1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த எட்டாவது ஒலிம்பிக் போட்டி

1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1924 Summer Olympics, பிரெஞ்சு மொழி: Les Jeux olympiques d'été de 1924), அலுவல்முறையாக எட்டாம் ஒலிம்பியாடு போட்டிகள், பிரான்சு நாட்டில் பாரிஸ் நகரில் 1924இல் நடத்தப்பட்ட பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். 1900 ஆண்டிற்குப் பின்னர் பாரிசு இரண்டாம் முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடத்துவதற்கு ஆறு ஆட்டக்கேள்விகள் வந்தன; ஆம்ஸ்டர்டம், பார்செலோனா, லாஸ் ஏஞ்சலஸ், பிராகா, உரோம் நகரங்களுக்கு எதிராக பாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1921இல் லோசானில் நடந்த 20வது ப.ஒ.கு அமர்வில் இத்தேர்வு நடந்தது.[1]

எட்டாம் ஒலிம்பியாடு நடத்தியதற்கான செலவு 10,000,000 பிரெஞ்சு பிராங்க் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 60,000 பார்வையாளர்கள் வந்திருந்த போதிலும் 5,496,610 பிரெஞ்சு பிராங்க் வருமானமே இருந்ததால் இந்த ஒலிம்பிக் பெரும் நட்டமாக முடிந்தது. .[2]

பங்கேற்ற நாடுகள்

பாரிசு ஒலிம்பிக்கில் மொத்தம் 44 நாடுகள் பங்கேற்றன. எக்குவடோர், எயிட்டி, அயர்லாந்து, லாத்வியா, லிதுவேனியா, பிலிப்பீன்சு, போலந்து, உருகுவை முதன்முதலாக பங்கேற்றன.

  • சீனாவும் துவக்க விழாவில் கலந்து கொண்டது; ஆனால் அதன் நான்கு போட்டியாளர்களும் (அனைவரும் டென்னிசு விளையாட்டாளர்கள்) போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர்.[4]

பதக்க எண்ணிக்கை

1924 ஒலிம்பிக்கில் மிகுந்த பதக்கங்கள் பெற்ற முதல் பத்து நாடுகளாவன:

 நிலை நாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா45272799
2  பின்லாந்து14131037
3  பிரான்சு (நடத்தும் நாடு)13151038
4  ஐக்கிய இராச்சியம்9131234
5  இத்தாலி83516
6  சுவிட்சர்லாந்து781025
7  நோர்வே52310
8  சுவீடன்4131229
9  நெதர்லாந்து41510
10  பெல்ஜியம்37313
  • பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நிறுவனரும் தற்கால ஒலிம்பிக் இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படுபவருமான பியர் தெ குபர்த்தென் தானாகவே 21 தங்கப் பதக்கங்களை 1922 பிரித்தானிய எவரெஸ்ட் சிகரமேறும் அணியின் உறுப்பினர்களுக்கு வழங்கினார்; இதில் 12 பிரித்தானியர்கள், 7 இந்தியர்கள், ஒரு ஆத்திரேலியர், ஒரு நேபாளி இருந்தனர்.[5][6]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

முன்னர்
ஆண்ட்வெர்ப்
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
பாரிஸ்

VIII Olympiad (1924)
பின்னர்
ஆம்ஸ்டர்டம்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை