வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு

அரசுகளுக்கிடையேயான இராணுவக் கூட்டணி

பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization) என்பது, 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக் கூட்டணி ஆகும். இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரசல்சில் உள்ளது. வெளியார் தாக்குதலுக்கு எதிராக பரஸ்பர பாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ்வமைப்பு ஒரு கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ளது.

வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு
Organisation du traité de l'Atlantique nord
உருவாக்கம்4 ஏப்ரல் 1949
வகைஇராணுவக் கூட்டணி
தலைமையகம்பிரசெல்ஸ், பெல்ஜியம்
உறுப்பினர்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
பிரெஞ்சு[2]
பொதுச் செயலாளர்
ஆண்டர்ஸ் ஃபோ ராஸ்முசென்
இராணுவச் செயற்குழுத் தலைவர்
கியாம்பாவுலோ டி பாவுலோ
வலைத்தளம்

இதன் முதல் சில ஆண்டுகள் இது ஒரு அரசியல் கூட்டணியாகவே செயல்பட்டது. ஆனாலும், கொரியப் போர் இதன் உறுப்பு நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஐக்கிய அமெரிக்கத் தளபதிகளின் கீழ் ஒன்றிணைந்த படைக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இக் கூட்டணியின் முதல் செயலாளர் நாயகமான லார்ட் இஸ்மே என்பவரின் புகழ் பெற்ற கூற்றின்படி, இவ்வமைப்பின் நோக்கம், ரஷ்யர்களை வெளியிலும், அமெரிக்கர்களை உள்ளேயும், ஜேர்மானியர்களைக் கீழேயும் வைத்திருப்பதாகும். பனிப்போர்க் காலம் முழுவதும், ஐக்கிய அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் தொடர்புகளின் பலம் குறித்த ஐயம் நிலவி வந்ததுடன், சோவியத் ஒன்றியத்தின் தாக்குதலுக்கு எதிராக "நாட்டோ" கூட்டணியினர் வழங்கக்கூடிய பாதுகாப்புக் குறித்த கவலைகளும் இருந்தன. இது பிரான்சின் அணுவாயுதத் திட்டத்தின் உருவாக்கத்துக்கும், 1966 இல் பிரான்ஸ் நாட்டோவின் இராணுவக் கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கும் வழிகோலியது.

பொது செயலாளர்களின் பட்டியல்
#பெயர்நாடுகாலப்பகுதி
1லோர்ட் இஸ்மாய் ஐக்கிய இராச்சியம்4 ஏப்ரல் 1952 – 16 மே 1957
2போல்-ஹென்றி ஸ்பாக் பெல்ஜியம்16 மே 1957 – 21 ஏப்ரல் 1961
3டிர்ட் ஸ்டிக்கர் நெதர்லாந்து21 ஏப்ரல் 1961 – 1 ஆகஸ்ட் 1964
4மன்லியோ புரோசியோ இத்தாலி1 ஆகஸ்ட் 1964 – 1 அக்டோபர் 1971
5லோசப் லூனஸ் நெதர்லாந்து1 அக்டோபர் 1971 – 25 ஜூன் 1984
6லோர்ட் கரிங்டன் ஐக்கிய இராச்சியம்25 ஜூன் 1984 – 1 ஜூலை 1988
7மான்பிரெட் வோர்னர் செருமனி1 ஜூலை 1988 – 13 ஆகஸ்ட் 1994
சேர்ஜியோ பலசினோ (பதிலாக) இத்தாலி13 ஆகஸ்ட் 1994 – 17 அக்டோபர் 1994
8வில்லி கிளீஸ் பெல்ஜியம்17 அக்டோபர் 1994 – 20 அக்டோபர் 1995
சேர்ஜியோ பலசினோ (பதிலாக) இத்தாலி20 அக்டோபர் 1995 – 5 டிசம்பர் 1995
9ஜேவியர் சொலனா எசுப்பானியா5 டிசம்பர் 1995 – 6 அக்டோபர் 1999
10லோர்ட் றொபேட்சன் ஐக்கிய இராச்சியம்14 அக்டோபர் 1999 – 17 டிசம்பர் 2003
அலெஸ்ஸாண்ட்ரோ மினுட்டோ-றிசோ (பதிலாக) இத்தாலி17 டிசம்பர் 2003 – 1 ஜனவரி 2004
11ஜாப் டி ஹூப் செப்பர் நெதர்லாந்து1 ஜனவரி 2004 – 1 ஆகஸ்ட் 2009
12அன்டேர்ஸ் போக் ரஸ்முசென் டென்மார்க்1 ஆகஸ்ட் 2009–செப்டம்பர் 2014
12இயென்சு சுடோல்ட்டென்பர்க் சுவீடன்1 அக்டோபர் 2014–'
பிரதிப் பொதுச் செயலாளர்களின் பட்டியல்[3]
#பெயர்நாடுகாலப்பகுதி
1ஜோன்கீர் வான் விரெடென்பேர்ச் நெதர்லாந்து1952–1956
2பாரொன் அடோல்ப் பென்ரிங்க் நெதர்லாந்து1956–1958
3அல்பெரிக்கோ கசார்டி இத்தாலி1958–1962
4கைடோ கொலொன்னா டி பலியானோ இத்தாலி1962–1964
5ஜேம்ஸ் ஏ. ரொபேட்ஸ் கனடா1964–1968
6ஒஸ்மன் ஒல்கேய் துருக்கி1969–1971
7பவோலோ பன்சா செட்ரோனியோ இத்தாலி1971–1978
8ரினால்டோ பெட்ரிஞானி இத்தாலி1978–1981
9எரிக் டா ரின் இத்தாலி1981–1985
10மார்செல்லோ கைடி இத்தாலி1985–1989
11அமேடியோ டி பிரான்சிஸ் இத்தாலி1989–1994
12சேர்ஜியோ பலன்சினோ இத்தாலி1994–2001
13அலெஸ்ஸாண்ட்ரோ மினுட்டோ-றிசோ இத்தாலி2001–2007
14குளோடியோ பிசொக்னீரோ இத்தாலி2007–2012
15அலெக்சாண்டர் வேர்ஸ்போ ஐக்கிய அமெரிக்கா2012–

பங்குபற்றும் நாடுகள்

வட_அத்திலாந்திய_ஒப்பந்த_அமைப்பில் பங்குபற்றும் ஐரோப்பிய நாடுகள்சர்வதேச ரீதியில் வட_அத்திலாந்திய_ஒப்பந்த_அமைப்பில் பங்குபற்றும் நாடுகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை