வின்க்கிரிசுட்டீன்

லியூரோக்கிரிசுட்டீன் (leurocristine) என்றும் அழைக்கப்படும் வின்க்கிரிசுட்டீன் (Vincristine) ஓர் வின்க்கா காரப்போலி ஆகும். காரப்போலிகள் என்பவை நைதரசனுள்ள உயிர்ப்புக்கூறுகள். வின்க்கிரிசுட்டீனின் வணிகப்பெயர் ஆன்க்கோவின் (Oncovin) என்பது 1963 முதல் வழக்கில் உள்லது. இது பிள்ளையார்பூ, சுடுகாட்டு மல்லி, நித்தியக்கல்யாணி அல்லது பீநாறி என்று கூறப்படும் கேத்தராந்த்தசு ரோசீயசு (Catharanthus roseus) எனப்படும் செடியிலிருந்து பெறப்படும் வின்கா-வகை காரப்போலி (ஆல்க்கலாய்டு) ஆகும். கேத்தராந்த்தசு ரோசீயசின் முந்தைய தாவரப்பெயர் வின்க்கா ரோசியா (Vinca rosea) என்பதால் இதன் பெயர்க்காரணம் விளங்கும். இது ஒரு இழையுருப்பிரிவு ஒடுக்கி; புற்றுநோய்க்கான வேதிச்சிகிச்சையில் இது பயன்படுத்தப் படுகிறது.

வின்க்கிரிசுட்டீன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
methyl (1R,9R,10S,11R,12R,19R)- 11-(acetyloxy)- 12-ethyl- 4-[(13S,15S,17S)- 17-ethyl- 17-hydroxy- 13-(methoxycarbonyl)- 1,11-diazatetracyclo[13.3.1.04,12.05,10]nonadeca- 4(12),5,7,9-tetraen- 13-yl]- 8-formyl- 10-hydroxy- 5-methoxy- 8,16-diazapentacyclo[10.6.1.01,9.02,7.016,19]nonadeca- 2,4,6,13-tetraene- 10-carboxylate
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகைD(AU) D(US)
சட்டத் தகுதிநிலை? Prescription only
வழிகள்Exclusively intravenous
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்புn/a
புரத இணைப்பு~75%
வளர்சிதைமாற்றம்Hepatic
அரைவாழ்வுக்காலம்19 to 155 hours
கழிவகற்றல்Mostly biliary, 10% in urine
அடையாளக் குறிப்புகள்
CAS எண்57-22-7
ATC குறியீடுL01CA02
பப்கெம்CID 5978
DrugBankAPRD00495
ChemSpider5758
வேதியியல் தரவு
வாய்பாடுC46

H56Br{{{Br}}}N4O10 

மூலக்கூற்று நிறை824.958 g/mol
சுடுகாட்டு மல்லி

வரலாறு

பல நூற்றாண்டுகளாக இதன் மருத்துவப் பண்புகள் அறியப்பட்டிருந்தாலும், 1950-களில் கேத்தராந்த்தசு ரோசீயசு என்னும் சுடுகாட்டு மல்லிச்செடியின் கூறுகளை அறிவியல் முறைப்படி ஆய்ந்தபொழுது அதில் உள்ள 70 வகையான காரகங்கள் உயிருடலங்களில் இயைபுற்று தொழிற்படுவதை அறிந்தனர். சூலை 1963 இல் வின்க்கிரிசுட்டீன் என்னும் மருந்துப்பொருளை ஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து பொறுப்பாட்சி நிறுவனம் ஆன்க்காவின் (Oncovin) என்னும் மருந்தாகக் கொள்ள ஏற்பு அளித்தது[1]. இம் மருந்தை சே.சி. ஆரம்சுட்ராங் (J.G. Armstrong) என்பவர் கண்டுபிடித்தார். இம்மருந்தை எலி லில்லி கும்பணி (Eli Lilly and Company) சந்தையேற்றியது.

இப்பக்கத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள கலைச்சொற்கள்

  • US Food and Drug Administration - ஐ.அ. உணவு மற்றும் மருந்து பொறுப்பாட்சி நிறுவனம்
  • alkaloid - காரப்போலி
  • trade name - வணிகப்பெயர்
  • mitotic inhibitor - இழையுருப்பிரிவு ஒடுக்கி
  • (biologically) live body - உயிருடலங்கள்
  • act, react, interact - தொழிற்படுதல், வினைப்படுதல்
  • marketing - சந்தையேற்றுதல், சந்தைசாற்றுதல்
  • compnay = கும்பணி (கும்பினி)

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை