பனாமா ஆவணங்கள்

பனாமா ஆவணங்கள் (Panama Papers) என்பது பனாமாவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேக்கா என்ற நிறுவனத்திலிருந்து கசிய வைக்கப்பட்ட 1.5 மில்லியன் இரகசிய ஆவணங்களைக் குறிக்கும். இந்த ஆவணங்களை வாசிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் கசிந்து வைத்து பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.[2]

இதுவரையான இரகசிய ஆவணங்கள் கசிவு மூலம் தொடர்புபட்ட அரசியல்வாதிகள், பொது அதிகாரிகள், பிரமுகர்களைக் கொண்ட நாடுகள்.[1]

இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.[3]

கசிவின் தாக்கங்கள்

  • ஐசுலாந்து பிரதமரின் மனைவி வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததுடன் தங்கள் நாட்டின் பொருளாதார சீரழிவை ஏற்படுத்திய வங்கிகளுடன் தொடர்புபடுத்தி கசிந்த பனாமா ஆவணங்கள் செய்தியால் பதவி விலகினார்.[4]
  • சிலியின் ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவர் கான்சாலசு மேலேவ்வு அவரின் பெயர் பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால் பதவி விலகினார்.
  • பாக்கித்தான் அதிபர் நவாசு செரிப் தன் மகன்கள் உள்ளிட்ட குடும்பம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் உள்ள தொடர்பை விசாரிக்க நீதிபதிகள் தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
  • பெரு நிறுவனங்கள் செய்யும் வரி ஏய்ப்பு குறித்த விசாரணைக்கு உதவாத நாடுகளின் பட்டியலை பிரான்சு பனாமாவுக்கு அனுப்பியுள்ளது.
  • கசிந்த ஆவணங்களை கொண்டு ஐக்கிய அமெரிக்க நீதி துறை அமைச்சகம் சில நிறுவனங்கள் மீது ஐக்கிய அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு போட சாட்சியங்களை ஆராய்கிறது.
  • பனாமா அதிபர் தன்னுடைய அரசு முறைகேடான நிதி பரிமாற்றங்களுக்கு எதிராக துளியும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் எந்த நாடு விசாரணை நடத்தினாலும் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.[5]
  • தன் தந்தையின் வெளிநாட்டு முதலீடுகளில் தனக்கும் பங்கு இருந்தது என்று ஐக்கிய இராச்சிய பிரதமர் தேவித் கேமரன் கூறினார்.[6]
  • உருசிய அதிபர் புதின் தன் கூட்டாளிகள் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார் என்பதை மறுத்துள்ளார்.[7][8]
  • அர்கெந்தீனா அதிபர் மாரிசியோ மக்ரி பகாமாசு தீவில் உள்ள தீவின் நிறுவனத்தின் இயக்குநர் என்ற குற்றச்சாட்டால் அரசு வழக்கறிஞர் அவரின் நிதி பரிமாற்றங்குள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளார்.[9]
  • சீன தலைவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் பெரும் பதுக்கியது தெரியவந்துள்ளது. சீ சின்பிங் உட்பட தற்போது பதவியிலுள்ள மூன்று தலைவர்கள் பதவியிலில்லாத நான்கு தலைவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.[10]
  • எல் சால்வடோர் அதிகாரிகள் தங்கள் நாட்டிலுள்ள மொசாக் பொன்சேக்கா நிறுவனத்தை சோதனையிட்டு பல ஆவணங்களையும் கணினிகளையும் விசாரணைக்காக கவர்ந்து சென்றார்கள்.[11]

வங்கிகள்

எச் எசு பி சி, இசுக்காட்லந்து ராயல் வங்கி, கிரெடிட் சூசி போன்ற பன்னாட்டு வங்கிகளுக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளது என தெரியவந்துள்ளது. இவ்வங்கிகள் அதிகாரிகளால் எளிதில் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கு முடியாதபடி சிக்கலான முறையை ஏற்படுத்தி கொடுத்தன என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை இவ்வங்கிகள் மறுத்துள்ளன.[12]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பனாமா_ஆவணங்கள்&oldid=2718625" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை