பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம்


பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம் (Blackburn Rovers F.C.) என்பது இங்கிலாந்தின் "பிளாக்பர்ன்", லங்காஷைர், நகரில் அமைந்துள்ள தொழில்முறை கால்பந்துக் கழகமாகும். இக்கழகம் 1875-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2011-12-ஆம் பருவத்தில் பிரீமியர் லீக்கிலிருந்து தரக்குறைப்பு செய்யப்பட்ட பிறகு, இங்கிலாந்தின் இரண்டாம் நிலை கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான "சாம்பியன்ஷிப்"பில் ஆடிவருகிறது.

பிளாக்பர்ன் ரோவர்ஸ்
முழுப்பெயர்பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம்
அடைபெயர்(கள்)Rovers
The Blue and Whites
The Riversiders[1]
தோற்றம்1875; 149 ஆண்டுகளுக்கு முன்னர் (1875)
ஆட்டக்களம்எவுட் பார்க், பிளாக்பர்ன்,
லங்காஷைர்
ஆட்டக்கள கொள்ளளவு31,367
உரிமையாளர்Venky's London Ltd. (99.9%)
DirectorMike Cheston
மேலாளர்ஓவன் காய்ல் (Owen Coyle)
கூட்டமைப்புFootball League Championship
2015–16 Football League Championshipசாம்பியன்ஷிப், 15-ஆம் இடம்
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
Current season

1888-இல் இங்கிலாந்து கால்பந்துக் கூட்டிணைவுத் தொடர் தொடங்கப்பட்டபோது அதன் நிறுவன-உறுப்பினராகவிருந்தது; மேலும், இங்கிலாந்தின் கால்பந்துக் கூட்டிணைவு மற்றும் பிரீமியர் லீக் ஆகிய இரண்டிலும் நிறுவன-உறுப்பினராகவிருந்த மூன்று கால்பந்துக் கழகங்களுள் இதுவும் ஒன்றாகும்; மற்ற இரண்டு கழகங்கள் - அஸ்டன் வில்லா மற்றும் எவர்டன்.

பிளாக்பர்ன் நகரில் அமைந்திருக்கும் "எவுட் பார்க்" மைதானத்தில் 1890-ஆம் ஆண்டிலிருந்து தமது அமைவிடப் போட்டிகளை ஆடிவருகிறது. இக்கழகம் 3 கூட்டிணைவுத் தொடர் வாகைப் பட்டங்களையும் (இரண்டு முதல்நிலை கூட்டிணைவுத் தொடர் வாகையர் மற்றும் ஒரு பிரீமியர் லீக் வாகையர் பட்டம்), 6 எஃப் ஏ கோப்பைகளையும், 1 கால்பந்து கூட்டிணைவுக் கோப்பையையும் வென்றுள்ளது.[2] மேலும், எஃப் ஏ கோப்பையை மூன்று முறை தொடர்ச்சியாக வென்ற ஒரே கால்பந்துக் கழகம் பிளாக்பர்ன் ரோவர்சே ஆகும்.

பிரீமியர் லீக் வாகைப் பட்டம் சூடிய ஆறு கால்பந்துக் கழகங்களுள் பிளாக்பர்ன் ரோவர்சும் ஒன்றாகும். மற்றையவை: மான்செஸ்டர் யுனைடெட் (13), செல்சீ (4), ஆர்சனல் (3), மான்செஸ்டர் சிட்டி (2) மற்றும் லெஸ்டர் சிட்டி (1).

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை