மார்ட்டின் ஸ்கோர்செசி

அமெரிக்க திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர்

மார்ட்டின் சி. ஸ்கோர்செசி [1] (Martin C. Scorsese) (1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 அன்று பிறந்தவர்) ஒரு அமெரிக்க திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரை வரலாற்றாசிரியர். அவர் உலக திரைப்பட நிறுவனம் என்பதன் நிறுவனர் ஆவார். திரைப்படத்திற்குத் தாம் அளித்த பங்களிப்பிற்காக ஏஎஃப்ஐயின் வாழ்நாள் விருதினை அவர் பெற்றுள்ளார். ஆஸ்கார், கோல்டன் குளோப், பாஃப்தா மற்றும் அமெரிக்காவின் இயக்குனர் கழகம் ஆகியவற்றின் விருதுகளையும் வென்றுள்ளார். ஸ்கோர்செசி திரைப்பட அறக்கட்டளை என்னும் திரைப்படக் காப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனம் ஒன்றின் தலைவரும் ஆவார்.

மார்ட்டின் ஸ்கோர்செசி

திரிபெக்கா திரைப்பட விழாவில் மார்ட்டின் ஸ்கோர்செசி, 2007
இயற் பெயர்மார்ட்டின் சி. ஸ்கோர்செசி
Martin C. Scorsese
பிறப்புநவம்பர் 17, 1942 (1942-11-17) (அகவை 81)
Queens, New York, U.S.
தொழில்நடிகர், இயக்குநர், உருவாக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
நடிப்புக் காலம்1963–present
துணைவர்லாரெய்ன் மேரி பிரென்னன்
Laraine Marie Brennan (1965–ca 1971)
சூலியா கேமரான்
Julia Cameron (1976–1977)
இசபெல் ரோசெல்லினி (1979–1982)
பார்பரா டி ஃவினா (1985–1991)
எலன் மாரிசு (1999–present)

ஸ்கோர்செசியின் கலைப் படைப்புக்கள், இத்தாலிய அமெரிக்க அடையாளம், குற்றம் மற்றும் மீட்சி பற்றிய ரோமன் கத்தோலிக்கக் கருத்தாக்கங்கள், மிகு ஆண்மை மற்றும் வன்முறை ஆகிய கருப்பொருட்களைக் கொண்டு அமைந்துள்ளவையாகும்.[2] தமது சமகாலத்தில் மிகுந்த முக்கியத்துவமும் செல்வாக்கும் கொண்ட அமெரிக்க திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக ஸ்கோர்செசி கருதப்படுகிறார். திருப்பு முனைத் திரைப்படங்களான டாக்ஸி டிரைவர் , ரேஜிங் புல் மற்றும் குட் ஃபெல்லாஸ் ஆகிய அனைத்தையும் தமது நெருங்கிய நண்பரும் நடிகருமான ராபர்ட் டி நீரோவின் (Robert De Niro) கூட்டுறவுடன் அவர் இயக்கியுள்ளார்.[3] தி டெபார்ட்டட் என்னும் திரைப்படத்திற்காக அவர் சிறந்த இயக்குனருக்கான அகாடமி விருது மற்றும் திரைப்பட இயக்கத்திற்காக நியூயார்க் பல்கலைக் கழக டிஸ்ச் கலைப்பள்ளியிலிருந்து எம்எஃப்ஏவும் பெற்றுள்ளார்.

2007ஆம் ஆண்டு, இலாப நோக்கற்ற என்ஐஏஎஃப் என்னும் தேசிய இத்தாலிய அமெரிக்க அறக்கட்டளையினால், அதன் 32ஆவது வருடாந்திரக் கொண்டாட்டத்தில் ஸ்கோர்செஸி கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவின்போது, என்ஐஏஎஃபின் ஜாக் வேலண்டி நிறுவனம் துவக்கப்பட ஸ்கோர்செசி உதவினார். இந்த நிறுவனமானது அறக்கட்டளை இயக்குனர் குழுவின் முன்னாள் உறுப்பினரும், அமெரிக்க ஓடும் படக் கூட்டமைப்பின் (எம்பிஏஏ) முன்னாள் தலைவருமான ஜாக் வேலண்டியின் நினைவாக இத்தாலிய அமெரிக்க திரைப்பட மாணவர்களுக்கு உதவி புரிகிறது. ஜாக்கின் விதவையான மேரி மார்கரெட் வேலண்டியிடமிருந்து ஸ்கோர்செசி தனது விருதைப் பெற்றார். ஸ்கோர்செசியின் திரைப்படம் தொடர்பான சில பொருட்களும் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களும் வெசுலியன் பல்கலைக்கழகம்|வெசுலியன் பல்கலைக்கழகத்தின் திரைப்பட ஆவணத்தில் உள்ளன. உலகெங்கிலுமுள்ள கல்வியாளர்களும் ஊடக வல்லுனர்களும் இதற்கான அணுகலைக் கொண்டுள்ளனர்.[4]

சொந்த வாழ்க்கை

மார்ட்டின் ஸ்கோர்செசி நியூயார்க் நகரில் பிறந்தார். அவரது தந்தையான லூசியானோ சார்லசு ஸ்கோர்செசி (1913–1993) மற்றும் தாய் கேதரைன் ஸ்கோர்செசி நீ கப்பா (1912–1997) ஆகிய இருவரும் நியூ யார்க்கின் கார்மெண்ட் மாநிலத்தில் பணி புரிந்தனர். அவரது தந்தை துணிகளை இஸ்திரி செய்பவராகவும் தாய் தையல்காரராகவும் பணி புரிந்தனர்.[5] ஒரு சிறுவனாக அவர் இருக்கையில், அவரது பெற்றோர் அடிக்கடி அவரை திரைப்படக் கொட்டகைக்கு அழைத்துச் சென்றனர். இந்தக் கால கட்டத்தில்தான் அவர் திரைப்படத்தின் மீது பேரார்வம் கொள்ளத் துவங்கினார். பதின்வயதினராக வரலாற்றுக் காவியங்களை அவர் கண்டு வியந்தார். இப்பிரிவைச் சேர்ந்த திரைப்படங்களில் குறைந்த பட்சமாக இரண்டு, லேண்ட் ஆஃப் தி ஃபரோஸ் மற்றும் ஈ1 சிட் ஆகியவை அவரது திரையறிவில் ஆழமான மற்றும் நீங்காத பாதிப்பை உருவாக்கியதாகக் காணப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தின் புதிய யதார்த்தப் போக்கையும் ஸ்கோர்செசி வியந்து பாராட்டலானார். இத்தாலியப் புதிய யதார்த்தம் மீதான ஒரு ஆவணப் படத்தில் அவர் தன் மீதான அதன் செல்வாக்கை நினைவு கூர்ந்து தி பைசைக்கிள் தீஃப் என்னும் திரைப்படமும் பைசா மற்றும் ரோம், ஓப்பன் சிட்டி ஆகியவையும் எவ்வாறு தமக்கு ஊக்கமூட்டியது எனவும், தமது பார்வை அல்லது சிசிலிய குடிவழியைத் தாம் சித்தரித்த விதம் ஆகியவற்றின் மீது இவை எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியன என்பதை அவர் விமர்சித்தார். II மியோ வியாகியோ இன் இத்தாலியா என்னும் தமது ஆவணப்படத்தில் ஸ்கோர்செஸி ராபர்ட்டோ ரோசெலினியின் பைசா வின் இத்தாலிய நிகழ்ச்சியை முதன் முதலில், சிசிலியக் குடியேறிகளான தமது உறவினர்களுடன், தொலைக்காட்சியில் கண்டதாகக் குறிப்பிட்டார். இது அவர் வாழ்வில் முக்கியமான பாதிப்பை உண்டாக்கியது.[6] தமது திரைத் தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியவராக அவர் திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரேயையும் (Satyajit Ray) குறிப்பிட்டுள்ளார்.[7][8] பிராங்க்ஸ் பகுதியிலுள்ள கார்டினன் ஹேயஸ் உயர் நிலைப் பள்ளியில் படிக்கையில் சமயகுருவாக வேண்டும் என்றிருந்த தமது ஆரம்ப கால ஆசையைத் திரைப்படத்தின் மீதான ஆர்வத்தினால் அவர் கைவிட்டார். இதன் பின்னர், ஸ்கோர்செஸி என்ஒய்யூ திரைப் பள்ளியில் சேர்ந்து 1966ஆம் ஆண்டு திரைப்பட இயக்கத்தில் எம்எஃப்ஏ பட்டத்தைப் பெற்றார்.

ஸ்கோர்செசி ஐந்து முறை மணம் புரிந்துள்ளார். அவரது முதல் மனைவி லாரைன் மேரி பிரென்னான் ஆவார். அவர்களுக்கு காதரைன் என்னும் ஒரு மகள் உண்டு. 1976ஆம் ஆண்டு எழுத்தாளர் சூலியா காமெரோனை அவர் மணந்தார். அவர்களுக்கு நடிகையும் தி ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ் என்ற படத்தில் தோன்றியவருமான டொமினிகா காமெரோன் ஸ்கோர்செசி என்ற ஒரு மகள் உண்டு. ஆனால், இந்தத் திருமணம் ஓராண்டே நீடித்தது. நடிகை இசபெல்லா ரோசெலினியை 1979ஆம் ஆண்டு மணம் புரிந்து 1983ஆம் ஆண்டு மணவிலக்கு (விவாகரத்து) செய்தார். பிறகு அவர் தயாரிப்பாளரான பார்பரா டி ஃபினாவை 1985ஆம் ஆண்டு மணம் புரிந்து கொண்டார். இத் திருமணமும் 1991ஆம் ஆண்டும் மணவிலக்கில் முடிந்தது. 1999ஆம் ஆண்டு அவர் எலன் மோரிசு என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஃபிராங்க்கெசுக்கா என்னும் ஒரு மகள் உண்டு. இவர் தி டெபார்ட்டட் மற்றும் தி ஏவியேட்டர் ஆகியவற்றில் தோன்றியுள்ளார். இவர் முதன்மையாக நியூ யார்க்கில் மூல தளம் கொண்டுள்ளார்.

தொழில் வாழ்க்கை

துவக்ககாலத் தொழில் வாழ்க்கை

ஸ்கோர்செசி 1964ஆம் வருடம் நியூ யார்க் பல்கலைக கழகத்தின் திரைப் பள்ளியில் (பி.ஏ. ஆங்கிலம் மற்றும் 1966ஆம் ஆண்டு[9] எம்.எஃப்.ஏ, திரைப்படப் படிப்பு) வாட்'ஸ் அ நைஸ் கேர்ல் லைக் யூ டூயிங் இன் எ பிளேஸ் லைக் திஸ்

(1963) மற்றும் இட்'ஸ் நாட் ஜஸ்ட் யூ முர்ரே போன்ற (1964) போன்ற குறும்படங்களைத் தயாரித்தார். அந்தக் கால கட்டத்தில் அவரது மிகவும் பிரபலமான குறும்படம் கரும் நகைச்சுவையான தி பிக் ஷேவ் என்பதாகும். பீட்டர் பெர்னத் நடித்த இக்குறும்படம் இரத்தம் கொப்புளித்து வரும் வரையிலும் தொடர்ந்து மழித்து வந்து இறுதியில் அவர் கத்தியால் தன் தொண்டையையே அறுத்துக் கொண்டு விடுவதாகச் சித்தரிக்கிறது. இது வியட்னாம் நாட்டில் அமெரிக்க கொண்டிருந்த ஈடுபாட்டைக் குற்றம் சாட்டுவதைக் குறிப்பதாக வியட் '67 என்னும் மற்றொரு தலைப்பும் கொண்டிருந்தது.[10]

1967ஆம் ஆண்டிலேயே ஸ்கோர்செஸி தனது முதல் முழு நீளத் திரைப்படத்தையும் தயாரித்தார். கருப்பு வெள்ளையிலான ஐ கால் ஃபர்ஸ்ட் என்னும் அத்திரைப்படம் பின்னர் ஹூ'ஸ் தட் நாக்கிங் மை டோர் என மறு பெயரிடப்பட்டு, பின்னர் நீண்ட காலக் கூட்டாளிகளாகவிருந்த, உடன் மாணாக்கர்களான நடிகர் ஹார்வே கெயிட்டல் (Harvey Keitel) மற்றும் படத் தொகுப்பாளர் தெல்மா ஷூன்மேக்கர் (Thelma Schoonmaker) ஆகியோரைக் கொண்டு உருவானது. இது, ஓரளவிற்கு ஸ்கோர்செஸியின் சுயவரலாறான 'ஜே.ஆர்.ட்ரியாலஜி' என்பதன் முதற்பகுதியாகும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இதில் மீன் ஸ்ட்ரீட்ஸ் என்னும் அவரது பிற்காலத்திய திரைப்படமும் இணைந்திருக்கக் கூடும். திரையில் மலரும் முன்னர் மொட்டாக அவர் இருந்த காலத்திலேயே "ஸ்கோர்செஸி பாணி" என்பது தெளிவானதாகத் தென்படலானது: நியூ யார்க்கில் இத்தாலிய அமெரிக்க தெரு-வாழ்க்கை, விருவிருப்பான படத்தொகுப்பு, பரவசமூட்டும் ராக் இசைத்தடம் மற்றும் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்ட ஒரு ஆண் பிரதான பாத்திரம் என இவை ஸ்கோர்செஸி பாணியின் அம்சங்களாக அறியப்படலாயின.

1970ஆம் ஆண்டுகள்

அந்நிலையில், 1970ஆம் ஆண்டுகளில் மிகந்த செல்வாக்குப் பெற்றிருந்த, "திரையுலகின் அடங்காச் சிறுவர்கள்" எனப்பட்ட ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா (Francis Ford Coppola), பிரையான் டி பால்மா (Brian De Palma), ஜார்ஜ் லூகாஸ் (George Lucas) மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) ஆகியோருடன் அவர் நட்பு பூண்டார். உண்மையில், இளம் நடிகரான ராபர்ட் டி நீரோவிற்கு ஸ்கோர்செஸை அறிமுகம் செய்வித்தது பிரையான் டி பால்மாதான். இந்தக் கால கட்டத்தில், வுட்ஸ்டாக் என்னும் திரைப்படத்தின் தொகுப்பாளர்களில் ஒருவராக இயக்குனர் பணி புரிகையில், பின்னாளில் நெருங்கிய நண்பரும் வழிகாட்டியுமாக விளங்கிய நடிக-இயக்குனரான ஜான் காசவெட்ஸ் (John Cassavetes) என்பவரைச் சந்தித்தார்.[11]

மீன் ஸ்ட்ரீட்ஸ்

1972ஆம் ஆண்டு இரண்டாம்-தரத் திரைப்படத் தயாரிப்பாளரான ரோஜர் கோர்மன் என்பவருக்காக தாழ்நிலை-காலத்து நிலையைச் சாதகமாக்கும் கருப்பொருள் கொண்டதான பாக்ஸ்கார் பெர்த்தா என்னும் திரைப்படத்தை ஸ்கோர்செஸி உருவாக்கினார். இத் தயாரிப்பாளரே ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா, ஜேம்ஸ் காமரூன் (James Cameron) மற்றும் ஜான் சய்லெஸ் போன்ற இயக்குனர்கள் தங்கள் தொழில் வாழ்வைத் துவக்க உதவி புரிந்தவர். பொழுதுபோக்குத் திரைப்படங்களைச் சொற்ப நிதி மற்றும் நேரம் கொண்டு தயாரிக்க இயலும் என்பதை ஸ்கோர்செஸிக்குக் கற்பித்தவர் கோர்மனே ஆவார். இது, இளம் இயக்குனரான ஸ்கோர்செஸி பல சவால்களைச் சந்தித்து மீன் ஸ்ட்ரீட்ஸ் திரைப்படத்தைத் தயாரிக்க ஏதுவானது. இப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, பிறருக்கான தொழிற் திட்டங்களில் ஈடுபடுவதைத் விடுத்து தாம் தயாரிக்க விரும்பும் திரைப்படங்களில் ஈடுபடுமாறு காசவெட்ஸ் அவரை ஊக்கினார்.பாலைன் கேயெல் என்னும் செல்வாக்கு மிக்க திரை விமர்சகரின் பெரும் ஆதரவுடன் மீன் ஸ்ட்ரீட்ஸ் , ஸ்கோர்செஸி, டி நீரோ மற்றும் கெயிட்டல் ஆகியோருக்கு கட்டுடைத்த வெற்றியாக அமைந்தது.இந்தக் கால கட்டத்தில், ஸ்கோர்செஸியின் முத்திரை என்பது- மிகு ஆண்மையின் வெளிப்பாடுகள், இரத்தம் தோய்ந்த வன்முறை, குற்றம் மற்றும் மீட்சி பற்றிய கத்தோலிக்கக் கருத்தாக்கங்கள், வெறுப்பு நிறைந்த நியூயார்க் பகுதிகள் (உண்மையில், மீன் ஸ்ட்ரீட்ஸ் திரைப்படத்தின் பெரும்பகுதி லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளிலேயே படம் பிடிக்கப்பட்டது வேறு விஷயம்), விருவிருப்பான படத்தொகுப்பு மற்றும் ஒரு ராக் ஒலித்தடம் ஆகியவற்றைக் கொண்டதாக- மிக அழுத்தமாகப் பதிந்து விட்டது. இத்திரைப்படம் புதுமை மிகுந்திருப்பினும், அதன் மருட்சியான சூழல், ஆவணப் படத்தினை ஒத்த நடை மற்றும் வெறுப்பூட்டும் வீதிகளுக்குப் பொருந்துவதான யதார்த்தமான இயக்கம் ஆகியவை இயக்குனர்கள் காசவெட்ஸ், சாமுவேல் ஃப்யூல்லர் மற்றும் ஆரம்ப காலத்து ஜீன்-லுக் கோடார்ட் (Jean-Luc Godard) ஆகியோரின் பாணியில் அமைந்திருந்தது.[12] (உண்மையில், இளம் இயக்குனரான ஸ்கோர்செஸியின் திறமைக்கு பாக்ஸ்கார் பெர்த்தா திரைப்படம் மிகவும் தகுதிக் குறைவானது என உணர்ந்த காசவெட்ஸ் அளித்த மிகுந்த ஊக்கத்துடனேயே இப்படம் நிறைவடைந்தது).[11]

1974ஆம் வருடம் எல்லன் பர்ஸ்டின் என்னும் நடிகை அலைஸ் டஸின்ட் லிவ் ஹியர் எனிமோர் என்னும் திரைப்படத்தில் தன்னை இயக்குவதற்காக ஸ்கோர்செஸியைத் தேர்ந்த்தெடுத்தார். இத்திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான அகாடமி விருது வென்றார். சிறந்த முறையில் பாராட்டுப் பெற்றாலும், ஒரு பெண்ணின் பாத்திரத்தை மையப்படுத்துவதனால், இயக்குனரின் திரை வாழ்க்கையில் இத்திரைப்படம் ஒரு முரணாகவே உள்ளது தமது இனம்சார் வேர்களைக் கண்டறிய லிட்டில் இத்தாலிக்குத் திரும்பிய ஸ்கோர்செஸி அடுத்து, தமது பெற்றோர், சார்லெஸ் மற்றும் காதரைன் ஸ்கோர்செஸி ஆகியோரைச் சித்தரிப்பதான இத்தாலியஅமெரிக்கன் என்னும் ஆவணத்தைத் தயாரித்தார்.

டாக்ஸி டிரைவர்

ஒரு உருச்சின்னமாகவே மதிக்கப்படும் டாக்ஸி டிரைவர் 1976ஆம் ஆண்டு வெளியானது. இது ஸ்கோர்செஸியின் முத்திரையான இருண்ட, நகர நரகத்தில் ஆதரவற்ற தனி மனிதன் ஒருவன் தானாகவே மெள்ள மெள்ளப் மனப்பித்தில் வீழ்வதைச் சித்தரித்தது.

இத் திரைப்படம் மிகவும் தேர்ந்த, உயர் திறன் பெற்ற நிலைகளைக் கையாளுகிற ஒரு இயக்குனராக ஸ்கோர்செஸியை நிலை நாட்டியது மட்டும் அல்லாமல், உயர் பேதங்கள், வலிய வண்ணங்கள் மற்றும் நுணுக்கமான ஒளிக்கருவி இயக்கங்கள் ஆகியவற்றைத் தனது பாணியாகக் கொண்ட ஒளிப்பதிவாளர் மைக்கேல் சேப்மேன் மிக்க கவனம் பெறுமாறும் செய்தது. இத்திரைப்படத்தில் தொல்லைக்குள்ளாகி மனம் பேதலித்த டிராவிஸ் பிக்கிள் பாத்திரத்தில் தோன்றிய ராபர்ட் டி நீரோவின் கட்டுடைத்த நடிப்பாற்றல் மிகுந்த பாராட்டுப் பெற்றது. இத் திரைப்படத்தில் ஜோடி ஃபாஸ்டர் பருவ வயதை அடையாத பரத்தையாக, மிகுந்த சர்ச்சைக்குரிய பாத்திரம் ஒன்றிலும் மற்றும் ஹார்வே கெயிட்டல் அவரது விபசாரத் தரகராக "ஸ்போர்ட்" என்றும் அழைக்கப்படும் மேத்யூவாகவும் நடித்தனர்.

ஸ்கோர்செஸி மற்றும் எழுத்தாளர் பால் ஸ்க்ரேடர் ஆகியோருக்கிடையிலான கூட்டுறவின் துவக்கத்தையும் டாக்ஸி டிரைவர் குறித்தது. இவர் செலுத்திய ஆதிக்கத்தின் உதாரணங்கள், பின்னாளின் கொலையாளி ஆர்தர் ப்ரெமரின் குறிப்பேடு மற்றும் ஃபிரெஞ்சு இயக்குனரனா ராபர்ட் ப்ரெஸ்ஸன் இயக்கிய பிக்பாக்கெட் ஆகியவை அடங்கும். எழுத்தாள/ இயக்குனர் ஸ்க்ரேடர், அமெரிக்கன் ஜிகோலா , லைட் ஸ்லீப்பர் மற்றும் ஸ்கோர்செஸியின் பிற்காலத்தியத் தயாரிப்பான பிரிங்கிங்க் அவுட் தி டெட் ஆகியவற்றில் பிரெஸ்ஸனின் பாணிக்குத் திரும்புகிறார்.[13]

வெளியீட்டின்போதே சர்ச்சைக்குள்ளாகி விட்ட டாக்ஸி டிரைவர் ஐந்து வருடங்களுக்குப் பின்னர், ஜான் ஹிங்க்லெ ஜூனியர் அப்போதைய அமெரிக்க அதிபரான ரோனால்ட் ரீகனைக் கொலை செய்ய முயற்சித்தபோது மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. ஜோடி ஃபாஸ்டரின் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தின் மீது தான் கொண்டிருந்த வெறித்தனமான ஈடுபாடே தன் செயலுக்குக் காரணம் என இவன் பின்னர் குற்றம் சாட்டினான். (திரைப்படத்தில் டி நீரோவின் டிராவிஸ் பிக்கிள் என்னும் கதாபாத்திரம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது கொலை முயற்சியை மேற்கொள்கிறது).[14]

1976ஆம் ஆண்டு கேன்ஸ் திரைத் திருவிழாவில் டாக்ஸி டிரைவர் பால்ம் டி'யோர் விருது பெற்றது. மேலும் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட நான்கு ஆஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. ஆயினும், அவற்றில் எதனையும் இது வெல்லவில்லை.[15]

இதையடுத்து ஹெல்ட்டர் ஸ்கெல்ட்டர் என்னும் திரைப்படத்தில் சார்லஸ் மேன்சன் என்னும் கதாபாத்திரமும் சாம் ஃப்யூல்லரின் போர்த் திரைப்படமான தி பிக் ரெட் ஒன் என்பதில் ஒரு பாத்திரமும் ஸ்கோர்செஸிக்கு வழங்கப்பட்டன. ஆனால், இவை இரண்டையுமே அவர் மறுதளித்து விட்டார். இருப்பினும், பால் பார்ட்டெல் இயக்கிய குண்டர் குழாம்களைப் பற்றிய கேனன்பால் என்னும் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தை அவர் ஏற்றார். இந்தக் கால கட்டத்தில், வேறு பல திரைப்படங்களை இயக்குவதற்கான முனைவுகளும் மேற்கோள்ளப்படினும், அவை ஏதும் துவங்கப்படவேயில்லை. இவற்றில், மேரி ஷெல்லியைப் பற்றிய ஹாண்ட்டட் சம்மர் மற்றும் மார்லன் பிராண்டோவுடனான ஒரு இந்தியப் படுகொலை பற்றிய வூண்டட் நீ ஆகியவை அடங்கும்.

நியூயார்க், நியூயார்க் மற்றும் தி லாஸ்ட் வால்ட்ஸ்

டாக்ஸி டிரைவர் விமர்சன ரீதியாகப் பெற்ற வெற்றி மேலும் முனைந்து தனது முதல் பெருமளவு பொருட்செலவு செயற்திட்டத்தைத் துவக்க ஸ்கோர்செஸியைத் தூண்டியது. அதுவே மிகவும் ஒயிலான பாணியில் அமைந்த இசைத் திரைப்படமான நியூ யார்க், நியூ யார்க் என்பதாகும். ஸ்கோர்செஸின் பிறந்த ஊர் மற்றும் பெருமை வாய்ந்த ஹாலிவுட் இசைத்திரப்படங்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்த இத்திரைப்படம் வணிக ரீதியாக மிகப் பெரும் தோல்வி அடைந்தது.

நியூ யார்க், நியூ யார்க் ராபர்ட் டி நீரோவுடன் இயக்குனரின் மூன்றாவது கூட்டு முயற்சியாகும். இதில் லிஜா மின்னெல்லி (அவரது தந்தையான, பழம்பெரும் இசை அமைப்பாளர் வின்செண்ட் மின்னெல்லிக்கு மறைமுகப் புகழுரையாக) உடன் நடித்திருந்தார். இத்திரைப்படம் ஃபிராங்க் சின்ட்டாரா பிரபலப்படுத்திய அதன் தலைப்புக் கருத்துப் பாடலுக்காக இன்றளவும் நினைவு கூரப்படுகிறது. ஸ்கோர்செஸியின் வழக்கமான முத்திரைகளான பிரம்மாண்டக் காட்சியமைப்பு மற்றும் அற்புதமான ஒயில் மிக்க பாணி ஆகியவற்றைக் கொண்டிருப்பினும், அதன் சுற்றிலும் மூடப்பட்ட படப்பிடிப்புத் தள சூழல், அவரது முந்தைய படங்களுடன் ஒப்புமை செய்யப்படுவதில் விளைந்து விட்டதாகக் கருதினர். ஆண்களின் மனப் பேதலிப்பு மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு பற்றிய இயக்குனரின் ஆரம்ப காலத் திறனாய்வுகளில் ஒன்றாக இது விளங்குகிறது என்பது அநேக முறை கவனிக்கப்படாமலேயே போவதாகும். (இந்த வகையில் இது மீன் ஸ்ட்ரீட்ஸ் , டாக்ஸி டிரைவர் மற்றும் பின்னாளில் ஸ்கோர்செஸி உருவாக்கிய ரேஜிங் புல் மற்றும் தி டெபார்ட்டட் ஆகிய திரைப்படங்களின் கருத்திற்கு நேர் மரபு வழி கொண்டுள்ளது).

நியூ யார்க், நியூ யார்க் திரைப்படம் பெற்ற ஏமாற்றமளிக்கும் வரவேற்பினால் ஸ்கோர்செஸிக்கு மனத் தளர்ச்சி உண்டானது. இந்தக் கால கட்டத்தில் இயக்குனர் கொக்கெயின் போதைக்கும் தீவிர அடிமையாகியிருந்தார். இருப்பினும், தி பேண்ட் குழுவினரின் இறுதி நிகழ்ச்சியை ஆவணப்படுத்திய, மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற தி லாஸ்ட் வால்ட்ஸ் என்னும் திரைப்படத்தை உருவாக்கும் அளவு ஆக்கவுறுதியினை அவர் பெற்றிருந்தார். இது சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் விண்டர்லேண்ட் பால்ரூம் என்னும் தளத்தில், எரிக் கிளாப்டன், நெயில் யங், நெயில் டயமண்ட், ரிங்கோ ஸ்டார், மட்டி வாட்டர்ஸ், ஜோனி மிட்செல், பாப் டைலான், பால் பட்டர்ஃபீல்ட், ரோன்னி வுட் மற்றும் வான் மாரிஸன் உள்ளிட்ட மிகப் பெரும் பிரபலங்களின் தனிப் பெரும் தனிச் செயற்பாடுகளை ஒரே நிகழ்ச்சியாகக் கொண்டிருந்தது. இருப்பினும், ஸ்கோர்செஸி வேறு பல முனைவுகளுக்குப் பொறுப்பேற்றிருந்தமையால், இத்திரைப்படத்தின் வெளியீடு 1978ஆம் ஆண்டு வரை தாமதமானது.

American Boy: A Profile of Steven Prince|அமெரிக்கன் பாய் என்னும் தலைப்பில் ஸ்கோர்செஸி இயக்கிய மற்றொரு ஆவணப்படமும் 1978ஆம் ஆண்டு வெளியானது. இது டாக்ஸி டிரைவரி ல் தன்னம்பிக்கை மிகுந்த துப்பாக்கி விற்பனையாளனாகத் தோன்றிய ஸ்டீவன் ப்ரின்ஸை மையப்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து, ஏற்கனவே பலவீனமாக இருந்த இயக்குனரின் ஆரோக்கியம் மேலும் சீர்கெடும் வண்ணம், வெறித்தனமான விருந்துகளின் காலம் தொடர்ந்தது.

1980ஆம் ஆண்டுகள்

ரேஜிங் புல்

ஸ்கோர்செஸி தனது கொக்கெயின் பழக்கத்தை உதறித் தள்ளி விட்டு, அவரது மிக அற்புதமான திரைப்படம் எனப் பரவலாகக் கருதப்படும் ரேஜிங் புல் திரைப்படத்தைத் தயாரிக்குமாறு வற்புறுத்திய ராபர்ட் டி நீரோவே ஸ்கோர்செஸியின் வாழ்க்கையைக் காப்பாற்றினார் என்பது (ஸ்கோர்செஸியையும் உள்ளிட்ட) பலரின் கூற்று. மற்றொரு திரைப்படத்தைத் தன்னால் இனி உருவாக்க இயலாதென்று முழுதும் நம்பிய ஸ்கோர்செஸி இடை எடை மற்போர் வீரன் ஜேக் லா மோட்டாவின் வன்முறை மிகுந்த வாழ்க்கை வரலாறு சார்ந்த திரைப்படத்தை காமிகேஜ் முறைமையிலான திரைப்படப் பாணி எனக் கூறி அதனை உருவாக்குவதிலேயே தமது அனைத்து சக்தியையும் ஈடுபடுத்தலானார்.[16] மிக உன்னதப் படைப்பு எனப் பரவலாகப் போற்றப்படும் இப்படம் பிரிட்டனின் சைட் அண்ட் சௌண்ட் பத்திரிகையால் 1980ஆம் ஆண்டுகளின் மிக அற்புதமான திரைப்படம் என்று வாக்களிக்கப்பட்டது.[17][18] சிறந்த திரைப்படம், ராபர்ட் டி நீரோவிற்கான சிறந்த நடிகர் மற்றும் ஸ்கோர்செஸிக்கான முதல் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட எட்டு ஆஸ்கார் பரிந்துரைகளை இது பெற்றது. டி நீரோ விருதினை வென்றார். இத்திரைப்படத்தின் படத் தொகுப்பிற்காக தெல்மா ஷூன்மேக்கரும் விருது வென்றார். ஆயினும், சிறந்த இயக்குனருக்கான விருது ஆர்டினரி பீப்பிள் என்னும் திரைப்படத்திற்காக ராபர்ட் ரெட்ஃபோர்டை அடைந்தது.

உயர் பேத ஒளியமைப்பில், கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்ட ரேஜிங் புல் திரைப்படத்தில் ஸ்கோர்செஸியின் பாணி அதன் உச்சத்தை அடைந்தது. டாக்ஸி டிரைவர் மற்றும் நியூ யார்க்,நியூ யார்க் ஆகியவை வெளிப்பாட்டுத்தன்மையின் தனிமங்களைக் கொண்டு உளவியல் பார்வைகளைக் கொண்டிருந்தன. ஆனால், இத்திரைப்படத்திலோ, மிக அதிக அளவிலான மெள்-இயக்க முறைமை, நுணுக்கமான பின்னொற்றும் காட்சியமைப்புகள். மற்றும் பிரம்மாண்டமான கருத்துத் திரிபுகள் ஆகியவை கையாளப்பட்டு அவரது திரைப்பட பாணியானது அதன் உச்சங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. (எடுத்துக் காட்டாக, ஒவ்வொரு சணடையின்போதும் மல்யுத்த தளத்தின் அளவு மாறுபட்டுத் தென்படும்.)[19] கருத்து பூர்வமாகவும், மீன் ஸ்ட்ரீட்ஸ் மற்றும் டாக்ஸி டிரைவர் ஆகியவற்றைத் தொடர்ந்து இத்திரைப்படத்திலும், பாதுகாப்பின்மை உணர்வு கொண்ட ஆண்கள், வன்முறை, குற்றம் மற்றும் மீட்சி ஆகியவற்றைப் பற்றிய அக்கறை தொடரலானது.

ரேஜிங் புல் படத்தின் திரைக்கதையை பால் ஸ்க்ரேடர் மற்றும் (முன்னர் மீன் ஸ்ட்ரீட்ஸ் திரைக்கதையை உடன் எழுதிய) மார்டிக் மார்ட்டின் ஆகியோர் அமைத்ததாக அறிவிக்கப்படினும், இறுதியில் நிறைவு செய்யப்பட்ட திரைக்கதையானது ஸ்க்ரேடரின் மூலப் படிவத்திலிருந்து மிகப் பெரும் அளவில் மாறுபட்டிருந்தது. (ஸ்கோர்செஸியின் பிற்காலத்திய திரைப்படங்களான தி ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ் மற்றும் கேங்க்ஸ் ஆஃப் நியூ யார்க் ஆகியவற்றிற்கு உடன் திரைக்கதை எழுதிய) ஜே காக்ஸ் உள்ளிட்ட பலராலும் இது மீண்டும் மீண்டும் எழுதப்பட்டது. இதன் இறுதிப் படிவத்தின் பெரும்பகுதி ஸ்கோர்செஸி மற்றும் ராபர்ட் டி நீரோவால் எழுதப்பட்டது.[20]

அமெரிக்கத் திரைப்படக் கழகம் ரேஜிங் புல் திரைப்படத்தைத் தனது விளையாட்டுக்கள் தொடர்பான முதல் பத்து திரைப்படங்களின் பட்டியலில் முதலாம் இடத்திற்குத் தேர்ந்தெடுத்தது.

தி கிங் ஆஃப் காமெடி

ஸ்கோர்செஸியின் அடுத்த செயற்திட்டமாக ராபர்ட் டி நீரோவுடன் அவரது ஐந்தாவது கூட்டு முயற்சியான தி கிங் ஆஃப் காமெடி (1983) அமைந்தது. ஊடகம் மற்றும் பிரபலங்களின் உலகம் பற்றிய ஒரு அஙகத நகைச்சுவையான இத்திரைப்படம், ஸ்கோர்செஸி தமது வழமையான உணர்ச்சி மிகுந்த உறுதிப்பாடுகளிலிருந்து அறிந்தே விலகியதாக அமைந்திருந்தது. காட்சிகளின் முறைமையைப் பொறுத்த வரையில், அந்நாள் வரை ஸ்கோர்செஸி மேம்படுத்தியிருந்த பாணியை விடவும் குறைந்த இயக்க முறைமை கொண்டு, பல தொலைத் திரைவினைகளுக்கு ஒளிப்பதிவுக் கருவியை நிலையான இடத்தில் வைத்தே எடுக்கப்பட்டது.[21] அவரது அண்மைய வெளிப்பாட்டுத் தன்மைப் பாணியானது இதில் முற்றிலுமான ஆழ்மனக் கனவியல் பாணிக்கு வழிவிடலானது.இருப்பினும், சஞ்சலம் மிகுந்த மற்றும் துணையற்ற ஒரு நபர் வாழ்வின் முரண் காரணமாக (கொலை, கடத்தல் போன்ற) குற்றம் இழைத்துப் பிரபலம் அடைந்து விடுவது போன்ற ஸ்கோர்செஸியின் முத்திரைகளில் சிலவற்றை இது பெற்றேயிருந்தது.[22]

தி கிங் ஆஃப் காமெடி வர்த்தக ரீதியாகத் தோல்வியடைந்தது. ஆயினும், இது வெளியான பின்னர் பல வருடங்கள் விமர்சகர்களின் நன் மதிப்பைத் தொடர்ந்து பெற்று வரலானது. ஜெர்மன் இயக்குனரான விம் வெண்டர்ஸ் தமக்கு மிகவும் பிடித்தமான 15 திரைப்படங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டார்.[23] மேலும், தனக்காக டி நீரோ நடித்த திரைப்படங்களில் இதுவே மிக அற்புதமானது என ஸ்கோர்செஸி நம்புகிறார்.

இதை அடுத்து ஸ்கோர்செஸி, Pavlova: A Woman for All Time என்னும் திரைப்படத்தில் மிகச் சிறிய சிறப்புத் தோற்றம் ஒன்றில் தோன்றினார். இது, அவரது கதாநாயகர்களில் ஒருவரான மைக்கேல் போவெல் இயக்கத்தில் உருவாவதாக இருந்தது. இது பெர்ட்ராண்ட் டிராவெர்னியரின் ஜாஸ் இசைப்படமான ரௌண்ட் மிட்நைட் என்பதில் முக்கிய வேடம் ஒன்றை ஏற்பதில் விளைந்தது.

1983ஆம் ஆண்டு, ஸ்கோர்செஸி தமது நீண்ட நாள் கனவுத் திட்டமான தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட் என்பதில் ஈடுபடத் துவங்கினார். இது 1951ஆம் ஆண்டு நிகோஸ் கஜாண்ட்ஜாகிஸ் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. (இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு 1960ஆம் ஆண்டு வெளியானது). 1960ஆம் வருடங்களின் பிற்பகுதியில் தாம் இருவரும் நியூ யார்க் பல்கலைக் கழகத்திற்குச் செல்கையில், நடிகை பார்பரா ஹெர்ஷே இவரை இயக்குனருக்கு அறிமுகம் செய்வித்தார். இத்திரைப்படம் பாரமௌண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், இதன் முதன்மையான படப்பிடிப்பு துவங்குவதற்குச் சற்று முன்னதாக, மதவாதக் குழுக்கள் அளித்த அழுத்தத்தைக் காரணம் கூறி, இச் செயற்திட்டத்தினின்றும் விலகி விட்டது. 1983ஆம் ஆண்டைச் சார்ந்த நிறைவு பெறாத இந்தப் பதிப்பில், ஐடன் க்வின் இயேசுவாகவும் ஸ்டிங் போண்டியஸ் பைலட்டாகவும் நடிக்கவிருந்தனர். (1998ஆம் ஆண்டுப் பதிப்பில் இந்தப் பாத்திரங்களை முறையே வில்லியம் டேஃபோ மற்றும் டேவிட் போவி ஏற்றிருந்தனர்).

ஆஃப்டர் ஹவர்ஸ்

இச் செயற்திட்டம் உருப்பெறாது போனதும், தனது தொழில் வாழ்க்கை மீண்டும் சிக்கலான கட்டத்தில் இருப்பதை ஸ்கோர்செஸி அறிந்தார். இதை அவர் ஃபிலிமிங் ஃபார் யுவர் லைஃப்: மேக்கிங் 'ஆஃப்டர் ஹவர்ச்' (2004) என்னும் ஆவணப்படத்தில் விவரித்துள்ளார்.1980ஆம் வருடங்களில் ஹாலிவிட் மிகவும் வர்த்தக ரீதியாகிவிட்டதைக் கண்ட அவர், 1970ஆம் ஆண்டுகளில் தாமும் மற்றவர்களும் உருவாக்கிய தனிப்பட்ட உணர்வும், மிகு ஒயிலும் கொண்ட பாணித் திரைப்படங்கள் இனியும் அதே அளவு மதிப்புப் பெறாது என உணர்ந்தார். தமது பாணியை ஏறத்தாழ முற்றிலும் புதிய அணுகலுடன் அமைத்துக் கொள்ள ஸ்கோர்செஸி முடிவு செய்தார். ஆஃப்டர் ஹவர்ஸ் (1985) திரைப்படத்துடன் தாம் வர்த்தக ரீதியாகத் தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பதற்காக, ஏறத்தாழ "கீழ்=நிலப்" பாணி திரை உத்திகளைக் கொண்டு தமது கலையுணர்ச்சியில் மிகப் பெறும் மாற்றத்தை ஸ்கோர்செஸி உருவாக்கிக் கொண்டார். மிகக் குறைந்த பொருட்செலவில், வெளிப்புறங்களிலும் மற்றும் மன்ஹாட்டனின் சோஹோ பகுதிகளிலும் இரவில் எடுக்கப்பட்ட கரும் நகைச்சுவை வகையைச் சார்ந்த இத்திரைப்படம், கிரிஃபின் டுன்னே என்னும் நியூ யார்க் நகரைச் சேர்ந்த மிக மென்மையான சொற்தொகுப்பாளரின் துரதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும் ஓர் இரவினைப் பற்றியதாக வேறுபட்ட வகைகளைச் சார்ந்த நடிகர்களான டெரி கர் மற்றும் சீச் அண்ட் சோங் ஆகியோரையும் சிறப்பு வேடங்களில் கொண்டிருந்தது. இயக்க பாணி ரீதியாக ஸ்கோர்செஸின் பாணிக்குச் சற்று முரண்பாடான ஆஃப்டர் ஹவர்ஸ், 1980ஆம் ஆண்டுகளில் பிரபல குறைந்த பொருட்செலவு என்னும் கோட்பாட்டினைக் கொண்டிருந்த திரைப்படங்களான ஜோனாதன் டெம்மியின் சம்திங் ஒயில்ட் மற்றும் அலெக்ஸ் கோக்ஸின் ரெப்போ மேன் ஆகியவற்றுடன் பொருந்துவதாகவே இருந்தது.

தி கலர் ஆஃப் மனி

உருச்சின்னமாக விளங்கிய மைக்கேல் ஜாக்சனின் 1987ஆம் வருடத்திய இசை ஒளிக்காட்சியான பேட் என்பதுடன் 1986ஆம் ஆண்டு ஸ்கோர்செஸி, மிகவும் பாராட்டுப் பெற்ற பால் நியூமேன் (Paul Newman) படமான தி ஹஸ்ட்லர் (1961) என்னும் திரைப்படத்தின் இணையாக தி கலர் ஆஃப் மனி யை 1986ஆம் ஆண்டு உருவாக்கினார். காட்சிப் புலன் ரீதியாக அவரது முத்திரை உறுதி செய்யப்பட்டிருப்பினும், வெகுஜன விருப்பமான வர்த்தக ரீதித் திரைப்படத்தில் இயக்குனரின் முதல் முயற்சியாக தி கலர் ஆஃப் மனி அமைந்தது. பால் நியூமேனுக்கு மிகவும் காலங்கடந்த ஆஸ்கார் விருதை இது பெற்றுத் தந்தது. ஸ்கோர்செஸியைப் பொறுத்த வரையில், அவரது நீண்ட நாள் இலக்காக இருந்த தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிரைஸ்ட் என்னும் திரைப்படத்தின் செயற்திட்டத்திற்கான ஆதரவைப் பெற இது இறுதியாக உதவியது. அவர் தொலைக்காட்சியிலும் சிறு அளவில் முனைந்தார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் அமேஜிங் ஸ்டோரீஸ் என்பதன் ஒரு நிகழ்வை அவர் இயக்கினார்.

தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட்

80ஆம் வருடங்களின் மத்தியில் வர்த்தக ரீதியான ஹாலிவுட்டுடனான தனது சல்லாபத்திற்குப் பிறகு, 1988ஆம் ஆண்டு, பால் ஸ்க்ரேடர் திரைக்கதை அமைத்த தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிரஸ்ட் திரைப்படத்தின் வழி ஸ்கோர்செஸி தனது பிரத்தியேகமான திரைப்பட உருவாக்க முறைமைக்குப் பெருமளவில் திரும்பினார். நிகோஸ் கஜன்ட்கிஸ் எழுதிய சர்ச்சைக்குரிய 1960ஆம் வருடத்து நூலின் அடிப்படையில் உருவான இது கிரைஸ்ட்டின் வாழ்க்கையை தெய்வீக முறைமையில் அல்லாது மனிதச் சொற்களில் மீண்டும் உரைப்பதாக அமைந்தது. வெளியீட்டுக்கு முன்னரே இத் திரைப்படம் பெரும் அளவில் சலசலப்பை உருவாக்கியது. இது இறைத்தூற்றல் கொண்டுள்ளதாக உலகெங்கும் எதிர்ப்புகள் உருவாகவே, சிறிய பொருட்செலவில் தனித் திரைப்படமாக உருவாக இருந்த இது பெருமளவில் ஊடகக் கிளர்வுருவாகியது.[24] இத்திரைப்படத்தின் இறுதியில், சிலுவையின் அறையப்பட்டிருக்கும் வேளையில் சாத்தான்-தூண்டுதலின் விளைவான ஒரு மருட்சியினால், கிரைஸ்ட் மேரி மக்தலானாவை மணந்து ஒரு குடும்பத்தை நடத்துவதாக அமைந்த இறுதிப் பகுதியின் மீதாகவே சர்ச்சைகள் பெரும்பாலும் மையம் கொண்டிருந்தன.

சர்ச்சைகளை விடுத்துப் பார்க்கையில், தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிரைஸ்ட் விமர்சக ரீதியாக பெரும் பாராட்டுகளைப் பெற்று, இன்றளவும் ஸ்கோர்செஸியின் சிறப்பான உருவாக்கங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதுவரை தமது திரைப்படங்களின் கீழ் நீரோட்டமாக இருந்து வந்த ஆன்மீகத்தை முதன் முதலாக நேருக்கு நேர் கண்டு கையாண்ட வெளிப்படையான ஒரு முயற்சியாக இத்திரைப்படம் அமைந்திருந்தது. சிறந்த இயக்குனருக்கான அகாடமி விருதுக்கான பரிந்துரையை இயக்குனர் இரண்டாம் முறையாகப் பெற்றார். (ஆயினும், இம்முறையும் அது தோல்வியில் முடிந்தது. ரெயின்மேன் இயக்குனரான பேரி லெவின்சனிடம் அவர் விருதை இழந்தார்.)

வுட்டி ஆலன் மற்றும் ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கொப்பாலா ஆகிய இயக்குனர்களுடன் 1989ஆம் ஆண்டு இருபாதி ஒட்டுத் திரைப்படமாக "லைஃப் லசன்ஸ்" என அழைக்கப்பட்ட நியூ யார்க் ஸ்டோரீஸ் திரைப்படத்தின் மூன்று பகுதிகளில் ஒன்றினை அளித்தார்.

1990ஆம் ஆண்டுகள்

குட்ஃபெல்லாஸ்

வெற்றியும் தோல்வியும் கலந்த ஒரு பத்தாண்டு காலத்திற்குப் பிறகு, ஸ்கோர்செஸியின் குண்டர்கள் காவியமான குட்ஃபெல்லாஸ் (1990) அவரது சுய ஆற்றலுக்கு ஒரு மறு வருகையாகத் திகழ்ந்தது. ரேஜிங் புல் திரைப்படத்திற்குப் பிறகு, ஸ்கோர்செஸி மிகவும் நம்பிக்கையுடனும் தனது ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தியதுமான திரைப்படமாக இது திகழ்ந்தது. லிட்டில் இத்தாலி, டி நீரோ மற்றும் ஜோ பெஸ்சி ஆகியவற்றிற்கு ஒரு மறு வருகையாக இருந்த குட்ஃபெல்லாஸ் திரைப்படம இயக்குனரின் அற்புதமான திரை உத்திகளின் மேதமை மிக்க வெளிப்பாடாக விளங்கி அவரது புகழை மேம்படுத்தி, நிறைப்படுத்தி மீண்டும் நிலை நாட்டுவதாகவும் அமைந்தது. இயக்குனரின் மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்றாக இத்திரைப்படம் பரவலாகக் கருதப்படுகிறது.[25][26][27]

இருப்பினும், இயக்குனரின் கலைப்பணியின் அடிநாதம் மாறுபட்டதையும் குட்ஃபெல்லாஸ் குறிப்பாக எடுத்துக் காட்டுகிறது. தொழில் நுட்பரீதியாக மிகுந்த மேன்மை கொண்டிருப்பினும், உணர்வு பூர்வமாக தொடர்பறுக்கப்பட்ட ஒரு முக்கியமான சகாப்தத்தின் துவக்கத்தை இது குறிப்பதாகச் சிலர் வாதிடுகின்றனர்.[28] இவ்வாறாயினும், குட்ஃபெல்லாஸ் ஸ்கோர்செஸியின் முன்மாதிரியான திரைப்படம் - அதாவது அவரது திரை உத்திகளின் உச்சம் எனவும் பலர் இதைக் காண்கின்றனர்.

குட்ஃபெல்லாஸ் திரைப்படத்திற்காக மூன்றாம் முறையாக சிறந்த இயக்குனர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்ற ஸ்கோர்செஸி இம்முறையும், முதன்முறை இயக்குனராக கெவின் காஸ்ட்னர் என்பவரிடம் (டான்சஸ் வித் வுல்வ்ஸ்) தோல்வியுற்றார். ஜோ பெஸ்சிக்கு ஒரு (சிறந்த துணை நடிகருக்கான) அகாடமி விருதையும் இத் திரைப்படம் ஈட்டித் தந்தது.

1990ஆம் வருடம், அவர் ஜப்பானிய பழம்பெரும் இயக்குனராக அகிரா குரசோவாவின் (Akira Kurosawa)ட்ரீம்ஸ் திரைப்படத்தில் வின்செண்ட் வான் கோக் என்னும் சிறப்பு வேடம் ஒன்றைத் தாங்கி நடித்தார்.

கேப் ஃபியர்

1991ஆம் ஆண்டு கேப் ஃபியர் , கோட்பாட்டு உருவாகவே ஆகிவிட்ட அதே பெயர் கொண்ட 1962ஆம் வருடப் படத்தின் மறுவாக்கத்தைக் கொணர்ந்தது. இதில் டி நீரோவுடன் இயக்குனர் ஏழாம் முறையாக இணைந்திருந்தார்.வர்த்தக ரீதியான மற்றொரு முயற்சியான இத்திரைப்படம் ஒயிலான பாணியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான பயங்கர சிலிர்ப்பூட்டும் திரைப்படமாக, பெருமளவில் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் (Alfred Hitchcock) மற்றும் சார்லெஸ் லாஃப்டனின் தி நைட் ஆஃப் தி ஹண்ட்டர் (1955) ஆகியவற்றிலிருந்து உத்திகளைக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. கேஃப் பியர் திரைப்படம் கலப்படமான வரவேற்பினைப் பெற்று அதன் பெண் வெறுப்பு வன்முறையைச் சித்தரிக்கும் காட்சிகளுக்காகப் பல்வேறு தளங்களிலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. இருப்பினும், இத் திரைப்படத்தின் அச்சக் கூறுகளைக் கொண்ட மையக் கருத்து, தந்திரக் காட்சியமைப்புகள் மற்றும் திறன் மிக்க தோற்றங்கள் ஆகியவற்றின் திகைப்பூட்டும் ஒரு அணி வகுப்பை முன்னிறுத்தும் பரிசோதனையில் ஈடுபடும் ஒரு வாய்ப்பினை ஸ்கோர்செஸிக்கு அளித்தது. இத்திரைப்படம் இரண்டு ஆஸ்கார் பரிந்துரைகளைத் திரட்டியது. உள் நாட்டில் 80 மில்லியன் டாலர்கள் ஈட்டிய இத்திரைப்படம், தி ஏவியேட்டர் (2004) மற்றும் தி டெபார்ட்டட் (2006) ஆகியவை வெளியாகும் வரையிலும் ஸ்கோர்செஸியின் வணிக ரீதியாக மிகுந்த அளவில் வெற்றியடைந்த படமாகத் திகழ்ந்தது. ஸ்கொர்செஸி முதன் முறையாக 2.35:1 என்னும் பண்புக் கூறு விகிதத்தில் பானாவிஷன் முறைமையில் அகல்-திரையைப் பயன்படுத்திய திரைப்படமும் இதுவேயாகும்.

ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ்

மிகுந்த வளம் மற்றும் அழகுடன் உருவாக்கப்பட்ட, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலான நியூ யார்க் நகரின் இறுக்கமான மேல்தட்டுச் சமூகத்தைப் பற்றிய எடித் வார்ட்டனின் புதினத்தின் காலம்சார் தழுவலான, தி ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ் (1993) மேலோட்டமாகவேனும் ஸ்கோர்செஸியின் பாணியிலிருந்து விலகிச் செல்வதாகவே காணப்பட்டது. முதல் வெளியீட்டின்போது விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பெற்ற இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக படுதோல்வி அடைந்தது. படத்தொகுப்பாளர் மற்றும் நேர்காணலாளர் ஐயான் கிரிஸ்டி ஸ்கோர்செஸியைப் பற்றி ஸ்கோர்செஸி யில் குறிப்பிட்டுள்ளவாறு, 19ஆம் நூற்றாண்டின் தோல்வியடைந்த ஒரு காதற் கதையை ஸ்கோர்செஸி திரைப்படமாக்கவுள்ளார் என்ற செய்தியே திரையுலகச் சகோதரர்களில் பலரது புருவத்தை உயர வைத்தது. இது தனது தனிப்பட்டதான செயற்திட்டம் என்றும், எந்தத் தயாரிப்பு நிறுவனத்திற்காகவும் ஊதியம் பெற்றுச் செய்யப்படும் பணி அல்ல எனவும் ஸ்கோர்செஸி அறிவித்தது இவ்வாறான வியப்பை அதிகரித்தது.

"காதற் கதை" ஒன்றினை உருவாக்குவதில் ஸ்கோர்செஸி ஆர்வமுற்றிருந்தார். அவரது நண்பரான ஜே காக்ஸ் 1980ஆம் வருடம் அவருக்கு வார்ட்டனின் புதினத்தை அளித்து, அது ஸ்கோர்செஸியின் உணர்வுகளைப் பொருத்தமான முறையில் பிரதிபலிப்பதாகத் தாம் உணர்வதால், அவர் திரையுருவாக்கம் செய்ய வேண்டிய காதற் புனைவு அதுவே எனக் கூறினார். ஸ்கோர்செஸியைப் பற்றி ஸ்கோர்செஸி யில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்:

"நியூ யார்க்கின் செல்வந்தர் குலம் மற்றும் வரலாற்றில் ஒதுக்கப்பட்டு விட்ட ஒரு கால கட்டம் ஆகியவற்றை இத்திரைப்படம் களமாகக் கொண்டிருப்பினும், கோட்பாடு மற்றும் சடங்குகள் ஆகியவற்றை அது சித்தரிப்பினும், நிறைவேறாமல் போகாத ஆயினும் பூரணமடையாத காதலை அது சித்தரிப்பினும் - நான் வழக்கமாக மேற்கொள்ளும் கருப்பொருட்கள் அனைத்தையுமே இது பெரும்பாலும் கொண்டிருந்தாலும்- இப்புத்தகத்தைப் படிக்கையில், "ஆஹா, நல்லது. எல்லா கருப்பொருட்களும் இங்கே உள்ளன" என்று நான் கூறவில்லை."

வார்ட்டனின் நடை மற்றும் கதாபாத்திரங்களினால் மிகவும் கவரப்பட்ட ஸ்கோர்செஸி, பாராம்பரியமான இலக்கியப் பணிகளின் அறிவுசார் தழுவல்களைப் போல் அல்லாமல், அப்புத்தகத்திலிருந்து தாம் பெற்ற உணர்ச்சிகரமான அனுபவங்களைக் கொண்டு திரைப்படமும் சிறந்திருக்க வேண்டுமென விரும்பினார். இந்த இலக்குடன் ஸ்கோர்செஸி, தமது மீது உணர்வு பூர்வமாக ஆதிக்கம் செலுத்தக் கூடிய பல்வேறுபட்ட காலத் திரைப்படங்களைத் தேடலானார்.

ஸ்கோர்செஸியைப் பற்றி ஸ்கோர்செஸி யில் அவர் லுசினோ விஸ்கோண்டியின் சென்ஸோ மற்றும் அவரது Il கட்டோபார்டோ மற்றும் ஆர்ஸன் வெல்லெஸின் தி மேக்னிபிஸண்ட் ஆம்பர்சன்ஸ் மற்றும் ராபர்ட்டோ ரோஸ்ஸலினியின் லா பிரைஸ் டி பௌவொயிர் பர் லூயி XIV ஆகியவற்றின் பாதிப்புக்களை ஆவணப்படுத்துகிறார். தி ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ் திரைப்படம், இறுதியில் நடை, கதை மற்றும் கருப்பொருட்செறிவு ஆகிய அனைத்திலும் இத்திரைப்படங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டிருப்பினும், இழந்துபட்ட ஒரு சமூகம், இழக்கப்பட்டு விட்ட மதிப்பீடுகள் மற்றும் சமூக மரபுகள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றின் விரிவான மறுவாக்கம் போன்றவை இத்திரைப்படங்களின் பாராம்பரியத்தைத் தொடர்வனவாகவே இருந்தன.

அண்மையில், குறிப்பாக யூகே மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில், இத்திரைப்படம் பொதுமக்களிடையே ஆர்வத்தை உருவாக்கி வரினும், வட அமெரிக்காவில் இன்னமும் பெருமளவு ஒதுக்கப்பட்டே உள்ளது. (ஸ்கோர்செஸிக்காக சிறந்த முறையில் தழுவப்பட்ட திரைக்கதை என்பதையும் உள்ளிட்டு) ஐந்து அகாடமி விருது பரிந்துரைகளைப் பெற்ற இத்திரைப்படம், உடையமைப்பிற்கான ஆஸ்கார் விருதினை வென்றது. சீனத் திரை உருவாக்குனரான இயக்குனர் டியான் ஜுவாங்குவாங் [29] மற்றும் பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பாளர் டெரென்ஸ் டேவிஸ் [30] ஆகியோர் மீது இது குறிப்பிடத்தக்க பாதிப்பை உருவாக்கியது. இவர்கள் இருவருமே தமக்குப் பிடித்தமான பத்துப் படங்களில் இதனையும் பட்டியலிட்டனர்.

இது, அகாடமி விருது வென்றவரான டேனியல் டே-லூயிஸின் கூட்டுறவில் ஸ்கோர்செஸியின் முதல் படமாகும். பின்னாளில், இவருடன் ஸ்கோர்செஸி கேங்க்ஸ் ஆஃப் நியூ யார்க் திரைப் படத்தில் மீண்டும் இணைந்து பணி புரிந்தார்.

காசினோ

ஸ்கோர்செஸியின் முந்தைய படமான தி ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ் போன்று, 1995ஆம் ஆண்டின் பிரம்மாண்டமான காசினோ வும் ஒழுங்கு முறைமைகளுக்கு உட்பட்ட ஒரு ஆடவனின் வாழ்க்கை முன்னறிய இயலாத சக்திகளின் வருகையால் சீர்குலவைதை இறுக்கமான முறையில் குவிமையப்படுத்துவதாக அமைந்திருந்தது. இயக்குனர் முந்தைய படத்தில் தமது பாணியை மாற்றியமைத்துக் கொண்டிருந்தமையால் குழம்பியிருந்த அவரது ரசிகர்களுக்கு, இத்திரைப்படம் வன்முறைக் குண்டர்களைப் பற்றியதாக அமைந்திருந்தது பிடித்தமானதாக இருந்தது. இருப்பினும், விமர்சன ரீதியாக, காசினோ வைப் பற்றிய கண்ணோட்டம் கலவையாகவே இருந்தது. இதற்குப் பெருமளவிலான காரணம், இது அவரது முந்தைய குட்ஃபெல்லாஸ் திரைப்படத்தின் பாணியைப் பெருமளவில் ஒத்திருந்ததேயாகும்.உண்மையில், அவரது முந்தைய பல படங்களின் உருவகங்களும், பொறிகளும் ஏறத்தாழ மாறுபாடு ஏதுமின்றி மீண்டும் இத்திரைப்படத்தில் காணப்பட்டன. ராபர்ட் டி நீரோ மற்றும் ஜோன் பெஸ்சி ஆகிய இருவரும் இதில் நடிக்க வைக்கப்பட்டதும் பெஸ்சி மீண்டும் ஒரு முறை கட்டுப்பாடற்ற மனப்பிறழ்வு கொண்டவராக நடித்ததும் இதனை வெளிப்படையாகச் சுட்டின. ஷரோன் ஸ்டோன் தமது செயற்திறனுக்காக சிறந்த நடிகைக்கான அகாடமி விருதுக்கான பரிந்துரைப்பைப் பெற்றார்.

இதன் படப்பிடிப்பின்போது, மேசைகள் ஒன்றினில் விளையாடும் சூதாடியாக பின்னணிப் பாத்திரம் ஒன்றில் ஸ்கோர்செஸி நடித்தார். அச்சமயம் துணை நடிகர்களுக்கு இடையில் மெய்யான ஒரு போக்கர் விளையாட்டு நடந்து கொண்டிருந்ததாகவும், பந்தயப் பணமாக $2000 பணயம் வைக்கப்பட்டு இருந்ததாகவும் வதந்திகள் பலவும் இருந்தன. பிலிம் கமென்ட்டின் 90ஆம் ஆண்டுகளின் சிறந்த திரைப்படங்களுக்காக ஒதுக்கப்பட்டதான ஜனவரி இதழில் இன்ஸிட்யூட் லுமியிரி யின் தியெர்ரி ஃப்ரெமௌக்ஸ் இவ்வாறு கூறினார்: "இப்பத்தாண்டுகளின் மிகச் சிறந்த ஆனால் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட படம் "காசினோ " ." மைக்கேல் வில்மிங்டனோ, குட்ஃபெல்லாஸ் மற்றும் காசினோ ஆகிய இரண்டையுமே "வன்முறை மற்றும் பாலுணர்வை ஒயிலாகச் சித்தரிக்கும் பாணியின் மிகச் சிறந்த சிகரங்கள் " என வர்ணித்தார்.[31]

அமெரிக்கத் திரைப்படங்களினூடே மார்ட்டின் ஸ்கோர்செஸியுடன் ஒரு தனிப் பயணம்

1995ஆம் ஆண்டு அமெரிக்கத் திரைப்படத்தின் ஊடாக ஒரு பயணம் மேற்கொள்வதான நான்கு நாலு மணி நேர ஆவணப்படங்களை உருவாக்குவதற்கு ஸ்கோர்செஸ்லி இன்னமும் நேரம் கொண்டேயிருந்தார். இது ஊமைப்படக் காலம் துவங்கி 1969 வரையிலான கால கட்டத்தை உள்ளடக்கியிருந்தது. இக்கட்டம் முடிவடைந்து ஒரு வருடத்திற்குப் பிறகே, அதாவது 1970ஆம் ஆண்டில்தான், ஸ்கோர்செஸி தம் திரை வாழ்க்கையைத் துவக்கியிருந்தார். "என்னைப் பற்றியோ அல்லது எனது சம காலத்தியவரைப் பற்றியோ நான் கருத்தளிப்பது முறையாக இருக்காது" என அவர் உரைத்தார்.

குன்டுன்

தி ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ் ஸ்கோர்செஸியின் விசிறிகளில் சிலரைக் குழப்பத்தில் ஆழ்த்தி அன்னியப்படுத்தியது என்றால், குன்டுன் (1977) அதற்குப் பல படிகள் முன்சென்றது. 14ஆம் தலாய் லாமாவான டெஞ்சின் கேய்ட்ஸோவின் ஆரம்ப கால வாழ்க்கை, மக்கள் விடுதலை ராணுவம் திபெத்தினுள் நுழைதல் மற்றும் அதைத் தொடர்ந்த தலாய் லாமாவின் இந்தியாவில் அரசியல் தஞ்ச வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றியதாக இது அமைந்திருந்தது.

தனது கதைக் களத்திலிருந்து சற்றேனும் விலகாத குன்டுன் , புதிய உரை மற்றும் காட்சியணுகல்களை ஸ்கோர்செஸி கைக் கொள்வதையும் கண்ணுற்றது. விரிவான மற்றும் வண்ணமயமான காட்சிப் பிம்பங்களின் உதவியுடன் பாராம்பரியமான நாடக பாணி உத்திகள் மாற்றியமைக்கப்பட்டு சமாதி-நிலையினை ஒரு ஒத்த தியான முறைமை அடையப் பெற்றது.[32]

இத் திரைப்படம், அந்நாட்களில் சீன தேசத்தில் பெருமளவில் வணிகப் பெருக்கத்திற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்த, அதன் விநியோகஸ்தரான டிஸ்னிக்கு பெரும் குழப்பத்தை விளைவிக்கலானது. சீனத்து அதிகாரிகளின் அழுத்தத்தை ஆரம்ப கட்டங்களில் மறுத்து வந்த டிஸ்னி பின்னர் இச் செயற்திட்டத்தினின்றும் விலகி விடவே, இது குன்டுன் திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றி முக த்தைப் பாதிப்பதானது.

குறைந்த கால கட்டத்திலேயே இத்திரைப்படம் பெற்ற நற்கூற்றுத் தேற்றம் இயக்குனரின் புகழை அதிகரித்தது. இருப்பினும், பாணி மற்றும் கருத்தாக்க ரீதியாக, ஒரு வழி மாற்றமாகவே பெரும்பாலும் கருதப்படும் குன்டுன், இயக்குனரைப் பற்றிய பெரும்பாலான விமர்சன மதிப்பீடுகளில் உதாசீனப்படுவதாகவே பொதுவாகத் தென்படுகிறது.

தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிரைஸ்ட் திரைப்படத்தை அடுத்து, குன்டுன் திரைப்படம் ஒரு மாபெரும் சமயகுருவின் வாழ்க்கையைச் சித்தரிக்க இயக்குனர் மேற்கொண்ட இரண்டாம் முயற்சியாகும்.

பிரிங்கிங் அவுட் தி டெட்

பிரிங்கிங் அவுட் தி டெட் (1999) திரைப்படம் ஸ்கோர்செஸி தமது வழமையான செயற்களத்திற்கு மீண்ட நிகழ்வானது. இயக்குனரும் எழுத்தாளர் பால் ஸ்க்ரேடரும் அவர்களது முந்தைய டாக்ஸி டிரைவர் திரைப்படத்தின் கரும் நகைச்சுவைத் தழுவலாக இதனை அமைத்திருந்தனர்.[33] முந்தைய ஸ்கோர்செஸி-ஸ்க்ரேடர் கூட்டுறவுகளைப் போன்று, இதன் இறுதிக் காட்சிகளில் ஆன்மீக மீட்சியானது ராபர்ட் பிரெஸ்ஸனின் திரைப்படங்களை வெளிப்படையாக நினைவு கூரும் வகையில் அமைந்திருந்தன.[34] (இத்திரைப்படத்தின் சம்பவங்கள் நிறைந்ததான இரவு நேரக் கள அமைப்பும் (ஆஃப்டர் ஹவர்ஸ் திரைப்படத்தை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.)

ஸ்கோர்செஸியின் சில முந்தைய படங்களை போல அனைவராலும் விமர்சன ரீதியான பாராட்டப் பெறவில்லை எனினும், பொதுவாக இது நேர் மறையான விமர்சனங்களைப் பெற்றது.[35]

2000 ஆம் ஆண்டுகள்

கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்

கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் திரையிடப்படுகையில் லியானார்டோ டிகாப்ரியோ மற்றும் கேமரோன் டயஜ் ஆகியோருடன் ஸ்கோர்செஸி.

1999ஆம் வருடம், மை வாயேஜ் டு இட்டாலி என்றும் அறியப்பட்ட Il மியோ வியாகியோ இன் இடாலியா என்னும் பெயரில் இத்தாலியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மீதான ஒரு ஆவணப் படத்தையும் ஸ்கோர்செஸி தயாரித்தார். இந்த ஆவணப்படம் இயக்குனரின் அடுத்த செயற்திட்டமான கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் (2002) என்னும் காவியத் திரைப்படத்தை முன்னறிவிப்பதாக அமைந்தது. லூசினோ விஸ்கோண்டி போன்ற பல பெரும் இத்தாலிய இயக்குனர்களின் பாதிப்பினைப் பெற்றிருந்த ஸ்கோர்செஸி, இப்படம் முழுவதையும் ரோம் நகரின் புகழ் பெற்ற சினிசிட்டா என்னும் படப்பிடிப்புத் தளத்திலேயே படமாக்கினார்.

சுமார் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமானதாகக் கூறப்பட்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட கேங்க்ஸ் ஆஃப் நியூ யார்க் தான் இன்றளவும் மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட மற்றும் ஸ்கோர்செஸியின் மிகப் பெருமளவிலான ஜனரஞ்சக முனைவு என்று வாதிக்கப்படும் திரைப்படம்.

சமுதாய அளவுகோலின் மறுமுனையைக் குவி மையமாகக் கொண்டிருப்பினும், தி ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ் திரைப்படத்தைப் போன்று இதுவும் 19ஆம் நூற்றாண்டின் நியூ யார்க் நகரினைத் பின்னணித் தளமாகக் கொண்டிருந்தது. (மேலும், அத்திரைப்படத்தைப் போலவே இதிலும் டேனியல் டே-லூயிஸ் நடித்திருந்தார்). ஸ்கோர்செஸி மற்றும் நடிகர் லியோனார்ட் டிகாப்ரியோ ( Leonardo DiCaprio) முதன் முறையாக இணைந்ததையும் இத்திரைப்படம் குறித்தது. காப்ரியோ, இதற்குப் பிந்தைய ஸ்கோர்செஸியின் படங்களில் நிலையான ஒரு நட்சத்திரமாகி விட்டார்.

மிர்மாக்ஸ் தலைவரான ஹார்வே வெயின்ஸ்டீன் உடன் இயக்குனருக்குத் தகராறு என்னும் பல வதந்திகளினால் இப்படத்தின் தயாரிப்பு மிகவும் தொல்லைக்குள்ளானது.[36] கலாரீதியாக சமரசம் செய்து கொள்ளவில்லை என மறுப்புகள் தெரிவித்தாலும், இயக்குனர் மிகுந்த அளவில் மரபுக்குட்பட்டதை வெளிப்படுத்தும் திரைப்படமாக கேங்க்ஸ் ஆஃப் நியூ யார்க் அமைந்தது. இயக்குனர் அது நாள் வரை தவிர்த்து வந்த வழக்கமான திரை உத்திகள், உதாரணமாக விவரிப்பிற்காகவே அமைக்கப்படும் பாத்திரங்கள், விளக்கவுரையாக அமைந்த பிற்செல்காட்சியமைப்புக்கள் ஆகியவை, இப்படத்தில் மிகுந்த அளவில் வெளிப்பட்டன.[37][38][39] ஸ்கோர்செஸியின் வழக்கமான இசையமைப்பாளரான எல்மர் பெர்ன்ஸ்டீட்ன் அமைத்த இசைக்கோர்வை பின்னாட்களில் நிராகரிக்கப்பட்டது. ஹோவார்ட் ஷோர் மற்றும் வெகுஜன ராக் கலைஞர்களான யூ2 மற்றும் பீட்டர் கேப்ரியல் ஆகியோர் இசையமைத்தனர்.[40] இயக்குனரின் அசல் படிவம் 180 நிமிடங்களுக்கும் மேலான நீளம் கொண்டிருக்கையில், திரைப்படத்தின் இறுதிப் படிவம் 168 நிமிடங்கள் மட்டுமே ஓடுவதாக இருந்தது.[37]

இருப்பினும், திரைப்படத்தின் மையக் கருத்துக்கள் இயக்குனரின் நிலைநாட்டப்பட்ட கருத்துக்களான நியூ யார்க், கலாசாரப் பரவல் நோயான வன்முறை மற்றும் இன வாரியான துணைக் கலாசாரப் பிரிவுகள் ஆகியவற்றிற்குப் பொருந்துவதாகவே இருந்தன.

(அகாடமி விருதுகளுக்கான பரிந்துரைக்குத் தகுதி நிலை பெற வேண்டி) 2001ஆம் ஆண்டு குளிர்கால வெளியீடாகத் திட்டமிடப்பட்டுப் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் இறுதித் தயாரிப்பினை ஸ்கோர்செஸி 2002ஆம் ஆண்டின் துவக்கம் வரையிலும் தாமதித்தார். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுவனம் 2002ஆம் ஆண்டின் ஆஸ்கார் பருவம் வரையிலும் இதன் வெளியீட்டை மேலும் சுமார் ஒரு வருட காலம் தாமதித்தது.[41]

கேங்க்ஸ் ஆஃப் நியூ யார்க் சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருதை ஸ்கோர்செஸிக்கு முதன் முறையாக ஈட்டித் தந்தது. 2003ஆம் வருடம் ஃபிப்ரவரி மாதம் கேங்க்ஸ் ஆஃப் நியூ யார்க் , சிறந்த படம், சிறந்த இயக்குனர் மற்றும் டேனியல் டே-லூயிஸிற்கான சிறந்த நடிகர் உள்ளிட்ட பத்து அகாடமி விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெற்றது. இது சிறந்த இயக்குனருக்காக ஸ்கோர்செஸி பெற்ற நான்காவது பரிந்துரையாகும். இறுதியாக அவர் இந்த வருடம் வென்று விடுவார் என்றே பலரும் எண்ணி வந்தனர். இருப்பினும், இறுதியில், இத்திரைப்படம் ஒரு அகாடமி விருதையும் பெறவில்லை. ஸ்கோர்செஸி, தமது பிரிவிற்கான விருதை தி பியானிஸ்ட்]] படத்தை இயக்கிய ரோமன் போலன்ஸ்கியிடம் இழந்தார்.

2003ஆம் வருடம் தி ப்ளூஸ் திரைப்படத்தின் வெளியீட்டையும் கண்ணுற்றது. பிரம்மாண்டமான ஏழு பகுதிகள் கொண்ட ஆவணப்படமான இது ப்ளூஸ் இசையின் வரலாற்றினை அதன் ஆப்பிரிக்க வேர்கள் துவங்கி மிஸிசிபி ஆற்றின் கழிமுகப் பிரதேசத்திற்கும் அப்பாலான பயணத்தைத் தடமறிவதாக அமைந்திருந்தது. விம் வொண்டர்ஸ், கிளின்ட் ஈஸ்ட்வுட், மைக் ஃபிக்கிஸ் மற்றும் ஸ்கோர்செஸியையும் உள்ளிட்ட ஏழு திரைப்பட உருவாக்குனர்கள் ஒவ்வொருவரும் 90 நிமிடத் திரைப்படப் பகுதி ஒன்றில் பங்களித்தனர் (ஸ்கோர்செஸியின் பங்கேற்பிலான பகுதி "ஃபீல் லைக் கோயிங் ஹோம்" எனப் பெயரிடப்பட்டது).

2002ஆம் வருடம் பால் கிமாதியான் எழுத்தில் உருவான டியூசெஸ் ஒய்ல்ட் என்னும் படத்தின் பெயரிடப்படாத செயல் தயாரிப்பாளராகவும் ஸ்கோர்செஸி பணியாற்றினார்.[42]

தி ஏவியேட்டர்

ஸ்கோர்செஸியின் தி ஏவியேட்டர் (2004) விசித்திரமான போக்குடைய ஒரு விமான முன்னோடியும் மற்றும் திரையுலகப் பேரரசருமான ஹோவர்ட் ஹக்ஸ் என்பவரது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். இதில் ஸ்கோர்செஸி லியாண்டோ டிகாப்ரியோவுடன் மீண்டும் இணைந்தார்.

இத் திரைப்படம் பெரும் அளவில் நேர் மறையான விமர்சனங்களைப் பெற்றது.[43][44][45][46][47] வணிக ரீதியாகவும் வசூலைக் குவித்த இப்படம் அகாடமி அங்கீகாரமும் அடைந்தது.

சிறந்த படம்-நாடகம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை மற்றும் லியானார்டோ டிகாப்ரியோவிற்கான சிறந்த நடிகர்- நாடகம் உள்ளிட்ட ஆறு கோல்டன் குளோப் விருதுகளுக்காக தி ஏவியேட்டர் பரிந்துரைக்கப்பட்டது. இதில், சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர்-நாடகம் உள்ளிட்ட மூன்று விருதுகளை அது வென்றது. 2005ஆம் ஆண்டு ஜனவரியில் தி ஏவியேட்டர் 77ஆவது அகாடமி விருதுகளுக்காக சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு மிக அதிக அளவில் பரிந்துரைகள் பெற்ற திரைப்படமாகத் திகழ்ந்தது.ஐந்தாவது முறையாக ஸ்கோர்செஸிக்கான சிறந்த இயக்குனருக்கான பரிந்துரை, சிறந்த நடிகர் (லியானார்டோ டிகாப்ரியோ), சிறந்த துணை நடிகை (கேட் பிளான்ச்செட்) மற்றும் ஆலன் ஆல்டாவிற்கான சிறந்த துணை நடிகர் உட்பட, ஏறத்தாழ அனைத்துப் பெரும் பிரிவுகளிலும் இத்திரைப்படம் பரிந்துரைகளைத் திரட்டியது.மிக அதிக எண்ணிக்கையில் பரிந்துரைகளைக் கொண்டிருப்பினும், சிறந்த துணை நடிகை, சிறந்த கலை இயக்கம், உடை வடிவமைப்பு, படத் தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு ஆகிய ஐந்து பிரிவுகளில் மட்டுமே இது ஆஸ்கார் விருதுகளை வென்றது. மீண்டும் ஒரு முறை ஸ்கோர்செஸி ஆஸ்கார் விருதினை இழந்தார். இம்முறை அவர் இழந்தது மில்லியன் டாலர் பேபி படத்தை இயக்கிய கிளிண்ட் ஈஸ்ட்வுட்டிடம் (இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும் வென்றது).

நோ டிரக்ஷன் ஹோம்

நோ டிரக்ஷன் ஹோம், மார்ட்டின் ஸ்கோர்செஸியின் இயக்கத்தில் பாப் டைலானின் வாழ்க்கை மற்றும் 20ஆம் நூற்றாண்டின் பிரபல அமெரிக்க இசை மற்றும் கலாசாரம் ஆகியவற்றின் மீதான அவரது தாக்கம் ஆகியவற்றைத் தடமறியும் ஒரு ஆவணப்படமாகும். இப்படம் டைலானின் தொழில் வாழ்க்கை முழுவதையும் உட்கொண்டிராது, அவரது துவக்க நிலை, அவர் புகழ் ஏணியில் ஏறத்துவங்கிய 1960ஆம் வருடங்கள், அந்நாட்களில் ஓசையியல் கிதார் இசைக் கலைஞன் என்னும் நிலையிலிருந்து மின்சார கிதார் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கலைஞன் என அவர் மிகுந்த சர்ச்சைக்குள்ளான வகையில் உருமாற்றம் அடைந்தது, மற்றும் பரபரப்பான மோட்டார்சைக்கிள் விபத்தினை அடுத்து 1966ஆம் ஆண்டு சுற்றுலாவிலிருந்து அவர் "ஓய்வு பெற்றது" ஆகியவற்றைப் பற்றியதாகவே இருந்தது. இத்திரைப்படம் முதன் முதலாக, 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 26-27 தேதிகளில் (0}பிபீஎஸ்அமெரிக்கன் மாஸ்டர்ஸ் தொடர் என்பதன் ஒரு பகுதியாக) ஐக்கிய மாநிலங்கள் மற்றும் (பிபிசி டூ ஆர்னா தொடர் என்பதன் பகுதியாக) யுனைடட் கிங்டம் ஆகிய நாடுகளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இத்திரைப்படத்தின் ஒரு ஒளிப்பேழை வடிவம் அதே மாதம் வெளியீடானது.இத்திரைப்படம் ஒரு பீபாடி விருதினைப் வென்றது. கூடுதலாக, புனைவல்லாத நிரல் ஒன்றினை அற்புதமாக இயக்கியமைக்காக ஸ்கோர்செஸி எம்மி விருத்துக்கான பரிந்துரைப்பினைப் பெற்றார்.

தி டெபார்ட்டட்

போஸ்டன் நகரைத் தளமாகக் கொண்ட, ஹாங்காங் காவல்துறை பற்றிய இன்ஃபெர்னல் அஃபேர்ஸ் என்னும் சிலிர்ப்பூட்டும் நாடகத்தின் அடிப்படையிலான தி டெபார்ட்டட் திரைப்படத்துடன் ஸ்கோர்செஸி தமது குற்றவியல் இனம்சார் திரைக்கதை அமைப்பிற்குத் திரும்பலானார்.

தி டெபார்ட்டட், லியானார்டோ டிகாப்ரியோ உடனும் ஜாக் நிக்கோல்ஸன் மற்றும் மாட் டாமன் ஆகியோருடனும் ஸ்கோர்செஸி முதன் முறையாக இணைந்த படமாகும்.

தி டெபார்ட்டட், பரவலான பாராட்டுக்களுடனான துவக்கத்தைப் பெற்றது. 1990ஆம் ஆண்டுகளில் குட்ஃபெல்லாஸ் [48][49] திரைப்படத்திற்குப் பிறகு ஸ்கோர்செஸி திரைக்குக் கொணர்ந்த மிக அற்புதமான முயற்சிகளில் இது ஒன்று எனச் சிலர் கோரினர். வேறு சிலரோ ஸ்கோர்செஸியின் மிகவும் பாராட்டுப் பெற்ற உன்னதத் திரைப்படங்களான டாக்ஸி டிரைவர் மற்றும் ரேஜிங் புல் ஆகியவற்றுடன் ஒரே நிலையில் இதையும் கருதும் அளவிற்குக் கூடச் சென்றனர்.[50][51] 129,402,536 டாலர்களைக் கடந்து உள்நாட்டில் வசூல் பெற்ற தி டெபார்ட்டட் திரைப்படம், ஸ்கொர்செஸியின் திரைப்படங்களிலேயே (பண வீக்கத்தைக் கணக்கிடாது) மிக அதிக வசூல் பெற்றதாகும்.

தி டெபார்ட்டட் படத்தின் ஸ்கோர்செஸியின் இயக்கம் அவருக்கு இரண்டாம் முறையாக கோல்டன் குளோபின் சிறந்த இயக்குனர் விருதினைப் பெற்றுத் தந்தது. மேலும், விமர்சகர் தேர்வு விருது மற்றும் அமெரிக்க இயக்குனர் கழகத்தின் சிறந்த இயக்குனர் விருது மற்றும் சிறந்த இயக்குனருக்கான அகாடமி விருது ஆகியவற்றையும் இது ஈட்டித் தந்தது. அகாடமி விருதானது பலகாலமாகத் தாமதிக்கப்பட்டதாகவே கருதப்பட்டது. சில கேளிக்கை விமர்சகர்கள் இதனை ஸ்கோர்செஸியின் "வாழ்நாள் சாதனை" ஆஸ்கார் விருது என்றே குறிப்பிட்டனர். சில விமர்சகர்கள் தி டெபார்ட்டட் திரைப்படத்திற்காக ஸ்கோர்செஸி இதைப் பெறத் தகுதி பெறவில்லை என்று கூட கருத்துத் தெரிவித்தனர்.[52] அவரது நீண்ட கால நண்பர்களும் தொழில் முறைக் கூட்டாளிகளுமான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கொப்பாலா மற்றும் ஜார்ஜ் லூகாஸ் ஆகியோரால் இது அவருக்குப் பரிசளிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டின் சிறந்த செல்திரைப்படத்திற்கான அகாடமி விருது, சிறந்த தழுவல் திரைக்கதை மற்றும் ஸ்கோர்செஸியின் நீண்ட நாள் படத்தொகுப்பாளரான தெல்மா ஷூன்மேக்கர் மூன்றாவது முறையாக ஸ்கோர்செஸியுடனான திரைப்படத்திற்காகப் பெற்ற, சிறந்த படத்தொகுப்பிற்கான விருது ஆகியவற்றையும் தி டெபார்ட்டட் பெற்றது.

ஷைன் எ லைட்

ஷைன் எ லைட் என்பது ராக் அண்ட் ரோல் இசைக் குழுவான தி ரோலிங் ஸ்டோன்ஸ் நியூ யார்க் நகரின் பீக்கான் தியேட்டரில் 2006ஆம் ஆண்டு அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 1 ஆகிய தினங்களில் நிகழ்த்திய ஒரு இசை நிகழ்ச்சியின் திரைவடிவமாகும். இது நிகழ்ச்சியின் இடையிடையே சுருக்கமான செய்திகளையும், இசைக் குழுவின் தொழில் வாழ்க்கை முழுவதிலுமிருந்து விளக்கமான நேர்காணல் அடித் தொகுப்புக்களையும் கொண்டுள்ளது.

இத்திரைப்படம் முதலில் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால், பாரமௌண்ட் கிளாசிக்ஸ் இதன் பொதுவான வெளியீட்டை 2008ஆம் ஆண்டுக்குத் தள்ளி வைத்து விட்டது. 2008ஆம் ஆண்டு ஃபிப்ரவரி ஏழாம் நாள் பெர்லினாலே திரைத்திருவிழாவின் துவக்கத்தின்போது இதன் உலக வெளியீடு நிகழ்ந்தது.

2010ஆம் ஆண்டுகள்

ஷட்டர் ஐலேண்ட்

2007ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று, ஸ்கோர்செஸி லியானார்டோ டிகாப்ரியோவுடன் நான்காவது திரைப்படமாக ஷட்டர் ஐலேண் டிற்காக மீண்டும் இணைவார் என டெய்லி வெரைட்டி அறிவித்தது. லேயட்டா கலோக்ரிடிஸ் திரைக்கதையில், அதே பெயரிலான டென்னிஸ் லேஹென்னின் புதினத்தின் மீதான பிரதான படப்பிடிப்பு மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது.[53][54]

2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்க் ருஃபலோ, பென் கிங்க்ஸ்லி (Ben Kingsley) மற்றும் மிச்செல் வில்லியம்ஸ் ஆகியோர் நடிகர் குழாமில் இணைந்தனர்.[55][56] இத்திரைப்படம் 2010ஆம் வருடம் ஃபிப்ரவரி 19 அன்று வெளியானது.[57]

போர்ட்வாக் எம்பயர்

ஸ்கோர்செஸி, ஹெச்பிஓ நாடகத் தொடருக்காக, ஸ்டீவ் புஸ்செமி மற்றும் மைக்கேல் பிட் ஆகியோரின் நடிப்பில், நெல்ஸன் ஜான்சன் எழுதிய நூலின் அடிப்படையில் போர்ட்வாக் எம்பயர் [58] என்னும் ஒரு முன்னோட்ட நிகழ்வினை இயக்கியிருந்தார்Boardwalk Empire: The Birth, High Times and Corruption of Atlantic City .[59] தி சொப்ரானோஸ் என்னும் தொடரை முன்னர் எழுதியிருந்த டெரென்ஸ் விண்ட்டர் இத்தொடரை உருவாக்கினார். முன்னோட்ட நிகழ்வினை இயக்கிதற்குக் கூடுதலாக, இத் தொடரின் செயற் தயாரிப்பாளராகவும் ஸ்கோர்செஸி பணியாற்றுவார்.[59]

இத்தொடர், 2010ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகத் துவங்கும்.[59]

எதிர்காலத் திரைப்படங்கள்

சாத்தியக் கூறு கொண்டுள்ள பல எதிர்காலச் செயற்திட்டங்களை ஸ்கோர்செஸி அறிவித்துள்ளார். முன்னாள் பீட்டில்ஸ் உறுப்பினரான ஜார்ஜ் ஹாரிசான் பற்றிய ஒரு பிபிசி ஆவணம், இன்னமும் யூ.எஸ்.விநியோகஸ்தர் ஒருவரைப் பெறவில்லை எனினும், 2010ஆம் வருடம் வெளியீட்டிற்காகத் திட்டமிடப்படுகிறது.[60]

ஸ்கோர்செஸியின் அடுத்த முழு நீளத் திரைப்படம் ஃப்ரையான் செல்ஜ்னிக்கின் மிக அதிக அளவில் விற்பனையான, குழந்தைகளுக்கான வரலாற்றுப் புனைவு நூலான தி இன்வென்ஷன் ஆஃப் ஹ்யூகோ காபெரெட் என்பதன் தழுவல் எனக் கூறப்படுகிறது.

ஹ்யூகோ காபரெட் டைத் தொடர்ந்து ஷுஸ்கு என்டொ எழுதிய 17ஆம் நூற்றாண்டின் ஜப்பானிய திருச்சபைத் துறவிகளைப் பற்றிய நாடகமான சைலன்ஸ் என்பதன் தழுவலைத் தாம் படமாக்கலாம் என ஸ்கோர்செஸி கருதுகிறார்.

ஷட்டர் ஐலேண்ட் திரைப்படத்தைத் தொடர்ந்த தனது அடுத்த செயற்திட்டமாக சைலன்ஸ் திரைப்படத்தை ஸ்கோர்செஸி திட்டமிட்டிருந்தார்.[61]

தமது நீண்ட நாள் திட்டமான ஃபிராங்க் சின்ட்டாராவின் சுயவரலாற்றுப் படம் ஃபில் ஆல்டன் ராபின்சன் திரைக்கதையில் உருவாகிவருவதாக ஸ்கோர்செஸி அறிவித்துள்ளார்.[62]

ராபர்ட் டி நீரோவுடனான கூட்டுறவு

ராபர்ட் டி நீரோவின் அடிக்கடி கூட்டுறவு கொண்ட ஸ்கோர்செஸி, அந்நடிகருடன் மொத்தமாக ஒன்பது திரைப்படங்களைத் தயாரித்தார். 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவருக்கு அறிமுகமான ஸ்கோர்செஸி, டி நீரோவை தமது 1973ஆம் வருடத்திய மீன் ஸ்ட்ரீட்ஸ் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். மூன்று வருடங்களுக்குப் பிறகு, டாக்ஸி டிரைவர் திரைப்படத்தில், இம்முறை முன்னணிக் கதாபாத்திரத்தில், டி நீரோ நடித்தார். 1997ஆம் வருடம், நியூயார்க், நியூயார்க் திரைப்படத்திற்காக டி நீரோ மீண்டும் ஸ்கோர்செஸியுடன் இணைந்தார். ஆனால், இப்படம் தோல்வியுற்றது. இருப்பினும், அவர்களது கூட்டணி 1980ஆம் வருடங்களிலும் தொடரலானது. மிகுந்த அளவு வெற்றியடைந்த ரேஜிங் புல் மற்றும் வெற்றி பெறாத தி கிங் ஆஃப் காமெடி ஆகியவற்றை இந்த ஜோடி உருவாக்கியது. 1990ஆம் ஆண்டுகளில் இந்த ஜோடியின் மிகுந்த பாராட்டு பெற்ற படங்களில் ஒன்றான குட்ஃஃபெல்லோஸ் திரைப்படத்திலும், 1995ஆம் ஆண்டு காசினோவை உருவாக்குவதற்கு முன்னதான 1991ஆம் வருடத்திய கேப் ஃபியர் படத்திலும் டி நீரோ நடித்தார். ஸ்கோர்செஸியும் டி நீரோவும் ஐ ஹேர்ட் யூ பெயிண்ட் ஹௌசஸ் அல்லது தி ஐரிஷ்மேன் எனக் கூறப்படும் ஒரு திரைப்படத்திற்காக மீண்டும் இணையத் திட்டமிட்டுள்ளனர். ஆயினும், இச் செயற்திட்டத்திற்கான நாள் இன்னமும் குறிக்கப்படவில்லை.[63]

கௌரவங்கள்

  • 2007ஆம் வருடம் உலகின் மிகுந்த செல்வாக்குடைய 100 நபர்களில் ஒருவராக ஸ்கோர்செஸியை டைம் பத்திரிகை பட்டியலிட்டது.
  • 2007ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் டோட்டல் பிலிம் என்னும் பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் எக்காலத்திற்கும் சிறந்த இயக்குனராக, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கு முன்னதாகவும் மற்றும் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கிற்குப் பின்னராகவும் இரண்டாம் இடத்தில் ஸ்கோர்செஸி தேர்ந்தெடுக்கப்பட்டார்

இயக்குனர் முத்திரைகள்

  • தமது திரைப்படங்களை கதையின் இடை அல்லது இறுதியிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளுடன் துவக்குகிறார். இதற்கான எடுத்துக் காட்டுகளில் ரேஜிங் புல் [64] (1980), குட்ஃபெல்லாஸ் (1990)[65] காசினோ (1995)[66] மற்றும் தி லாஸ்ட் வால்ட்ஸ் ஆகியவை அடங்கும்.[67]
  • மெள்-இயக்க முறைமையை அடிக்கடி கையாளுகிறார். எ.கா: மீன் ஸ்ட்ரீட்ஸ் (1973) டாக்ஸி டிரைவர் (1976) ரேஜிங் புல் (1980).[68] தி கிங் ஆஃப் காமெடி (1983) திரைப்படத்தின் ஆரம்ப பங்கேற்புச் சான்றுகளின்போதும் மற்றும் குட்ஃபெல்லாஸ் (1990) திரைப்படத்தின் முழுவதுமாகத் தோன்றுகிற உறைச் சட்ட உத்தியின் பயன்பாட்டிற்காகவும் அறியப்படுகிறார்.
  • அவரது முன்னணிக் கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மனப் பிறழ்வு உடையவர்களாகவும் மற்றும்/ அல்லது ஒரு சமூகத்தினால் அல்லது சமூகத்தில் ஏற்கப்பட விரும்புபவர்களாகவும் உள்ளனர்.[69]
  • அவரது கட்டழகுக் கதாநாயகிகள் பொதுவாக முன்னணிக் கதாபாத்திரத்தின் விழிகளில் தேவதைகள் போன்றும் இவ்வுலகைச் சாராதவர்களாகவுமே காணப்படுகிறார்கள். இவர்கள் தாங்கள் தோன்றும் முதற் காட்சியில், வெண்ணிற ஆடையில் மெள்-இயக்க முறைமையில் படம் பிடிக்கப்படுகிறார்கள். உதாரணமாக டாக்ஸி டிரைவரில் சிபில் ஷெஃபர்ட்; ரேஜிங் புல் திரைப்படத்தில் கேத்தி மொரியார்ட்டி அணிந்த பிகினி உடை மற்றும் காசினோவில் ஷரான் ஸ்டோன் அணிந்த வெண்ணிறச் சிற்றாடை ஆகியவற்றைக் கூறலாம்.[70] இது இயக்குனர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கிற்கான ஒரு ஆமோதிப்பாக இருக்கக் கூடும்.[71]
  • தொலைவிலிருந்து துவிச்சக்கரத்தின் மூலம் படமெடுக்கும் முறைமையை அடிக்கடி பயன்படுத்துகிறார்.[72]
  • பிரபல இசை அல்லது மேற்குரல் ஆகியவற்றின் மீது அமைக்கப்படும் எம்ஓஎஸ் முறைமையைப் பயன்படுத்துகிறார்.இது ஒளிப்பதிவுக் கருவியின் ஆக்கிரமிப்பையும் மற்றும்/அல்லது விருவிருப்பான படத்தொகுப்பையும் ஈடுபடுத்துவதாகவும் உள்ளது.[73]
  • பெரும்பாலான தமது திரைப்படங்களில் சிறப்பு வேடம் ஒன்றினைப் புனைகிறார். மீன் ஸ்ட்ரீட்ஸ் , டாக்ஸி டிரைவர், தி கிங் ஆஃப் காமெடி, ஆஃப்டர் ஹவர்ஸ், தி லாஸ் டெம்ப்டேஷன் ஆஃப் கிரைஸ்ட் (இதில் முக்காடிட்டு மறைந்துள்ளார்), காசினோ, தி ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ் மற்றும் கேங்க்ஸ் ஆஃப் நியூ யார்க் ஆகியவை இதற்கான எடுத்துக் காட்டுகள்.

மேலும், படத்தில் தமது முகத்தைக் காட்டாது குரலை மட்டும் அளிக்கிறார். மீன் ஸ்ட்ரீட்ஸ் மற்றும் தி கலர் ஆஃப் மனி ஆகியவற்றில், படத்தின் துவக்கத்தில் மேற்குரல் விவரிப்பை அளிக்கிறார். ரேஜிங் புல் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், திரையில் காணப் பெறாத ஆடை மாற்று அறை உதவியாளரின் குரலாக இருக்கிறார். பிரிங்கிங் அவுட் தி டெட் திரைப்படத்தில் அவசர ஊர்தி அனுப்புனராக உருவம் காட்டாது குரலை மட்டும் அளிக்கிறார்.[74]

  • தமது திரைப்படங்களின் களமாக நியூ யார்க் நகரையே அடிக்கடி பயன்படுத்துகிறார். எ.கா: கேங்க்ஸ் ஆஃப் நியூ யார்க் , டாக்ஸி டிரைவர்,குட்ஃபேல்லோஸ், தி ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ், தி கிங் ஆஃப் காமெடி, ஆஃப்டர் ஹவர்ஸ், நியூ யார்க்,நியூ யார்க் ஆகியவையாகும்.[75]
  • சில நேரங்களில், 1920ஆம் ஆண்டுகளின் (அந்நாட்களில் பெரும்பான்மையான திரைப்படங்கள் இம்மாறு நிலையைக் கொண்டிருந்தன) ஊமைப் படங்களுக்கு ஒரு புகழுரையாக தமது கதாபாத்திரங்களை ஒரு கருவிழிப்படலம் (ஐரிஸ்) கொண்டு உயர் நிலையில் காட்டுகிறார். இந்த உத்தியினை அவர் (ஷரான் ஸ்டோன் மற்றும் ஜோ பெஸ்சி ஆகியோர் மீதாக) காசினோவிலும் லைஃப் லசன்ஸ் திரைப்படத்திலும் மற்றும் (மாட் டாமன் மீதாக) தி டெபார்ட்டட் திரைப்படத்திலும் பயன்படுத்துவதைக் காணலாம். ஐரிஸ் என்பது டாக்ஸி டிரைவர் திரைப்படத்தில் ஜோடி ஃபாஸ்டர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயருமாகும்.
  • அவரது படங்களில் சில, புகழ் பெற்ற மேற்கத்திய பழம்படங்களான, குறிப்பாக, ஷான் மற்றும் தி சர்ச்சர்ஸ் ஆகியவற்றிற்கான மறைமுகமான/சாடையான குறிப்புகளைக் கொண்டிருக்கும்.
  • மிக அண்மையில், தி டெபார்ட்டட் [76] திரைப்படத்தின் காவல் துறையினர், மற்றும் கேங்க்ஸ் ஆஃப் நியூ யார்க் [77] மற்றும் தி ஏவியேட்டர் [78] ஆகிய திரைப்படங்களின் அரசியல்வாதிகள் போன்று ஊழல் அதிகாரிகளை அவரது திரைப்படங்கள் சித்தரித்து வருகின்றன.
  • அவரது திரைப்படங்களில் குற்றம் என்பது முதன்மையான ஒரு கருப்பொருளாக அமைகிறது. இதைப் போன்றே குற்றவுணர்வினை உருவாக்கி அதனைக் கையாளும் கத்தோலிக்க மதத்தின் பங்கும் அமைந்துள்ளது. (எ.கா: ரேஜிங் புல், குட்ஃபெல்லாஸ், பிரிங்கிங் அவுட் தி டெட், மீன் ஸ்ட்ரீட்ஸ், ஹூ'ஸ் நாக்கிங் அட் மை டோர், ஷட்டர் ஐலேண்ட் போன்றவை).
  • மெள் இயக்க உத்தியில் பிரகாச விளக்குகள் மற்றும் திருத்தமாக அறியப்படும் ஒளிப்பதிவுக் கருவி/ ஒளிப்பான் / மூடுவான் ஆகியவற்றின் ஒலிகள்.

அடிக்கடி நிகழ்வதான கூட்டுறவுகள்

தமது திரைப்படங்கள் அனைத்திலும் அதே நடிகர்களுக்கு, குறிப்பாகத் தம்முடன் ஒன்பது படங்களில் பணியாற்றிய ராபர்ட் டி நீரோவிற்கு, பாத்திரம் அளிப்பதாக ஸ்கோர்செஸி அறியப்பட்டுள்ளார். இவற்றில், மூன்று திரைப்படங்கள் ஏஎஃப்ஐயின் 100 வருடங்கள்... 100 திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நீரோ தமது மிகச் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்திய திரைப்படமாக ரேஜிங் புல் திரைப்படத்தையே பெரும்பான்மையான விமர்சகர்கள் குறிப்பிடினும், தி கிங் ஆஃப் காமெடியில் ரூபர்ட் பப்கின் பாத்திரத்தில் டி நீரோவின் பணிதான் தமது இயக்கத்தில் அவரது சிறந்த பணியாகத் தாம் நினைப்பதாக ஸ்கோர்செஸி அநேக முறைகள் கூறியுள்ளார். மிக் அண்மையில், இளம் நடிகரான லியானார்டோ டிகாப்ரியோவுடன் ஸ்கோர்செஸி ஒரு புதிய அகத்தூண்டுதலைக் கண்டறிந்துள்ளார். இவருடன் நான்கு படங்களில் இணைந்துள்ளார். இரு படங்கள் அவரது இயக்கத்தில் உறுதி செய்யப்படவுள்ளன.[79]

டிகாப்ரியோவுடன் ஸ்கோர்செஸி கொண்டுள்ள கூட்டுறவை, முன்னர் அவர் டி நீரோவுடன் கொண்டிருந்த கூட்டுறவுடன் அநேக விமர்சகர்கள் ஒப்பிடுகின்றனர்.[80][81] ஸ்கோர்செஸி அடிக்கடி இணைந்து பணியாற்றிய பிற கலைஞர்களில், விக்டர் ஆர்கோ(6), ஹாரி நார்த்தப்(6), ஹார்வே கெயிட்டல்(5), முர்ரே மாஸ்டன்(5), ஜோ பெஸ்சி(3), பிராங்க் வின்சென்ட்(3) மற்றும் வெர்னா ப்ளூம்(3) ஆகியோர் அடங்குவர். மிகவும் பாராட்டுப் பெற்ற நடிகரான, ஹாலிவுட் சூழலிலிருந்து மிகவும் ஒதுங்கி விட்ட, டேனியல் டே-லூயிஸ் என்பவருடனும் ஸ்கோர்செஸி இருமுறை இணைந்துள்ளார். ஸ்கோர்செஸியின் பெற்றோரான சார்லெஸ் மற்றும் காதரைன் தங்களது மரணத்திற்கு முன்னர் சிறு பாத்திரங்கள், அல்லது துணைப் பத்திரங்களைப் பெற்று வந்தனர்.

குழுவைப் பொறுத்த வரையில் படத்தொகுப்பாளர் தெல்மா ஷூன்மேக்கர்,[82] ஒளிப்பதிவாளர்கள் மைக்கேல் பால்ஹஸ்[83] மற்றும் ராபர்ட் ரிச்சர்ட்ஸன், திரைக்கதாசிரியர்கள் பால் ஸ்க்ரேடர் மற்றும் மார்டிக் மார்ட்டின், உடையலங்கார நிபுணர் சாண்டி பாவெல், தயாரிப்பு வடிவமைப்பாளர் டாண்டே ஃபெர்ரெட்டி மற்றும் இசையமைப்பாளர்கள் ராப்பி ராபர்ட்ஸன், ஹோவார்ட் ஷோர்[84] மற்றும் எல்மர் பெர்ன்ஸ்டீன்[85] ஆகியோருடன் அடிக்கடி இணைந்து பணி புரிந்தார். ஸ்கோர்செஸியுடனான தங்களது கூட்டுறவின் காரணமாக ஷூன்மேக்கர், ரிச்சர்ட்ஸன், போவெல் மற்றும் ஃபெர்ரெட்டி ஆகிய அனைவரும் தத்தமது துறைகளில் அகாடமி விருதுகள் பெற்றுள்ளனர். எலைன் மற்றும் ஹிட்ச்காக்கின் விரும்பித் தேர்ந்தெடுத்த தலைப்பு வடிவமைப்பாளரான சால் பாஸ் ஆகியோர் குட்ஃபெல்லாஸ், ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ் , காசினோ மற்றும் கேப் ஃபியர் ஆகியவற்றிற்குத் துவக்கத் தலைப்பினை வடிவமைத்துள்ளனர். அவர், பாண்டலெஸ் வௌல்கர்ஸ் இயக்கத்தில் விக்டோரியா ஹரால்பிடௌ மற்றும் டேமியன் லூயிஸ், ஸ்டீவன் பெர்க்காஃப் மற்றும் கோஸ்டா ஸோம்மர் ஆகியோர் நடித்த பிரைட்ஸ் என்னும் படத்திற்குச் செயல் தயாரிப்பாளராக இருந்தார்.

தொலைக்காட்சி

ஹெச்பிஓவிற்காக மார்ட்டின் ஸ்கோர்செஸியின் நாடக முன்னோட்டவுருவாக டெரென்ஸ் விண்ட்டர் எழுதி ஸ்கோர்செஸி இயக்கவிருக்கும் போர்ட்வாக் எம்பயர் படக் குழுமத்தில் அலெஸ்கா பல்லாடினோ, பால் ஸ்பார்க்ஸ், ஷியா விக்ஹாம் மற்றும் ஆண்டொனி லாசியுரா ஆகியோர் உள்ளனர். இது அட்லாண்டிக் நகரின் 20ஆம் நூற்றாண்டுத் தோற்றுவாய்களைப் பற்றிய வரலாற்றுக் கூறுகளைக் கொண்டதாக, சாராய விநியாக வட்டத்தை நடத்தும் நுக்கி ஜான்சன் (ஸ்டீவ் புஸ்செமி) மற்றும் அவரது இரக்கமற்ற அல்லக்கை ஜிம்மி டார்மொடி (மைக்கேல் பிட்) ஆகியோரைப் பற்றி அமைந்துள்ளது.[86]

விருதுகளும் அங்கீகாரங்களும்

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


மார்ட்டின் ஸ்கோர்செஸி 1997ஆம் வருடம் ஏஎஃப்ஐ வாழ்நாள் விருது பெற்றார்.

  • 1998ஆம் ஆண்டு அமெரிக்கத் திரைப்படக் கழகம் ஸ்கோர்செஸியின் மூன்று படங்களை அமெரிக்காவின் தலை சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் வைத்தது. அவை, 24ஆம் இடத்தில் ரேஜிங் புல், 47ஆம் இடத்தில் டாக்ஸி டிரைவர் மற்றும் 94ஆம் இடத்தில் குட்ஃபெல்லாஸ் ஆகியவையாகும். அவர்களது பத்தாவது வருடப் பதிப்பின் பட்டியலில் ரேஜிங் புல் நான்காவது இடத்திற்கு அனுப்பப்பட்டு டாக்ஸி டிரைவர் 52 இடத்திற்கும் குட்ஃபெல்லாஸ் 92ஆம் இடத்திற்கும் சென்றன.
  • 200ஆம் வருடம், ஏஎஃப்ஐ அமெரிக்காவின் மிகவும் மனதை அதிர வைக்கும் படங்களின் பட்டியலில் ஸ்கோர்செஸியின் இரண்டு படங்களை வைத்தது: அவை 22ஆம் இடத்தில் டாக்ஸி டிரைவர் மற்றும் 51ஆம் இடத்தில் ரேஜிங் புல் ஆகியவையாகும்.
  • 2007ஆம் வருடம் செப்டம்பர் 11 அன்று, தொழில் முறை உன்னதம் மற்றும் கலாசார செல்வாக்கு ஆகியவற்றிற்கு அங்கீகாரம் அளிப்பதான, கௌரவம் மிக்க கென்னடி மைய கௌரவங்கள் குழுவானது டிசம்பர் முதலாம் நாள் நடைபெறவுள்ள விழாவில் கௌரவிக்கப்படுபவர்களில் ஒருவராக ஸ்கோர்செஸியை அறிவித்தது.
  • 2005ஆம் ஆண்டு ஜனவரி 5 அன்று பாரிஸில் நிகழ்ந்த ஒரு விழாவில் திரையுலகிற்கான பங்களிப்பிற்காக மார்ட்டின் ஸ்கோர்செஸிக்கு ஃபிரெஞ்சு அரசின் லீஜன் ஆஃப் ஹானர் வழங்கப்பட்டது.
  • 2007ஆம் ஆண்டு தி டெபார்ட்டட் திரைப்படத்திற்காக ஸ்கோர்செஸி சிறந்த இயக்குனருக்கான அகாடமி விருதினை வென்றார். இது சிறந்த திரைப்படமாகவும் தேர்வானது.
  • 67ஆவது கோல்டன் குளோப் விருதுகளின்போது 2010ஆம் ஆண்டின் செசில் பி டெமில் விருதினையும் ஸ்கோர்செஸி பெற்றார்.

திரைப்பட வரலாறு (இயக்குனராக)

முழு நீளத் திரை உரைகள்

வருடம்திரைப்படம்ஆஸ்கார் பரிந்துரைகள்ஆஸ்கார்

வெற்றிகள்

கோல்டன் குளோப் பரிந்துரைகள்கோல்டன் குளோப் வெற்றிகள்
1968ஹூ'ஸ் தட் நாக்கிங் அட் மை டோர்----
1972பாக்ஸ்கார் பெர்த்தா----
1973மீன் ஸ்ட்ரீட்ஸ்----
1974அலைஸ் டஸின்'ட் லிவ் ஹியர் எனிமோர்312-
1976டாக்ஸி டிரைவர்4-2-
1977நியூயார்க்,நியூயார்க்--4-
1980ரேஜிங் புல்8271
1983தி கிங் ஆஃப் காமெடி----
1985ஆஃப்டர் ஹவர்ஸ்--1-
1986தி கலர் ஆஃப் மனி412-
1988தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிரைஸ்ட்1-2-
1990குட்ஃபெல்லாஸ்615-
1991கேப் ஃபியர்2-2-
1993தி ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ்5141
1995காசினோ1-21
1997குன்டுன்4-1-
1999பிரிங்கிங் அவுட் தி டெட்----
2002கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்10-52
2004தி ஏவியேட்டர்11563
2006தி டெபார்ட்டட்5461
2010ஷட்டர் ஐலேண்ட்
மொத்தம் 21 முழு நீளத் திரைப்படங்கள்

6415519

ஆவணப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்விருதுக்கான பரிந்துரைகள்வென்ற விருதுகள்
1970ஸ்ட்ரீட் ஸீன்ஸ்
1974இத்தாலியன் அமெரிக்கன்
1978தி லாஸ்ட் வால்ட்ஸ்
American Boy: A Profile of Steven Prince
1995எ பர்ஸனல் ஜர்னி வித் மார்ட்டின் ஸ்கோர்செஸி த்ரூ அமெரிக்கன் மூவீஸ்
1999மை வாயேஜ் டு இத்தாலி
2003ஃபீல் லைக் கோயிங் ஹோம்
2005நோ டிரக்ஷன் ஹோம்: பாப் டைலான்4 எம்மிகள், 2 கிராமிகள்1 எம்மி, 1 கிராமி
2007Martin Scorsese Presents: Val Lewton - The Man in the Shadows
2008ஷைன் எ லைட்

குறும்படங்கள்

ஆண்டுதிரைப்படம்விருதுக்கான பரிந்துரைகள்வென்ற விருதுகள்
1959வெசுவியஸ் VI

1963வாட்'ஸ் எ நைஸ் கேர்ல் லைக் யூ டூயிங் இன் அ பிளேஸ் லைக் திஸ்?
1964இட்'ஸ் நாட் ஜஸ்ட் யூ, முர்ரே!
1967தி பிக் ஷேவ்
1987

பேட் (மைக்கேல் ஜாக்சனுடன் இசை ஒளிக்காட்சி)

1989நியூயார்க் ஸ்டோரீஸ் (பகுதி லைஃப்'ஸ் லஸன்ஸ் )
2007தி கீ டு ரிசர்வா (குறும்படம்)

தேர்ந்தெடுக்கப்பட்ட திரை வரலாறு (நடிகராக)

1967ஹூ'ஸ் தட் நாக்கிங் அட் மை டோர்

(சிறப்பு வேடம்) முரடனாக #2

1973மீன் ஸ்ட்ரீட்ஸ்(சிறப்பு வேடம்)ஜிம்மி ஷார்ட்ஸ் மற்றும் சார்லி கப்பாவின் உரையுடன்
1974அலைஸ் டஸின்'ட் லிவ் ஹியர் எனிமோர்(சிறப்பு வேடம்) உணவு விடுதியிலிருக்கும் மனிதராக
1976டாக்ஸி டிரைவர்(சிறப்பு வேடம்),

டிராவிஸின் வாகனத்தில் பயணியாக

-1978தி லாஸ்ட் வால்ட்ஸ்(தாமாகவே)
1980ரேஜிங் புல்(இறுதியில் லா மோட்டாவுடன் பேசும் மனிதர்)
1983தி கிங் ஆஃப் காமெடி(சிறப்பு வேடம்)

தொலைக்காட்சி இயக்குனராக

1986ரௌண்ட் மிட்நைட்

குட்லேயாக

1990ட்ரீம்ஸ்

வின்செண்ட் வான் கோகாக

1991கில்ட்டி பை சஸ்பிஷன்

ஜோ லெஸ்ஸராக

1994குவிஸ் ஷோ

மார்ட்டின் ரிட்டன்ஹோமாக

1999தி மியூஸ்(தாமாகவே)
1999பிரிங்கிங் அவுட் தி டெட்

(அனுப்புனர்)

2002கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்

செல்வந்தரான வீட்டு உரிமையாளராக

2004ஷார்க் டேல்

(குரல்) ஸைக்ஸ்

2005கர்ப் யுவர் எந்துசியாஸம்(தாமாகவே)
2008என்ட்ரௌஜ்(தாமாகவே)

மேலும் பார்க்க

  • திரைப்படக் கூட்டுறவுகளின் பட்டியல்

குறிப்புகள்

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Martin Scorsese
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை