ்து, செல்யபின்ஸ்க் ஒப்லாஸ்து , பாஷ்கொர்டொஸ்தான் ஆகியவை உள்ளன.

இயற்கை வளங்கள்

இந்த ஒப்லாஸ்து இயற்கை வளங்கள் நிறைந்துள்ளது குறிப்பாக உலோகங்களுக்கு பிரபலமானது ( இரும்பு , தாமிரம் , தங்கம் , பிளாட்டினம் ), கனிமங்கள் ( கல்நார் , இரத்தினக்கற்கள் , டால்க் ,பளிங்கு, நிலக்கரி ). இதனால் இங்கு பெரும்பாலும் உரசயன் தொழில் நிறுவனங்கள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து நிலைபெற்றுள்ளன.

காலநிலை

இப்பகுதி கோப்பென் காலநிலை வகைப்பாடுக்கு உட்பட்ட காலநிலை கொண்டது. நீண்ட குளிர்காலத்தைக் கொண்டது, (சராசரி வெப்பநிலை -15 டிகிரி செல்சியஸ் (5 ° பாரங்கீட்) முதல் -25 டிகிரி செல்சியஸ் (-13 ° பாரங்கீட் ) வரை மேற்கு சைபீரிய சமவெளிப்பகுதி காலநிலை) மற்றும் குறுகியகால சூடான கோடை. ஒப்ளாஸ்துவின் தென்கிழக்கில் மட்டும் வெப்பநிலை சூலை மாதத்தில் +13 டிகிரி செல்சியஸ் (55 ° பாரங்கீட்) வரை அடையும்.

வரலாறு

முதல் உருசியக் குடியேற்றம் இப்பகுதியில் வருவதற்கு முன், இப்பகுதியில் துருக்கிய மற்றும் அக்ரிக் பழங்குடியினரே வாழ்ந்துவந்தனர். மத்திய யூரல் பகுதி 16 ஆம் நூற்றாண்டில், டாடர் கான்டிகளின் வலிமையான உள்நாட்டு அரசின் ஆட்சிப்பகுதியாக இருந்ததுஉருசியப் பேரரசு 1550களில் இப்பகுதியின் கிழக்கை வெற்றி கொண்டது. 16 நூற்றாண்டடில் இருந்து 17ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்திக்குள் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் உருசியா வெற்றிகொண்டு தன் குடியேற்றங்களை நிறுவியது.

மக்கள் வகைப்பாடு

இப் பகுதியின் மக்கள் தொகை: 4,297,747 ( 2010 கணக்கெடுப்பு ); 4,486,214 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 4,716,768 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

இன குழுக்கள்இந்த ஒப்ளாஸ்து அல்கீகரிக்கப்பட்ட இருபத்தோரு இனக்குழு மக்களைக் கொண்டுள்ளது ஒவ்ஒரு இனக்குழுவிலும் குறைந்தது இரண்டாயிரம் பேர்வரை இருக்கிறார்கள். இதில்148 பல்வேறு இன குழுக்கள் மொத்தம் சேர்ந்துள்ளன.[5]

  • 3.684.843 உருசியர்கள் (90.6%);
  • 143.803 தத்தார்கள் (3.5%);
  • 35.563 உக்ரைனியர்கள் (0.9%);
  • 31.183 பாஷ்கிரர்கள் (0.8%);
  • 23.801 மாரி (0.6%);
  • 14.914 செருமனியர்கள் (0.4%);
  • 14.215 அசர்பைசன்கள் (0.3%);
  • 13.789 உட்முர்துகள் (0.3%);
  • 11.670 பெலருசியர்கள் (0.3%);
  • 11.510 சுவாஷ் (0.26%);
  • 11.501 ஆர்மேனியர்கள் (0.3%);
  • 11.138 தஜிக்குகள் (0.3%);
  • 9.702 மோர்தோவியர்கள் (0.22%);
  • 9.358 உசுபெக்குகள் (0.2%);
  • 232.978 மக்கள் நிர்வாக தரவுத்தளங்களில் தங்கள் இனம் குறித்து அறிவிக்கவில்லை.[9]
  • பிறப்பு (2011): 58.054 [10]
  • இறப்பு (2011): 60.740

2012 முதன்மை புள்ளிவிபரல்கள்

  • பிறப்பு: 61 451 (1000 ஒன்றுக்கு 14.3)
  • இறப்பு: 59 913 (1000 ஒன்றுக்கு 13.9) [14]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்: [15]

2009 - 1.64 | 2010 - 1.67 | 2011 - 1.70 | 2012 - 1.83 | 2013 - 1.87 | 2014 - 1.92 (இ)

சமயம்

2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[11][12] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 43% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 5% திருச்சபைகளின் இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர் , 3% முசுலீம்கள், 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள். 1% ஸ்லாவிக் நாடடுப்பற மதத்தினர், 0.3% இந்து மதத்தினர், 36% மக்கள் "ஆன்மீக,மத நாட்டம் அற்றவர்கள்" என்று கருதுபவர்கள், 9.7% நாத்திகர்.[11]

பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து

இப்பகுதி அதி நவீனமயமாக்கப்படடு உள்ளது. இப்பகுதியில் உள்ள இரும்பு, எஃகு தொழிற்துறை ரஷ்யாவின் இரும்பு மற்றும் எஃகு தொழிற்துறையில் 12% கொண்டுள்ளது. மேலும் இந்த ஒப்ளாஸ்து பகுதியில் இரும்பு மற்றும் செம்பு வெட்டியெடுக்கப்படுகிறது. மற்றும் இங்கே செய்யப்படும் மர வேலைகள் குறிப்பிடத்தக்கது ஆகும்.யேகாடெரின்பர்க் யூரல் பகுதியின் ஒரு முதன்மையான சாலை, தொடர்வண்டி விமான மையமாக விளங்குகிறது. பொருளாதாரச் சரிவில் இருந்து மீண்டவுடன் பல ஐரோப்பிய விமான நிறுவனங்கள் நகரங்களை இணைக்கும் விமானங்களை மீண்டும் துவங்கியது. இந்த பகுதியில் சேவை வழங்கும் விமான நிறுவனங்கள் சில லுஃப்தான்சா , பிரித்தானிய ஏர்வேஸ் , செக் வான்சேவை நிறுவனம், துர்கிஸ் ஏர்லைன்ஸ், ஆஸ்திரேலிய ஏர்லைன்ஸ்,பின்னையர், மால்வ் அங்கேரியன் ஏர்லைன்ஸ் போன்றவை ஆகும்.அலபாயேவிஸ் குறுகிய இரயில் பாதை இரயில்வே அலபாயேவிஸ்க் பிராந்தியம் முழுவதும் மக்கள் பயணப்பட அலபாயேவிஸ்க் உதவுகிறது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை