முகமது சாலா

முகமது சாலா கலி (Mohamed Salah Ghaly, அரபு மொழி: محمد صلاح غالى‎ பிறப்பு: 15 சூன் 1992) எகிப்திய தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் ஆங்கில பிரீமியர் லீக் கழகமான லிவர்பூல் அணியிலும் எகிப்திய தேசிய அணியிலும் முன்கள வீரராக விளையாடி வருகிறார்.

முகமது சாலா

உருசியாவில் விளையாடப்பட்ட 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியின்போது
சுய தகவல்கள்
முழுப் பெயர்முகமது சாலா கலி[1]
பிறந்த நாள்15 சூன் 1992 (1992-06-15) (அகவை 31)[2]
பிறந்த இடம்நக்ரிக், எகிப்து[3]
உயரம்1.75 மீ[4]
ஆடும் நிலை(கள்)முன்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
லிவர்பூல்
எண்11
இளநிலை வாழ்வழி
2004–2005இத்திகாடு பேசியோன்[5]
2005–2006ஒத்மாசன் டான்டா [5]
2006–2010எல் மோக்காவ்லூன்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2010–2012எல் மோக்காவ்லூன்38(11)
2012–2014பேசல்47(9)
2014–2016செல்சீ13(2)
2015→ பியோரென்டினா (கடன்)16(6)
2015–2016→ ரோமா (கடன்)34(14)
2016–2017ரோமா31(15)
2017–லிவர்பூல்36(32)
பன்னாட்டு வாழ்வழி
2010–2011எகிப்து 20 கீழ்11(3)
2011–2012எகிப்து 23 கீழ்11(4)
2011–எகிப்து59(35)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 18:54, 13 மே 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 18:00, 25 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

சாலா தமது காற்பந்தாட்டத்தை 2010ஆம் ஆண்டில் உள்ளூர் கழகமான எல் மோக்காவ்லூனில் தொடங்கினார். பின்னர் பேசல் கழகத்திற்கு அறிவிக்கப்படாத தொகைக்கு ஒப்பந்தமானார். சுவிட்சர்லாந்தில் சுவிசு சூப்பர் லீக்கின் தங்க விளையாட்டாளர் பதக்கம் வென்றார். இவரது செயல்திறனால் ஈர்க்கப்பட்ட இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகம் செல்சீ 2014இல் இவரை £11 மில்லியனுக்கு வாங்கியது. இருப்பினும் முதல் பருவத்தில் இவரை அரிதாகவே பயன்படுத்தியது. சீரீ ஆ கழகங்களான பியோரென்டினாவிற்கும் ரோமாவிற்கும் கடன் வழங்கியது. இறுதியில் ரோமா கழகம் இவரை €15 மில்லியனுக்கு உரித்தாக்கிக் கொண்டது.

ரோமா கழகத்தில் இவரது தொடர்ந்த சிறப்பான பங்களிப்பால் 2016-17ஆம் பருவத்தில் அவ்வணி இரண்டாமிடம் எட்டியது. திரும்பவும் ஆங்கிலப் பிரீமியர் லீக்கிற்கு திரும்பி லிவர்பூல் கழகத்திற்கு £36.9 மில்லியனுக்கு ஒப்பந்தமானார். இக்காலத்தில் இயற்கையில் பக்கவாட்டு விளையாளராக இருந்த சாலா முழுமையான முன்கள வீரரானார். 36 ஆட்டங்களில் 32 கோல்கள் அடித்து பிரீமியர் லீக்கின் தங்க காலணி விருதை பெற்றார்.

பன்னாட்டுப் போட்டிகளில் சாலா எகிப்திய அணியில் 20ஆம் அகவையிலிருந்து ஆடி வருகிறார். இவர் பங்கேற்ற ஆபிரிக்கா 20 கீழானோர் நாடுகள் கோப்பையில் எகிப்து வெங்கலப் பதக்கம் வென்றது. 2011 பீபா கீ-20 உலகக்கோப்பை, 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 2012ஆம் ஆண்டின் மிகவும் எதிர்காலமுள்ள திறமையாளராக ஆபிரிக்க கால்பந்து கூட்டிணைப்பு தேர்ந்தெடுத்தது.[6] ஆபிரிக்க கால்பந்து கூட்டிணைப்பின் உலகக்கோப்பை தகுதியாளர் போட்டியில் மிக அதிகமான கோல்களை அடித்து எகிப்து 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்க உதவினார். இதற்காக இவர் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக ஆபிரிக்க அமைப்பும் பிபிசியும் தேர்ந்தெடுத்தன.[7][8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mohamed Salah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முகமது_சாலா&oldid=3567889" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை