செபாக் டக்ரோ

செபாக் டக்ரா (மலாய்/இந்தோனேசியம்: Sepak takraw) தென்கிழக்கு ஆசியாவில் விளையாடும் விளையாட்டு ஆகும். தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, லாவோஸ், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது. பிலிப்பீன்ஸில் "சிபா", தாய்லாந்தில் "டக்ரா", லாவோஸில் "க-டாவ்" அல்லது "துக் தய்" என்று இந்த விளையாட்டு அழைக்கப்படுகிறது. இதன் போட்டி விதிகள் வாலிபால் போன்றவை; ஆனால் கையால் பந்தை தொடமுடியாது.

செபாக் டக்ரா விளையாடும் ஒரு சிறுவன்

வரலாறு

சீனாவின் ட்சூஜு (蹴鞠, cùjú) விளையாட்டிலிருந்து செபாக் டக்ரா 15ம் நூற்றாண்டில் பிறந்தது. பேங்காக் நகரத்தில் வாட் ஃப்ரா கேவ் கோயிலின் சில சுவர்களில் ஹனுமான் வேறு குரங்குகளுடன் செபாக் டக்ரா விளையாடும் ஓவியங்கள் உள்ளன. ஆரம்பத்தில் வட்ட மைதானத்தில் விளையாடப்பட்ட செபாக் டக்ராவுக்கு 1866 இல் தாய்லாந்தில் சயாம் விளையாட்டுச் சங்கத்தினர் முதற் தடவைவையாக விதிகளை எழுதினார்கள்.

ஆடுதளத்தின் அளவுகள்

செபாக் டக்ரா ஆடுதளத்தின் படிமம்

ஒரு செபாக் டக்ரா ஆடுதளம் 13.4 மீட்டர் நீளம், 6.1 மீட்டர் அகலம் அளவு ஆகும். நடுவில் 1.52 மீட்டர் உயரமான வலை இருக்கும்.

பந்து

செபாக் டக்ரா பந்து ரப்பர் அல்லது பிரம்பால் கோள் வடிவத்தில் செய்யப்படும்.

ஆட்டம்

இரண்டு அணிகள் ஒரே நேரத்தில் விளையாடும். ஓர் அணியில் மூன்று ஆட்டக்காரர்கள் இருப்பர்; ஒருவர் பின் பக்கம் இருப்பார், அவர் "டெகொங்" (Tekong) என்றழைக்கப்படுவார். மீதி இருவர் வலைக்கு அருகில் இருப்பார்கள்; இவர்கள் "வலது உள்பக்கம்" (Right inside), "இடது உள்பக்கம்" (Left inside) என்றழைக்கப்படுவார்கள். டெகொங் "சர்விஸ்" செய்வார்.

ஒரு பந்து உதைத்து வலை மேல் போய் வேறு அணி பக்கம் போகவில்லைனால் அந்த அணி ஒரு "தப்பு" (Fault) பெறும்; தப்பு செய்தால் எதிர் அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். எந்த அணி முதலாக 21 புள்ளிகள் பெறுமோ அந்த அணி ஒரு கணம் (Set) வெற்றிபெறும். ஒரு போட்டியில் இரண்டு கணங்கள் உள்ளன; இரண்டு கணங்களும் ஒரே அணி வெற்றிபெற்றால் அந்த அணி போட்டியை வெற்றிபெறும். இரண்டு அணிகளும் ஒரே கணம் வெற்றிபெற்றால் Tiebreak கணம் நடைபெறும். இந்த கணத்தில் எந்த அணி முதலாக 15 புள்ளிகள் பெறுமோ அந்த அணி போட்டியை வெற்றிபெறும்.

பன்னாட்டுப் போட்டிகள்

இன்றைய பன்னாட்டு செபாக் டக்ரா போட்டிகளை பன்னாட்டு செபாக் டக்ரா கூட்டமைப்பு ஒழுங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தாய்லாந்தில் அரசர் கோப்பை உலகப் போரேறிப்பு நடைபெறுகிறது. இது தவிர ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 1990 முதல் இந்த விளையாட்டு நடைபெறுகிறது.

பங்கேற்கும் நாடுகள்

பன்னாட்டு செபக் டெக்ரா கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆசியா
அமெரிக்கக் கண்டங்கள்

ஐரோப்பா

ஆப்பிரிக்கா
ஓசியானியா
மையக் கிழக்கு
மைய ஆசியா
கிழக்காசியா

கூட்டமைப்பு நாடுகள்

உறுப்பினர்கள்

ஐரோப்பா

ஆசியா

அமெரிக்காக்கள்

ஓசியானியா

ஆப்பிரிக்கா

பசிபிக் கோப்பை கூட்டமைப்பு

உறுப்பினர்கள்

வெளி இணைப்புக்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செபாக்_டக்ரோ&oldid=3501711" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை