டேவிட் கேமரன்

டேவிட் வில்லியம் டொனால்ட் கேமரன் (David William Donald Cameron, பிறப்பு 9 அக்டோபர், 1966) மே 11, 2010 முதல் சூலை 13, 2016 வரை ஐக்கிய இராச்சியத்தின் பிரதம அமைச்சராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பிலிருந்த பிரித்தானிய அரசியல்வாதியாவார். ஐக்கிய இராச்சியத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. கேமரன் விட்னி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார்.

டேவிட் கேமரன்
எம்.பி.
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
பதவியில்
11 மே 2010 – 13 சூலை 2016
ஆட்சியாளர்இரண்டாம் எலிசபெத்
Deputyநிக் கிளெக்
முன்னையவர்கோர்டன் பிரவுன்
பின்னவர்தெரசா மே
ஐக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
6 டிசம்பர் 2005 – 11 மே 2010
ஆட்சியாளர்எலிசபெத் II
பிரதமர்டோனி பிளேர்
கோர்டன் பிரவுன்
முன்னையவர்மைக்கல் ஹவார்ட்
பின்னவர்ஹரியட் ஹார்மன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 அக்டோபர் 1966 (1966-10-09) (அகவை 57)
லண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிகன்சர்வேட்டிவ்
துணைவர்சமந்தா
பிள்ளைகள்ஐவன் (2002-2009)
நான்சி (பி. 2004)
ஆத்தர் (பி. 2006)
வாழிடம்10 டவுனிங் வீதி
முன்னாள் கல்லூரிபிரேஸ்னோஸ் கல்லூரி, ஆக்ஸ்போர்ட்
இணையத்தளம்கன்சர்வேட்டிவ் கட்சி இணையத்தளம்

பிரதம மந்திரி

11 மே 2010 ல், கார்டன் பிரவுன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அவரது பரிந்துரையின் பேரில் இரண்டாம் எலிசபெத், டேவிட் கேமரூனை அரசாங்கம் அமைக்க அழைத்தார்.[1] மீண்டும் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவி வகிக்கிறார்.[2]

யாழ்ப்பாணத்திற்கு வரலாற்றுப் புகழ் மிக்க பயணம்

1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை அடைந்த பின்னர், ஈழப்போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வட மாகாணத் தலைநகர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட முதலாவது உலகத் தலைவர் கேமரன் ஆவார்.[3][4][5]

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளவென கொழும்பு சென்றிருந்த டேவிட் கேமரன் 2013 நவம்பர் 15 இல் யாழ்ப்பாணம் சென்றார். வட மாகாண முதலமைச்சர் க. வி. விக்னேசுவரனை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் சந்தித்து உரையாடினார். பின்னர் இரா. சம்பந்தன் உட்பட பல தமிழ்த் தலைவர்களை சந்தித்தார். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், மற்றும் போரினால் இடம்பெயர்ந்தவர்களையும் அவர் சந்தித்து உரையாடினார்.[3][4][5]

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகைக் காரியாலயத்துக்குச் சென்றிருந்த கேமரன், பத்திரிகை ஆசிரியர் மற்றும் பணியாளர்களை சந்தித்து உரையாடினார். 2005 ஆம் ஆண்டு முதல் இப்பத்திரிகைக் காரியாலயம் பல முறை எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் வந்துள்ளது. ஊழியர்கள் ஐவர் படுகொலை செய்யப்பட்டனர்.[3][4][5]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டேவிட்_கேமரன்&oldid=3858739" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை