ராபர்ட் பாட்டின்சன்

ராபர்ட் டக்ளஸ் தாமஸ் பாட்டின்சன் (ஆங்கில மொழி: Robert Douglas Thomas Pattinson)[2][3] (பிறப்பு: 13 மே 1986) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் பெரிய பெருச்செலவு மற்றும் சுயாதீன திரைப்படங்களில் நடித்ததன் மூலம், உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியியலில் இடம்பிடித்துள்ளார். அத்துடன் 2010 ஆம் ஆண்டில், டைம் பத்திரிகை அவரை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக பெயரிட்டது, மேலும் அவர் ஃபோர்ப்ஸ் பிரபலங்கள் 100 பட்டியலில் இடம்பெற்றார்.

ராபர்ட் பாட்டின்சன்
பிறப்புராபர்ட் டக்ளஸ் தாமஸ் பாட்டின்சன்
13 மே 1986 (1986-05-13) (அகவை 37)
இலண்டன், இங்கிலாந்து
பணி
செயற்பாட்டுக்
காலம்
2004–இன்று வரை
உறவினர்கள்லிஸி பாட்டின்சன் (சகோதரி)[1]

இவர் தனது 15 வயதில் லண்டன் தியேட்டர் கிளப்பில் நடிக்கத் தொடங்கிய பிறகு, ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (2005) என்ற கற்பனைத் திரைப்படத்தில் செட்ரிக் டிகோரியாக நடித்ததன் மூலம் பாட்டின்சன் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அதை தொடர்ந்து தி ட்விலைட் சாகா திரைப்படத் தொடரில் (2008-2012) எட்வர்டு கலென் என்ற கதாபாத்திரத்தை சித்தரித்ததற்காக அவர் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றார். இந்த திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் $3.3 பில்லியனுக்கு மேல் வசூலித்தது. அதை தொடர்ந்து குட் டைம் (2017) மற்றும் டெனெட்டு (2020) போன்ற பல திரைப்படங்களில்.நடித்துள்ளார். மேலும் 2022 ஆம் ஆண்டு வெளியான தி பேட்மேன் என்ற டிசி வரைகதை மீநாயகன் திரைப்படத்தில் பேட்மேன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பைத் தவிர, மாதிரி நடிகராகவும் மற்றும் இசை கலைஞராகவும் உள்ளார். அத்துடன் கோ பிரச்சாரம் உட்பட பல தொண்டு நிறுவனங்களை ஆதரிக்கிறார் மற்றும் 2013 முதல் டியோர் ஹோம் என்ற வாசனையின் முகமாக இருந்து வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

ராபர்ட் பாட்டின்சன் மே 13, 1986 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் லண்டனில்[4][5] சாரணர் கிளேர் (சார்ல்டன்) மற்றும் விண்டேஜ் கார் டீலர் ரிச்சர்ட் பாட்டின்சன் ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இளையவரான பாட்டின்சன் பிறந்தார். இவரது தாயார் கிளேர் ஒரு மாதிரி நிறுவனத்தில் பணிபுரிந்தார், தந்தையான ரிச்சர்ட் அமெரிக்காவிலிருந்து வின்டேஜ் கார்களை இறக்குமதி செய்கிறார்.[6] இவர் எலிசபெத் (லிஸி) மற்றும் விக்டோரியா ஆகிய இரு மூத்த சகோதரிகளுடன் பார்ன்ஸில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வளர்ந்தார்.[7]

தொழில் வாழ்க்கை

விளம்பர நடிகர்

பாட்டின்சன் தனக்கு பனிரெண்டு வயதாகும்போது வடிவழகர் பணியில் சேர்ந்தார், ஆனால் இது நான்கு வருடங்களுக்குள்ளாகவே முடிவடைந்தது. அத்துடன் இவர் தான் ஒரு ஆண்மகன் தோற்றமுள்ள வடிவழகராக பணியாற்றத் தவறிவிட்டதாக அவர் தன்னை குற்றம்சாட்டிக்கொண்டார்.

2008 ஆம் ஆண்டில் பாட்டின்சன் இவ்வாறு விளக்கமளித்தார் "நான் முதன்முறையாக தொடங்கியபோது நான் அதிக உயரமாகவும் பெண்ணைப்போன்றும் தோன்றினேன், அதனால் எனக்கு நிறைய வேலைகள் கிடைத்தன, ஏனென்றால் அந்த காலகட்டத்தில் ஆண் போன்றும் பெண் போன்றும் தோன்றுவது சாதாரணமாக இருந்தது. பின்னர்தான் நான் ஒரு ஆணைப் போல் தோன்ற ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன், இதனால் எனக்கு வேலையே கிடைக்கவில்லை. எனக்கு மிக வெற்றிகரமான வடிவழகு வாழ்க்கை அமையவில்லை என்றார்".

நடிப்பு

இவர் 2004 ஆம் ஆண்டு வேனிட்டி ஃபேர் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (2005),[8] தி ஹாண்டட் ஏர்மேன் (2006), ட்விலைட் (2008),[9] தி ட்விலைட் சாகா: நியூ மூன் (2009),[10] தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ் (2010), தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1 (2011),[11] தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 (2012), குட் டைம் (2017) மற்றும் டெனெட்டு (2020), தி பேட்மேன் (2022)[12][13][14] உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை

கிளாமர் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் அவர் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான ஆண் என்று பீப்பிள் பத்திரிக்கையால் அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை