ரஃபேல் நடால்

இரஃபேல் "ரஃபா" நடால் பெரேரா (Rafael "Rafa" Nadal Parera; பிறப்பு: 3 சூன் 1986)[4] என்பவர் தொழில்முறை டென்னிசு வீரர் ஆவார். டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் புள்ளிவிவரத்தின் படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இவர் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார்[5]. களிமண் ஆடுகளங்களில் பல வெற்றிகளைப் பெற்றதினால் இவர் "கிங் ஆஃப் கிளே" என அழைக்கப்படுகிறார்.[6] அனைத்து விதமான ஆடுகளங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக டென்னிசு வரலாற்றில் சிறப்பான வீரராக அறியப்படுகிறார்[7]. 2022 சனவரியில் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றுப் போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதன்[8] மூலம் அதிக பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ள ஆடவர் என்ற பெருமையை அடைகிறார்[9] .

இரஃபேல் நடால்
Rafael Nadal
2015இல் நடால்
முழுப் பெயர்இரஃபேல் நடால் பரேரா
நாடு ஸ்பெயின்
வாழ்விடம்மனகோர், மயோர்க்கா, எசுப்பானியா
பிறப்பு3 சூன் 1986 (1986-06-03) (அகவை 37)
மனகோர், மயோர்க்கா, எசுப்பானியா
உயரம்1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)[1]
தொழில் ஆரம்பம்2001
விளையாட்டுகள்இடக்கை
பயிற்சியாளர்டோனி நடால் (2005–2017)
பிரான்சிசுக்கோ ரோயிக் (2005–)
கார்லோசு மொயா (2016–)
மார்க் லோப்பசு (2021–)[2]
பரிசுப் பணம்US$127,121,385 [3]
  •  வருவாயில் 3-வது இடத்தில்
இணையதளம்rafaelnadal.com
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்1038–209 (83.24%)
பட்டங்கள்90
அதிகூடிய தரவரிசைஇல. 1]] (18 ஆகத்து 2008)
தற்போதைய தரவரிசைஇல. 4 (06 சூன் 2022)[1]
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2009, 2022)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020, 2022)
விம்பிள்டன்வெ (2008, 2010)
அமெரிக்க ஓப்பன்வெ (2010, 2013, 2017, 2019)
ஏனைய தொடர்கள்
Tour Finalsஇறுதி (2010, 2013)
ஒலிம்பிக் போட்டிகள் (2008)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்138–74 (65.09% ATP தொடர், கிராண்ட் சிலாம், டேவிசுக் கோப்பை)
பட்டங்கள்11
அதியுயர் தரவரிசைஇல. 26 (8 ஆகத்து 2005)
தற்போதைய தரவரிசைஇல. 1156 (31 சனவரி 2022)[1]
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3R (2004, 2005)
விம்பிள்டன்2R (2005)
அமெரிக்க ஓப்பன்அரையிறுதி (2004)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள் (2016)
அணிப் போட்டிகள்
டேவிசுக் கோப்பைவெ (2004, 2008, 2009, 2011, 2019)
பதக்கத் தகவல்கள்
இற்றைப்படுத்தப்பட்டது: 31 சனவரி 2022.

நடால் 22 முறை பெருவெற்றித் தொடர் (டென்னிசு) போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.[4] இவருக்கும் ரோஜர் ஃபெடரருக்கும் புகழ்பெற்ற டென்னிஸ் எதிரிடை இருந்து வந்தது. ரோஜர் ஃபெடரர் உடன் 33 போட்டிகளை விளையாடி நடால் 23 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[10] நடால் 14 முறை பிரெஞ்சு ஓப்பன் விருது , 4 முறை யூ.எசு. ஓப்பன் விருது, இரு முறை விம்பிள்டன் கோப்பை விருது, இரு முறை ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று விருதினையும் பெற்றுள்ளார். இவர் உறுப்பினராக இருந்த சமயத்தில் எசுப்பானியா ஆண்கள் பிரிவு அணி, நான்கு முறைகளில் 2004, 2008, 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் டேவிசுக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டென்னிசு வரலாற்றில் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) போட்டியில் பட்டம் வென்ற ஏழாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். தனது 24 வயதில் இந்த சாதனையைப் படைத்தார்.

நடால் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) எனப்படும் பெருஞ் சிறப்புமிக்க போட்டியில் விம்பிள்டன் (இரு முறை வெற்றி), ஆஸ்திரேலிய ஓப்பன் (ஒரு முறை), ரோலான் கேரோஸ் (முன்னர் பிரெஞ்சு ஓப்பன் - 14 முறை), யூ.எஸ். ஓப்பன் (இரு முறை வெற்றி) ஆக மொத்தம் பதினான்கு கிராண்ட் சிலாம் போட்டிகளை வென்றுள்ளார். அன்ட்ரே அகாசிக்கு அடுத்தபடியாக ஒற்றையர் பிரிவில் பெருவெற்றித் தொடரில் கோப்பை வெல்லும் இரண்டாவது ஆண் வீரரானார். 2011 ஆம் ஆன்டிற்கான உலகின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வானார்.[11]

ஆரம்பகால வாழ்க்கை

இரபேல் நடால் மனகோர்,பலேரிக் தீவுகள், எசுப்பானியாவில் சூன் 3, 1986 இல் பிறந்தார். இவரின் தந்தை செபாஸ்டியன் நடால் ஒரு தொழில் முனைவோர். இவருக்குச் சொந்தமாக ஒரு காப்பீடு நிறுவனம் உள்ளது. மேலும் கண்ணாடி மற்றும் சாளர நிறுவனம் வைத்துள்ளார்.[12] சா புந்தா எனும் உணவகத்தையும் நடத்தி வருகிறார். இவரின் தாய் அனா மரியா பரேரா குடும்பத் தலைவி. இவருக்கு மரியா இசபெல்லா எனும் இளைய சகோதரி உள்ளார். இவரின் மாமா மைக்கேல் ஏஞ்சல் நடால் ஒரு முன்னாள் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர் ஆவார்.[12] இவர் பார்சிலோனா கால்பந்துக் கழகத்திற்காகவும், தேசிய எசுப்பானிய அணிக்காகவும் விளையாடி உள்ளார்.[13] நடால் ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.[14] இவரின் மற்றொரு மாமாவான டோனி நடால் தான் இவருக்கு இயற்கையிலேயே டென்னிசு விளையாடும் திறன் இருப்பதைக் கண்டறிந்து இவரின் மூன்றாவது வயதிலேயே இவரை டென்னிசு விளையாடச் செய்தார்.[15]

தனது எட்டாம் வயதில் ,12 வயதிற்கு உட்பட்டோருக்கான உள்ளூர் டென்னிசு வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார். அந்தச் சமயத்தில் சிறந்த கால்பந்து வீரராகவும் திகழ்ந்துள்ளார்.[16] இதன் பின்பு தோனி நடால், இவருக்கு அளித்த பயிற்சியினை தீவிரப்படுத்தினார். இவருக்கு இயற்கையாகவே இருக்கும் இடக்கைப் பழக்கத்தினால் டென்னிசு மைதானத்தில் இடதுகை கொண்டு விளையாடுமாறு அறிவுறுத்தினார். வரிப்பந்தாட்டத்தில் வெளியே களப்புறம் நோக்கி அடிக்கும் போது நடால் இரண்டு கையையும் பயன்படுத்துவதைக் கவனித்தார்.[16]

கிராண்ட் சிலாம் போட்டிகளில் காலநிரல்

பெருவெற்றித் தொடர் இறுதிப் போட்டிகள்:

முடிவுஆண்டுசுற்றுதரைஎதிராளிபுள்ளி
வெற்றி2005பிரெஞ்சு ஓப்பன்களிமண் மரியானோ புவெர்த்தா6–7(6–8), 6–3, 6–1, 7–5
வெற்றி2006பிரெஞ்சு ஓப்பன் (2)களிமண் ரொஜர் பெடரர்1–6, 6–1, 6–4, 7–6(7–4)
தோல்வி2006விம்பிள்டன்புற்றரை ரொஜர் பெடரர்0–6, 6–7(5–7), 7–6(7–2), 3–6
வெற்றி2007பிரெஞ்சு ஓப்பன் (3)களிமண் ரொஜர் பெடரர்6–3, 4–6, 6–3, 6–4
தோல்வி2007விம்பிள்டன்புற்றரை ரொஜர் பெடரர்6–7(7–9), 6–4, 6–7(3–7), 6–2, 2–6
வெற்றி2008பிரெஞ்சு ஓப்பன் (4)களிமண் ரொஜர் பெடரர்6–1, 6–3, 6–0
வெற்றி2008விம்பிள்டன்புற்றரை ரொஜர் பெடரர்6–4, 6–4, 6–7(5–7), 6–7(8–10), 9–7
வெற்றி2009ஆத்திரேலிய ஓப்பன்கடின ரொஜர் பெடரர்7–5, 3–6, 7–6(7–3), 3–6, 6–2
வெற்றி2010பிரெஞ்சு ஓப்பன் (5)களிமண் ராபின் சோடர்லிங்கு6–4, 6–2, 6–4
வெற்றி2010விம்பிள்டன் (2)புற்றரை தொமாசு பெர்டிச்சு6–3, 7–5, 6–4
வெற்றி2010அமெரிக்க ஓப்பன்கடின நோவாக் ஜோக்கொவிச்6–4, 5–7, 6–4, 6–2
வெற்றி2011பிரெஞ்சு ஓப்பன் (6)களிமண் ரொஜர் பெடரர்7–5, 7–6(7–3), 5–7, 6–1
தோல்வி2011விம்பிள்டன்புற்றரை நோவாக் ஜோக்கொவிச்4–6, 1–6, 6–1, 3–6
தோல்வி2011அமெரிக்க ஓப்பன்கடின நோவாக் ஜோக்கொவிச்2–6, 4–6, 7–6(7–3), 1–6
தோல்வி2012ஆத்திரேலிய ஓப்பன்கடின நோவாக் ஜோக்கொவிச்7–5, 4–6, 2–6, 7–6(7–5), 5–7
வெற்றி2012பிரெஞ்சு ஓப்பன் (7)களிமண் நோவாக் ஜோக்கொவிச்6–4, 6–3, 2–6, 7–5
வெற்றி2013பிரெஞ்சு ஓப்பன் (8)களிமண் டேவிட் ஃபெரர்6–3, 6–2, 6–3
வெற்றி2013அமெரிக்க ஓப்பன் (2)கடின நோவாக் ஜோக்கொவிச்6–2, 3–6, 6–4, 6–1
தோல்வி2014ஆத்திரேலிய ஓப்பன்கடின ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா3–6, 2–6, 6–3, 3–6
வெற்றி2014பிரெஞ்சு ஓப்பன் (9)களிமண் நோவாக் ஜோக்கொவிச்3–6, 7–5, 6–2, 6–4
தோல்வி2017ஆத்திரேலிய ஓப்பன்கடின ரொஜர் பெடரர்4–6, 6–3, 1–6, 6–3, 3–6
வெற்றி2017பிரெஞ்சு ஓப்பன் (10)களிமண் இசுத்தான் வாவ்ரிங்கா6–2, 6–3, 6–1
வெற்றி2017அமெரிக்க ஓப்பன் (3)கடின கெவின் ஆன்டர்சன்6–3, 6–3, 6–4
வெற்றி2018பிரெஞ்சு ஓப்பன் (11)களிமண் தொமினிக் தீம்6–4, 6–3, 6–2
வெற்றி2019ஆத்திரேலிய ஓப்பன்கடின நோவாக் ஜோக்கொவிச்3–6, 2–6, 3–6
வெற்றி2019பிரெஞ்சு ஓப்பன் (12)களிமண் தொமினிக் தீம்6–3, 5–7, 6–1, 6–1
வெற்றி2019அமெரிக்க ஓப்பன் (4)கடின டேனியல் மித்விதிவ்7–5, 6–3, 5–7, 4–6, 6–4
வெற்றி2020பிரெஞ்சு ஓப்பன் (13)களிமண் நோவாக் ஜோக்கொவிச்6–0, 6–2, 7–5
வெற்றி2022ஆத்திரேலிய ஓப்பன் (2)கடின டேனியல் மித்விதிவ்2–6, 6–7(5–7), 6–4, 6–4, 7–5
வெற்றி2022பிரெஞ்சு ஓப்பன்களிமண்காஸ்பர் ரூட்6-3, 6-3, 6-0

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நடால்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரஃபேல்_நடால்&oldid=3861863" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை