பாலினப் பாத்திரம்

பாலினப் பாத்திரம் (gender role) அல்லது பாலியல் பாத்திரம் (sex role),[1] என்பது உயிரியல் அல்லது இயல்புப் பாலினம் சார்ந்த மக்களின் ஏற்புடையதும் தகுந்ததும் விரும்பப்படுவதுமான நடத்தைகளையும் உளப்பாங்குகளையும் உள்ளடக்கிய சமூகப் பாத்திரம் ஆகும்.[2][3] பாலினப் பாத்திரங்கள் வழக்கமாக ஆண்மை, பெண்மை சார்ந்த கருத்தினங்களை மையப்படுத்தியே அமைகின்றன;[2] என்றாலும் மூன்றாம் பாலினமும் பிற விதிர்பாலின வேறுபாடுகளும் கருதப்படுவதில்லை. இந்தப் பாலின் எதிர்பார்ப்புகளின் தனித்தன்மைகள், பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டாலும், பிற பொது நடத்தைகள் அனைத்துப் பண்பாடுகளிலும் பொதுவாகவே உள்ளன. இவ்வகை பாலினப் பாத்திரங்களும் அவற்றின் வேறுபாடுகளும் மாந்தரில் எவ்வளவுக்கு உயிரியலாகவும் எவ்வளவுக்குச் சமூகப் புனைவுகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன என்பது தொடர்விவாத்திலேயே உள்ளது.

மரபுசாரா பாலினப் பணிகளில் ஆண்களும் பெண்களும், மேல் இடதில் இருந்து கீழ் வலது வரை அல்லது மேல் இருந்து கீழாக (நகர்பேசி): ஓர் ஆண் செவிலியர், ஓசுலோ, நார்வேராப்கானித்தானத் தேசியக் காவலரணியில் உறுதியேற்கும் பெண்; கட்டுமான வேலைசெய்யும் பெண், சாலமன் தீவுகள், ஐக்கிய அமெரிக்கா, கொலராடோ சுப்பிரிங்சுவில் ஆண் மழலையர்பள்ளி ஆசிரியர் விளையாட்டு கற்பித்தல்

பல்வேறு பெண்ணிய இயக்கங்கள் நிலவும் பாலினப் பாத்திரங்கள் ஒடுக்குதலை நோக்கமாகக் கொண்டவை எனவும் துல்லியமற்றவை எனவும் கருதுகின்றன.

பாலினப் பாத்திரம் எனும் சொல்லை முதன்முதலில் 1954 இல் ஜான் மோனியும் அவரது குழுவினரும் பயன்படுத்தினர். உயிரியலான வேறுபாடு நிலவாத சூழலில் தனியர்களின் பாலுறவை தீர்மானிப்பத்தில் ஆண்பாத்திரம் ஏற்கிறார்களா அல்லது பெண்பாத்திரம் ஏற்கிறார்களா என்பதை அவர்களது பாங்குகளைவைத்து கண்டறியும் ஆய்வில் பாலினப் பாத்திரம் எனும் சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தினர்.[4]

பின்னணி

உலக நலவாழ்வு நிறுவனம் "பாலினப் பாத்திரங்களை ஆண்கள் அல்லது பெண்களுக்கு தகுந்ததெனச் சமூகத்தால் புனையப்பட்ட பாத்திரங்களாகவும் நடத்தைகளாகவும் செயல்பாடுகளாகவும் உளப்பாங்குகளாகவும் வரையறுக்கிறது".[5] இவ்வகை பாலினப் பாத்திரங்களும் அவற்றின் வேறுபாடுகளும் மாந்தரில் எவ்வளவுக்கு உயிரியலாகவும் எவ்வளவுக்குச் சமூகப் புனைவுகளாலும் (உயிரியல் சாராமலும்) தீர்மானிக்கப்படுகின்றன என்பது தொடர்விவாத்திலேயே உள்ளது. சமூகப் புனைவு என்பது தற்போக்கானதும் கட்டமைக்கவியன்றதும் ஆகும்.[6][7][8][9][10] எனவே, பாலின் அல்லது பாலினப் பாத்திரத்தை தெளிவான சான்றோடு வரையறுக்கவியலாமற் போகிறது.

பாலினச் சமூகவியலில், சமூகத்தில் ஒரு தனியர் தன் பாலினப் பாத்திரத்தைக் கற்றுத் தன்மயமாக்கும் நிகழ்வைப் பாலினச் சமூகமயமாக்கம் என்பர். [11][12][13]

பாலினப் பாத்திரங்கள் பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபடுபவை என்றாலும் பெருபாலான பண்பாடுகள் சிறுவன், சிறுமி அல்லது ஆண், பெண் எனும் இரு பாலினங்களை மட்டுமே ஏற்கின்றனர்.ரெடுத்துகாட்டாக, ஆணொருபாகியை (Androgyny) மூன்றாம் பாலினமாகவே முன்வைக்கின்றனர்.[14] ஆணொருபாகிகள் ஆண்சார் பண்புகளையும் பெண்சார் பண்புகளையும் கொண்டுள்ளனர். சில சமூகங்கள் ஐந்துவகைப் பாலினங்கள் அமைவதாக கூறுகின்றனர்;[15][16] மேற்கத்தியச் சமூகங்கள் அல்லாத சில சமூகங்கள் மூன்று பாலினங்களை அத்தாவது ஆண், பெண், மூன்றாம் பாலினம் ஆகியவற்றை ஏற்கின்றனர்.[17] சில தனியர்கள் தமக்குப் பாலின இல்லை என அடையாளப் படுத்துகின்றனர்.[18]

பல பெயர்பாலினர்கள் தம்மை மூன்றாம் பாலினமாக ஏற்காமல் ஆண் அல்லது பெண்ணாகவே அடையாளப்படுத்துகின்றனர்.[19]என்றாலும், சில குறிப்பிடதக்க சூழல்களில், குறிப்பாக விளையாட்டுக் கள நிலைமைகளில், பெயர்பெண்கள், இயற்பாலினப் பெண்கள் இடையில் அமையும் உயிரியலான வேறுபாடுகளே வாய்ப்பு வேற்பாடுகளைப் பெற்றுள்ளதால் வரலாற்றியலாக அவை பொருத்தமானவையாகவே கொள்ளப்படுகின்றன.[20]

பாலின வகைபாட்டின்படி பண்பாட்டு எதிர்பார்ப்புகளைச் சுட்டும் பாலினப் பாத்திரம், ஒருவர் தன்னைப் பற்றி உணர்தலைச் சுட்டும் பாலின அடையாளம் அன்று. பாலின அடையளம் சமூக வரன்முறைகளோடு ஒத்த்தோ மாறாகவோ அமையலாம். இந்த தன்னுணர்வுப் பாலின அடையாளங்கள் எதிர்பார்ப்புகளின் தொகுப்பாகப் புறநிலையில் வெளிப்படும் புள்ளியில் அல்லது நிலையில் பாலினப் பாத்திரங்கள் உருவாகின்றன.[21][22]

பாலினம்சார் சமூகப் புனைவுக் கோட்பாடுகள்

பாலின சமூகமயவாக்கத்தல் மாறும் வரன்முறைகள்

: 1712 இல் பதினைந்தாம் உலூயிசு அணிந்த வழக்கமான ஆண்பிள்ளை உடைகள், 21 ஆம் நூற்றாண்டில் மாற்றுப் பாலின உடையாகக் கருதப்படும்.]]

சமூகப் புனைவுக் கோட்பாட்டாளர்கள் பாலின நடத்தை பெரும்பாலும் மரபுகள் சார்ந்தனவே எனக் கருதுகின்றனர். ஆனால், இக்கருத்தைப் படிமலர்ச்சி உளவியல் கோட்பாட்டளர்கள் மறுக்கின்றனர்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gender
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாலினப்_பாத்திரம்&oldid=3711238" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை